விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு50
இந்திய வரைபடம் - தமிழில்இந்த வரைபடம் பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். svg கோப்பை பின்னர் பதிவேற்றுகிறேன். நன்றி -- மாகிர் 07:50, 19 மார்ச் 2011 (UTC)
யாழ்ப்பாணத்தில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்நிகழ்வுக்கென தனிப் பக்கம் உருவாக்கி இங்கிருந்த உரையாடலகளை அங்கு நகர்த்தியுள்ளேன்: விக்கிப்பீடியா:மார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் --சோடாபாட்டில்உரையாடுக 05:24, 20 மார்ச் 2011 (UTC) பயனர் கடவுச்சொல்லுஎனது பயனர் கடவுச்சொல்லை, விக்கி செய்திகள் (தமிழ்), விக்கி பொது போன்ற இடங்களில் மறந்து விட்டேன். மின்னஞல் அவற்றுக்கு தராதால், மீட்க முடியவில்லை. பப்பட் என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனாலே பொதுவில் சேர்க்க தற்போது முடியவில்லை. --Natkeeran 19:24, 20 மார்ச் 2011 (UTC)
தரமான சான்றுகளுக்குச் சிறப்பு அணுக்கம்பல்லாயிரக்கணக்கான ஆய்வு நூல்களின் மின்பதிப்பைக் கொண்டிருக்கும் கிரெடோ என்ற நிறுவனத்தார் 400 விக்கிப்பீடியர்களுக்கு இலவச அணுக்கம் தர முன்வந்துள்ளனர். விரைந்து விருப்பம் தெரிவிப்பவர்களில் தகுதி அடிப்படையில் இவ் அணுக்கம் தரப்படுகிறது. மார்ச்சு 23-ம் நாள் இதற்கான விருப்பத்தைப் பதிவு செய்யத் தொடங்கலாம். நம்மில் சான்றுகளைச் சேர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் இதைக் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பார்க்க: en:WP:CREDO -- சுந்தர் \பேச்சு 06:46, 21 மார்ச் 2011 (UTC) இது ஆங்கில விக்கிப்பீடியா பயனர்களுக்கு மட்டுமா? இல்லை அனைவருக்கும் பொதுவா? --சூர்ய பிரகாசு.ச.அ. 09:47, 21 மார்ச் 2011 (UTC)
இவ்விடயத்தில் போதிய தரவுகளின்மையால் அவதிப்படுவோர் ஏராளம். அவர்களுக்கு நல்ல முறையில் உதவ முன்வரும் நற்கீரனுக்கும் செல்வாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.--பாஹிம் 02:42, 26 மார்ச் 2011 (UTC) புதுப்பயனர் உரையாடல்களில் கூடுதல் கனிவு தேவைஇன்று ஒரு புதுப்பயனரின் உரையாடல் பக்கத்தைக் கவனித்த போது, பலவாறான விக்கி விதிகளை வலியுறுத்தி சற்று கடுமையாகவும் / நட்புத் தொனி இல்லாமலும் மற்ற விக்கி நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளது போல் இருந்தது :( ஒரு அறிமுகமும் இல்லாமல் விக்கிப்பீடியாவுக்கு வரும் புதுப்பயனர்கள் மிரளுமாறு சோர்வு அடையாமாறோ ஆகிவிடாமல், இன்னும் நட்புடனும் கனிவுடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி--இரவி 09:47, 22 மார்ச் 2011 (UTC)
விளக்கத்துக்கு நன்றி, சோடாபாட்டில். பொதுவாக, புதிய பயனர்களை விக்கியில் உள்வாங்குவதில் சிக்கல் உள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, நாம் இன்னும் கூடுதல் கனிவுடன் இருக்கலாமே என்ற நோக்கில் தெரிவித்தேன். அதே நேரத்தில், வேண்டுமென்றே தவறு இழைப்பவர்களையும் தகுந்த விதத்தில் அணுக வேண்டும். பயனரின் உரையாடல்களை மின்மடல் / மின்னரட்டையில் தொடராமல் பேச்சுப் பக்கத்திலேயே தொடர வலியுறுத்துவதன் மூலமும் முழுமையான சூழலைப் புரிந்து கொள்ள முடியும். சில வேளை நாம் ஆங்கிலத்தில் இயல்பாக கூறுவதை தமிழிலும் அப்படியே கூறினால் கூட மொட்டையாக, நட்பு குறைவாக இருக்கும். மிகவும் அறிந்தவர்களிடம், நண்பர்களிடம் பேசும் போது கூட இதனை உணர்ந்திருக்கிறேன். எனவே, கொஞ்சம் தமிழ் மரபுப்படி நீட்டி முழக்கியும் சொல்லலாம் :) நன்றி--இரவி 18:10, 22 மார்ச் 2011 (UTC)
Google Summer of Code 2011 - Students can ApplyNot just for MediaWiki, so many other projects: http://www.mediawiki.org/wiki/Summer_of_Code_2011 குறுந்தொடுப்புகள்சில நாட்கள் முன்னர் லாஜிக் இங்கு அறிவித்திருந்த குறுந்தொடுப்பு (short url) வசதியை தமிழ் விக்கியில் சேர்த்துள்ளேன். cache ஐக் காலி செய்து விட்டு (shift+reload or ctrl+f5) பாருங்கள். மேல் மெனுவில் நமது பயனர் பெயர் வரும் இடத்துக்குக் கீழே ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு குறுந்தொடுப்பு தெரியும். கட்டுரைகளுக்கும், பேச்சு பக்கங்களுக்கு மட்டும் வரும். வரலாற்றுப் பக்கங்களுக்கு வராது. இதனால் த.விக்கி பக்கங்களுக்கான தொடுப்புகளை படியெடுத்து மின்ஞன்சல் மூலமாக அனுப்பும் போதோ, பிற தளங்களில் இடும் போது நீண்ட தொடர் வருவதைத் தவிர்க்கலாம். எ.கா. ஆலமரத்தடி பக்கத்துக்கு பின்வரும் தொடுப்பினை கொடுக்க வேண்டும் இதற்கு பதில் குறுந்தொடுப்பாக http://tawp.in/r/262 மட்டும் கொடுத்தால் போதும். இதை உலாவி முகவரிப் பட்டையில் இட்டாலே த.விக்கி ஆலமரத்தடிக்கு வந்துவிடும். ஆங்கில விக்கியிலும் பிற விக்கிகளிலும் இவ்வசதி சில வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. ஒருங்குறி எழுத்துதொடர்கள் வரும் தமிழ் போன்ற மொழிகளின் தொடுப்புகளை சுருக்க இது உதவியாக உள்ளது. இதை சென்னை கல்லூரி மாணவரும் திறமூல ஆர்வலருமான யுவராஜ் பாண்டியன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். tawp.in என்ற தளம் தற்போது பயனர் லாஜிக்கினால் நிருவகிக்கப்படுகிறது. தற்போது இது ஒரு சோதனை முயற்சியே. தமிழ் விக்கி சமூகத்தின் கருத்துகளைத் தெரிந்து கொண்டபின் இதைத் தொடருவது குறித்து முடிவெடுக்கலாம். பயனர்கள் இதனை சோதித்துப் பார்த்து தங்கள் கருத்துகளைக் கூற வேண்டுகிறேன். முக்கியமாக ஒரு பக்கத்தில் எந்த இடத்தில் இந்த குறுந்தொடுப்பைக் காட்டுவது என்பது குறித்து கருத்து தேவை. தற்போது புகுபதிகை செய்யாத பயனர்களுக்கு இது தெரிவதில்லை. பயனர்கள் எங்கு இடலாம் என்று கருத்து தெரிவிப்பதைப் பொறுத்து புகு பதிகை செய்யாதவர்கள்/செய்தவர்கள் அனைவருக்கும் பொதுவாக தெரியும் படியான இடத்துக்கு மாற்றலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:19, 23 மார்ச் 2011 (UTC)
நல்ல கருவி. புகுபதியாதவர்களுக்கும் காட்டினால் நன்று. கட்டுரைத் தலைப்பு வரும் அதே வரிசையில் வல ஓரத்தில் இருந்நால் கண்ணில் படும். ஆங்கில விக்கியில் இதனைக் காண்பது எப்படி? குறுமுகவரி உருவாக்கும் தளமும் விக்கிமீடியா வழங்கியில் சேர்த்து 2,3 பேர் மேற்பார்வையில் இருக்குமாறு செய்தால் நல்லது. --இரவி 06:43, 25 மார்ச் 2011 (UTC) கருத்துக்களுக்கு நன்றி கனக்சு,ரவி. விக்கிசெய்திகளிக்கு நிறுவ முடியும். ஒர் முகவரியும்(அத்யாவசியம் அல்ல ஆனால்), சில நிரல் மாற்றங்களும் தேவை.விரைவில் உங்களை தொந்தரவு செய்கிறேன். இதனை மீடியாவிக்கி நிரலுள் சேர்த்துவிட்டு, விக்கி நிறுவனமே நடத்தினால் எளிதாக செய்யலாம். ரவி, நீங்கள் கூறியது போல் வல பக்கத்தில் வருமாரு மாற்றம் செய்துள்ளேன். (சிறிது நேரம் பிறகு பார்க்கவும், சோடாபாட்டில் மாற்றுவார்). ஸ்ரீகாந்த் 18:43, 28 மார்ச் 2011 (UTC)
விக்கி கலந்துரையாடல்களில் நகைச்சுவை உணர்வுவிக்கி கலந்துரையாடல்களில் நகைச்சுவை உணர்வுடன் (பிறரது மனதை புண்படுத்தாமல்) பேசுவதற்கு தடையேதும் உள்ளதா?. சில சமயங்களில் இறுக்கமான சூழ்நிலைகளை தவிர்க்க இவை உதவும். -- மாகிர் 05:48, 24 மார்ச் 2011 (UTC)
பயனருக்கான வார்ப்புருக்கள்பயனருக்கான இரண்டு வார்ப்புருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இது உங்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை நோக்குவதற்கும், புள்ளிவிவரங்களைப் பார்வையிடுவதற்கும் தொடுப்பை உண்டாக்கித்தரும். வாருப்புருக்கள் {{பங்களிப்புப் புள்ளிவிவரம்}} , {{ஆரம்பித்த கட்டுரைகள்}} ஆகும். இதனை உங்களது பயனர் பக்கத்தில் இட்டால் போதும், உங்களது விவரங்களை உரிய தொடுப்பின் மூலம் அணுகலாம்.--சி. செந்தி 12:59, 24 மார்ச் 2011 (UTC)
மகாவம்சம்மகாவம்சம் நூலை சுருக்கமாக தொகுப்பதாக உள்ளேன். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் அல்லாமல் விக்கிமூலத்தில் தொகுப்பது பொருத்தமானதாக கருதுவதால் அங்கே தொடங்கியுள்ளேன். [1] ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் குறிப்பிடவும். --HK Arun 08:40, 25 மார்ச் 2011 (UTC)
நல்ல முயற்சி, அருண். சுருக்கமாக இடுவது பற்றி விளக்க முடியுமா? வெளிவந்த நூல்களை அப்படியே விக்கிமூலத்தில் இடுவதே பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, உரையில் நீங்கள் எதனையும் சேர்க்கவோ மாற்றவோ கூடாது. மாற்றங்களுக்கு உட்பட்ட உரை எனில் விக்கி நூல்களில் சேர்க்கலாம்--இரவி 11:06, 25 மார்ச் 2011 (UTC) நன்றி சிறிதரன், இரவி. Wilhelm Geiger என்பவர் தொகுத்ததை [2] சுருக்கி தமிழில் எழுதலாம் என்றிருந்தேன். இருப்பினும் நீங்கள் கூறுவது போன்று சுருக்காமால் முழுமையாக தமிழில் மொழி பெயர்ப்பது நல்லது என்பதால் அப்படியே செய்துவிடுகிறேன். (அதேவேளை அதனை அப்படியே தொகுத்து ஆய்வுநோக்கில் விளக்கவுரையும், விமர்சனக் கருத்துக்களையும் முன்வைத்து தொகுப்பதற்கும் விருப்பம் உள்ளது.) தொகுப்பதற்கு ஏற்ற இடம் விக்கிமூலாமா, விக்கி நூல்களிலா என்பதை அறியத்தாருங்கள். --HK Arun 21:25, 25 மார்ச் 2011 (UTC)
மகாவம்சம் ஏற்கனவே தமிழில் சுருக்க மொழிபெயர்ப்பாகக் காணப்படுகிறது. சாந்திப்பிரியா என்பவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அவரது எழுத்து நடையிலிருந்து அவர் இலங்கையரல்ல என்பது தெளிவாகின்றது. எனினும் அவரது மொழிபெயர்ப்பில் ஏராளமான குறைகள் காணப்படுகின்றன. சிங்களப் பெயர்களுடன் அவருக்குப் பரிச்சயமின்மையும் இதற்கு ஒரு காரணம். அம்மொழிபெயர்ப்பு இணையத்தில் .pdf வடிவில் இலவசமாகக் கிடைக்கிறது.--பாஹிம் 02:33, 26 மார்ச் 2011 (UTC)
வில்ஹெம் கெய்கர் என்ற செருமனியரின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழில் இந்தியத் தமிழர் ஒருவர் மொழிபெயர்த்து 1962 இல் சென்னையில் வெளியிடப்பட்ட நூல் நூலகத்தில் உள்ளது. இணைப்பு மகாவம்சம் கட்டுரையில் உள்ளது.--Kanags \உரையாடுக 05:12, 26 மார்ச் 2011 (UTC) அருண், சிறீதரன் - ஏற்கனவே வெளிவந்து பொதுக்களத்தில் உள்ள நூல்களை மட்டுமே விக்கிமூலத்தில் சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். மொழிபெயர்ப்பாகவே இருப்பினும், புதிய நூல்களை இயற்றுவதற்கு விக்கி மூலம் சரியான இடம் அல்ல. விக்கி நூல்களில் இடலாம். ஆனால், அது அனைவராலும் மாற்றுவதற்கு உட்பட்டது. பிறரது மாற்றத்தை விரும்பாவிடில், நூலாக தத்தம் வலைப்பதிவிலோ எழுதுவதே நல்லது. பிறகு அதன் முழு வடிவத்தையும் விக்கி மூலத்தில் இடலாம். ஒரு படைப்பு விக்கி மூலத்தில் இடம் பெறுவதற்கு உரிமம் தவிர வேறு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று தெளிவில்லை. இது குறித்து நாம் வரையறுக்க வேண்டும். --இரவி 12:34, 26 மார்ச் 2011 (UTC)
செல்பேசிகளில் தமிழ் விக்கிசெல்பேசிகளில் தமிழ் விக்கி பயன்பாடு பற்றி கருத்தறியும் ஆய்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய விக்கிமீடியா மடற்குழுமத்தில் வந்த செய்தி. நமது கருத்துகளை இங்கு தொகுத்தால், நம் சார்பில் கலந்து கொள்ளக்கூடியோர் அவற்றைத் தெரிவிக்கலாம். மீடியாவிக்கி, செல்பேசி நுட்பம் அறிந்தோர் கலந்து கொள்வது நன்று. சுந்தர், மாகிர், சிறீகாந்த்? --இரவி 11:04, 25 மார்ச் 2011 (UTC) Hi Everyone, We're launching a study to observe and understand Wikipedia editors' current reading and editing practices, with an emphasis on mobile devices, but to also include desktop and laptop computers and other devices used in their editing and reading processes. We have commissioned Mosoci [3] to carry out this research project which will include a 3-phased process: a. A short online homework assignment b. A 2 hour F2F interview Wikipedia editors (to be conducted in New Delhi and Bangalore April end - early May) c. Potentially participate in a workshop with the Wikipedia team as well. We are looking for Wikipedia editors in English, Hindi, Malayalam, Kannada, Telugu and Tamil. This list obviously leaves out more languages than it includes, but since it is a qualitative study we had to make some hard decisions to limit the scope of the study. But we will be conducting subsequent quantitative research in India in the summer. As is our policy at Wikipedia, we have discouraged our research agency from offering any monetary incentive for this project - however, in the spirit of Wikipedia, we assure you an interesting journey and conversation. Your participation is extremely valuable to us and we'd like to show our appreciation by giving you some Wikipedia memorabilia like T-shirts, stickers, badges etc. But most importantly, it will be to ensure that we understand the needs of Wikipedia editors in India and provide a platform that enables the editing process. In addition to Wikipedia editors, we will be also speaking with Wikipedia readers in India to understand the experience of reading Wikipedia primarily on the mobile phone in India. This research is critical for meeting our strategic objectives of increasing participation and reach in India. The research in India is the first phase of the global user experience study that we are embarking upon. We will be conducting similar studies in Brazil and US in the summer. If you'd like to participate and help us grow, do let us know by March 31 by replying to this thread or writing directly to me at mpande@wikimedia.org or to Dina Mehta from Moscoi at dina@moscoi.com. Thanks in advance Mani Mani Pande, PhD Head of Global Development Research Wikimedia Foundation Twitter: manipande Skype: manipande
எனது இணைய இணைப்பு பிரச்சினைக்குள்ளாகும் போது த.வி.யில் என்ன நடக்கிறது என்று செல்பேசி மூலம் தான் பார்த்துக் கொள்வேன். ஆனால் பெரும்பாலான செல்பேசிகளில் தமிழ் யூனிகோடு இல்லை. இப்படிப்பட்ட செல்பேசிகளில் opera mini மூலம் த.வி.யைப் பார்க்கலாம். opera:config என்று முகவரிப்பட்டையில் இட்டு use bitmab images for complex fonts எனும் விருப்பத்தைத் தெரிவு செய்தால் த.வி.யைப் படிக்க முடியும். ஆனாலும் ஆலமரத்தடி போன்ற நீளமான பக்கங்கள் load ஆவதில்லை. செல்பேசி மூலம் ஆங்கில விக்கியில் தொகுக்க முயன்றால் i.p. range பிரச்சினை காரணமாக தொகுத்தல் அனுமதி தருவதில்லை. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 12:38, 25 மார்ச் 2011 (UTC) விக்கி நூல்கள்விக்கி நூல்கள் திட்டத்தில் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சேர்க்கலாமா? தமிழக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? ;வின்சு 05:09, 28 மார்ச் 2011 (UTC)
பெரியார் திராவிட கழகம் தந்தை பெரியார் நடத்திய குடியரசு நாளிதளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதை எல்லாரும் பயன்படுத்தும் வண்ணம் மின்நூலாகவும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் அது pdf ஆக உள்ளது. அதன் இணைப்பு http://ooyaathaalaigal.wordpress.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/. இதை எவ்வாறு விக்கி மூலத்தில் சேர்க்கலாம். :வின்சு 15:39, 28 மார்ச் 2011 (UTC)
உதவியதற்கு நன்றி சோடாபாட்டில் மற்றும் கனக்சு. :வின்சு 09:58, 29 மார்ச் 2011 (UTC) |
Portal di Ensiklopedia Dunia