விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு64அறக்கட்டளை இந்தியப் பிரிவு தூதர்விக்கிமீடியா அறக்கட்டளையின் இந்தியப் பிரிவு தமிழ் விக்கித் திட்டங்களில் இருந்து ஒரு தூதர் ஒருவரை நியமிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது. விக்கிமீடியா இந்தியாவுடனான கலந்துரையாடல்கள், அவர்கள் தமிழ் விக்கித் திட்டங்களுக்காக நடத்தத் திட்டமிட்டுள்ள பயிலரங்குகள்/பட்டறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செய்ய இவர் தேவைப்படுகிறார். இப்பணியினை செய்ய விரும்புவோர் என் பேச்சுப் பக்கத்திலோ அல்லது இங்கோ விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:33, 1 நவம்பர் 2011 (UTC) ஊடகங்களை பகுப்பு செய்தல்த.வி உடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் பகுப்பு செய்யப்படாமல் இருக்கின்றன. இப்பகுப்பாக்கத்தில் பயனர்கள் பங்களிக்க வேண்டுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 05:38, 4 நவம்பர் 2011 (UTC)
தொகுத்தல் சாளரத்தில் {.{delete}}தொகுத்தல் சாளரத்தின் கீழ் வார்ப்புருக்கள் என்பதில் தற்பொழுது இரண்டு வார்ப்புருக்கள்{.{anonymous}},{.{புதுப்பயனர்}} உள்ளன. அதில் {.{delete}} என்பதனையும் இணைத்தால், அடிக்கடி தட்டச்ச வேண்டிய நிலை பலருக்கும் ஏற்படாது. வணக்கம்.≈06:56, 4 நவம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..
தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்முஸ்லிம் [[விக்கிப்பீடியா:[விக்கிப்பீடியர்கள்|நண்பர்கள்]] அனைவருக்கும், உளங்கனிந்த தியாகப்பெருநாள் நல்வாழ்த்துக்கள். (இங்கு மலேசியாவில் இன்று மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் பள்ளிவாசலில் (தமிழ் பள்ளிவாசல்) தொழுது பெருநாள் கொண்டாடினேன்). -- மாகிர் 12:10, 6 நவம்பர் 2011 (UTC)
சகோதரர் மாஹிர், உங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள். என்றென்றும் நீங்களும் ஏனைய எம் சகோதரர்களும் ஈமானுடன் வாழ வேண்டுமென வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.--பாஹிம் 12:30, 6 நவம்பர் 2011 (UTC) இப்போதுதான் மஸ்ஜித் இந்தியா விபரத்தைப் பார்க்கிறேன். நான் 2009 ஆம் ஆண்டு நோன்பு காலங்களில் கோலாலம்பூரில் உள்ள அதே பள்ளியில்தான் தொழுதேன்.--பாஹிம் 12:32, 6 நவம்பர் 2011 (UTC)
தியாகப் பெருநாள் கொண்டாடும் எல்லா இசுலாமிய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மயூரநாதன் 13:24, 6 நவம்பர் 2011 (UTC)
விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறைகல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் மற்றொரு விக்கி அறிமுகப் பட்டறை நடாத்துவது பற்றிப் பேசியிருந்தேன். நாளை (09.11.2011) பட்டறையை நடாத்தித் தருமாறு இருநாட்களுக்குமுன் கேட்கப்பட்டது. வெறும் முன்வைப்பாக பட்டறையை நடாத்தாமல் பங்குபற்றுபவர்கள் செயற்படுத்தி பார்க்கக்கூடியதாக இணைய இணைப்புள்ள மண்டப ஒழுங்கு சிறு பிரச்சினையாக உள்ளது. பாடசாலை அதிபர் காலையில் சில ஒழுங்குகளை செய்யமுனைகிறார். சரிவந்தால் இப்பட்டறையை நடாத்தமுடியும். திட்டப்பக்கம், ஏனைய விபரங்கள் நாளைய ஒழுங்குகளின் பின்ன்ர் தயாரிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் 15:58, 8 நவம்பர் 2011 (UTC)
சிவகுமார், இணையப் பிரச்சினை எப்போதும் இருக்கத் தான் செய்யும். அதற்கேற்ப உங்கள் திட்டப்பக்கங்களைத் தயாரியுங்கள். உங்கள் முயற்சியில் வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 20:09, 8 நவம்பர் 2011 (UTC)
பட்டறை நன்றாக நடைபெற வாழ்த்துக்கள் சஞ்சீவி.--கலை 21:43, 8 நவம்பர் 2011 (UTC)
பட்டறை பாடசாலை அதிபர் திரு வி. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப அரறிமுகத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெறுகிறது. விபரம் திட்டப்பக்கத்தில் தருகிறேன். சஞ்சீவி சிவகுமார்.
ஒரு வருடக் கட்டுரையாக்கம்ஒரு வருடத்தை இலக்கு வைத்த புன்னியாமீனின் கட்டுரையாக்கம் தற்போது 7240 எட்டிப் பிடித்துள்ளது. இவர் விக்கிப் பயனராக இணைந்து ஓராண்டு நிறைவடைய இன்னும் 3 தினங்கள் உள்ளன. இவர் செல்லும் வேகத்தைப் பார்க்கும்போது ஓராண்டுக்குள் 7400 - 7500 கட்டுரைகளை எட்டலாம் என எதிர்பார்க்கலாம். அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இத்தனைப் பதிவுகளை ஓராண்டுக்குள் பதிவாக்கிய பயனர்கள் உள்ளனரா? அது பற்றி விபரம் அறிந்தவர்கள் அறியத் தருவீர்களா? அல்லது இந்த விபரங்களை எந்த முறையில் பெற்றுக்கொள்ள முடியும்?--பாஹிம் 05:38, 10 நவம்பர் 2011 (UTC)
இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் - புள்ளிவிபரம்Indian Language wikipedia Statistics – 2011 September.--Kanags \உரையாடுக 11:40, 10 நவம்பர் 2011 (UTC) கவனத்துக்குரிய விக்கிப்பீடியர் விருதுஎதிர்வரும் இந்திய விக்கி மாநாட்டை ஒட்டி, இந்திய விக்கிமீடியா திட்டங்களில் சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு கவனத்துக்குரிய விக்கிப்பீடியர் விருது அளிக்கப்படுகிறது. விவரங்களை http://wiki.wikimedia.in/NWR_2011 பக்கத்தில் காணலாம். இன்னும் இரு நாட்களுக்குள் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். நீங்கள் மற்றொரு பங்களிப்பாளரையோ உங்களை நீங்களோ கூட பரிந்துரை செய்யலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த விருது வழங்கும் முறைமையில் ஒப்புதல் இல்லை. எனினும், தமிழ் விக்கிப்பீடியாவின் பல்வேறு சிறந்த பங்களிப்பாளர்களில் எவருக்கும் சளைக்காத ஒருவருக்கே இந்த விருது செல்லவேண்டும் என்று ஆவல் :) --இரவி 06:32, 11 நவம்பர் 2011 (UTC)
விக்கிப்பீடியா கட்டுரைகளை PDF கோப்புகளாக தரவிரக்கம்.ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போன்று அனைத்துக் கட்டுரைகளையும் PDF கோப்புகளாக தரவிரக்கம் செய்யும் Book creator வசதி தமிழ் விக்கிப்பீடியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். --கிருஷ்ணபிரசாத்/உரையாடுக 15:38, 11 நவம்பர் 2011 (UTC)
திருநின்றவூர், ஜெயா பொறியியல் கல்லூரி - திசம்பரில் பட்டறை அறிவிப்புhttp://wiki.wikimedia.in/Wiki_Academy/Jaya_Engineering_College இதனைப் பார்க்கவும். -- மாகிர் 15:57, 11 நவம்பர் 2011 (UTC)
மாணவர்களும் விக்கிப்பீடியாவும்Will young India take to editing Wikipedia? இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிக்கை டிஎன்ஏ வில் நமது சூர்யா பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. விக்கிப்பீடியாவின் மாணவப் பயனர்களைப் பற்றிய இக்கட்டுரையின் சில பகுதிகள்:
சில காலமாக அருமையான மாணவப் பயனர்கள் ஆர்வத்துடனும் பொறுப்புடனும் விக்கியில் பணியாற்றுவதைக் கண்டு வருகிறேன். சூர்யா தவிர, அஸ்வின், கிருஷ்ணபிரசாத், ஜெயரத்தினா, சிங்கமுகன், பிரஷாந், சயனொளிபவன் போன்ற மாணவர்களும் சுப்பிரமணியன், மரு. கார்த்தி, கார்த்திக் ராமானுஜம் (அண்மைக்காலம் வரை மாணவர்கள்) போன்ற இளைஞர்களும் தமிழ் விக்கிக்கு ஆற்றி வரும் பங்கு மகத்தானது. படிப்பும் மதிப்பெண்களும், ஊதியமும் மட்டுமே முக்கியம் என போதிக்கும் கல்விச் சூழல், மனதை அலைக்கழிக்கும் சமூகவலைப் பின்னல்கள் ஆகியவற்றையும் தாண்டி இவர்கள் செயல்படுவதைக் காணும் போது மலைப்பாகவும் பெருமையாகவும் உள்ளது. (எனது மாணவப் பருவத்தில் இவர்கள் செய்வதில் நூற்றில் ஒரு பங்கைச் செய்திருப்பேனா என்பது சந்தேகம). விக்கிப்பீடியா அடுத்த தலைமுறையின் கையில் பத்திரமாக இருக்கும் என்று மனநிறைவாகவும் உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 06:03, 12 நவம்பர் 2011 (UTC)
இணைய எழுத்துரு நீட்சிசில வாரங்கள் முன்பு, இணைய எழுத்துரு நீட்சியினை நிறுவ, சமூகத்திடம் ஒப்புதல் பெற்று பக்சில்லாவில் பதியப்பட்ட வழுவை திரும்பப் பெற்றுள்ளோம். அதற்கான காரணங்கள் கருத்து வேண்டல் பக்கத்தில் தரப்பட்டுள்ளன--சோடாபாட்டில்உரையாடுக 20:42, 12 நவம்பர் 2011 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் 7500 கட்டுரைகள்இன்று நவம்பர் 13 2011 தமிழ்விக்கிப்பீடியாவில் 7500 கட்டுரைகளை நான் பதிவாக்கிவிட்டேன். புகழனைத்தும் படைத்தவனுக்கே. இந்த முயற்சியில் ஒத்துழைத்த அனைத்து நல்லிதயங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். 'ஓராண்டு நிறைவில் தமிழ்விக்கிப்பீடியாவில் 7500 கட்டுரைகள்' எனும் தலைப்பில் ஓராண்டு கால பதிவுகளை என் பேச்சுப் பக்கத்தில் பதித்துள்ளேன்.--P.M.Puniyameen 17:43, 13 நவம்பர் 2011 (UTC) ஊடகப் போட்டி துவக்கம்![]() தமிழ் விக்கி ஊடகப் போட்டி, இன்று (நவம்பர் 15) முதல் துவங்குகிறது. போட்டிக்கான வலைவாசல் - வலைவாசல்:ஊடகப் போட்டி. அனைவரும் பங்கு கொண்டு தங்கள் ஆக்கிய ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றும்படி வேண்டுகிறேன். மேலும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினாரிடம் இது பற்றிக் கூறி பரப்புரை உதவி புரியவும் வேண்டுகிறேன். உங்களுடைய ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவுகள் போன்றவற்றில் இது குறித்து செய்தி இட்டு உதவுங்கள். வலைப்பதிவில் இடவும் மின்னஞ்சலில் அனுப்பவும், அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை வலப்புறம் உள்ளது. இதனை பயன்படுத்தி பரப்புரை செய்ய வேண்டுகிறேன். போட்டிக்கான ஃபேஸ்புக் தளம் - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள -
|
Portal di Ensiklopedia Dunia