விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு67ஐந்தாயிரம் கோப்புகள்தமிழ் விக்கி ஊடகப்போட்டியின் மூலமாக இதுவரை (27 டிசம்பர் 2011) 5000+ ஊடகக்கோப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதுவரை பலரும் கண்டிராத தொழிற்கலைகளும் தமிழர் வாழ்விடங்களும் சுற்றுலாத் தலங்கள், ஊர்கள், மக்கள் எனப் பல தரப்பு சார் படங்களும், நிகழ்படங்களும், ஒலிக்கோப்புகளும் பதிவேற்றப்பட்டுள்ளன. சோடாபாட்டில் நல்கை விண்ணப்பத்தில் 3000 கோப்புகளை பொதுவிற்கு வழங்குவது என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம். தற்போது அதனை மிஞ்சி 2000++ என்ற அளவில் பயணித்து வருகிறோம். போட்டியை நடத்திவரும் குழுவிற்கும் உடன் உதவி புரியும் தகவலுழவன் போன்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல கோப்புகளைப் பெற்று நாம் 8000+ என்ற இலக்கை அடைவோம் எனபதில் எனக்கு ஐயம் இல்லை. :) --சூர்யபிரகாசு உரையாடுக... 17:18, 27 திசம்பர் 2011 (UTC) மகிழ்ச்சியான செய்தி, சூரியா. புதிய பயனர்களை மட்டும் அல்லாது ஏற்கனவே இருக்கும் பங்களிப்பாளர்களும் ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றத் தூண்டுதலாக உள்ளவாறு இப்போட்டி உள்ளது சிறப்பு. --இரவி 05:19, 30 திசம்பர் 2011 (UTC) விக்கி ஊடகப்போட்டிக்கு விக்கிச் சமூகத்தினரும் அதற்கு வெளியிலுள்ளோரும் பரப்புரை உள்ளிட்ட பலவழிகளில் பங்களிப்பு செய்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றியுடையோம்.--சஞ்சீவி சிவகுமார் 10:42, 30 திசம்பர் 2011 (UTC) 2011 ஆண்டு அறிக்கைதமிழ் விக்கியின் 2011 ஆண்டு அறிக்கையை இங்கு படிக்கலாம்: விக்கிப்பீடியா:2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2011 Tamil Wikipedia Annual Review. திருத்தங்கள், தகவல் சேர்ப்புக்களை நீங்கள் அந்த அறிக்கையில் நேரடியாகச் செய்யலாம்.--Natkeeran 21:19, 2 சனவரி 2012 (UTC) தமிழ் விக்கிப்பீடியா 43,000 கட்டுரைகள்தமிழ் விக்கிப்பீடியா 43,000 கட்டுரை எண்ணிக்கையை அடைந்த இந்த வினாடியில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பங்களித்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்--P.M.Puniyameen 02:04, 29 திசம்பர் 2011 (UTC)
இது பெரிய விடயமல்ல ஸ்ரீதர், இருந்தாலும் சில நேரங்களில் எமது சில மூத்தவர்களின் அன்பு (அம்பு) வார்த்தைப் பிரயோகங்கள் இதயத்தைத் தைத்து விடுவதால் 50000 ஆயிரம் என்ற இலக்கிற்கு காலவரையரை விதிப்பதென்பது தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரையில் மனக்கிலேசங்களை உருவாக்கக்கூடியதே. இதுபோன்ற ஒரு பயணத்தில் இலக்கு வகுத்து வேகமாக செல்வதைவிட மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிப்பயணத்த வேகத்தில் பயணிப்பதே புதிய பயனர்கள் என்ற அடிப்படையில் தமிழ் விக்கியில் எமது நிலைப்புக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்--P.M.Puniyameen 07:08, 23 சனவரி 2012 (UTC)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்இன்று மலர்ந்துள்ள 2012 ஆம் ஆண்டு அனைவருக்கும் சௌபாக்கியமிக்க ஆண்டாக அமையட்டும். அனைத்து விக்கி அன்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்--P.M.Puniyameen 01:08, 1 சனவரி 2012 (UTC)
பிறந்திருக்கும் ஆங்கிலப் புத்தாண்டில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள். --- மயூரநாதன் 03:54, 1 சனவரி 2012 (UTC)
விக்கி நண்பர்களுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2012 சேலம் அன்பன்
தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:
மேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும். மேலதிக தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு) --Natkeeran 19:44, 1 சனவரி 2012 (UTC)
உதவி தேவைபுதிய பக்கம் உருவாக்கினால் அதில் எழுதியவை எதுவும் தெரியவில்லை (காலி பக்கம் மட்டுமே தெரிகிறது). உதாரணம்: லினோலெயிக் அமிலம். ஆனால், அண்மைய மாற்றங்களில் பைட் அளவுகள் உள்ளது. தொகுவை அழுத்திப் பார்த்தால் எழுதியது தெரிகிறது. உங்களால் உதவ முடியுமா?--Nan 13:10, 8 சனவரி 2012 (UTC) உடனடியாக உதவியமைக்கு நன்றி சோடா பாட்டில்--Nan 13:28, 8 சனவரி 2012 (UTC) கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்மீண்டும் பெருவேகத்துடன் தானியக்கி மொழிபெயர்ப்பு கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவை தாக்குகின்றன. இவற்றை உடனடியாக கண்டறிந்து நீக்க/தடுக்க வேண்டும்.--மணியன் 14:47, 12 சனவரி 2012 (UTC)
பொங்கல் நல்வாழ்த்துகள்அனைத்து விக்கியர்களுக்கும் எனது இனிய முன்னதான பொங்கல் நல்வாழ்த்துகள். அன்புடன் கி. கார்த்திகேயன் 12:08, 13 சனவரி 2012 (UTC)
மாணவர்களுக்கு இணையம்சேலம் மாவட்ட அளவிலான, ஆசிரியர்களுக்கான மூன்று நாள் தமிழ்ப் பாடநூல்-பாடப்பொருள் வலுவூட்டும் பயிற்சியில் கலந்து கொண்டேன். அப்பயிற்சியின் ஒரு பகுதியாக வரும் ஆண்டுமுதல் மாணவர்களுக்கு இணையத்தைப் பயன்படுத்திக் கற்பித்தல் என்பதும், ஆசிரியர்களும் மாணவர்களும் இணையத்தை பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் என்பதும் ஒரு செயல்திட்டமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் ஒன்றியத்திற்கு இருவர் கலந்து கொண்டோம். நான் நம் தமிழ் விக்கிபீடியாவைப் பற்றியும்,விக்கியில் உள்ள கட்டுரைகள் படங்கள், விக்சனரி பற்றியும் அதனை ஆசிரியர்களும் மாணவர்களும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் பரப்புரை ஆற்றிவிட்டு வந்தேன். பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் விக்கிபீடியா பற்றி கேட்டனர்.--Parvathisri 14:56, 13 சனவரி 2012 (UTC)
வாழ்த்துகள் பார்வதி.--Kanags \உரையாடுக 21:52, 13 சனவரி 2012 (UTC)
மகிழ்ச்சியான செய்தி பயனர் பார்வதி. மின்வழி கற்றல் கற்பித்தல் பற்றியும், தமிழ்விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது பற்றியும் மலேசியாவில் நடந்த அனைத்துலக் கருத்தரங்கில் எடுத்துரைத்தேன். முனைவர், பேராசிரியர் சுப திண்ணப்பன் அவகளின் மிக அருமையான நூலைக் கட்டாயம் படித்துப் பாருங்கள் (இது 1995 இலேயே எழுதிய மிக அருமையான நூல். "சுப. திண்ணப்பன், “கணினியும் தமிழ் கற்பித்தலும்”, புலமை வெளியீடு , சனவரி 1995 பக். 1-209.). 21 ஆம் நூற்றாண்டில் மி-கல்வி என்னும் தலைப்பில் இராண்டி காரிசன் எழுதிய 2 ஆவது பதிப்பாக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமும் பயன் தரும் (Garrison, Randy D, “E-Learning in the 21st Century” 2nd Edition, Routledge 2011). தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் அதில் பங்களிப்பது பற்றியும் மிகப் பெரும்பான்மையருக்கு (கல்லூரிகளில்) தெரியவில்லை என்பதை என் அண்மைய இந்தியப் பயணத்தில் நான் அறிந்து கொண்டேன் (ஒருசில கல்லூரிகளில் இருந்த ஏறத்தாழ 600-700 மாணவர்கள், ஆசிரியர்களிடம் உரையாடியதில் இருந்து அறிந்து கொண்டேன்). நான் சேலம் வருவதாகவும் இருந்தது (திசம்பர் 2011), அழைப்பும் இருந்தது, ஆனால் வர இயலாது போயிற்று. பலரும் பல இடங்களிலும் பரப்புரை செய்தல் மிகவும் தேவை. பள்ளி-கல்லூரிகள் அனைத்திலும் இப்பரப்புரை செய்தல் வேண்டும்.--செல்வா 20:06, 17 சனவரி 2012 (UTC) வாழ்த்துகள் பார்வதி.--Nan 20:31, 17 சனவரி 2012 (UTC)
செல்வா அய்யா அவர்களுக்கு, தகவலுக்கு நன்றி. நான் அந்த நூலை கட்டாயம் வாங்கிப் படிக்கிறேன். வரும் வாரங்களில் மேற்கண்ட பாடப்பொருள் பயிற்சியை ஆசிரியர்களிடம் சேர்ப்பிக்கும் பணிக்கு கருத்தாளராக நியமித்து உள்ளனர். அப்போது பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களிடமும் கண்டிப்பாக விக்கிபீடியா பற்றி விளக்குவேன்.--Parvathisri 12:19, 18 சனவரி 2012 (UTC) ஒலிக்கோப்புகள்விக்கிப்பீடியா கட்டுரைகள் பலவற்றை ஒலிக்கோப்பாகப் பதிவேற்றி கட்டுரைகளில் ஒரு பயனர் இணைத்து வருகிறார். உ+ம்: 1997 கோயம்புத்தூர் கலவரம். இவை அனைத்தும் மிக மோசமான தரம் குறைவான ஒலிக்கோப்புகள் ஆகும். இவ்வாறான தரம் குறைவான ஒலிக்கோப்புகளைப் பதிவேற்றுவதை நாம் ஊக்குவிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். இவற்றை நீக்கலாமா?--Kanags \உரையாடுக 03:22, 14 சனவரி 2012 (UTC)
தரம் பற்றிய கருத்துகளில் எனக்கு ஒப்புதல் இல்லையெனினும், கட்டுரைகளில் சேர்த்தலுக்கு எதிர்ப்புள்ளதால் நீக்குவதற்கு நானும் இணங்குகிறேன். காமன்சில் ஏற்றி விட்டும் திட்டப்பக்கத்தில் மட்டும் இணைப்புகளாக் சேர்த்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:04, 14 சனவரி 2012 (UTC)
கொழுப்பு தலைப்புமுன்பு கொழுப்பு என்றிருந்த கொலஸ்டிரால் (cholesterol) குறித்தக் கட்டுரையை (கூகுள் தமிழாக்கக் கருவி கட்டுரை) கொலஸ்டிரால் என்னும் தலைப்புக்கு நகர்த்தினேன். தற்போது, கொழுப்பு (Fat) என்னும் தலைப்பில் கட்டுரை எழுத ஆரம்பித்தால் அது உடனே # வழிமாற்று கொலஸ்டிரால் என்று காண்பிக்கிறது. இதை சரி செய்து உதவ முடியுமா? நன்றி --Nan 17:22, 14 சனவரி 2012 (UTC)
நன்றி சோடாபாட்டில்--Nan 17:44, 14 சனவரி 2012 (UTC)
Announcing Wikipedia 1.19 betaWikimedia Foundation is getting ready to push out 1.19 to all the WMF-hosted wikis. As we finish wrapping up our code review, you can test the new version right now on beta.wmflabs.org. For more information, please read the release notes or the start of the final announcement. The following are the areas that you will probably be most interested in:
Report any problems on the labs beta wiki and we'll work to address them before they software is released to the production wikis. Note that this cluster does have SUL but it is not integrated with SUL in production, so you'll need to create another account. You should avoid using the same password as you use here. — Global message delivery 16:36, 15 சனவரி 2012 (UTC) Wikipedia to go dark.Wikipedia to go dark to protest web piracy drafts -- மாகிர் 02:06, 17 சனவரி 2012 (UTC)
பதாகை தயார். பயனர்:Logicwiki/Sandbox பக்கத்தில் 2ஆம் பாதாகையை மீடியாவிக்கி:Sitenotice மற்றும் மீடியாவிக்கி:Anonnotice இல் முழுவதுமாக பயன்படுத்துமாரு வேண்டுகிறேன். நன்றி ஸ்ரீகாந்த் 04:32, 18 சனவரி 2012 (UTC) மேற்கண்ட முன்மொழிவை அடுத்து, கடந்த 24 மணி நேரத்துக்குப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, தற்போது நீக்கப்பட்டுள்ளது--இரவி 05:45, 19 சனவரி 2012 (UTC) 24 மணி நேரத்திற்கு...இணையத் திருட்டு நிறுத்தல் சட்டமூலத்துக்கு எதிராக ஆங்கில விக்கிப்பீடியாவின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக இன்னும் 24 மணி நேரத்திற்கு நான் விக்கிப்பீடியாவில் எழுதமாட்டேன்.--P.M.Puniyameen 05:25, 18 சனவரி 2012 (UTC)
நரையம் வழு களைதல்விக்கிமீடியா தொழில்நுட்பக்குழு இன்று (18 சனவரி) மாலை 6:30 IST (1300 UTC) ஓர் இணைய தொடர் அரட்டை சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு/நரையம் நீட்சியின் அம்சங்கள் குறித்தவை ஆலோசிக்கப்படும். விவரங்கள் இங்கே. குறிப்பாக பாமினி முறை தட்டச்சு அறிந்தவராயிருப்பின், உங்களை நான் இக்கூட்டத்திற்கு வருமாரு வேண்டிக்கொள்கிறேன். நன்றி ஸ்ரீகாந்த் 07:52, 18 சனவரி 2012 (UTC) Building on the Foundation of a Strong and Vibrant Tamil CommunityDear All, Over the past couple of weeks, I have been sharing ideas on village pumps and mailing lists for more than 10 Indic language communities to drive community growth and project quality. In all cases, I have made sure that the ideas are specific to that community. In some cases, the ideas are somewhat similar because most of the Indic communities are at a similar stage in their evolution. I had taken some time to share this with Tamil community because I came to know that Tamil community is having some community discussions on various strategic questions related to Tamil projects. For Tamil, my ideas/suggestions are different because of the presence of relatively larger and stronger community and the relatively higher maturity of the projecs. I would like to suggest the following 4 different ideas and request your feedback on that.
I know much have been discussed in Tamil wikipedia regarding this topic. I still recommend to go forward and release an offline version of 500/1000 selected articles from Tamil wikipedia. I am sure such a release will help Tamil wikipedia to spread its wings not only in Tamil Nadu but also in all places where Tamilians live. I can provide all external support for this project if copmmunity decides to do such a project.
In the Wikipedia world, a very large number of editors are students - both in college and in secondary school. The reason for this is that students are in an environment where they are absorbing (in classes and libraries) and disseminating knowledge (in submissions and tests.) This makes them ideal to be contributors to Wikipedia. It will be very useful to explore a potential education program where students and teachers can be encouraged to. In Kerala, for example, Wikipedia is already taught in 8th/9th/10th standard so there is already some academic "blessing" for it. An education program can encourage new editors, but please be aware of the complexities. It requires a strong local community to provide training and support. It will require frequent in-class sessions to explain, repeat explanations, and clear doubts. It will need online support for newbies. It will be encouraged by frequent community meet-ups. It is important that you start on a small scale so that it is manageable. I will not recommend a number more than 50. The selection of students and teachers is critical - and you should apply great thought to making sure that the students and teachers selected have the right calibre to right in the Tamil have a strong academic foundation that controls plagiarism (which plagues our education system) and a history of innovative teaching techniques. Each community will need to take a call on whether to make it voluntary or compulsory for students. However, the opportunity is massive given our young population (infact they are the future Tamil Wikimedians). It can be a great vehicle to bring newbies and to bring new energy to our projects. If the community is interested I can help to design and roll out this project with interested community members according to the need of Tamil wiki community. This will be done openly and collaboratively with the Tamil community.
For those of you who donot know, GLAM stands for Galleries, Libraries, Archives & Museums. They are an important source of content for our projects and many of the topics assocaited with these institutions are very poorly (digitally) documented. The advantage for the institution is that an initiative with Wikipedia serves to share knowledge (which is in any case their mission), increases footfalls for them (which is their objective) and gives them publicity (which is their motivation). The advantage for Tamil Wikipedia is that it improves very locally relevant content with strong references and pictures (where applicable.) In summary, a way of doing GLAM is to have volunteer work as a "Wikipedia In Residence" at a GLAM. This person would explain the concept to the GLAM authorities and staff. He/she would then conduct a detailed workshop with that the staff on Wikipedia editing. After this, he/she co-ordinates editing sessions (maybe every week on a Saturday morning - as most GLAMs work on Saturdays) where local community members and GLAM staff work on creating / improving one or more articles about one or more artifacts at that GLAM. He/she will co-ordinate these sessions but over time, GLAM staff will take up the primary role. Progressively, the Wikipedian In Residence will reduce his direct involvement at that GLAM and move onto another GLAM as the staff in the first GLAM take over the project and sustain it. Apart from the content created and the community collaboration and new editors (from GLAM staff), GLAM projects have additional benefits because media coverage can be encouraged for the intiative and visitors to the GLAM can be encouraged to participate in the editing sessions (thereby attracting even more newbies.) Tamil Nadu has a large number of GLAMs. asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp list shows more than 400. http://www.tnarch.gov.in/ (Department of Archaeology, Government of Tamil Nadu) is definitely a place where we can get lot of information. Two institutons that I suggest in the initial phase are:
In terms of specific next steps, here is what I would suggest:
You can contact Wikimedia India Chapter also for any help as chapter is also supporting GLAM initiatives.
Many times you might have read that Tamil/Malayalam communities are the biggest in India - which is true. It is also heartening to see outreach acitivities being conducted in Tamil Nadu. Thank you so much to all those for these efforts. We need to continue our strong outreach efforts because in absolute terms, the community sizes are still very small (compared to number of language speakers.) We desperately need more outreach programs. Can I request all of you to share your thoughts about these ideas. Do you think they are the right ideas for Tamil? Would you suggest any alternate ideas? Please share your ideas. We shall discuss and see how we can work together. Thank you. --Shiju Alex (WMF) 11:37, 18 சனவரி 2012 (UTC)
Thank you very much Ravi and Sundar for the reply. //Education program to attract students is really out of scope considering the current strength of the community.// I understand that considering the current strenghth of community an Education program may not viable at this point of time. We shall take it up later (when the community strenghth reaches a critical number) or we shall do it very small number. For Malayalam we tried doing two small education programs (One, two) for Malayalam Wikisource involving about 35 students (see the talk pages of the pages I provided) to digitize two old malayalam source texts. It was a success. Few of these students are editing in malayalam wikipedia now. Again as you know since number was low and since it was Wikisource managing was little easier. Few community members has plan to extend the education program for wikipedia also. They are discussing the right way (and right time also) of doing that considering the nature of malayalam wikipedia and considering various other challenges encountered in the other education programs of Wikipedia. Again the number will be very small (not more than 50, considering the strenghth of ml community) //GLAM initiative could be done if we have couple of interested volunteers. ]] Sure we shall work on this. Do communiuty have any prefernce on the type of institution (or a list of good institutions)that we can do a pilot GLAM for Tamil? I recommend a small (but where we get a valubale treasure of information for Tamil community) institution in which the management and staff will be supportive. Again in Malayalam, community is looking for a small institution (rather than going after big institutions) where management and staff are cooperative. If we prepare a small list of such instituions we can start preparing a proposal and approach some those institutions. I am really keen on some thing happening on GLAM in indic wikis rather than we always talk and plan for GLAM. I am sure if community decides this can be easily done since we do not require a big team of community members to manage this. I suggest to discuss this and let me know your thoughts. //A team of volunteers is currently working on curating content for the CD. I'm sure we'll be able to use your help once the content is finalised. User:Sodabottle or User:Logicwiki may contact you when they need any support. // Sure. I will extend all support. Please let me know when ever you require any assitance on this. I think it is a good idea that while User:Sodabottle, User:Logicwiki, and other Tamil wikipedians work on the actual article content, one or two volunteers can start working on the non-artcle pages (copyright, disclaimer, behind the scene, and other similar pages) that need to be included in the CD. I can help with that. Also start thinking about releasing the content of the CD in multiple formats, like an Android/iphone app, epub format, and other potentail mobile device formats. Please let me know if any assistance required on any of these, Thanks once again for the replies. --Shiju Alex (WMF) 04:25, 26 சனவரி 2012 (UTC) விக்கிமேனியா 20122009, 2010, 2011 என கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியர் விக்கிமேனியாவில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் விக்கிமேனியா நடைபெறுவதால் அந்த வட்டாரத்தில் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் கூடுதலாகப் பங்கு கொள்ள முடியும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.விக்கிமேனியா 2012க்கான உதவித்தொகை விண்ணப்பங்கள், கட்டுரை அளிப்பு விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ளோர் முந்தி விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு வேண்டுகிறேன். நான் கடந்த ஆண்டு கலந்து கொண்டதால், புதிய விக்கிப்பீடியர் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அடுத்த சில ஆண்டுகளுக்கு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன் :) --இரவி 05:45, 19 சனவரி 2012 (UTC)
தமிழ் விக்கி ஊடகப்போட்டியின் பதாகைதமிழ் விக்கி ஊடகப்போட்டியின் பதாகை காணாமல் போய்விட்டது. புதியவர்களுக்கு இது சிரமத்தைக் கொடுக்கும் என கருதுகிறேன். --Anton 20:01, 20 சனவரி 2012 (UTC)
+1 நானே மாற்றிவிடுகிறேன். :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 15:30, 21 சனவரி 2012 (UTC)
படத் திருட்டுஎன்னால் தமிழ் விக்கி ஊடகப்போட்டிக்காக பதிவேற்றிய 6 படங்கள் மட்டக்களப்பு ஆங்கில கட்டுரையில் en:Batticaloa படமாற்று செய்யப்பட்டுள்ளன. என்னைப் போன்று பலருடைய படங்களும் படமாற்று செய்யப்பட்டு காணப்படுகின்றன. துரதிஸ்டம் என்னவென்றால், அழகிய படங்கள் அலங்கோலமாகக் காணப்படுகின்றன. இது பற்றி ஆங்கில, காமன்ஸ் விக்கிமீடியா தளங்களிலும் முறையிட்டுள்ளேன். --Anton 20:01, 20 சனவரி 2012 (UTC)
புதிய கொள்கை கருத்து வேண்டல் - சட்ட மிரட்டல் கூடாதுசில நாட்களுக்கு முன்னர் ஒருவர் ஒரு கட்டுரையின் பெச்சுப் பக்கத்தில் சட்ட மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். ஆங்கில விக்கி மற்றும் பல பிற விக்கிகளில் இம்மாதிரியான சட்ட மிரட்டல் விடுபவர்களை உடனடியாக தடைசெய்து விக்கியிலிருந்து வெளியேற்ற கொள்கை உள்ளது. - en:WP:NLT. இக்கொள்கையை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?. தமிழ் விக்கி வளர வளர இது போன்ற மிரட்டல்கள் அதிகமாக வாய்ப்புண்டு. பதில் சொல்லும் பயனர்களுக்கு அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க பிற விக்கிகளில் இது போன்ற செயல்களைக் கடுமையாக எதிர் கொள்கின்றனர். இக்கொள்கையை நாம் ஏற்க வேண்டுமா என்பது பற்றி விக்கி சமூகத்தின் கருத்தை வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:02, 21 சனவரி 2012 (UTC)
வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்துவோரை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்பது விக்கமீடியாவின் கொள்கை என்றல்லவா நினைத்து வந்தேன்.ஆங்கில விக்கிப்பீடியாவின் கொள்கை மட்டும் தானா? எது எப்படியோ, இவர்களைச் சமாளிப்பது விக்கிமீடியாவிற்கும் விக்கிப்பீடியர்களுக்கும் தேவையற்ற கூடுதல் பணி. ஒருவர் முன்னேறினால் போலி நண்பர்களும் உண்மை எதிரிகளும் பெருகுவர். தமிழ் விக்கிப்பீடியா வளர வளர இது நிகழ்வது இயற்கையே! சாம பேத தானம் தண்டம் என நான்கு வழிமுறைகள் இருக்க, பேசித் தீர்க்க நினைப்பவர் வழக்குத் தொடுப்பேன் என முதலிலேயே மிரட்ட மாட்டார். மின்னஞ்சலும் தர மாட்டார். இவர்களோடு பேசிக்கொண்டிராமல் இவர்களைத் தடை செய்வதே அனைவருக்கும் நல்லது. (நாணல் போல வளைவது தான் சட்டம் என ஒரு பாட்டே இருக்கிறது. நாமும் நாணல் போல் வளைந்தால் ...) --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:25, 22 சனவரி 2012 (UTC) பயனரைத் தடை செய்வதால் மட்டும் உண்மையிலேயே வழக்கு போட நினைப்பவரைத் தடுக்க முடியாது. தற்போதைக்கு அந்தப் பயனரின் பேச்சுப் பக்கத்தில் வேண்டுகோள் இட்டுள்ளேன். அவரோ வேறு யாருமோ தொடர்ந்து இது போன்ற எச்சரிக்கைகளை விடுத்தால் பயனர்களைத் தடை செய்ய விதி இயற்றலாம். அச்சப்பட்டு அல்ல. இவற்றை எரிதம் போல் கணக்கில் கொள்ளலாம் :) --இரவி 07:32, 22 சனவரி 2012 (UTC) சட்ட மிரட்டல் விடுப்பவர்களிடம் பேசித் தீர்க்க என்ன இருக்கிறது? அவர்களுக்குத் தேவை அவர்களது பெருமை பேசுவது அல்லது எங்களது வேலையைப் பாழாக்குவது. அவர்களிடம் கிஞ்சித்தும் நல்லெண்ணம் கிடையாது. அவர்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். மற்றப்படி, உண்மையிலேயே பிழையிருந்து திருத்த வேண்டுமாயின் அதற்குரிய வழிமுறைகளைக் கூறுவதும் தேவையான ஆதாரங்களைத் தருவதுமே பண்பாடாகும்.--பாஹிம் 07:49, 22 சனவரி 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலைகள்ஆலமரத்தடித் தொகுப்பு ஒன்றில் நேற்று நடந்த உரையாடல் பின்வருமாறு உள்ளது: //இது பெரிய விடயமல்ல ஸ்ரீதர், இருந்தாலும் சில நேரங்களில் எமது சில மூத்தவர்களின் அன்பு (அம்பு) வார்த்தைப் பிரயோகங்கள் இதயத்தைத் தைத்து விடுவதால் 50000 ஆயிரம் என்ற இலக்கிற்கு காலவரையரை விதிப்பதென்பது தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரையில் மனக்கிலேசங்களை உருவாக்கக்கூடியதே. இதுபோன்ற ஒரு பயணத்தில் இலக்கு வகுத்து வேகமாக செல்வதைவிட மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிப்பயணத்த வேகத்தில் பயணிப்பதே புதிய பயனர்கள் என்ற அடிப்படையில் தமிழ் விக்கியில் எமது நிலைப்புக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்// இது குறித்துச் சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
//மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிப்பயணத்த வேகத்தில் பயணிப்பதே // குறிப்பிடப்பட்டுள்ள வேகத்துக்கு என்ன காரணம் என்று மேலே தெரிவித்து உள்ளேன். கட்டுரை எண்ணிக்கை மட்டுமே ஒரு விக்கியின் வளர்ச்சி நிலையைக் குறிப்பிடாது என்பதையும் விளக்கி இருக்கிறேன். மற்றபடி, எந்த ஒரு பயனரோ கூட்டுத் திட்டமோ குறிப்பிட்ட கட்டுரை எண்ணிக்கையை முன்வைத்துச் செயற்படுவது தவறு அன்று. இது வரை அப்படிப்பட்ட இலக்குகளைத் தனிப்பட்ட அளவில் சிலர் முன்வைத்தபோது ஊக்கம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. கட்டுரைத் துறைகளில் அவரவர் விருப்பங்களைத் தெரிவித்திருக்கலாமே ஒழிய, கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் ஒரு முயற்சி முடக்கப்பட்டது கிடையாது. பொதுவாக ஒருவர் விக்கிப்பீடியாவில் புகுந்து கட்டுரை எழுதும் நுட்பங்களைப் புரிந்து கொண்டு செயற்படத் துவங்கி விட்டாலே, புதுப்பயனர் என்ற நிலையைத் தாண்டி விடுகிறார். இன்னும் குறிப்பாக, மூன்று முதல் ஆறு மாத காலங்களுக்குள் நிருவாகிகளாகப் பொறுப்பேற்கும் அளவுக்குச் சிறந்த பங்களிப்புகளை நல்கியவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்திய விக்கிப்பீடியாக்களை ஒப்பு நோக்கும் போது, தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகள் தேர்வும் தொடர்ச்சியாகவும் சீராகவும் நடைபெற்று வருகிறது. அதிக அளவிலான நிருவாகிகளையும் கொண்டு உள்ளோம். தொடர்ந்தும் வழமையாகவும் புதிது புதிதாக வரும் பயனர்களை இனங்கண்டு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தி வருகிறோம். இந்நிலையில், //மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிப்பயணத்த வேகத்தில் பயணிப்பதே புதிய பயனர்கள் என்ற அடிப்படையில் தமிழ் விக்கியில் எமது நிலைப்புக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்// போன்ற எண்ணம் ஏன் எழுகிறது எனப் புரியவில்லை. நான் வெளிப்படையாகவே கேட்கிறேன்: புதிய பயனர்களின் நிலைப்புக்கு இங்கு என்ன பிரச்சினை உள்ளது? புதிய பயனர்கள் யாராவது எந்த விதத்திலாவது கட்டுப்படுத்தப்படுவதாக உணர்கிறார்களா? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால், என்ன நிலவரம் என்பதை உரையாடி அறிந்து கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில், இது போன்ற கருத்துகளைப் பகிர்ந்து விக்கி சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி 04:24, 24 சனவரி 2012 (UTC) பி.கு:காண்க - விக்கிப்பீடியா:Tamil Wikipedia: A Case Study
விக்கிப்பீடியாவில் பங்களிக்க தயங்குகின்றனர். தமிழ்விக்கிப்பீடியா வலுவான கட்டமைபாகும் வரையிலாவது பயனர்களை ஊக்கப்படுத்த விமரிசனங்களை தவிர்த்து இலக்கை அடைய வேண்டும். கலைக்களஞ்சியமானது அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியுடைதாக இருக்கவேண்டும்தான் ஆனால் தமிழ்விக்கிப்பீடியாவில் தற்கால விஞ்ஞான வளர்சியில் அனுபவமுள்ளவர்கள் மிகக்குறைவே. விதிமுறைகளை மட்டும் பாராது அனுபவமுள்ளவர்களை பயன்படுத்தி தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். குறைகளை திருத்தி கொள்ளலாம். இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல மாற்றம் என்ற சொல்லே மாறாதது --ஸ்ரீதர் /பேசுக 05:51, 24 சனவரி 2012 (UTC) // தமிழ்விக்கிப்பீடியா ஆங்கிலவிக்கிப்பீடியா உடன் ஒப்பிட சுயேட்சையாக உள்ளதா! // சுயேட்சையாக என்று நீங்கள் கூறுவதன் பொருள் சரியாகப் புரியவில்லை. பயனர்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாமல் சுதந்திரமாகப் பங்களிக்கிறார்களா? எந்த ஒரு விக்கியிலும் யாரும் எந்தப் பயனரையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், பயனர்கள் எழுதும் கட்டுரைகள் ஒரு குறைந்தபட்ச தரத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அவற்றை மற்றவர்கள் திருத்துவதும், ஒரு பயனர் தொடர்ந்து ஒரே மாரிதியான பங்களிப்புகளை நல்கும்போது அது குறித்த கருத்து பகிரப்படுவதும், விக்கிப்பீடியா கொள்கைகள்-வழிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது வழமையே. ஆங்கில விக்கிப்பீடியாவின் மொழி நடை உள்ளிட்ட அனைத்துத் தர அளவீடுகளும் மிகக் கடுமையானவை. பல்வேறு காரணங்களால் புதிய பயனர்கள் வரத்து குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழ் விக்கிப்பீடியா சுயேட்சையாக உள்ளதா என்று நீங்கள் கேட்டுள்ளதா விரிவாக விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதை எதிர் கருத்தாக தெரிவிக்கவில்லை. எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. //பல கட்டுப்பாடுகள் இருப்பதால்தானே பலதுறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் (ஓய்வுபெற்ற கல்விமான்கள், அதிகாரிகள் மற்றும் பலதுறையினர்) விக்கிப்பீடியாவில் பங்களிக்க தயங்குகின்றனர்.// தமிழ் விக்கிப்பீடியாவின் மொழிநடை பலரைத் தயங்கச் செய்வதாக ஏற்கனவே சிலர் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்த இடத்தில் உரையாடுவது உரையாடலைத் திசை திருப்பும் என்பதால் அதனைத் தனியாகச் செய்வோம். தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதைக் கருத்தில் கொண்டால், தமிழ் நடை அளவில் நாம் இன்னும் கூட இளக்கத்தன்மையுடனேயே இருக்கிறோம். இல்லையென்றால், முதற்பக்கக் கட்டுரைகளை மீண்டும் இரு முறை உரை திருத்தும் தேவை இருக்காது. இந்நிலையில், மொழி நடை தவிர என்ன வகையான கட்டுப்பாடுகள் புதுப்பயர்களைத் தயங்கச் செய்வதாக உணர்கிறீர்கள்? பயனர்கள் இவ்வாறு உணர்வதாக எப்படி அறிகிறீர்கள்? நீங்கள் இவ்வாறு உணர்ந்தது உண்டா? எந்நிலையில்? தற்போது உள்ள புதிய பயனர்களோ நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு வெளியே பேசிப் பார்த்தவர்களோ இவ்வாறான கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்களா? இவற்றில் என்னென்ன கட்டுப்பாடுகள் பிற விக்கிப்பீடியாக்களில் இல்லாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் உள்ளன? அருள் கூர்ந்த இவற்றை மிக விரிவாக விளக்க வேண்டுகிறேன். //தமிழ்விக்கிப்பீடியா வலுவான கட்டமைபாகும் வரையிலாவது பயனர்களை ஊக்கப்படுத்த விமரிசனங்களை தவிர்த்து இலக்கை அடைய வேண்டும்.// உங்கள் பார்வையில் வலுவான கட்டமைப்பு என்றால் என்ன? எண்ணிக்கை, தரம், வீச்சு அடிப்படையில் இதை எப்படி அளக்கலாம் என நினைக்கிறீர்கள்? தமிழ் விக்கிப்பீடியா உலகளாவிய ஒரு கூட்டுத் திட்டத்தின் பகுதி. எனவே, அத்திட்டத்தின் நோக்கத்துக்கு உட்பட்டு சில கருத்துகளைப் பிற பயனர் பகிரலாம். நல்ல கருத்தாகத் தோன்றினால் ஏற்கலாம். இல்லை என்றால்புறக்கணிக்கலாம். யாரும் இங்கு தனிப்பட்ட அளவில் தாக்குதல் செய்வது ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவே, ஒருவருடைய பங்களிப்புகளைப் பற்றி வரும் கருத்துகளை விமர்சனமாக அல்லாமல் வளர்முக நோக்கிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். எது போன்ற கருத்துகள் ஒரு புதுப்பயனரின் ஆர்வதைக் குறைத்து விடக்கூடும் என்று நினைக்கிறீர்கள்? //கலைக்களஞ்சியமானது அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியுடைதாக இருக்கவேண்டும்தான் ஆனால் தமிழ்விக்கிப்பீடியாவில் தற்கால விஞ்ஞான வளர்சியில் அனுபவமுள்ளவர்கள் மிகக்குறைவே. விதிமுறைகளை மட்டும் பாராது அனுபவமுள்ளவர்களை பயன்படுத்தி தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.// தங்கள் கூற்றில் இருந்து நான் புரிந்து கொள்வது: "தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் துறையில் பங்களிப்பு நல்குபவர்கள் குறைவு. இத்தகையோர் வெளியே நிறைய உள்ளனர். அவர்களையும் அரவணைத்துப் பங்களிப்புகளைக் கூட்டும் வகையில் விதிமுறைகளைச் சற்றுத் தளர்த்த வேண்டும்". என்னென்ன விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று சில எடுத்துக்காட்டுகளைத் தருவீர்களா? ஏற்கனவே இந்தக் கட்டுப்பாடுகள் இருந்திருக்கக்கூடிய நிலையிலேயே பங்களிப்பாளர் அறிமுகப் பக்கத்தைக் கண்டோம் என்றால் அதில் தாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஓய்வு பெற்ற கல்வியாளர்கள் (ProfVK, செங்கைப் பொதுவன்), அதிகாரிகள் (மணியன்), அறிவியல் துறையினர் (நந்தகுமார், மகிழ்நன், கலை, செல்வா, தானியல் பாண்டியன், தெரன்சு முதலானோர்) முதலிய பலர் உள்ளனர். //குறைகளை திருத்தி கொள்ளலாம். இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல மாற்றம் என்ற சொல்லே மாறாதது// தமிழ் விக்கிப்பீடியா போன்ற சிறு திட்டங்களைப் பொறுத்தவரை கட்டுரையை முதலில் தொடங்குபவரே செப்பனாக, விரிவாக எழுதாவிட்டால் அக்கட்டுரை மேம்படுவதற்கான வாய்ப்பு குறைவே. குறிப்பாக: குறுகிய காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் இடப்படும் கட்டுரைகள், கூகுள் தமிழாக்கியது போன்ற கட்டுரைகள் இவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மட்டும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. ஒரே வகையான நிறுத்தக்குறி பிழை அத்தனைக் கட்டுரைகளிலும் உள்ளது. உரை திருத்தும் போது கூட இவற்றைத் திருத்தும் ஊக்கம் இன்றி கடந்து போக நேரிடுகிறது. இது போன்ற காரணங்களால் தான் பயனர்கள் இயன்ற அளவு செம்மையாக எழுத வேண்டும் என்றும், கட்டுரைகள் உருவாகும் வேகத்துக்கும் அவற்றை மேம்படுத்தவல்ல விக்கிப்பீடியர் எண்ணிக்கைக்கும் ஒரு சமநிலை வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாங்கள் எழுதியுள்ளது ஒரு சில வரிகள் தாம் என்றாலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு கவலை அளிக்கக்கூடிய பல விசயங்களை அவற்றில் தொட்டுள்ளீர்கள். எனவே, அருள் கூர்ந்து மேற்கண்ட எனது ஐயங்களுக்கு விரிவாக பதில் அளித்து உதவுமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி 11:57, 24 சனவரி 2012 (UTC)
ஒரு வரிக்கட்டுரைகளின் இடர்களுடன் பயனும் தாக்கமும் ஆராயப்பட்டது என்று சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பல நாட்டு, பல மொழி விக்கிப்பீடியர் சமூகங்களிடம் பேசிப் பார்த்ததில் இருந்து இக்கட்டுரைகளால் வரும் பயனை விட இடரே கூடுதலாக உள்ளதாகவே அறிகிறேன். அதனாலேயே சுட்டிக் காட்டினேன். பொதுவாக நான் வணிகப்பெயர்களைத் தமிழாக்குவது கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊர்ப் பெயரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நாம் சில ஆங்கில நிறுவனப் பெயர்களைத் தமிழில் கூறுவது அவ்வளவு பெரிய குற்றம் கிடையாது ;) ஆங்கில விக்கியை ஒப்பிட்டு நீங்கள் தரவிருக்கும் பரிந்துரையை எதிர்பார்க்கிறேன். நன்றி--இரவி 11:57, 24 சனவரி 2012 (UTC)
விக்கிப்பீடியா:மைல்கற்கள் , புள்ளிவிவரங்கள் தெளிவாக காட்டுகின்றன. மேலோட்டமாக நான் கூறிய கருத்துக்கு மதிப்பளித்து பயனர்களின் மனதை படம் பிடித்ததுபோல சரியாக யூகித்ததை கண்டு வியப்படைகிறேன். //தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் துறையில் பங்களிப்பு நல்குபவர்கள் குறைவு. இத்தகையோர் வெளியே நிறைய உள்ளனர்// இப்பக்கத்தில் மேலே கண்ட தங்களின் உரையாடலை கண்டு நான் மகிழ்சியடைகிறேன். தமிழ் விக்கியின் தரம் பேணப்படுவதற்க்கு இதுவே சான்று.
50,000 கட்டுரைகள் என்னும் அளவு இப்போது கைக்கு எட்டிய தொலைவிலேயே உள்ளது. இன்னும் 7,000 கட்டுரைகளே தேவை. மிக விரைவில் இலக்கை அடைந்து விடலாம். --- மயூரநாதன் 05:55, 30 திசம்பர் 2011 (UTC)
// தமிழ்விக்கிப்பீடியா ஆங்கிலவிக்கிப்பீடியா உடன் ஒப்பிட சுயேட்சையாக உள்ளதா! //
மொழி நடை பிரச்சினை தமிழ் விக்கியின் வளர்ச்சியில் சில தருணங்களில் தடையாக உள்ளது (எ.கா) அறிவியல். இத்தொகுப்பில் அடுத்துவரும் தலைப்பு இருசொல் பெயரீடு தாங்கள் எடுத்த அடுத்த கட்ட நடவடிக்கை நன்று.
துல்லியமாக, ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்ட இயலாவிட்டாலும் பொதுவான சந்தேகங்களை குறிப்பிட்டுள்ளேன். இவ்வுரையாடலின் மூலம் பலரின் குழப்பங்கள் தீரும் என நம்புகின்றேன். நன்றி. --ஸ்ரீதர் /பேசுக 08:05, 25 சனவரி 2012 (UTC) //தமிழ் விக்கி சிறப்புநிலை அடைய 50,000 கட்டுரைகள் எட்டும்நிலை அவசியம் எனும் எண்ணத்தை உணர்த்தியது. // எண்ணிக்கை இலக்குகள் அவ்வப்போது நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ள உதவுபவை தாம். யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எண்ணிக்கை மட்டும் இலக்காக அல்லாமல் ஆக்கும் ஒவ்வொரு கட்டுரையும் மற்ற தர அளவீடுகளிலும் சிறப்பாக அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். //ஒரு வரிக்கட்டுரைகள் ஆங்கிலவிக்கியிலும் இருக்கின்றது// ஆங்கில விக்கியில் பல பெரிய, பயனுள்ள கட்டுரைகள் உள்ளன. அவற்றுக்கு இடையே இவை போன்ற சிறிய கட்டுரைகளும் உள்ளன. அவர்களின் பயனர் சமூகம் பெரியது என்பதால் சிறிய கட்டுரைகள் வளர்வதற்கான வாய்ப்பு மிகுதி. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் சமூகம் சிறியது என்பதால் கட்டுரை வளராமல் பல ஆண்டுகளாக அப்படியே உள்ளதற்கான வாய்ப்பு உள்ளது. தவிர, ஒரு வரியாக இடக்கூடிய கட்டுரைகள் பலவும் ஒரு பட்டியலாகவோ தரவுத் தளமாகவோ இட வல்லவை தான். தகவலைச் சேர்ப்பதை யாரும் தடுப்பதில்லை. ஆனால், ஒவ்வொன்றையும் கண்டிப்பாகத் தனித்தனி ஒரு வரிக்கட்டுரையாகத் தான் சேர்க்க வேண்டும் என்றில்லையே? தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை கட்டுரையின் குறைந்தபட்ச அளவு மூன்று வரியாக இருக்க வேண்டும். இத்தகைய குறைந்தபட்ச விதிகளை வைத்திருப்பது தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய நல்லெண்ணம் வளர உதவும். பல இந்திய விக்கிப்பீடியாக்கள் வெறும் ஒரு வரிக் கட்டுரைகளையே கொண்டுள்ளன என்ற விமரிசனம் உண்டு. குறைந்தபட்ச தரம் மட்டுமே இப்படி வைத்திருக்கிறோம். ஆனால், முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கோ சிறப்புக் கட்டுரை ஆக்குவதற்கோ விதிகள் மிகவும் இளக்கமானவை தாம். //தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் இணைகப்பட்ட படிமத்தை பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கும்போது கால அவகாசத்தை நீட்டித்து தமிழ் விக்கிப்பீடியா:நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுவந்த பின்னரே அப்படிமத்தை நீக்க தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு அனுமதி பெற வேண்டும்.// இது நடைமுறைச் சாத்தியம் அற்றது. விக்கிமீடியாவின் ஒவ்வொரு திட்டமும் தன்னாட்சி கொண்டது. ஒன்று மற்றொன்றில் தலையிட இயலாது. காமன்சில் நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை உங்கள் கவனிப்புப் பட்டியலில் வைத்து, நீக்கல் தொடர்பான மறுப்புகளை அங்கு நீங்களே நேரடியாகவே உரையாட வேண்டும். உரையாடுவதற்கு உதவி தேவை எனில், தமிழ் விக்கிப்பீடியா ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாம். அல்லது, நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை தமிழ் விக்கிப்பீடியாவிலேயே நேரடியாகப் பதிவேற்றலாம். இங்கேயே நேரடியாகப் பதிவேற்றுவது ஊக்குவிக்கப்படுவதில்லையா என்று யாரேனும் தெளிவுபடுத்தலாம். //மொழி நடை பிரச்சினை தமிழ் விக்கியின் வளர்ச்சியில் சில தருணங்களில் தடையாக உள்ளது// குறுந்தட்டுத் திட்டம் முடிந்ததும் இதைப் பற்றி விரிவாக உரையாடுவோமே? //கூகுள் தமிழாக்க கட்டுரைகளை முற்றிலும் தடை செய்யாது அறிவியல் துறையில் அதிகம் இடம் பெற அனுமதிக்க வேண்டுகிறேன். // கூகுளே இந்தத் திட்டத்தைக் கை விட்டு விட்டது. ஏற்கனவே கூகுள் உருவாக்கிய கட்டுரைகளை சீராக்குவதே இப்போது உள்ள பணி. கூகுளைச் சாராத தனிப்பட்ட பயனர்கள் இது போன்ற கருவிகளைப் பயன்படுத்திப் பங்களிப்பதைத் தடுப்பது என்பது தற்போது முறையான கொள்கையாக உள்ளது. இக்கொள்கையில் மாற்றம் வேண்டும் எனில் இங்கு உரையாடலாம். //விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக நடத்தும் திட்டம்// பொதுவாக, இணையத்துக்கு வெளியே நடக்கும் பரப்புரைகளில் கூடுதல் மனித உழைப்பு, நேரம், பணம் தேவைப்படும். விக்கிப்பீடியா பயனர்கள் அனைவரும் தன்னார்வலர்கள். பலரும் முழு நேரப் பணி அல்லது படிப்பில் உள்ளார்கள். எனவே, திட்டமிட்டு ஒவ்வொரு மாவட்டமாக நடத்துவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. மற்றபடி, ஆர்வமுள்ள பயனர்கள் தத்தம் வசதிக்கு ஏற்ப பரப்புரை முயற்சிகளை ஒருங்கிணைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். தங்கள் ஊரில் உள்ள ஒரு கல்லூரி, பள்ளி என்பதில் இருந்து கூட நீங்கள் இதைத் தொடங்கலாம். மாவட்டம் தோறும் நடத்துவதை ஒரு திட்டமாகச் செய்ய விரும்பினீர்கள் என்றால், இதற்கான திட்டப் பக்கம் தொடங்கி உங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். ஆர்வமுள்ள பயனர்கள் இணைந்து கொள்வார்கள். //சட்ட மிரட்டல்// இது குறித்த அண்மைய ஆலமரத்தடி உரையாடலில் இத்தகைய பயனர்களை உடனே தடுக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துப் பிறகு தடுக்கலாம் என்றும் இரு வகையான கருத்துகள் தென்பட்டன. தேவைப்பட்டால், விதி இயற்றி இப்பயனர்களைத் தடுக்கலாம். மேலதிக சட்ட உதவி தேவை என்றால் இந்திய விக்கிமீடியா பிரிவையும் விக்கிமீடியா நிறுவனத்தையும் அணுகலாம். //ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் குழுவில் இடம்பெற ஆலோசிக்கலாம்.// பயனர்கள் நேரடியாக விக்கிப்பீடியாவில் செய்யும் பணிகளே விக்கிப்பீடியா நிருவாகிகளைத் தேர்ந்தெடுத்துக்கும் போது கணக்கில் கொள்ளப்படும். இந்த நிருவாகிகளும் துப்புரவுப் பணியாளர் போன்றவர்களே தவிர இவர்களுக்கு என சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை. எனவே, வெளியாட்களை நிருவாகிகள் ஆக்குவது விக்கிமீடியா கொள்கைக்கு முரண்பட்டது. அப்படியே யாராவது ஆனாலும், இந்த விசயத்தில் ஒன்றும் செய்ய இயலாது. மேலோட்டமான கருத்துகள் விக்கிப்பீடியா சமூகத்திலும் வெளியேயும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்து, உங்கள் கருத்துகளை இது போல் தெளிவாக முன்வைத்தால் நன்று. நன்றி--இரவி 10:57, 25 சனவரி 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலைகள்-2இரவி, மேலே மிகவும் பொறுமையாகப் பலவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் இது பற்றி நிறைய கருத்தாடலாம், ஆனால் விக்கிப்பீடியர்களிடையே "புதுப்பயனர்", "பழைய பயனர்" என்ற வேறுபாடெல்லாம் இல்லை. எல்லோருமே பங்களிப்பாளர்கள்தாம். கலைக்களஞ்சிய உருவாக்கம் என்பது ஒரு சீரிய முயற்சி. அதில் பயன்படுத்தும் நடையும் அதற்கேற்ற சீரிய முறையிலே இருக்கும். எளிதாகப் புரிந்துகொள்ளத் தக்கதாக இருக்கவும் வேண்டும், அதே நேரம் சீர்மை, ஒழுங்கு உடையதாகவும், பயன் பெருக்குவதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக, ஏறக்குறைய ஒரு 10,000-20,000 நல்ல தரமான கட்டுரைகளே ஓரு கலைக்களஞ்சியத்தில் இருக்கும் அத்தகு கலைக்களஞ்சியங்கள் அரிய தொகுப்புகளில் ஒன்றாக அடையாளப்படுத்தும் (இதுவே 20-25 தொகுதிகளில் நிற்கும்). நல்ல கலைக்களஞ்சியங்களில் பதிவாகும் கட்டுரைகளுக்கு ஒரு தேர்வுமுறை இருக்கும் (தொகுப்பாளர்களால்). ஒரு நூல் எழுதிய ஆசிரியர்கள் அல்லது 50 நூல்கள் எழுதிய ஆசிரியர்கள் அனைவரின் பெயர்களும் இருக்காது. அவை நல்ல தாக்கம் ஏற்படுத்தியதாக, அறிவாளிகளால் கருதப்பட்டால் மட்டுமே (அவர்கள் கணிப்பில்), அடையாளம் அறியப்பட வேண்டியவர்களாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுப்பர். ஆனால் விக்கியில் அப்படியான இறுக்கம் கிடையாது. வணிக நிறுவனங்கள் முதல், ஒரே ஒரு படத்தில் நடித்த நடிகர் முதல், சிறுசிறு வேதிப்பொருள் முதல் மிகப்பலவற்றைப் பற்றியும் கட்டுரைப் பொருள்கள் இருக்கலாம். என்றாலும், ஆங்கிலத்திலே சொல்லப்படும் "notability" ( குறிப்பிடத்தக்க தன்மை ), "significant" ("முக்கியமான", குறிக்கத்தக்க) முதலான பண்புகளும் வேண்டும். நாம் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு இயங்கினால், , அதுவும் ஒரு சில தலைப்புகளில் மட்டும் ஒரே மாதிரியான கட்டுரைகள் (சிறு தரவு வேறுபாடுகளுடன்) எழுதினால், அது விக்கிப்பீடியாவின் தரத்தைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. சில தனிமாந்தர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் (அவர்கள் எழுத்தாளராக இருந்தாலும் நடிகராக இருந்தாலும், விளையாட்டு வீரராக இருந்தாலும்) கட்டாயம் வேண்டும் என்றால் அவற்றை அட்டவணையில் இட்டு ஓரிரு கட்டுரையாக இடலாம் ("Wikipedia is not directory" w:en:WP:NOT என்பதையுன் கருத்தில் கொள்வது நன்று). தமிழ் விக்கிப்பீடியாவில், தரமான கட்டுரைகள் (ஒரு பக்கமோ 2, 3 பக்கமோ கொண்டவை, நல்ல அறிவைத் தூண்டும் படங்களுடனும், விளக்கங்களுடனும்) ஒரு 20,000-30,000 கட்டுரைகள் நாம் கூட்டாக உருவாக்க முடிந்தால் அதனை ஒரு பயன்மிகு வெற்றியாக நான் கருதுவேன். த.வி-யில் நாம் கட்டுரைகளைத் தரப்படுத்தவும் (தரம் குறிக்க) வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வளர்முகமாகவும், தக்க உரையாடல் பண்போடும், நல்லுணர்வோடும் நட்புணர்வோடும் கருத்தாடி இயங்குவது மிகவும் தேவை. கருத்து வேறுபாடுகள் இருப்பினும் (கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு, சொல்லப்போனால் அவை அடிப்படைத் தேவையும்(!!!) ஆகும்), அவற்றை முறையாக பண்புடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்னும் கருத்தை முன்வைக்கின்றேன்--செல்வா 15:53, 26 சனவரி 2012 (UTC)
இருசொல் பெயரீடுதாவரம் மற்றும் விலங்குகளை இரு சொற்பெயரீட்டினால் குறிக்கும் போது அவை இலத்தினாக்கப்பட்ட ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும் என்பது விதி. பல கட்டுரைகளில் இருசொற் பெயரீட்டை தமிழில் எழுதியிருக்கின்றோம். எ.கா:குன்றி.கலந்துரையாடல் தேவை.--சஞ்சீவி சிவகுமார் 07:49, 24 சனவரி 2012 (UTC)
தமிழ், இலத்தீனம் ஆகிய இரு மொழிகளிலும் இருப்பது நன்று. ஒரு மொழி விடுபட்டுள்ள இடத்தில் மற்றொன்றையும் சேர்ப்பது ஏற்புடையதே. இலத்தீனத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று விதி இல்லை. இலத்தீன ஒலிப்பு தெரியாத மாணவர்களுக்குத் தமிழ் எழுத்துபெயர்ப்பு உதவும். //.தமிழில் எழுதினால் முதலாவதாக அமையும் சாதிப்பெயரின் முன்னெழுத்து பெரிய எழுத்தாக (Capital)ஆக இருக்க வேண்டும் எனும் விதியும் ஏனைய எழுத்துக்கள் சிறிய (small)ஆக இருக்க வேண்டும் என்பதுவும் விதிகளாகப் பேணப்படுவது கடினம்// இந்த விதி இலத்தீனத்துக்குத் தான் பொருந்தும்.--இரவி 12:05, 24 சனவரி 2012 (UTC) இது போன்ற உரையாடல்களை விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு பக்கத்தில் மேற்கொள்ள வேண்டுகிறேன். அப்போது தான் பிற்காலத்தில் நடை குறித்த கேள்விகள் உள்ளோருக்குச் சிக்கும். ஆலமரத்தடியில் தமிழ் விக்கிப்பீடியா திட்டம் குறித்த பொதுவான உரையாடல்களை மேற்கொள்ளலாம்--இரவி 12:07, 24 சனவரி 2012 (UTC)
--செல்வா 13:59, 24 சனவரி 2012 (UTC)
பவுல் ஐயா, அங்கிருந்த 227 இலத்தீன் கிரேக்கச் சொற்கள் அனைத்திற்கும் தமிழில் சொற்கள் தந்திருக்கின்றேன். நீங்களும் சரிபார்த்து மேம்படுத்துங்கள். அவற்றின் பயன்பாடுகளைச் சில தமிழ் அறிவியற்பெயர்களில் காட்டி, இணைப்புக்கொடுக்க வேண்டும். அதனை அடுத்ததாகச் செய்கிறேன்.--செல்வா 23:04, 24 சனவரி 2012 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia