விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு78பாதுகாக்கப்பட்ட பக்கங்கள்விசமிகளின் தொல்லை அதிகமாகி வருகிறது. ”தமிழ்” என்ற கட்டுரையின் உள்ளடங்களை யாரோ நீக்கியுள்ளார்கள். எனவே, சில முக்கியமான (குறிப்பாக தமிழ், தொன்மை, சங்க இலக்கியங்கள், தமிழ் மொழி, பண்பாடு) கட்டுரைகளை புகுபதிகை செய்தவர்கள் மட்டுமே தொகுக்க முடியுமாறு செய்யுங்கள். பதிவு செய்யாத ஒருவர், இக்கட்டுரைகளை தொகுக்க முனைந்தால், அக்கருத்தை உரையாடல் பக்கத்தில் இடவோ, அல்லது புகுபதிகை செய்தோ சேர்க்க முடியும்படி செய்துவிடுங்கள். இக்கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சட்டம் ஏதேனும் உள்ளதா? நன்றி!--தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:07, 26 சூலை 2012 (UTC)
தமிழில் ஒருங்குறி வரிசைப்படுத்தல்வார்ப்புரு பேச்சு:தமிழர் ஆடற்கலை வடிவங்கள் இங்கே, தமிழ்ச் சொற்கள் பட்டியல் ஒன்றை பி.எச்.பி யின் built in செயலி கொண்டு வரிசைப்படுத்திப் பார்த்தேன். ஜ இடையில் வருகிறது. இது ஒருங்குறியின் சிக்கலா, அல்லது பி.எச்.பி செயலியின் சிக்கலா என்று கூற முடியுமா? --Natkeeran (பேச்சு) 14:41, 14 சூலை 2012 (UTC)
சீரான வரிகள்விக்கியில் எம்.எஸ். வேர்டில் உள்ளது போஒல் allign வசதி உள்ளதா ஒவ்வொரு வரியின் இறுதி இடமும் மாறுவதால் அலங்கோலமாய்த் தெரிகிறதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:32, 15 சூலை 2012 (UTC)
மேலுள்ள அலங்கோலமாய்த் என்ற வரியின் முடிவையும் Kanags உரையாடுக என்ற அடுத்த வரியின் முடிவையும் ஒப்பிடுங்கள். 2 வரியின் முடிவும் எவ்வளவு தள்ளி இருக்கிரது என்று பாருங்கள். இதுவே அலைன் போன்று ஒரு வசதியிருந்தால் எல்லா வரியும் ஒரே இடத்திலேயே முடிவடையும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:12, 15 சூலை 2012 (UTC)
நான் கூறியதும் ஜசுடிஃபை அலைன்மன்டைத்தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:19, 15 சூலை 2012 (UTC)
கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்திருத்தம் செய்ய வேண்டிய கூகுள் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் காட்சிப்படுத்துவது நல்லதொரு திட்டம். ஆனாலும், கட்டுரைகள் திருத்தப்பட முன்னர் அவற்றின் காட்சிப் படுத்தலை நீக்கி புதிய கட்டுரைகளைத் தருவது சரியான முறையாகத் தெரியவில்லை. ஒரு கட்டுரை திருத்தி முடிந்தவுடன் அதன் கூகுள் வார்ப்புருவையும் நீக்கி காட்சிப்படுத்தலில் இருந்தும் நீக்கலாம். இதற்கு சிலவேளை இரு வாரங்களுக்கு மேல் தேவைப்படலாம்.--Kanags \உரையாடுக 08:43, 15 சூலை 2012 (UTC)
வார்ப்புரு இயங்குகிறதா?வார்ப்புரு பேச்சு:விக்கிப்பீடியராக இவ்வார்ப்புரு இயங்குகிறதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:50, 15 சூலை 2012 (UTC) இற்றைப்படுத்தல் தாமதம்இந்தவாரக்கூட்டுமுயற்சிக்கட்டுரை முறையாக இற்றைப்படுத்தப்படுவதில்லை. இதனைக் கவனிக்கவும்--பிரஷாந் (பேச்சு) 07:57, 16 சூலை 2012 (UTC)
மொழியியல் அடிப்படையில் இலக்கணக்குறிப்புகளுடன் "விரிதரவு""தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் 2011-2012 ஆம் ஆண்டிற்கான பகுதி-II திட்டத்தின் கீழ் “தமிழ் இலக்கியங்களுக்கு மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புடன் கூடிய விரிதரவு” ‘Linguistically Annotated Corpus for Tamil Literature” என்ற திட்டம் நடைபெற்று வருகிறது." பார்க்கவும். மிகவும் தேவையான ஒரு பணியை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. --செல்வா (பேச்சு) 16:42, 16 சூலை 2012 (UTC)
இந்திய வரலாற்றில் கேள்விஇந்திய வரலாற்றில் ஏதாவது அரசகுலம் 2000 ஆண்டுகளுக்கு மேல் அரசாண்டதாக வரலாறு உண்டா? இருந்தால் இங்கு தெரியப்படுத்தவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:25, 19 சூலை 2012 (UTC) Help decide about more than $10 million of Wikimedia donations in the coming year![]() (Apologies if this message isn't in your language. Please consider translating it) Hi, As many of you are aware, the Wikimedia Board of Trustees recently initiated important changes in the way that money is being distributed within the Wikimedia movement. As part of this, a new community-led "Funds Dissemination Committee" (FDC) is currently being set up. Already in 2012-13, its recommendations will guide the decisions about the distribution of over 10 million US dollars among the Foundation, chapters and other eligible entities. Now, seven capable, knowledgeable and trustworthy community members are sought to volunteer on the initial Funds Dissemination Committee. It is expected to take up its work in September. In addition, a community member is sought to be the Ombudsperson for the FDC process. If you are interested in joining the committee, read the call for volunteers. Nominations are planned to close on August 15. --Anasuya Sengupta, Director of Global Learning and Grantmaking, Wikimedia Foundation 20:26, 19 சூலை 2012 (UTC) Distributed via Global message delivery. (Wrong page? Fix here.) கட்டுரைப் பின்னூட்டக் கருவி நிறுவுதல் வாக்கெடுப்புஉங்கள் கருத்துக்களும், வாக்குகளும் நுட்ப_மாற்ற_வாக்கெடுப்பு/கட்டுரைப்_பின்னூட்டக்_கருவி_நிறுவுதல் பக்கத்தில் வரவேற்க்ப் படுகின்றன. நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 09:38, 20 சூலை 2012 (UTC) தமிழ் எழுத்து உதவிSony Ericson, samsung போன்ற கைபேசிகளில் தமிழ் font பெரும்பாலும் இருப்பதில்லை. என் நண்பனுக்கு கைபேசியில் விக்கியை தமிழில் படிக்க ஆசை. தொழில்னுட்ப உதவி செய்யுமாறு வேண்டுகிறேன். தமிழ் font தொடர்பான அனைத்து உதவிகளுக்கும் ஏதேனும் பக்கம் உள்ளதா? --தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:44, 21 சூலை 2012 (UTC)
நீங்கள் கூறிய தளத்தைப் பார்த்தேன். செயற்படுத்திப் பார்த்தேன். தகவலுக்கு நன்றி --தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:09, 21 சூலை 2012 (UTC)
இணைக்கப்பட்ட கட்டுரையைப் பிரித்தல்இணைக்கப்பட்ட இரு கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து மீண்டும் பிரிக்க முடியுமா? கிலோகிராம் கட்டுரைப் பேச்சுப் பக்கத்தைப் பார்க்க.--Kanags \உரையாடுக 11:58, 21 சூலை 2012 (UTC)
எழுத்துக்கள், மொழிகள் தொடர்பான கட்டுரைகள்இலத்தீனை மூலமாக்க் கொண்ட எழுத்துக்கள் ஆங்கில கட்டுரையை பார்க்க நேர்ந்தது. (ஒரு சில எழுத்துக்கள் மட்டுமே சேர்த்தால் எசுப்பானியம்). அதில் ஆங்கில அரிச்சுவடியை ஒட்டி உள்ள/அடிப்படையாகக் கொண்ட எழுத்துக்களை அறிந்துகொள்ள உதவியது. தமிழிலும் இதுபோன்ற கட்டுரைகள் இருந்தால் மாணவர்களை, மொழியிலாளர்களை வெகுவாகக் கவரும். குறைந்தபட்சம் குறுங்கட்டுரையாக்க முயலவேண்டும். நன்றி. -- மாகிர் (பேச்சு) 16:06, 21 சூலை 2012 (UTC) விக்கிதானுலாவி மூலம் கட்டுரை தரவேற்றம்விக்கிதானுலாவியைப் பயன்படுத்தி, பயனர் கணேசின் CSV LOADER மூலம், பயனர் நற்கீரனின் "விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்" எண்ணத்தை மையமாக வைத்து பரீட்சார்த்தமாக 7 அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் குறுங்கட்டுரைகள் தரவேற்றப்பட்டுள்ளது. இதன் மாதிரி வடிவம் : பயனர்:Drsrisenthil/AWB CSV LOADER --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 17:21, 21 சூலை 2012 (UTC)
பகுப்புக்கள்விக்கி பகுப்புகளில் திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் , திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் என இரண்டு வகையான பகுப்புக்கள் உள்ளன. இவற்றில் உள்ள வித்தியாசம் என்ன?--பிரஷாந் (பேச்சு) 07:03, 23 சூலை 2012 (UTC)
காப்புரிமை நிலைமை அறியப்படாத அனைத்து படிமங்கள்காப்புரிமை நிலைமை அறியப்படாத அனைத்து படிமங்கள் இங்குள்ள படிமங்களை நீங்கிவிடலாம். நீங்கலுக்கான அறிவித்தல் 2011ம் ஆண்டுக்கு மேலாகக் காணப்படுகின்றது. மேலும், பல பாவனையில் இல்லாதவையும், மாற்றீடான கோப்புக்களை பொதுவில் கொண்டும் காணப்படுகின்றன. சிலவற்றிற்கு மாற்றீடான கோப்புக்களை இணைத்துள்ளேன். --Anton (பேச்சு) 07:32, 23 சூலை 2012 (UTC)
முதற்பக்கமும் அண்மைய மாற்றங்களும்முதற்பக்கத்தில் “நீங்களும் கட்டுரை எழுதலாம்” என்ற பகுதியை வைத்ததிலிருந்து, புதிய கட்டுரைகள் பல நாளுக்கு நாள் உருவாகின்றன. புதிய பயரைகளை ஈர்க்கும் விதத்தில் நீங்கள் இவ்வாறு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மென்மேலும் த. விக்கி வளர உதவும். ஆயினும், அவற்றில் பெரும்பான்மை ஆங்கிலத் தலைப்போ/உள்ளடக்கமோ, சோதனை முயற்சியாகவோ உள்ளன. பெரும்பான்மையினர் விதிமுறைகளைப் படிப்பதில்லை எனக் கருதுகிறேன், முக்கியமான இந்த இரண்டு விதிகளை மட்டும் ””முதற்பக்கத்திலேயே”” இடுமாறு வேண்டுகிறேன். (பிறவற்றை உள்ளே படித்துக்கொள்ளட்டும்) 1. தலைப்பும், உள்ளடக்கங்களும் தமிழில் இருக்க வேண்டும். 2. தெரிந்தவற்றை எழுதலாம். தேவையற்றவை/ தற்புகழ்ச்சி/ அநாகரிகமானவை நீக்கப்படும். {இவ்விதியை திருத்தம் செய்து வெளியிடுங்கள்}. புதுப் பயனர் உதவி எளிமையாக உள்ளது. பயனர் ஒருவர் புதியவர்களுக்காக சிறிய காணொளி ஒன்றைத் தயாரிப்பதாக அறிந்தேன். என் மனமார்ந்த வாழ்த்துகள்! புதுப் பயனர்களுக்கு இன்னும் எளிமையாக உதவ, புகுபதிகை செய்துள்ள நிர்வாகிகள் சிறப்பு உதவி பக்கம் ஒன்றில் கையொப்பமிடவும். இதற்கான இணைப்பு முதற்பக்கத்தில் இருக்கட்டும். இப்பக்கத்தில் உள்ள பயனரை சொடுக்குவதன் மூலம் புதியவர் அவரிடம் ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற முடியும்!. மேலும் ஏதேனும் முக்கியமான (மேம்படுத்தல் தொடர்பான) கலந்துரையாடல் நடைபெற்றால் எங்களுக்குத் தெரிவதில்லை. எல்லாப் பயனர்களுக்கும்,(குறைந்தபட்சம் அந்த மாதத்தில் புகுபதிகை செய்த பயனர்களுக்காவது) இது குறித்து செய்தி அனுப்பும் வசதி உள்ளதா? அண்மைய மாற்றங்கள் பகுதியில் ’கூட்டு முயற்சியான கட்டுரையான’ என வருகிறது. இது பிழையென்று கருதியே கூறுகிறேன். என் கருத்து பிழையெனில் மன்னிக்கவும். இப்பக்கத்தில் வரிசையாக, “அறுபட்ட..”, “மொத்த கட்டுரை..”, “விரைவு நீக்கல்” என சிலவற்றை வைத்துள்ளீர்கள். சில வேளைகளில் இவற்றை மாற்றுகிறீர்கள். ஏன் எல்லாவற்றையும் இரண்டொரு வரிகளில் வைக்கக் கூடாது? நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:18, 23 சூலை 2012 (UTC)
எங்களையெல்லாம் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி மனநிறைவு அடையும் ரவி அவர்களுக்கு நன்றி! என் கருத்துகளை பரிசீலித்தமைக்கு நன்றி! முதற் பக்கத்தில் ,மேலே சொன்ன இரண்டு விதிகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, தமிழ்த் தலைப்புகளுடன் கட்டுரைகள் உருவாகின்றதைக் கண்டீர்களா? ஆயினும், இரண்டு விதிகளை மட்டுமே எழுதி உள்ளதால், பிற விதிகளை யாரும் பார்ப்பதில்லை எனக் கருதுகிறேன். (அதற்காக எல்லாவற்றையுமா முதல் பக்கத்தில் எழுதமுடியும்?). எனவே, “மாதிரியைப் பாருங்கள்” என்ற ஒற்றைத் தலைப்பின் இணைப்பை கீழே இட்டு, அப்பக்கத்தில் ஒரு உதாரண கட்டுரையை எப்படி எழுதக் கூடாது எனவும் எப்படி எழுதவேண்டும் எனவும் இரு பகுதிகளில் சிறிய மாதிரி ஒன்றை எழுதி highlight செய்து காட்டுமாறு வேண்டுகிறேன். இது மிக முக்கியமானது என்பதால், விரைந்து சிந்தித்து, சிறந்த தீர்வு காணுமாறு வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:21, 26 சூலை 2012 (UTC) ~~சிறு மாற்றம் வேண்டுகிறேன்.~~ மாற்றத்திற்கான சில காரணங்கள்:
புதியவர்களுக்கு விக்கியைப் பற்றித் தெரியாததால், இவை நடைபெறுவது வழமையே! கீழ்க்கண்டவாறு செயற்படுத்தினால் சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன், (உதவிக் குறிப்புகளை மட்டும் வழங்காமல், நாமே உதவினால் என்ன?) கட்டுரை எழுதும்முன் சிறு குறிப்புகள் வழங்கப்படுவது நல்லது. முதற்பக்கத்தில் “நீங்களும் கட்டுரை எழுதலாம்” என்ற பகுதியில், தலைப்பை உள்ளிடுங்கள் என்பதை நீக்கவும். கட்டுரையை நீங்களும் தொகுக்கலாம் என்பதை அறிவீர்களா, அறிந்து கொள்ள, இங்கே செல்லவும், என்பது போன்ற இணைப்பை வழங்கலாம். அடிப்படையான விக்கி செயல்களை (தமிழ்த் தட்டச்சு) சிலவற்றை மட்டும் ஒரு பக்கத்தில் காட்டி, மேலும் அறிய தனி இணைப்பை வழங்கலாம். வேண்டாமெனில் skip வசதி மூலம், மணல்தொட்டிக்கு இட்டு செல்லும், அதில் தொகுத்து சேமிக்கவும் எனக் கூறலாம். இங்கே அடிப்படையான எழுத்து செயல்பாடுகளான, bold, headline, adding an image போன்றவற்றிற்கு குறிப்பு வழங்கி ஒவ்வொன்றையும் மணல்தொட்டியில் செயல்படுத்திப் பார்க்கவும் எனலாம். பின்னர் மேலும் உதவிக்கு என்று, இணைப்புகளை வழங்கலாம். மேலுவற்றில் நான் கூற வருவது user friendly ஆக, படினிலைகளக் கொண்டு இருக்க வேண்டுமென்பதே! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) கவனிக்கப்பட வேண்டிய பேச்சுப்பக்கம்பேச்சு:தமிழ்த்தாய் வாழ்த்து. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:02, 23 சூலை 2012 (UTC) செந்தமிழ் அறிவியல் - சுப்பராமன்இந்த ஒளிப்படத்தை பாருங்கள். அறிவியல் தமிழ் இலக்கியத்தை பற்றி சுப்பராமன் உரை. --இராச்குமார் (பேச்சு) 15:24, 24 சூலை 2012 (UTC)
விரைந்து நீக்க வேண்டிய பக்கங்கள்இன்று விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் பகுப்பில் உள்ள கட்டுரைகளை ஆய்ந்ததன் பேரில் பின்வரும் கருத்தை முன்வைக்கிறேன்:
ஒரு விக்கிப்பக்கம் விரைந்து நீக்கப்பட வார்ப்புரு இணைப்போர் விரைந்து நீக்குதலுக்கான காரணங்களில் ஒன்றை உரையாடல் பக்கத்தில் அல்லது தொகுத்தல் சுருக்கத்தில் இடுதல் நலம். அவ்வாறில்லாத கட்டுரைகளை நீக்க விரும்பினால் விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கத்தில் தகுந்த காரணங்களுடன் பரிந்துரையுங்கள். பிற பயனர்கள் தகுந்த ஆட்சேபனை தெரிவிக்காவிடத்தும் தகுந்த காரணங்கள் இருக்குமிடத்தும் நிர்வாகிகள் அக்கட்டுரையை நீக்குவார்கள். இவ் வாக்கெடுப்பு பொதுவாக ஒரு வாரம் நிலுவையில் இருக்கும். --மணியன் (பேச்சு) 18:35, 24 சூலை 2012 (UTC)
நீக்கல் வார்ப்புருவை இட்ட பயனர் காரணத்தைச் சேர்க்க மறந்தாலும், கட்டுரையை நீக்குவது சரி என்று நினைக்கும் பயனர் அதற்கான காரணத்தைப் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். மறுப்பு இல்லா நிலையில் ஒரு வாரம் பொருத்திருந்து அழிக்கலாம். அல்லது, அப்பக்கத்திலேயே உரையாடலாம். நேரடியாக வாக்கெடுப்புப் பக்கத்துக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்--இரவி (பேச்சு) 05:32, 25 சூலை 2012 (UTC) GLAM Crafts Museum blog postDear all, Here's a blog post cum report on India's first GLAM initiative at the National Crafts Museum! The program started out in English but was taken forward in Hindi to suit the staff members who have been enthusiastically creating articles and editing in Hindi Wikipedia! The program has been a bold step to prove that GLAM can very well happen in India - with its own design and structure and it has also given the Hindi community a precious gift of 6 new editors. A special thanks to User: Roboture who has been with us in each and every meet and helped train editors, User:Yann for his first set of invaluable Commons contributions and to User:Aniruddhajnu and User:Siddhartha Ghai for coming down to the museum to inspire the staff members. Hope this gives more courage to any community that wants to start a similar project! Would love to provide any help needed. Noopur28 (பேச்சு) 06:29, 25 சூலை 2012 (UTC) |
Portal di Ensiklopedia Dunia