விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு82காமிக்ஸ் கதாபாத்தரங்களை எழுதுவதில் சிறுஐயம்பேட்மேன், ஸ்பைடர்(ஒரு உதாரணத்திற்கு) என்ற பெயர்களின் அப்படியே கட்டுரையை தொடங்கலாமா? இல்லை தமிழாக பெயர்த்து வவ்வால் மனிதன், சிலந்தி மனிதன் போன்று தலைப்பிட வேண்டுமா? காமிஸ் என்பதற்கு தமிழாக்கம் சித்திரக்கதை என்பதை விக்கியில் அறிந்தேன். சிலந்திமனிதன் (சித்திரக்கதை) என்று கட்டுரை தொடங்க வேண்டுமா? ஐயத்தினை தீர்த்தீர்களானால் சிறுகட்டுரைகளை தொடங்கி எழுத உதவியாக இருக்கும். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:06, 28 செப்டெம்பர் 2012 (UTC)
வார்ப்புரு:Superherobox உருவாக்கம்ஆங்கிலத்தில் இருக்கும் இந்த வார்ப்புருவினை தமிழ்விக்கியில் பயன்படுத்த இயலவில்லை. வரைகதை குறித்தான தமிழ் வார்ப்புருக்களை உருவாக்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பேட்வுமன், ஸ்பைடர்மேன், வொன்டர் வுமன், எக்ஸ் மேன் போன்ற கட்டுரைகளை உருவாக்கவும் எண்ணியுள்ளேன். அலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தரவேண்டுகிறேன். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:25, 28 செப்டெம்பர் 2012 (UTC)
மேற்கோளா? சான்றா?கட்டுரையில் கூறப்படும் செய்தியை உறுதிப்படுத்துவதற்காகக் சுட்டப்படும் சான்றை மேற்கோள் என குறிக்கப்படுகிறது. மேற்கோள் என்னும் தமிழ்ச் சொல் Quotation என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானது. அதாவது ஒரு கூற்றை எவ்வித மாற்றமும் இன்றி கட்டுரைக்குள் கையாள்வதே மேற்கோள் ஆகும். மாறாக, கட்டுரையில் கூறப்படும் கருத்தானது கற்பனையாகக் கூறப்படவில்லை; சான்றோடுதான் கூறப்படுகிறது என்பதனை சுட்டும் குறிப்பே சான்றாகும். எடுத்துக்காட்டாக, 'பரலி சு. நெல்லையப்பர் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18ஆம் நாள் பிறந்தார்' என்கிறார் வெ. சாமிநாத சர்மா என கட்டுரையில் எழுதினால் அது மேற்கோள். மாறாக 'பரலி சு. நெல்லையப்பர் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18ஆம் நாள் பிறந்தார்' எனக் கட்டுரையாளர் தன்கூற்றாக எழுதிவிட்டு அச்செய்தியை உறுதிப்படுத்த வெ. சாமிநாத சர்மா தன்னுடைய நான் நால்வர் நூலில் 84ஆம் பக்கத்தில் கூறியிருக்கிறார் என அடிக்குறிப்பில் தகவல் கொடுத்தால், அது சான்று. எனவே, தற்பொழுது தமிழ்விக்கிப்பீடியா கட்டுரைகளில் சான்றை மேற்கோள் எனத் தவறாகக் குறித்துக்கொண்டிருக்கிறோம். இதனைத் திருத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்து என்ன?--அரிஅரவேலன் (பேச்சு) 15:44, 28 செப்டெம்பர் 2012 (UTC)
பிழை வருகிறது வழுவாக இருக்கலாம்
இளந்தமிழர் இலக்கியப் பட்டறைதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 22-09-2012 முதல் 28-09-2012 வரை தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் தேர்வு செய்யப் பெற்ற 106 மாணவர்/மாணவியர்களுக்கு இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எனும் தலைப்பில் எழுத்து, பேச்சுப் பயிற்சிகள் அளிக்கப் பெற்றன. ஏழு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 42 வகையான தலைப்புகளில் அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் 28-09-2012 அன்று நடைபெற்ற நிகழ்வுகளில் எனக்கு “இணையத் தமிழ் படைப்பாக்கம்” எனும் தலைப்பில் பயிற்சியளிக்கும் வாய்ப்பு அளிக்கப் பெற்றது. இந்நிகழ்வில் இணையத்தில் தமிழ் மடலாடற் குழுக்கள், தமிழ் வலைப்பூக்கள், தமிழ் இணைய இதழ்கள், தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ் விக்சனரி போன்றவற்றில் பங்களிப்பு செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து ஆர்வத்துடன் மாணவ/மாணவியர்கள் கேட்டறிந்தனர். இப்பயிற்சியில் திருச்சி, கல்லூரிப் பேராசிரியர் முனைவர் துரை. மணிகண்டன் வழியாக இளந்தமிழர் இலக்கியப் பட்டறை கட்டுரை உருவாக்கப்பட்டு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:10, 29 செப்டெம்பர் 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான தனி அரட்டை அரங்குதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான தனி அரட்டை அரங்குக்கு, வாருங்கள் ! #wikipedia-taconnect மிக குறைந்த வேக இணையத்திலும் செயற்படும். இந்த அரட்டை அரங்கில் இன்று முதல் காத்திருப்போம். புதுபயனர்களுக்கு உதவும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. விக்கியில் தொகுக்கத் துவங்கும் நம் ஒவ்வொருவரும் இதில் உரையாடிக்கொண்டே செயல்பட இது ஒரு எளியவழிமுறை ஆகும்.--த♥ உழவன் +உரை.. 04:18, 30 செப்டெம்பர் 2012 (UTC) என்னால் இப்பகுதியில் #wikipedia-taconnectதட்டச்சிட இயலவில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:33, 30 செப்டெம்பர் 2012 (UTC)
த. உழவன் கொடுத்த connect என்ற பச்சை இணைப்பை அழுத்தி பெயரையும், captchaவையும் அளியுங்கள். அடுத்து வரும் அரட்டையில் Firefox https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/ நீட்சி மூலம் தமிழில் எழுத முடிகிறது--இரவி (பேச்சு) 08:18, 30 செப்டெம்பர் 2012 (UTC)
பரப்புரைஃபேஸ்புக்கில் முடிந்த அளவு பகிரல்களை (shares)மேற்கொள்ளவும். நான் தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கத்திலும் எனது பக்கத்திலும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான குழுவிலும் செய்தியைப் பகிர்ந்துள்ளேன். நீங்கள் ஏதேனும் ஒன்றை உங்கள் பக்கத்திலும் உங்கள் குழுவிலு பகிர்ந்து இந்த நாளில் பல பயனர்களை ஈர்க்க உதவுங்கள்.. நன்றி. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 06:47, 30 செப்டெம்பர் 2012 (UTC)
விக்கிநூல் எழுத விருப்பம்
பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்து
பயனர் ஈழநாதன் மறைவுசிறிது காலம் தமிழ் விக்கியில் பங்களிப்புச் செய்த ஈழநாதன் நேற்று சிங்கப்பூரில் அகால மரணமானார் என்ற செய்தி இணையம் வழியே கிடைக்கப்பெற்று மிக்க அதிர்ச்சியடைந்தேன். எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.--Kanags \உரையாடுக 13:07, 1 அக்டோபர் 2012 (UTC)
மிகவும் வருத்தம் தரும் செய்தி. அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 19:12, 1 அக்டோபர் 2012 (UTC)
+1 நூலகம் திட்டத்திலுள்ள நூல்கள் நான் வரலாறறிய மிகவும் உதவியாய் இருந்தவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:18, 2 அக்டோபர் 2012 (UTC)
அவர் இல்லாதது தமிழுலகுக்கு பேரிழப்பு. :( அன்னாரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:02, 2 அக்டோபர் 2012 (UTC)
நூலகம் திட்டத்தில் இவரது பங்கு குறித்து இப்போது தான் அறிகிறேன். இவரின் சமூகப் பங்களிப்புகளைச் சரியாக ஆவணப்படுத்தி அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிப்பதே நம்மால் செய்யக்கூடிய மரியாதை. ஆழ்ந்த இரங்கல்கள்--இரவி (பேச்சு) 08:46, 4 அக்டோபர் 2012 (UTC)+1-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:52, 9 அக்டோபர் 2012 (UTC) இணையத்தில் பெரும் பங்களிப்பை ஈந்து மறைந்திருக்கும் அன்னாரின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்--அரவிந்த் (பேச்சு) 05:17, 29 அக்டோபர் 2012 (UTC) ஆங்கில எழுத்துக் கலப்புஏற்கனவே [[1]] முறையிட்டிருந்தேன். படிக்காதவர்கள் படிக்கவும். தற்போது தமிழ் விக்கி மிகவும் பிரபலமாகி வருவதால், பல விசமிகள் வேண்டுமென்றே தமிழ்ப் பெயர்களுடன் ஆங்கில எழுத்துகளை தலைப்பிட்டு எழுதி தமிழை சிதைக்கின்றனர். இது வன்மையாக கண்டித்தக்கது. நிர்வாகிகள் கூடுதல் கவனம் எடுத்து, ஐபி முகவரிகளால் தொகுக்கப்படும் தொகுப்புகளை கவனத்திற்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தமிழ் விக்கியில் எழுதுவது சரியாக இருக்குமென்ற எண்ணத்தில் பொதுமக்களும் ஆங்கிலத் தலைப்பிட்டு வழக்கமாகக் கொள்ளும் அபாயம் உண்டு. மேலும், தமிழ்த் தட்டச்சு தெரியாத ஒருவர், s எனத் தேடல் பெட்டியில் தட்டச்சிட்டால், s. புத்தூர் என வருகிறது. பார்ப்பவர்கள் தமிழில் ஆங்கிலங்கலந்து எழுதலாம் தவறில்லை, விக்கியிலே அப்படித்தானுள்ளது என்று எண்ணவும் வாய்ப்புள்ளது. கூடிய விரைவில் முடிவெடுக்கவும். நற்றமிழை வளர்ப்போம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:15, 2 அக்டோபர் 2012 (UTC)
விசமத் தொகுப்புகள்: (ஆங்கிலக் கலப்பு):
-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:59, 6 அக்டோபர் 2012 (UTC) நீங்கள் கூறுவது போல் இவர்கள் தமிழ் விதிகளை அறியாமல், தவறான பொது வழக்கைப் பயன்படுத்துகிறவர்களே! நாம் கூறும் பெயரிடல் மரபை கேட்காவிடில் என்ன செய்வது? ஆயினும் ஐபி பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தாலும் அவர்களுக்கு போய்ச் சேராதே! :( மேலும், நான் என் வீட்டருகேயுள்ள பலருக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் மாறவேயில்லை. நாள்தோறும் நான் சென்னையில் பயணிக்கும்போது நிகழும் தமிழ்ச் சிதைவை எண்ணி வருந்தியே ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். எங்கே பொதுவழக்கு என்ற பெயரில் அம்முறை விக்கியில் நுழைந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இனி பெயரிடல் மரபை எடுத்துக் கூறி விளக்குகிறேன். அச்சத்தைப் போக்கியமைக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:48, 4 அக்டோபர் 2012 (UTC)
நீங்கள் கூறியபடியே சுட்டிக் காட்டுகிறேன். பதிலில்லையெனில் நானே மாற்றுகிறேன். better என்பதை beter என்றோ bater என்றோ எழுதினால் எழுத்துப் பிழை, தவறெனலாம். சம்பந்தமே இல்லாமல் cater என்று எழுதுவதை என்னவென்று சொல்வது?? அதுபோலுள்ளது இது! மக்கள் தமிழில் ஆங்கில எழுத்து வராது என்பதை அறியும் அறிவுகூட இல்லாமல் உள்ளனரா? இந்நிலை தமிழுக்கு வந்தது வருந்தத்தக்கது. விக்கி பொதுக் களஞ்சியம் என்பதால் அதிகப் பயனர்கள் சேர்ந்தால் இவ்வழக்கு இங்கே நுழையக் கூடும். மேற்கூறியவாறு நிர்வாகிகள் சிறப்புக் கவனம் செலுத்துமாறு வேண்டுகிறேன். மொழிகளின் வீழ்ச்சி, இறப்பு குறித்து சிறிதே படித்துள்ளேன். இதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:59, 6 அக்டோபர் 2012 (UTC). எரித தானியங்கிநான் தமிழ் விக்கியில் பங்களிக்கத் தொடங்கியதிலிருந்து இன்றுதான் எரியத் தானியங்கி எனப்படும் (Spambot) கணக்கை (User:Jamaica2020) தமிழ் விக்கியில் இன்றுதான் முதலில் பார்த்தேன் :). இது மேல் விக்கியில் மேலாளர்களினால் சரிபார்க்கப்பட்டு உலகளவில் கணக்கு மூடப்பட்டுள்ளது. இங்கேயும் தடை செய்துள்ளேன். ஆனால் இது போன்ற கணக்குகள் தொடர்ந்து உருவானால் நமக்கு பெரும் தலைவலியாக முடியும் :)--சண்முகம்ப7 (பேச்சு) 02:21, 3 அக்டோபர் 2012 (UTC)
பொதுவன் வேண்டுகோள்தமழ்விக்கி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களையும், பங்கேற்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களையும் அகவையில் மூத்தவன் என்ற முறையில் வாழ்த்துகிறேன். அறிவுத் தொண்டு புரிவது விக்கிப்பீடியா. அறிவியல், வாழ்வியல் சார்ந்த பல்வேறு துறைகள் பற்றிய கட்டுரைகளும் படங்களும் இதில் உள்ளன. தமிழில் இவை வளரவேண்டும் என்னும் நாட்டம் கொண்ட நல்லவர்களும் வல்லவர்களும் இணைந்து செயல்படுகிறோம். பலர் அவரவர் கண்ணோட்டத்தில் இணைக்கப்படவேண்டிய கட்டுரைகள் என்று 5000-க்கு மேல் தந்துள்ளனர். இவற்றின் இணைப்பால் தமிழ் வளம்பெறும். தமிழர் மாண்புறுவர். முனைவோருக்குப் பாராட்டுகள். எளியேனின் நோக்கம் தமிழின் இருப்புகளைப் பதிவு செய்வது.
இந்தக் கோணத்தில் பல நல்ல கட்டுரைகளை எனக்கு முன்பே பலர் உருவாக்கியுள்ளனர். என் கட்டுரைகள் அவர்களைப் பின்பற்றுகின்றன. எளியேனுக்கு அவ்வப்போது பலர் உதவுகின்றனர். உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் என் வணக்கம். அறிவியலில் வளரும் கட்டுரைகள் ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்பாக அமைவதைத் தவிர்க்க இயலாது. தமிழ், தமிழர் பற்றிய கட்டுரைகளில் இதனைத் தவிர்க்கவேண்டும். முனைவோம். தெரிந்ததைச் சான்றுகளுடன் எழுதுவோம். தெளிந்தவர்கள் செப்பம் செய்வார்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 23:08, 29 செப்டெம்பர் 2012 (UTC)
சோழ அரசர்கள் வார்ப்பு அமைக்க யோசனைவார்ப்புரு பேச்சு:சோழர் இற்கு இடமாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 20:20, 6 அக்டோபர் 2012 (UTC) பயனருக்கான செய்தியில் பிழைதமிழ் விக்கிப்பீடியாவின் பயனருக்கான உரையாடல் பகுதியில் பிற பயனர்கள் கருத்து தெரிவிக்கும் போது, அந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் பார்வையிடும் பக்கங்களில் அது குறித்த தகவல் இடம் பெற்று வருகிறது. இந்தத் தகவலில் “உங்களுக்குப் ஒரு புதிய செய்தி உள்ளன (கடைசி மாற்றம்)” என்று உள்ளது. இந்தத் தகவலில் “உங்களுக்கு” என்பதுடன் சேர்ந்துள்ள “ப்” நீக்கப்பட வேண்டும். மேலும் இத்தகவலில் “ஒரு புதிய செய்தி” என்றிருப்பதால் “உள்ளன” என்பதை மாற்றி உள்ளது என்று இருக்க வேண்டும். இந்தத் தகவலை “உங்களுக்கு ஒரு புதிய செய்தி உள்ளது (கடைசி மாற்றம்)” என்று பிழைகள் இல்லாமல் மாற்றம் செய்ய வேண்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:54, 8 அக்டோபர் 2012 (UTC)
பயனருக்கான உரையாடல் பகுதியின் தலைப்பில் உள்ள வரிகளிலும் ஒற்றெழுத்துகள் தேவையற்ற இடங்களில் சேர்க்கப்பட்டும் ( உ-ம் : நிரலற்றக் கவனிப்பு ) சில இடங்களில் விடுபட்டும் ( உ-ம் பட்டியலை பார்த்து ) காணப்படுகின்றன. இவையும் விரைவில் மாற்றம் செய்யப்பட வேண்டும் --அரவிந்த் (பேச்சு) 05:15, 29 அக்டோபர் 2012 (UTC) பயனர் பெயர் தடை குறித்துஒருவருடைய பெயரில் வேறொருவர் கணக்குத்தொடங்குவது தவறே, ஆயினும், இது பயனரின் பெயராக இருந்தால் அதை மாற்றம் செய்யத்தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. பிற பயனர்களின் கருத்தினையும் அறிய ஆவல் பதியவும். பார்க்க பயனர் பேச்சு:வைகோ.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:49, 9 அக்டோபர் 2012 (UTC)
எங்கள் ஊரில் வைகோவின் தொண்டர் ஒருவர் தன் மகனுக்கு வைகோ சண்முகம் என்று பெயர் வைத்துள்ளாரே! அப்படியானால் சண்முகத்தை தடை செய்ய இயலுமா? :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:15, 9 அக்டோபர் 2012 (UTC)
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையமாநாடு, 2012, திசம்பர் 28,29,30
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும்(உத்தமம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கினை அண்ணாமலை நகரில்(சிதம்பரம்,தமிழ்நாடு)நடத்துகின்றன(2012,திசம்பர் 28-30). இதில் ஆய்வரங்கம், கண்காட்சி, மக்கள் அரங்கம் என்ற மூன்று பிரிவு உண்டு. மக்கள் அரங்கில் தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல் அனுப்புவது, தமிழ் இணையதளங்கள், வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியா அறிமுகம், விக்கியில் கட்டுரை வரைவது, சமூக வலைத்தளங்கள் குறித்து இணைய ஆர்வலர்களுக்குப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விக்கி ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டு தமிழ் விக்கிப்பீடியா குறித்து அறிமுகம் செய்யலாம். விக்கியில் கட்டுரை வரைவது பற்றியும் செயல் விளக்கம் அளிக்கலாம். இணைய ஆர்வலர்கள் இணைந்து தமிழ் இணையத்தை மக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு சேர்ப்போம். மேற்கண்ட இணைய மாநாட்டுத் தகவல்கள், என்னால் தரப் பட்டதே.முன்பு கையொப்பமிட மறந்துவிட்டேன்.மீண்டும் சந்திப்போம். --முனைவர் மு.இளங்கோவன் (பேச்சு) 16:41, 12 அக்டோபர் 2012 (UTC)
அய்யய்யோ ஒரு பிரச்சனை
அப்படி என்றால் அய்யய்யோ பல பிரச்சினை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:42, 13 அக்டோபர் 2012 (UTC)
காப்புரிமை மீறப்பட்ட பகுதிகளை நீக்கும்போதுகாப்புரிமை மீறப்பட்ட பகுதிகளை நீக்கும்போது வரலாற்றை நீக்க வேண்டுமா? அவ்வாறாயின் எவ்வாறு நீக்குவது? --Natkeeran (பேச்சு) 21:14, 13 அக்டோபர் 2012 (UTC)
ஆம் கண்டிப்பாக தேவை. அவை இருந்தால் தான் காப்புரிமை மீறி எழுதியவரை அப்படி எழுதக்கூடாது என வழியுறுத்தலாம். ஆனால் வரலாற்றை ஒப்பீட்டு பார்க்க முடியாமல் செய்யலாம். பேச்சு:போதி தருமன் வரலாற்றைப் பார்க்கவும். சோடாபாட்டில் இதை செய்திருக்கார். நீங்கள் எதற்கு கேட்கிறீர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:42, 16 அக்டோபர் 2012 (UTC) Upcoming software changes - please report any problems![]() (Apologies if this message isn't in your language. Please consider translating it) All Wikimedia wikis - including this one - will soon be upgraded with new and possibly disruptive code. This process starts today and finishes on October 24 (see the upgrade schedule & code details). Please watch for problems with:
If you notice any problems, please report problems at our defect tracker site. You can test for possible problems at test2.wikipedia.org and mediawiki.org, which have already been updated. Thanks! With your help we can find problems fast and get them fixed faster. Sumana Harihareswara, Wikimedia Foundation Engineering Community Manager (talk) 03:14, 16 அக்டோபர் 2012 (UTC) P.S.: For the regular, smaller MediaWiki updates every two weeks, please watch this schedule. Distributed via Global message delivery. (Wrong page? Fix here.) Fundraising localization: volunteers from outside the USA neededPlease translate for your local community Hello All, The Wikimedia Foundation's Fundraising team have begun our 'User Experience' project, with the goal of understanding the donation experience in different countries outside the USA and enhancing the localization of our donation pages. I am searching for volunteers to spend 30 minutes on a Skype chat with me, reviewing their own country's donation pages. It will be done on a 'usability' format (I will ask you to read the text and go through the donation flow) and will be asking your feedback in the meanwhile. The only pre-requisite is for the volunteer to actually live in the country and to have access to at least one donation method that we offer for that country (mainly credit/debit card, but also real-time banking like IDEAL, E-wallets, etc...) so we can do a live test and see if the donation goes through. All volunteers will be reimbursed of the donations that eventually succeed (and they will be low amounts, like 1-2 dollars) By helping us you are actually helping thousands of people to support our mission of free knowledge across the world. Please sing up and help us with our 'User Experience' project! :) If you are interested (or know of anyone who could be) please email ppena@wikimedia.org. All countries needed (excepting USA)! Thanks! Sent using Global message delivery, 17:20, 17 அக்டோபர் 2012 (UTC) Thank youPlease excuse my posting in English, and please feel free to translate my text if others may be interested. This morning I received a letter from a happy reader - a college student from Sri Lanka - who wanted us to know that he and his family really benefit from Wikipedia, in English and Tamil. He says, "We really benefit from you guys" and wants us to know that he will support Wikipedia until the very end. I wanted to say thank you for making a difference in his life and in so many other lives. I hope you feel good about what you do. You rock. :) --Mdennis (WMF) (பேச்சு) 12:35, 19 அக்டோபர் 2012 (UTC)
I hope and wish that tamil wikipedia will reach great hieghts. Thank you Users and WMF! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:17, 19 அக்டோபர் 2012 (UTC)
வாசகர் கருத்துகள்இன்று காலையில் எனக்கு ஒர் சிந்தனை தோன்றியது. மேற்குறிய தலைப்பிற்கு தொடர்புடையதே!! வாசகர்கள் பலர் தமிழ் விக்கிப்பீடியாவை விரும்பி படிப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலருக்கு (முன்பு எனக்கும்) விக்கிப்பீடியாவில் தொகுப்பது குறித்த அறிவு இல்லை. Front end(readers) மற்றும் Back end(COntributors) க்கான இடைவெளி அதிகமிருப்பதாய் தோன்றுகிறது. பலருக்கு தாங்களும் தொகுக்க முடியும் என்று தெரிந்திருக்கவில்லை. பின்னர் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்று கூறி எழுத வைத்தீர்கள். அதே போன்று என்ன தான் சொல்லிப் புரிய வைத்தாலும் புரிந்து கொள்ளும் திறன் அவர்களுக்கு இருக்குமா எனத் தெரியவில்லை. இன்னும் பலர் விக்கிஅ=யை படித்தாலும் கட்டுரை தொகுப்பது சரியாகத் தெரியாது என ஒதுங்குகிறனர். எனவே, விக்கிப்பீடியா:பயனர் கருத்துகள் என்றோ விக்கிப்பீடியா:வாசகர் கருத்துகள் என்றோ ஒரு பக்கத்தைத் தொடங்கி, அனைத்துப் பக்கங்களின் மேலும் வைக்கப்படும் பதாகைகளுக்கு பதிலாக, விக்கிப்பீடியா குறித்த உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள் என்று வைத்தால் பலர் முன்வந்து தங்களுக்கு உண்டான பிரச்சனைகளை கூறுவார்கள். இந்த இணைப்பு மேற்கூறிய பக்கத்திற்கு இட்டுச் செல்லும். கருத்துகளை தெரிவிப்பார்கள் இதற்கு ஆலமரத்தடி பொருத்தமான இடமாக இருக்காது. அடிக்கடி தொகுப்புகள் நிரம்பி வழிகின்றன . என்ன சொல்லவருகிறேன் என யாருக்காவது புரிகிறதா? குழப்புகிறேனா?? மறுமொழியிட்டு உதவுங்கள்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:17, 19 அக்டோபர் 2012 (UTC)
நானும் ஏற்கனவே இது போன்று கருத்தளித்துள்ளேன். சில வாரங்களாக நீங்கள் (சண்முகம்) பகுப்பு:aftv5test என்ற பகுப்பைச் சேர்த்ததைக் கண்டேன். அது இதுதான் என்று இப்போது புரிகிறது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:23, 19 அக்டோபர் 2012 (UTC)
புற சான்றுகள் தேவைப்படும் கட்டுரைகள்புற சான்றுகள் தேவைப்படும் கட்டுரைகள் பகுப்பில் 590+ கட்டுரைகள் இருக்கும் நிலையில் மேலும் மேலும் வார்ப்புரு மட்டும் இணைப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு சான்று சேர்க்கும் பணியில் கவனம் செலுத்தலாம். --இரவி (பேச்சு) 13:15, 20 அக்டோபர் 2012 (UTC) (தொடர்புடைய உரையாடல்: பயனர் பேச்சு:மதனாஹரன்/தொகுப்பு ௪#சான்று சேர்க்கும் திட்டம்.)
-- சுந்தர் \பேச்சு 15:45, 20 அக்டோபர் 2012 (UTC) தமிழ் கட்டுரைகளில் வேற்று மொழி விக்கி இணைப்புகளை இணைக்கும் போது சற்று கவனமாக இருக்கவும்.சோடியம் என்ற கட்டுரை போல பல கட்டுரைகளை யேர்மனிய கட்டுரையுடன் இணைக்கும் போது வேறு படுகின்றன Natrium என்று காட்டுகின்றன --சிவம் 13:40, 22 அக்டோபர் 2012 (UTC)
நட்ரியம் என்பது சோடியத்தின் ஜெர்மானிய பெயரென நினைக்கிறேன். சரியாகத்தான் காட்டுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:04, 22 அக்டோபர் 2012 (UTC) இப்போது சரியாக காட்டுகிறது. முன்பு நீரில் உள்ள Natrium காட்டியது.--சிவம் 14:13, 22 அக்டோபர் 2012 (UTC) கோரப்படும் படங்கள்விக்கியில் கோரப்படும் கட்டுரைகள் போல் கோரப்படும் படங்கள் என்பதற்கு பக்கமுருவாக்கினாலென்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:36, 23 அக்டோபர் 2012 (UTC)
பக்கம் ஆக்கப்பட்டது. இருந்தாலும் மேலும் பக்க உள்ளடக்கங்களை மெருகேற்றலாம். விக்கிப்பீடியா:கோரப்படும் படங்கள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:18, 25 அக்டோபர் 2012 (UTC) OPACதமிழக அரசின் OPAC தளம் உள்ளது. ஆசிரியர்கள், நூல்கள் குறித்த சில தகவல்களை இத்தளத்தில் பெறலாம். இதன் மூலம், நன்கு அறியப்படாத, ஆனால் பல நூல்களை எழுதியவர்கள் பற்றிய தகவல் இதில் கிடைக்கும். ஆனால், நூலும், ஆசிரியரும் பெயர் மட்டுமே கிடைக்கும். எழுத்தாளர்கள், கவிஞர் போன்றோருக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:25, 24 அக்டோபர் 2012 (UTC) சாதி பற்றிய கட்டுரைகளும் தற்போதைய நிலைமைகளும்பல சாதி பற்றிய கட்டுரைகள் சாதி x இச் சமயம், சாதி x இத் தொழில் என்று எழுதப்படுகின்றன. இன்றைய நிலையில் கணிசமானவர்கள் சாதி x தொழில்களில் ஈடுபடுவதில்லை. பலர் சமயம் கிறித்தவத்துக்கோ, பெளத்தத்துக்கோ, இசுலாக்கோ சமயம் மாறி இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே எழுதும் போது "மரபுவழியாக இத் தொழில்களில் மட்டும் ஈடுபடுமாறு சாதியக் கட்டமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டார்கள்" போன்று தெளிவுபடுத்தப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 16:08, 24 அக்டோபர் 2012 (UTC)
பயனர் NSS IITM tamil குறித்துஅண்மையில் பயனர்:NSS-IITM-tamil கணக்கிலிருந்து Bulk translations அளிக்கப்படுகின்றன. இது கருவி வழியானதா எனத் தெரியவில்லை. மேலும் இது ஒரு கல்லூரியின் தேசிய சேவைக் குழு உறுப்பினர்கள் பலர் இணைந்து பங்களிக்கிறார்களா எனத் தெரியவில்லை. பிற நிர்வாகிகள் இந்தப் பங்களிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 09:01, 26 அக்டோபர் 2012 (UTC)
ஆயிரத்தில் ஒருவர்49000 கட்டுரைகளை எட்டியுள்ளோம். 50000 கட்டுரைகளுக்கு இன்னும் 1000 கட்டுரைகளே உள்ளன. இந்த 1000 கட்டுரைளை எழுத வருமாறு "ஆயிரத்தில் ஒருவர்" என்பது போல் விக்கிப்பீடியா பரப்புரைகளை மேற்கொண்டால் பயனளிக்கும் என நினைக்கிறேன். விளையாட்டுக்கு இரு ஊகப் போட்டிகளை வைக்கலாம் என்று இருக்கிறேன் :) போட்டி போட்டு குதூகலத்துடன் பங்களிக்க உதவுமே...
\\பார்த்துக்கொண்டே இருங்கள் அது நான்தான்.\\
எந்த நாளில் இந்த மைல்கல்லை அடைவோம்?: திசம்பர் 20
போட்டிகள் மூலம் பரப்புரைஇணையப் பயனாளர்களுக்கு விக்கிப்பீடியாவினை அறிமுகம் செய்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பலரும் வாசிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றார்கள். அவர்களை விக்கிப்பீடியாவில் பங்கேற்க வைக்க வேண்டும். முகநூல் போன்ற சமூக தளங்களில் இதற்கான முயற்சிகள் பெரிதும் நடைபெற்றால் புதிய பங்களிப்பார்கள் கிடைப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. தமிழ் மீது பற்றுள்ள வலைப்பூ எழுத்தாளர்களையும், சமூக சிந்தனையாளர்களையும் விக்கியின் பக்கம் திருப்ப சிறு போட்டியொன்றினை வைத்து புத்தக பரிசுகளை அறிவிக்கலாம். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:13, 27 அக்டோபர் 2012 (UTC)
சான்றுகோள் வழங்குவதன் முக்கியத்துவம்எழுதப்படும் கட்டுரைகளில் சான்றுகோள்கள் மேற்கோள்கள் வழங்குவதனை ஒரு முக்கியப் பண்பாக கொள்வது நன்று. தமிழ் விக்கியில் 90% கட்டுரைகள் சான்றுகோள்கள் அற்ற நிலையில் இருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. (என்னால் ஏற்கெனவே எழுதப்பட்ட ஆக்கங்கள் கூட எனக்கே உவப்பாக இல்லை.) சான்றுகோள்கள் வழங்கப்படாத கட்டுரைகள் கேள்விக்குறியாவதுடன், அதனை ஆய்வு நோக்கில் அணுகுவோருக்கு நம்பகத் தன்மையானதாக ஏற்றுக்கொள்ள முடியாமலும் போகும். முடிந்தவரை இதன்பிறகு எழுதும் கட்டுரைகளையாவது சான்றுகளுடனே எழுத முனைவது விக்கிக்கு சிறப்பைத் தரும்.--HK Arun (பேச்சு) 19:46, 27 அக்டோபர் 2012 (UTC) அருண், முன்பு நாம் வளரும் விக்கியாக இருந்ததால் உள்ளடக்க அளவைப் பெருக்குவதில் (அகல உழுதல்) கவனமாய் இருந்தோம். தற்போது ஐம்பதாயிரத்தை எட்டும் நிலையில் இருப்பதால் தரத்தில் அதிக கவனஞ் செலுத்த வேண்டியோராய் (ஆழ உழுதல்) இருக்கிறோம். நான் அவ்வப்போது மற்ற சில இந்திய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளுக்குச் சென்று பார்ப்பதுண்டு. இந்தி விக்கிப்பீடியாவில் ஒரு வரிக்கட்டுரைகள் அதிகம். முழுமையடையாத கட்டுரைகள் அதை விட அதிகம். உதாரணம் - [[hi:पागकटारा, कोश्याँकुटोली तहसील]], [[hi:बार्तिन]] [[hi:हाजीपुर_गाँव,_खैर_(अलीगढ़)]] தெலுங்கு விக்கிப்பீடியாவிலோ பல ஆங்கில விக்கிக் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே இடப்பட்டுள்ளன. உதாரணம் - [[te:టెనొఫవిర్]]. மலையாள விக்கியில் குறைந்த அளவே கட்டுரைகள் இருந்தாலும் அவை நல்ல கருத்தாழம் மிக்கவையாய் உள்ளன. நம் தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகள் உள்ளதோடு நல்ல தரக்கண்காணிப்பும் உள்ளது. வரிக்கு வரி சான்றளிக்க வேண்டும் என்றில்லாமல் தேவையான இடங்களில் சான்று, வெளியிணைப்பு, உசாத்துணை ஆகியவற்றை அவசியம் அளிப்போம். சான்றில்லாத் தகவல்களை நீக்கும் முன் அவற்றுக்கு சான்று சேர்க்க முடியுமா என்றும் முயல்வோம். ஐம்பதாயிரம் கட்டுரைகளை எட்டிய பின் கிரந்த எழுத்து குறித்த கொள்கை முடிவை எடுக்க வேண்டிய மிகப்பெரிய சவாலும் நமக்கு உள்ளது. இவை குறித்து இனி நடக்க இருக்கும் அனைத்து உரையாடல்களிலும் மற்ற பயனர்களுக்கு உரிய மதிப்பளித்து அவர் தம் கருத்துகளுக்கும் மதிப்பளித்து பண்புநயத்தோடு உரையாடுவோமாக! நன்றி !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 20:17, 27 அக்டோபர் 2012 (UTC)
சான்றில்லா தகவல்களை நீக்கும் போது அதை பிரதி பண்ணி கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் சான்று இல்லா தகவல்கள் எனும் தலைப்பின் கீழ் இடலாம் எப்போதாவது நல்ல சான்று கிடைத்தால் மீண்டும் கட்டுரையில் சேர்க்கலாம், வெறுமனே பேச்சுப்பக்கத்தில் இடாமல் சான்றில்லா தகவல்களை நீக்குதல் பல நல்ல தகவல்கள் இழக்கப்படக்கூடிய அபாயத்தை உண்டு பண்ணும்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:22, 29 அக்டோபர் 2012 (UTC)
அவசியமான இடங்களில் சான்றுகள் வழங்குவது முக்கியம்தான். அதே நேரம் சான்றில்லாத் தகவல்களை நீக்கும்போது, முக்கியமான சில தகவல்களும் நீக்கப்பட்டு விடுகின்றன. அவற்றை நீக்குவதற்குப் பதிலாக சான்று தேவை என்ற வார்ப்புருவுடன் கட்டுரையிலேயே இருக்க விடலாம் என்பது எனது கருத்து. சான்றில்லா விட்டாலும், அவற்றை எழுதுவதற்கு ஒருவர் எடுத்த முயற்சி, நேரத்தையும் கருத்தில் கொள்ளல் நல்லதென நினைக்கின்றேன். சங்கீர்த்தன் கூறியிருப்பதுபோல் கட்டுரையை பார்க்கும் அனைவரும் வரலாற்றில் என்ன நடந்தது என்றோ, என்ன நீக்கப்பட்டுள்ளது என்றோ பார்ப்பதில்லை. எனவே சான்று தேவை என்ற வார்ப்புருவுடன், தகவல் அங்கேயே இருந்தால், அதனைப் பார்ப்பவருக்கு அந்தத் தகவல் நம்பத் தகுந்ததா என்பதை ஆராய முடியும். அவ்வாறில்லையெனில், அந்தத் தகவல் பற்றி வேறொருவர் சான்றுடன் எழுதும்வரை (எவரும் அதனை நினைக்காமலும் போகலாம்), குறிப்பிட்ட தகவல் அங்கே இடம் பெற வாய்ப்பில்லை. நான் சில சமயங்களில் சான்றில்லாமல் இருந்த சில தகவல்களுக்கு சான்று தேடி இணைத்திருக்கின்றேன். அந்தத் தகவல் அங்கே இல்லாதிருந்தால், அதனைப் பற்றி சிந்தித்திருக்கவும் மாட்டேன். எடுத்துக்காட்டுக்கு இன்று ஒரு கட்டுரையில், இன்று உலகில் இருக்கும் 6000 வரையான மொழிகளில் 5400 வரையான மொழிகள் 2100 ஆண்டளவில் அழிந்து போய்விடும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது[ஆதாரம் தேவை]. என்ற வரிகள் நீக்கப்பட்டிருந்தன. அந்த வரிகள் அங்கேயே இருந்தால், அதனை வாசிக்கும் ஒருவர், அது உண்மைதானா என்று மேலும் ஆராயக் கூடும். சான்றுகள் கிடைக்கும்போது அதனை இணைக்கவோ, அல்லது அந்தத் தகவல் திருத்தப்படக் கூடியதெனின் திருத்தவோ கூடும். எனவே தயவு செய்து சான்றற்ற தகவல்களை நீக்கும்போது, தகவலின் முக்கியத்துவம், அதனை எழுத ஒருவர் எடுத்த நேரம், உழைப்பையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 16:16, 29 அக்டோபர் 2012 (UTC) +1--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:28, 29 அக்டோபர் 2012 (UTC) +1-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:02, 29 அக்டோபர் 2012 (UTC) நானும் கலையின் கருத்தை வழிமொழிகிறேன். தமிழ் கட்டுரைக்கே சான்று தேவை என்று கேட்கபட்டதை பார்த்துதான் நான் சான்றிணைத்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:41, 29 அக்டோபர் 2012 (UTC) சர்ச்சைக்குரிய, கட்டுரையின் நடுநிலைத்தன்மை / நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் தகவலை முற்றிலும் நீக்கலாம். ஓரளவு பொது அறிவுக்குட்பட்ட, துறை சார்ந்தவர்கள் ஆதாரம் கிடைக்கக்கூடும் என்று எண்ணும் தகவலை "சான்று தேவை" அறிவிப்பு இட்டு அப்படியே விட்டு வைக்கலாம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்டவற்றைப் பேச்சுப் பக்கத்தில் சேர்த்து வைக்கலாம். பல கட்டுரைகளை எழுதிய பயனர்கள் இப்போது முனைப்பாக இல்லாமல் இருக்கலாம். முனைப்பாக இருக்கும் பயனர்களாலும் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் சான்று சேர்க்க முடியாது. எனவே, சான்று இல்லை என்று நீக்குவதற்கு முன் தகுந்த சான்றுகளைச் சேர்ப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும். வெறுமனே சான்று தேவை அறிவிப்பை இட்டுப் பிறகு சிறிது காலத்துக்குப் பின் நீக்கிச் செல்வது முறையாக தெரியவில்லை. --இரவி (பேச்சு) 19:30, 29 அக்டோபர் 2012 (UTC) கட்டுரை நீக்கல் வேண்டுகோள்இசுலாம் குறித்த விமர்சனங்கள் பக்கத்தில் ஏகப்பட்ட பிணக்குகள் உள்ளன. இப்பக்கத்தினை விரைந்து நீக்க வேண்டுகிறேன். ஒரு வேளை இக்கட்டுரை தேவைப்பட்டால் நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் பிறகு உருவாக்கலாம். பிற பயனர்களின் கருத்து தேவை. நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:01, 29 அக்டோபர் 2012 (UTC)
நட்டம்எம்மவர்கள் உலகத்தில் பல இடங்களில் வாழ்கின்றார்கள். அவர்களால் விக்கி நினைப்பதுபோல் அனைத்து செயல்களையும் உடனே செய்ய முடியாமல் உள்ளன. வேலை , வீடு, குடும்பம் , இதையும் தாண்டி விக்கியில் சிறிது பங்களித்தால் அதையும் நீக்குகிறார்கள். அப்போது மனவெறுப்பு வருகின்றன. இதனால் தமிழ் விக்கி பங்களிப்பை சிலர் நிறுத்தி உள்ளனர்! காரணம்: ஒரு சில துறைகளில் அந்த துறைகளை சேர்ந்தவர்கள் பங்களிக்கும் போதும். வேறு சிலர், அதாவது அந்த துறையை சேர்ந்தவர் அற்றவர், நீக்குவதையே குறியாக உள்ளனர் அதனால் நீக்க பட்ட ஒரு படத்துக்கு பல நேரம் செலவழித்து ஆதாரம் குடுக்க வேண்டி உள்ளன இது தேவையா?? ஒரு துறை சார் கட்டுரையில் பிழை இருப்பின் பேச்சுப்பக்கத்தில் கேள்வி கேக்கலாம்!! அதை விட்டு தன்னிச்சை செயல்பாடு!! இது போன்று ஒருத்தர் சான்று போதும் என்கிறார், இன்னும் ஒரு அதிகாரி சான்று போதாது என்கிறார்!! இங்க என்னதான் நடக்குது?? தமிழ் மேல் ஆசை இருப்பதனால் விக்கிக்கு வந்தால். இங்கே குரங்கின் கையில் பூமாலை குடுத்த கதையாக இருக்கிறது எமது கட்டுரைகள்!!. பிரதேச வாதம் என்று சொல்லாமலே இங்கே பிரதேச வாதம் நடக்கிறது அதுதான் உண்மை!! இதுதான் நடுநிலைமை?? இது தனி மனிதர் தாக்குதல் இல்லை!! இதையும் தனி மனிதர் தாக்குதல் என்று பொய் உரைக்கவேண்டாம்.!! இதற்குத்தான் நான் கேக்கிறேன் இங்கே தலைவர் யார்?? ஒரு சிலருக்கு இப்போதான் கண் விழித்திருக்கிறது அதற்க்கு நன்றி! ஒரு கட்டுரையை கேக்காமல் அளிக்கும் போது அதன் வலியை நான் மட்டும் இல்லை பலர் அந்த வேதனையை அனுபவித்திருப்பார்கள். நன்றி இல்லை!--சிவம் 01:08, 30 அக்டோபர் 2012 (UTC)
குருடனுக்கு எப்போதும் பகலும் இருட்டுத்தான் இதை நான் சொல்லவில்லை மூர்றோர் சொன்னது!(பழமொழி)--சிவம் 06:34, 30 அக்டோபர் 2012 (UTC) எனக்கும் பல பழமொழிகள் தெரியும். உள் குத்தல் இல்லாது கருத்துடன் உரையாடுவது நன்று. --Anton (பேச்சு) 06:43, 30 அக்டோபர் 2012 (UTC)
//அதை விட்டு தன்னிச்சை செயல்பாடு!! இது போன்று ஒருத்தர் சான்று போதும் என்கிறார், இன்னும் ஒரு அதிகாரி சான்று போதாது என்கிறார்!! இங்க என்னதான் நடக்குது?? // சிவம், விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி. ஒருவர் சான்று போதும் என்பதும் மற்றவர் போதாது என்பதுமே இங்கு தன்னிச்சையான செயற்பாடுக்கு இடம் இல்லை என்பதற்கான சான்று. கலந்துரையாடி இணக்க முடிவு எடுப்பதற்கான துவக்கமே இது போன்ற உரையாடல்கள். கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கிறோமே தவிர, கருத்தைச் சொல்லும் பயனர் புதியவரா நிருவாகப் பயனரா என்று பார்ப்பதில்லை. //பிரதேச வாதம் என்று சொல்லாமலே இங்கே பிரதேச வாதம் நடக்கிறது அதுதான் உண்மை!!// ஆதாரமற்ற குற்றச்சாட்டு. // இதற்குத்தான் நான் கேக்கிறேன் இங்கே தலைவர் யார்??// ஒரு புறம் தன்னிச்சையான செயல்பாடு என்கிறீர்கள். மறுபுறம் தலைவர் யார் என்கிறீர்கள். முரணாக உள்ளது. //ஒரு கட்டுரையை கேக்காமல் அளிக்கும் போது அதன் வலியை நான் மட்டும் இல்லை பலர் அந்த வேதனையை அனுபவித்திருப்பார்கள்.// ஏற்கனவே புதிய பயனர்களை அரவணைத்துச் செல்லும் நோக்கில் மிக இளக்கமாகவே நடந்து வருகிறோம். போதுமான அறிவிப்புகள், பேச்சுப் பக்க நினைவூட்டல்கள் தரப்படுகின்றன. இதற்கு மேலும் இளகிச் சென்றால் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியமாக இருக்காது. அதன் நம்பகத் தன்மை பாதிக்கப்படும். துப்புரவுப் பணியில் ஈடுபடுவோருக்கு சுமை கூடும். குறிப்பிட்ட செய்கையில் பிரச்சினை என்றால் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். தகுந்த மாற்றங்களைச் செய்யலாம். பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது உதவாது. //இதையும் தாண்டி விக்கியில் சிறிது பங்களித்தால் அதையும் நீக்குகிறார்கள். அப்போது மனவெறுப்பு வருகின்றன. இதனால் தமிழ் விக்கி பங்களிப்பை சிலர் நிறுத்தி உள்ளனர்!// துப்புரவுப் பணிகள் காரணமாக யாரும் விலகியதாகத் தெரியவில்லை. நீங்கள் விக்கிக்கு வந்த புதிதில் விக்கி நடைமுறைகளைச் சரி வரப் புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துகளை முன்வைக்கிறீர்கள் என்று எண்ணினேன். ஆனால், இத்தனை நாட்களுக்குப் பிறகும் புரிந்து கொள்ள மறுத்துச் செயற்படுவது ஏற்புடையதாக இல்லை. //குரங்கின் கையில் பூமாலை குடுத்த கதையாக இருக்கிறது// போன்ற கடுமையான சொல்லாடல்களைத் தவிர்த்து பயனுள்ள பங்களிப்புகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களிடம் இருந்து தொடர்ந்து இது போன்ற போக்கு காணப்பட்டால், விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு உட்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். தங்களின் மேலதிக உரையாடல்களுக்குப் பதிலை எதிர்பார்க்க வேண்டாம். நன்றி--இரவி (பேச்சு) 08:31, 30 அக்டோபர் 2012 (UTC) பயனர் ரவி அவர்களே வணக்கம். நான் எழுதியது உங்களுக்கு புரிந்துள்ளது என்று மகிழ்ச்சி அடைகிறேன். மீதியை உங்கள் பயனர் பக்கத்தில் தெரிவிக்கிறேன். நன்றி.--சிவம் 08:55, 30 அக்டோபர் 2012 (UTC) பொருள் ஆதாரம்பிற மொழியில் உள்ள சொல்லுக்கு பொருள் ஆதாரம் தேவையா? வேடுவர் கட்டுரையிலுள்ள "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்ற சொல்லுக்கு "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பது பொருள் என்பது சிங்களம் தெரிந்தவர்களுக்குத் தெரியும். இதற்கு ஆதாரம் தேவையா? எ.கா: அப்படியானால் சத்யமேவ ஜெயதே கட்டுரையில் சத்யமேவ ஜயதே என்பதை தமிழில் வாய்மையே வெல்லும் என்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஆகவே ஆதாரம் கேட்க வேண்டுமா? பல இலத்தீன் சொற்கள் உயிரியல் கட்டுரைகளில் உள்ளது என்பதையும் கவனிக்க. --Anton (பேச்சு) 04:32, 30 அக்டோபர் 2012 (UTC)
மற்றும், ஆதாரம் கொடுக்கப்பட வேண்டியதான பெரிதும் தமிழர்சூழலில் பரீட்சயமில்லாத மொழிகளாயின் ஆதாரத்தை வழங்கலாம். ஆதாரம் உடனடியாகக் கிடைக்கவில்லை என்பதற்காக அல்லது தரமுடியவில்லை என்பதற்காக அறியவேண்டிய கருத்தைக் கூறாமல் இருக்கமுடியாது. ஐயுறவு உள்ள கருத்துக்களைக் கூட முறைப்படி பதிவுசெய்வது முக்கியம். மேலுள்ள கட்டுரையில் ////"வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்ற சொல்லுக்கு "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பது பொருள்/// என்று கூறினாலே அது போதும். அத்துடன் எடுத்ததற்கெல்லாம் அகரமுதலி ஒன்றை ஆதார இணைப்பாகத் தரவும் முடியாது. பயனர்கள் தம் கருத்துக்களை வலுப்படுத்த கருதும் போது ஆதாரம் தருவது நயமே. நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:51, 30 அக்டோபர் 2012 (UTC)
சொல்லுக்கான பொருளை இணையத்தில் தேடிக் கண்டு கொள்ளுமாறு இருந்தால் போதுமானது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஆதாரம் தரத் தேவை இல்லை--இரவி (பேச்சு) 08:33, 30 அக்டோபர் 2012 (UTC) சொல்விளக்கம்
சோழ மன்னர்களின் கால பங்கிட்டில் சில குழப்பங்கள்
|
Portal di Ensiklopedia Dunia