விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு83இன்றைய நாளில்தமிழ் விக்கிபீடியாவிற்கு என் முதற்க்கண் வணக்கம். நான் தினமும் முகநூலில் இந்நாளில் சரித்திரம் என்னும் பாணியில் பிறப்பு/இறப்பு மற்றும் நிகழ்வுகளை பதிவு செய்கிறேன். இதில் தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியா இரண்டிற்கும் நிறைய பேதங்கள் உள்ளன. சரி செய்து பதிவுகளை போடவும். உதாரணமாக..நவம்பர் 2 என்ற பக்கத்தில் 2006 - பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது. என போடப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் ஒன்றாம் தேதியே இந்தப் பெயர் மாற்றம் அமுலுக்கு வந்தது. இது போல தமிழ் பிரபலங்கள் பலரின் பிறப்பு மற்றும் இறப்பு தேதி நாளின் பக்கமும் அவங்களை பற்றிய தேதியும் வேறாக பதிவாகி உள்ளது. நன்றி. அன்பன். ஆனந்த், ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம்
அரசுத் தகவல்கள் ஆதாரம்?தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்/ செயல்பாடுகள் தொடர்பான கட்டுரைகளுக்கான தகவல்களை நாம் அரசு அலுவலகங்களில் கேட்டுப் பெற்று விடலாம். இவற்றை நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளீடு செய்யும் நிலையில் அதற்கு ஆதாரம் என்று எதைக் குறிப்பிட முடியும்? உதாரணமாக, தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களாகத் தேர்வு செய்யப்பட்ட நூல்கள், நூலாசிரியர்கள்/பதிப்பகம் கொண்ட பட்டியலை 1972 ஆம் ஆண்டிலிருந்து வழங்கும்படி கேட்டுள்ளேன். இந்தப் பட்டியல் அரசிடமிருந்து கிடைக்கும் போது ஒவ்வொரு ஆண்டுக்கும் தேர்வு செய்யப்பெற்ற நூல்கள், அந்நூலின் நூலாசிரியர், நூல் வெளியிட்ட பதிப்பகம் போன்றவற்றைக் கொண்ட தனிக்கட்டுரைகளாக உருவாக்கும் நிலையில் இதற்கு ஆதாரம் தேவைப்படுமா? ஆதாரம் என்று குறிப்பிட்டு தமிழ் வளர்ச்சித் துறையில் நேரடியாகக் கேட்டுப் பெறப்பட்ட தகவல் என்பதை எப்படி குறிப்பிடலாம்? விளக்கம் தேவை...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:23, 2 நவம்பர் 2012 (UTC)
விக்கி பல்கலைக்கழகம்விக்கிப்பீடியாவின் தொடர்திட்டங்களில் ஒன்றான விக்கி பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து விக்கியை மேலும் வலுப்படுத்த வேண்டுகிறேன். விக்கி பல்கலைக்கழகத்திற்கான சோதனை முதற்பக்கம். நன்றி.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:34, 3 நவம்பர் 2012 (UTC) தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை 2012கடந்த ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆண்டு அறிக்கையை முன்னின்று எழுதிவந்துள்ளேன். 2012 ஆண்டு அறிக்கையை சண்முகம், மதனாகரன், பார்வதிஸ்ரீ போன்ற புதிய தலைமுறைப் பயனர்களில் யாரவது ஒருவர் முன்னின்றோ அல்லது கூட்டாகவோ எழுதுவது பொருத்தம் என்று எண்ணுகிறேன். ஆண்டு அறிக்கையின் நோக்கங்கள், உள்ளடக்கம் பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைக் கீழே பதிகிறேன். ஆண்டு அறிக்கையின் முதன்மை நோக்கம் அந்த ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியையும் செயற்பாடுகளையும் பதிவுசெய்து, அடுத்த ஆண்டு திட்டமிடலுக்கு உதவுதல் ஆகும். ஆண்டு அறிக்கையின் அறிக்கை ஆவணப் பதிவாகவும், உரையாடல்கள் திட்டமிடல் பகுதியாகவும் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டன. த.வி ஆண்டு அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்.
டிசம்பரின் நடுப்பகுதியில் அல்லது இறுதிப்பகுதியில் பூரணமாகுமாறு எழுதிமுடித்தால் சிறப்பு. பேச்சுப் பக்கத்தில் அடுத்த ஆண்டு நாம் என்ன என்ன மாதிரிச் செயற்பாடுகளில் ஈடுபடலாம் போன்ற ஒரு கருத்துதிர்ப்பு (brainstorming) செய்யலாம். கடந்த இரு ஆண்டுகள் வேறு களங்கள் இதற்கு இருந்த வகையால் இவ்வாறு செய்யப்படவில்லை என்று எண்ணுகிறேன். இதை மீள்விப்பது உதவியாக அமையும். இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே. நன்றிகள். --Natkeeran (பேச்சு) 17:08, 3 நவம்பர் 2012 (UTC)
குறுங்கட்டுரைகுறுங்கட்டுரை பற்றி ஏற்கெனவே பலமுறை உரையாடப்பட்டுள்ளது. மேலதிக விளக்கத்திற்காக, இங்கு பொருத்தமான உடையாடலின் இணைப்பிணையோ அல்லது கருத்தினையோ தெரிவித்தால், குறுங்கட்டுரைகளை தொகுக்கும்போது அதன் வார்ப்புருவினை நீக்கிவிடலாம். --Anton (பேச்சு) 09:29, 4 நவம்பர் 2012 (UTC) கைப்பாவைத.வி.யில் உள்ள இரு பயனர் கணக்குகளை விக்கிமீடியாவில் ஆராய்ந்ததில், அவை கைப்பாவை கணக்குகளாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது (Possible) என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் இங்கே. மேலதிக நடவடிக்கைக்காக இங்கே பதிவு செய்யப்படுகின்றது. இங்கே பதிவு செய்வது பொருத்தமில்லையெனில் தகுந்த இடத்திற்கு நகர்த்தவும். --Anton (பேச்சு) 09:44, 4 நவம்பர் 2012 (UTC)
சந்தேகம் ஒரு மனிதனின் இறுதியான கொடிய எண்ணம், மற்றும் கொடிய நோய். இதற்க்கு மருந்து இல்லை! காலம் பதில் சொல்லும்!--சிவம் 00:06, 5 நவம்பர் 2012 (UTC) இவ்வாறு மறைமுகமாக கொடிய எண்ணம் மற்றம் நோய் உள்ளவர்களாக மற்றவர்களை உவமிப்பவர்கள் விடயத்தில் த.வி. தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றேன். மேலும், இவ்வாறான உரையாடல்கள் மேற் கொள்பவர்களால் மேற்கொண்டு தொகுத்தலில் ஈடுபடுவதும் தடைப்படுகின்றது. --Anton (பேச்சு) 11:42, 5 நவம்பர் 2012 (UTC) பயனர் பக்கம் நீக்கல்விக்கிப்பீடியாவில் பயனர் பக்கம் என்பது, விக்கி சார்ந்த திட்டங்களில் சக விக்கிப்பீடியர்களுடன் ஒருவருக்கொருவர் கருத்தாடுவதற்கும் தொடர்புகொள்வதற்குமானது. இங்கே ஒரு பயனர் பக்கம் பயனர்:விடியல் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையை சேர்ந்தவை. குறித்த தொகுப்பாளரின் நோக்கம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களிப்பதல்ல; மாறாக தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு இடைமுகமாக, சுயவிளம்பரத்திற்கான களமாக கொண்டியங்குவது தெளிவாகத் தெரிகிறது. அதுவும் எந்த சான்றுகளும் மேற்கோள்களும் அற்ற சுயவிளம்பரம். எந்த ஒரு பயனர் பக்கத்தையும் விக்கி திட்டம் தொடர்பில்லாதவற்றை ஆவணப் படுத்திவைக்கும் இடமாகவோ, சுயவிளம்பரத்திற்கான இடைமுகமாகவோ பயன்படுத்த முடியாது. (Wikipedia is not a general hosting service, so your user page is not a personal website.) பார்க்க: [1] இப்பக்கம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதற்கு முன்னரும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. எவரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான பயனர் பக்கங்கள் உருவாக்கப்படுவதற்கும் இடமளிக்கமால் எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும்.--HK Arun (பேச்சு) 16:16, 4 நவம்பர் 2012 (UTC)
ஒரு பயனர் தன்னை பற்றிய தகவல் தருவது நன்றே. அதை சந்தேகத்தின் அடிப்படையில் விளம்பரம் என்று கூறுவது தவறு! அது அவரின் பயனர் பக்கம். அது ஒன்றும் பொது கட்டுரை இல்லை! பயனர் பக்கத்தில் அவர் விருப்பிய அனைத்து தகவலையும் உள்ளடக்கலாம் என்று விக்கி சொல்கிறது.! கட்டுரையில் மட்டும் விளம்பரம் வேண்டாம் என்பது உண்மைதான். அதற்காக விடியல் என்பது அவருடைய புனைப் பெயராகவும் இருக்கலாம் அந்த பயனர் அரசு என்ற பெயரில், இல்லை சொந்த பெயரிலோ அடையாளம் காடுவது நன்று. --சிவம் 01:27, 5 நவம்பர் 2012 (UTC)
வணக்கம் சண்முகம். நன்றி உங்கள் தகவலுக்கு, இப்போது எனக்கு நன்றாக புரிந்துவிட்டன, இதை நான் முதலில் அறியவில்லை, என்னை மன்னிக்கவும்.--சிவம் 11:20, 5 நவம்பர் 2012 (UTC) விக்கிப்பீடியா நிரலாக்குனர் கூடல் பகுதி அறிக்கைதற்போது பெங்களூரில் நடந்து கொண்டிருக்கும் விக்கி நிரலாக்குனர் கூடலில் நானும், சிரீகாந்தும், சண்முகமும் கலந்து கொண்டுள்ளோம். தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் கிரேசும், விக்கினேசும், யுவியும், அருண் கணேசும் கலந்து கொண்டிருக்கிறார்கள். விக்கிமீடியா மென்பொருளாளர்கள் பிரையன் விபர், அமீர் அகரோனி போன்றோரின் அறிமுக உரைகளும் தனிப்பட்ட பயிற்சிகளும் மிகவும் உதவியாய் உள்ளது. சண்முகம் நரையத்துக்கான சோதனை நிரல் எழுத உதவி வருகிறார். அமீரின் பயிற்சியின் பயனாக சிரீகாந்தும் நானும் தமிழில் வேற்றுமை உருபுகள் வரும் மீடியாவிக்கி செய்திகளை கலை-ஐ, செல்வா-ஐ, சண்முகம்-ஐ, சுந்தர்-ஐ என்பது போல் வராமல் புணர்ந்து வருமாறு செய்யும் நிரலொன்றை எழுதத் தொடங்கியுள்ளோம். அத்துடன் புணர்ச்சி விதிகளை நன்னூலில் இருந்து பெற்று சாவாக்கிறிட்டில் விக்கினேசு உருவாக்கி வருகிறார். அனைத்து புணர்ச்சி விதிகளையும் பின்னர் பயனர்களுடைய உதவியோடு சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அதற்கான கட்டமைப்பை மட்டும் நிரலாக்கம் செய்து விடலாம் என எண்ணுகிறோம். தனித்திட்டப் பக்கத்தில் நிலைமொழியீற்றில் எவ்வெவ் எழுத்துக்கள் வந்தால் வேற்றுமை உருபுகள் எவ்வாறு புணரும் என பார்வதி, செல்வா, மதன் போன்றோர் குறித்துத் தந்தால் பொங்கலுக்குள் செயல்படுத்தி விடலாம். இந்த வசதியை வார்ப்புருக்களிலும் பகுப்புக்களின் தலைப்பிலும் தன்னியக்கமாகச் சேர்க்கப்படும் கட்டுரைகளிலும்கூடப் பயன்படுத்தலாம் என அறிகிறோம். மேலும் தகவல்களை சிரீகாந்தும் சண்முகமும் சேர்ப்பார்கள் என நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 09:30, 10 நவம்பர் 2012 (UTC)
உகர ஈற்றுக்கு விதிகளை உருவாக்கும்போது குற்றியலுகரம், முற்றியலுகரம் ஆகியவை தொடர்பிலுங் கவனஞ் செலுத்த வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 09:41, 17 நவம்பர் 2012 (UTC) தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
நேரடியாகச் சேகரிக்கும் தகவல்களுக்கு மேற்கோள்கள்நான் சில எழுத்தாளர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக உருவாக்கம் செய்து வருகிறேன். இது போன்ற கட்டுரைகள் பொதுவான சில தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது. இக்கட்டுரைகளுக்குச் சில பயனர்கள் மேற்கோள்கள் தேவை என வார்ப்புருகளை இட்டு வருகின்றனர். பார்க்க. மேற்கோள்கள் கட்டுரைக்கு வலு சேர்க்கும் என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற கட்டுரைகளுக்கு மேற்கோள்களாக எதைச் சேர்ப்பது? இவர்களில் பலர் கணினி பயன்படுத்தும் திறனில்லாதவர்கள். எனவே இவர்கள் எழுதிய நூல்கள் குறித்த தகவல்களைக் கொண்டு வலைப்பூக்களைக் கூட இவர்கள் உருவாக்கிக் கொள்ள இயலாது. மேலும், புத்தகங்கள் வெளியிடும் பல பதிப்பகங்களுக்கு இணையதளங்கள் இல்லை. எனவே, அவர்கள் எழுதும் புத்தகங்களுக்கு இணையதளங்களை மேற்கோள்களாகக் காட்டவும் இயலாது. உதாரணமாக, நான் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள் எனும் நூல்களை வெளியிட்ட மெய்யப்பன் பதிப்பகத்திற்கான இணையதளம் இல்லை. இந்நூல்களுக்கு இணையதளத் தகவல் இல்லை என்பதற்காக இது மேற்கோள்கள் இல்லாத கட்டுரை என்று அடையாளப்படுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. இது போன்ற கட்டுரைகளுக்கு என்ன செய்யலாம்? கருத்து தேவை...!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:28, 17 நவம்பர் 2012 (UTC)
கட்டாயமாக மேற்கோள்கள் சேர்க்கப்படவே வேண்டும். ஆயினும் இணையத்தள மேற்கோள்களை மட்டுந் தான் இணைக்க வேண்டுமென்றில்லை. நூல்களையும் மேற்கோள்களாகக் குறிப்பிடலாமே. நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில் நூல்களை மேற்கோள்களாக இணைக்கலாம். தமிழ் விக்கிப்பீடியா நூலைப் பற்றிய கட்டுரைக்கு அந்நூலையும் அந்நூலைப் பற்றி வெளிவந்த செய்தித்தாள்களையும் மேற்கோள்களாகக் குறிப்பிடலாம். --மதனாகரன் (பேச்சு) 03:28, 17 நவம்பர் 2012 (UTC)
முரண்பாட்டுக்குரிய தகவல்களைக் குறிப்பிடும்போது நூன்மேற்கோளுடன் இணையத்தள மேற்கோளையுந் தருவது அனைவரும் அத்தகவலை உறுதிப்படுத்த உதவும். ஏனென்றால், பழைய நூல்களைப் பெற்றுக் கொள்வது சிக்கலான ஒன்றாகவே உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 09:34, 17 நவம்பர் 2012 (UTC)
விக்கிதரவுஅணமையில் விக்கிதரவு ஆரம்பிக்கப்பட்டதை அறிவீர்கள், அதன் முதற்பக்கத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன், பார்க்க wikidata:Wikidata:முதற்_பக்கம் பிழை இருந்தால் திருத்தவும் :)..காமன்ஸ் ஊடகங்களுக்கு பொதுவானது என்பது போல இது தரவுகளுக்கானது, இதில் இப்போதைக்கு விக்கியிடை இணைப்புகள் மட்டும் சேமிக்கப்படுகிறது, விரைவில் infobox தகவல்கள் போன்ற பொதுவான புள்ளிவிவர தகவல்களும் அங்கு சேமிக்கப்படும் என கருதுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 12:01, 21 நவம்பர் 2012 (UTC)
விக்கி தரவு என்றால் விக்கி முறையில் தொகுக்கப்படும் தரவு என்று பொருள் தரும். விக்கித்தரவு என்றால் விக்கியைப் பற்றிய தரவு என்று பொருள் தரும். விக்கிதரவு என்று சேர்த்து எழுதினால் vikkidharavu என்றே ஒலிக்க முடியும். ஆனால், wikidata என்பது ஒரே பெயர் என்பதால் தமிழில் பிரித்து எழுதலாமா என்று தெரியவில்லை.--இரவி (பேச்சு) 15:27, 21 நவம்பர் 2012 (UTC)
தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புவிக்கி அன்பர்களுக்கு வணக்கம். தமிழ்ச் சமூகத்தில் ஆவணப்படுத்தல் துறைக்கு கவனம் கொடுத்து ஒரு மாநாட்டை நூலக நிறுவனம் ஒழுங்குசெய்துள்ளது. 'தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' என்ற தலைப்பில் வரும் ஏப்பிரல் 27-28, 2013 திகதிகளில் கொழும்பு, இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கு உலகெங்கும் இருந்தும் ஆதரவும் பங்களிப்பும் வேண்டப்படுகிறது. குறிப்பாக தமிழகப் பயனர்கள் இந்த மாநாட்டில் நேரடியாகப் பங்களிப்பது சுலபமானது. தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலில் தமிழ் விக்கியூடகங்களின் பங்களிப்பு குறித்தும் நாம் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்க முடியும்.
தமிழ் ஆவண மாநாடு 2013 - ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புபல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும். ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்
ஆய்வரங்குகளில் பங்குபெற்ற விரும்பும் ஆய்வாளர்கள், தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான முன்வரைவை 400 சொற்களுக்கு மேற்படாதவாறு அனுப்பி வைக்க வேண்டும். இம் முன்வரைவு 15-01-2013 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவை தமிழ் ஒருங்குறி [Unicode] எழுத்துருக்களில் தட்டச்சிடப்பட்டு மின்னஞ்சலில் noolahamfoundation@gmail.com அனுப்பப்படுவது விரும்பத்தக்கது. அதேவேளை தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், நியமிக்கப்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட முன்வரைவுகள் பற்றிய விபரம் இரு வாரங்களுக்குள் அவற்றை அனுப்பியவர்களுக்கு அறிவிக்கப்படுவதோடு மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அழைப்பும் பதிவுசெய்தல் பற்றிய விபரங்களும் அறிவிக்கபடும். தெரிவு செய்யப்பட்ட முன்வரைவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமது இறுதி வடிவத்துடன் 01-03-2013 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் இறுதிவடிவம் 5000 சொற்களுக்கு மேற்படாததாக இருத்தல் வேண்டும். மாநாட்டு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் நூலக நிறுவனம் மாநாட்டின் ஆரம்ப நாள் அன்று வெளியிட உள்ள மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம்பெறும். கட்டுரையாளர்கள் மற்றும் பதிவு செய்த பங்குபெறுவோர் அனைவருக்கும் மாநாடு நடைபெறும் நாட்களில் மாநாட்டு சிறப்பு மலர், வெளியீடுகள், கோப்புக்கள் போன்றவை வழங்கப்படும். முழுப்பெயர், மின்னஞ்சல், வதிவிட முகவரி ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை அனுப்புதலுக்கும் பிற தொடர்புகளுக்குமான முகவரி:
--Natkeeran (பேச்சு) 01:44, 26 நவம்பர் 2012 (UTC)
The impact of Wikipediahttp://www.youtube.com/watch?v=3Knv6D6Thi0 . --இரவி (பேச்சு) 19:29, 27 நவம்பர் 2012 (UTC)
எனக்கும் சந்தேகமே! இரண்டு இந்திய (திராவிட) முகங்களில் ஒருவராக இருக்கவேண்டும். நன்றியுரையில் Viswaprabha எனும் மலையாளப் பயனரின் பெயரும் வருவதால் குறிப்பிட்டு கூறமுடியவில்லை.பயனர்:Booradleyp பதிலளிக்க வேண்டும். அல்லது புதிர் போட்ட இரவி உடனடியாக விடையளிக்க வேண்டும். :) --HK Arun (பேச்சு) 05:26, 29 நவம்பர் 2012 (UTC) பயனர்:Booradleyp யே தான். வாசிங்டன் விக்கிமேனியா கூடலில் கலந்துகொண்ட போது இப்பேட்டியளித்துள்ளார் என நினைக்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:01, 29 நவம்பர் 2012 (UTC) 0:15, 2:19, 3:07 இடங்களில் தோன்றுபவர் தான் பயனர்:Booradleyp என நினைகிறேன், 2:34 இல் தோன்றுபவர் மலையாளப் பயனர் போல் தெரிகிறது..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 12:54, 29 நவம்பர் 2012 (UTC) உங்கள் ஊகம் சரிதான். அது நான்தான்.--Booradleyp (பேச்சு) 14:21, 29 நவம்பர் 2012 (UTC)
வாழ்த்துக்கள் Booradleyp. தமிழ் விக்கிப்பீடியர்கள் பல விதங்களிலும் கவனத்தை ஈர்த்து வருவதையிட்டு மகிழ்ச்சி. --- மயூரநாதன் (பேச்சு) 12:41, 30 நவம்பர் 2012 (UTC)
பொராட்லிபீ என்பவர் பயனரா! நான் என் கட்டுரையை எழுதி முடித்தவுடன் வரலாற்று பக்கம் சென்று பார்ப்பது வழ்க்கம். புதிதாக இயற்றியவுடனேயே இதே பெயர் கொண்ட பயனர் நான் விட்ட எழ்ழுத்துப்பிழைகளை எல்லாம் திருத்துவார். அதனால் திருத்தும் வேகம் கண்டு இது ஏதோ தானியங்கி என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இவர் ஒரு பயனர் என்பதேஅதிர்ச்சியாக உள்ளது. இருந்தாலும் வாழ்த்துக்கள்.:)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:37, 30 நவம்பர் 2012 (UTC) மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட விக்கி நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. எனது தனிப்பட்ட நேர்காணல்:
அடுத்தப் புதிர்விக்கிமீடியா வலைப்பதிவில் Booradleyp பற்றிய இடுகை. இந்த ஆண்டு நிதி வேண்டலிலும் அவரது வேண்டுகோளை இடப் போவதாகத் தெரிவித்து உள்ளார்கள். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்த்துகள். பி. கு. - இந்த இடுகையிலும் ஒரு புதிர் உள்ளது. அதை இன்னொரு நாள் அவிழ்ப்போம் :)--இரவி (பேச்சு) 16:20, 4 திசம்பர் 2012 (UTC) இரவி அவிழ்க்கப்போகும் புதிர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இடுகையில் //...started editing Wikipedia at the urging of her son.// என்றுள்ளதே; யார் அந்த son? சோடாபாட்டில் இவரை அழைத்து வந்ததாக ஒரிடத்தில் கூறியிருந்தார்!!! --HK Arun (பேச்சு) 19:34, 4 திசம்பர் 2012 (UTC). சோடாவின் தமிழில் பல குறைகளை கண்டு சொன்னவர் இவர் அதனால் சோடா இவரை தமிழ் விக்கிக்கு இழுத்து விட்டார் (இதை முன்பொரு முறை சோடாவே சொல்லியிருக்கிறார்) சோடா தவிக்கு செய்த பல நல்ல செயல்களில் இவரை தவிக்கு கொணர்ந்ததும் ஒன்று. இப்ப புதிர் விலகறமாதிரி தெரியுதா :) --குறும்பன் (பேச்சு) 19:59, 4 திசம்பர் 2012 (UTC) சோடாவின் பிழைகள் மட்டுமல்ல என் போன்ற இன்னும் பல தமிழ் சிகாமணிகள் என்று கூறிக்கொள்(ல்)பவர்களின் எழுத்துப்பிளைகளையும் இவர் தான் கலைந்து வருகிறார். நான் ஆரம்பிக்கும் கட்டுரைகளில் என்னுடைய பங்களிப்பை விட பொராட்லீ அவர்களின் எழுத்துப்பிழை திருத்தும் பங்களிப்புகள் தான் அதிகமாக இருக்கும். :-) --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:31, 5 திசம்பர் 2012 (UTC) தேமதுர தமிழோசை..அன்னைத்தமிழுக்கு, இவ்வன்னையின் மாபெரும் பங்களிப்புகள். அவரின் தமிழ் குரல் வளமையில் அமைந்த நெடும், கடும் முயற்சியில் அமைத்த பதிவுகளை இங்கு காணலாம். அங்கு ஏறத்தாழ 5000க்கும் மேற்பட்ட தமிழ் சொற்களின் ஒலிப்புக்கோப்புகளை, விக்சனரித் திட்டங்களுக்காக உருவாக்கி உள்ளார்.--த♥ உழவன் +உரை.. 10:10, 8 திசம்பர் 2012 (UTC) |
Portal di Ensiklopedia Dunia