சில நாட்களுக்கு முன் இக்கருவி வேண்டுமென தகவலுழவன் ஒத்தாசைப் பக்கத்தில் கேட்டிருந்தார். ஆங்கில விக்கியில் இதனை இயல்பிருப்பாக அனைத்து பயனர்களுக்கும் வைத்துள்ளனர். தமிழ் விக்கியிலும் இக்கருவியை வைக்கலாமா? கருத்துகளைக் கூறவும். உங்கள் தனிப்பட்ட ஜாவாஸ்கிரிப்டில் பயன்படுத்த
நூற்சுட்டி என்பது பொருந்தும், ஆனால் சுட்டப்படுவது நூலாக இல்லாமல், ஆவணம் போன்ற பிற பலவாகவும் இருக்கலாம் ஆகவே சான்றுச்சுட்டி, குறிப்புச்சுட்டி, மேற்கோள்சுட்டி என்றெல்லாம் கூறாமல், மேற்சுட்டுக் கருவி எனலாம். ஒரு சொல் அல்லது தொடரின் மேலெண்ணாக இருப்பதாலும், மேற்கொண்டு போய்ப் பார்த்து குறிப்பு அல்லது மேற்சான்றாக அறிவதாலும், மேற்ச்சுட்டுக் கருவி எனலாம். கருவியின் சுருக்கப்பெயராக மேற்சுட்டி என்றே கூறலாம்.--செல்வா (பேச்சு) 13:58, 19 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
குறிப்புச்சுட்டி அல்லது அடிச்சுட்டி என்பது எனது பரிந்துரை. அடி என்பது வாக்கியம், கீழ்புறம், அடைக்கப்பட்டது என்றும் பொருளாகும். மேற்கோள் என்ற சொல் அனைத்துக்கும் பொருந்தாது. இங்கு நூல்களும் காட்டப்படுகிறது. --த♥ உழவன் +உரை..20:38, 19 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
பயனுள்ள கருவி. ஆங்கில மூலத்தை பிரதியெடுக்காமல் தமிழாக்கம் செய்ய இயலாது போல் இருக்கிறது. அவ்வப்போது ஆங்கில மூல மாற்றங்களை கவனித்து இற்றைப்படுத்துவது அவசியமாகிறது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:49, 19 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
எல்லா பக்கங்களும் இப்படித்தான் தோன்றுகின்றன மதன். என் கணினியில் வயர்வாக்சை இலங்கைத் தமிழில் நிறுவியுள்ளேன். சில நாட்களாகவே இப்பிழை தோன்றுகிறது. வேறு எந்த மொழி விக்கிக்கு சென்றாலும், சில latin diacritics, தமிழ் எழுத்துகளாகத் தோன்றுகின்றன. Latha எழுத்துருவை இயல்பு எழுத்துருவாக வைத்துள்ளேன். ஒருவேளை, இதில் தமிழ் மற்றும் அடிப்படை எழுத்துருக்கள் மட்டுமே உள்ளதால் இவ்வாறு பிற எழுத்துருக்கள் மாற்றப்படுகின்றனவோ? அப்படி மாற்றப்பட்டாலும், முன்பு இதுபோல் இல்லையே! யாரோ ஒருங்குறியில் அல்லது தகுந்த இடத்தில் மாற்றியிருக்கக்கூடும். கூடுதல் தகவல்களை அளிக்க முடியவில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:10, 23 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
ஏனைய வலை மேலோடிகளில் உங்களுக்குச் சரியாகத் தெரியும் என நினைக்கின்றேன். நான் இண்டர்நெட்டு எக்சுப்புளோரர் 9ஐயே பயன்படுத்துகின்றேன். உங்கள் வயர்வாக்சில் எழுத்துருக்கள் தவறாக மாற்றியமைக்கப்பட்டதே இதற்குக் காரணம் என நினைக்கின்றேன். உங்கள் வயர்வாக்சில் Help என்பதன் கீழுள்ள Troubleshooting Information என்பதைத் தெரிவு செய்து, அதிலுள்ள Reset Firefox என்னும் ஆளியைச் சொடுக்கினால் சரி வரும் என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:30, 23 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
[[1]] பாருங்கள். உங்கள் கணினியில் எப்படித் தெரிகிறது? பிற விக்கியிடை இணைப்புகளை சொடுக்கினால், அங்கேயும் தமிழ் கலந்த தலைப்பைக் காட்டி கட்டுரை இல்லையென்கிறது. மேலும், நான் தொகுத்த கட்டுரையிலும், தலைப்புகள் மாறியிருக்கின்றன. உதவுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:11, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
எனது கணினியில் சரியாகவே உள்ளது. வேறு உலாவிகளில் முயற்சி செய்து பாருங்கள். இண்டநெட்டு எக்சுப்புளோரரிலும் திறந்து பாருங்கள். அனைத்து உலாவிகளிலும் அவ்வாறா வருகின்றது? உங்கள் இயங்குதளத்தையும் (விண்டோசு இயங்குதளமா பயன்படுத்துகின்றீர்கள்?) இயங்குதளப் பதிப்பையும் அறிந்தால் உதவுவது இலகுவாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 06:30, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
சில நாட்களுக்கு முன் நான் தொகுத்த விக்கிப்பீடியா:பயிற்சி பக்கத்தில், மேற்குறிப்பிட்ட பிழையால் தானியங்கிகள் அழிக்கப்பட்டிருப்பதைக் காண்க. இதனால் என் பங்களிப்பில் குறை வர வாய்ப்பு உள்ளது. :( மேலும், IE விரைவாகவும் சரியாகவும் இயங்கவில்லை. வேறு வழி கூறவும் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:10, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
புதிய பிரிவு என்பதனை விட, புதியத்தலைப்பு என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில், பல இடங்களில் /உட்பொருள்/தலைப்பு/ என்றே அமைந்துள்ளது. எனவே,அதைப்போலவே இருப்பின் சீர்மையாக இருக்கும்.Yஆயிற்று
படமிடும்போது, அடிக்கடி thumb|right|150px எனத் தட்டச்சு செய்யவேண்டியுள்ளது.தற்போதிருக்கும் தொகு சாளரத்தில் இருக்கும் குறிப்புகள் முழுமையற்றவை. மேம்படுத்துங்கள்.
தமிழ்விக்சனரியின் இப்பக்கத்தில் செய்துள்ளது போல, படமிடுவதற்கானக் குறிப்புகளை ஏற்படுத்துக. இதனால் பலரும் படமிடுதலை விரைவாக செய்திடல் இயலும்.
விக்சனரியின் முதற்பக்கத்திலிருந்து, அதன் உரையாடல்பக்கத்திற்கு தத்தல் வழியே மாறமுடிகிறது. ஆனால், அந்த உரையாடல் பக்கத்திலிருந்து, மேலுள்ள தத்தல் வழியே முதற்பக்கத்திற்கு வர இயலவில்லை.இதனை சரி செய்வது எப்படி ?வழக்கமாக உள்ள கட்டுரை என்பதனை முதற்பக்கம் எனமாற்றி இருப்பர். வழிமாற்று செய்க.--த♥ உழவன் +உரை..06:32, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
என்னால் வர முடிகின்றது. மேலேயுள்ள கட்டுரை என்பது வலைப் பக்கம் முழுமையாக ஏற்றப்பட்ட பிறகே முதற் பக்கம் என்று மாறுகிறது. உங்கள் இணைய இணைப்பிற்சிக்கல் இருக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 07:02, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
உங்களைப் போலவே நானும் நினைத்தேன். இடபக்கக்கோடி மூலையில் விக்சனரி என்ற இலச்சினை உள்ளதல்லவா? அதன் கீழ்வரும்
முதற் பக்கம்
சமுதாய வலைவாசல்
கோரப்பட்ட சொற்கள்
அண்மைய மாற்றங்கள்
என்பதனை , அப்பக்கத்தில் அப்பயனாளிக் குறிப்பிடவில்லை. அது எல்லாப் பக்கங்களிலும் சரியாகப் போகிறது. விக்சனரி என்ற இலச்சினையின் கீழ்நோக்காமல், அதற்கு வலப்பக்கம் உள்ள முதற்பக்கம் என்பதனையே, அவர் குறிப்பிடுகிறார். அப்பக்கமுள்ள அடிவரிகளைக் கவனிக்கவும். அங்கு புகுபதிகைச் செய்யாத அவரின் குறிப்பிடலைக் காணலாம்.--த♥ உழவன் +உரை..07:18, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்சனரியில், இடப்பக்கமுள்ள Random entry (By Language) என்பதை சொடுக்கினால் தமிழைத் தவிர பெரும்பான்மை மொழிகள் தோன்றுகின்றன. அனைத்தையும் பார்க்கவும் சொடுக்கினாலும், அதிலும் தமிழ் இல்லை. முதன்மையான விக்சனரி, அதுவும் முதற்பக்கத்தில்(wiktionary.org) வரக்கூடியது, ஏன் ஆங்கில விக்கியில் வரவில்லை? தயை கூர்ந்து இதை யாராவது அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:24, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
Random entry என்பது விக்சனரிக்கான இணைப்பு அல்ல. ஆங்கில விக்சனரியிலுள்ள பிற மொழிச் சொற்களுக்கான இணைப்பு. ஆங்கில விக்சனரியில் தமிழ்ச் சொற்கள் மிகக் குறைந்தளவிலேயே உள்ளதால் அங்கே சேர்க்கப்படவில்லை. 303 தமிழ்ப் பெயர்ச் சொற்களே ஆங்கில விக்சனரியில் இருப்பதை இங்கே காணலாம். --மதனாகரன் (பேச்சு) 10:05, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நான் பெரும்பாலும் பயர்பாக்சு உலாவியையே தொகுத்தலுக்குப் பயன்படுத்துகின்றேன்..அண்மைக்காலமாக இவ்வுலாவியில் தட்டச்சினால் எழுத்துக்கள் கணனியில் தோன்ற கூடுதல் நேரமெடுக்கிறது. குறிப்பாக எழுத்துக்களை அழித்தால் சற்று நேரம் கழித்தே அழிவதால் எந்தளவு backspace அழுத்தினேன் என்று தெரிவதில்லை. இதனால் என்னால் விரைவாக செயலாற்ற முடியாது உள்ளது. இது உலாவியின் சிக்கலா அல்லது மீடியாவிக்கியின் வழுவா ?--மணியன் (பேச்சு) 11:00, 4 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆமாம். விக்கிப்பீடியாவின் தொகுத்தற்பக்கத்தைத் திறந்து வைத்திருப்பது கணினியின் வேகத்தையும் குறைத்து விடுகிறது. பல எழுத்துகளைத் தொடர்ந்து தட்டச்சிட்டால் சில எழுத்துகள் தட்டச்சாகவில்லை. பொதுவாக 5-10 சதவீத்தில் இருக்கும் மையமுறைவழியாக்கியின் பயன்பாடும் 60 விழுக்காட்டுக்கு உயர்ந்து விடுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 11:13, 4 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஏனைய மொழி விக்கிகளில் இப்பிரச்சினை இல்லை போல் தெரிகிறது.--Kanags\உரையாடுக
எனக்கு தமிழ் விக்கியில் இன்று காலையில் (US-Sanjose -நேரம்) இருந்து எந்த தொகுப்பினைச் செய்வதும் மிகவும் தாமதமாக உள்ளது. மற்ற எதிலும் (ஆங்கில விக்கி, இ-மெயில், word document...) எனக்கு இப்பிரச்சனை இல்லாததால் எனது கணினியிலோ அல்லது எனது இணைய இணைப்பிலோ கோளாறு இல்லை எனப் புரிகிறது. தமிழ் விக்கியில் இப்பிரச்சனை எனக்கு மட்டும் நேர்கிறதா? உங்களுக்கெல்லாம் எப்பொழுதும் போல செயல்பட முடிகிறதா என்பதை எனக்குச் சொல்ல முடியுமா? நன்றி.--Booradleyp (பேச்சு) 04:46, 4 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
புதுப்பயனர் வரவேற்பு பகுதியில் உள்ள கட்டுரை தொடங்கவும் பொத்தானை அழுத்தினால் அது புது கட்டுரையை உருவாக்குவதற்கு பதிலாக வாருங்கள் ----(கட்டுரை தலைப்பு) என்று வருகிறது. இதுப்பற்றி முன்பே த. உழவன் ஆலமரத்தடியில் முறையிட்டதாக நினைவு. நான் இப்போது தான் முயற்சித்தேன். --குறும்பன் (பேச்சு) 17:29, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிடும் சிக்கலை உறுதிப்படுத்த முடியவில்லை. கட்டுரையை உருவாக்குவதற்கான பகுதிக்கு மேலாக மேலதிக தகவல்கள் உள்ளன. அவற்றையா குறிப்பிடுகிறீர்கள்?--Natkeeran (பேச்சு) 17:48, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
பெட்டியின் வெற்று இடத்தில் அஇஉஆஈஊ என்று எழுதிவிட்டு அஇஉஆஈஊ என்ற கட்டுரை தலைப்பில் கட்டுரையை உருவாக்க கட்டுரையைத் தொடங்கவும் பொத்தானை அழுத்தினால் அது புது கட்டுரையை உருவாக்குவதற்கு பதிலாக அஇஉஆஈஊ! வாருங்கள் என்று வருகிறது. கீழே புதுபயனருக்கான குக்கி உள்ள இளம்பச்சை (வார்ப்புரு) வருகிறது (அதை கீழே ஒட்டியிருக்கிறேன்). அதற்கு கீழ் முன்தோற்றம் வருகிறது.
வாருங்கள் அஇஉஆஈஊ,
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட குறும்பன் (பேச்சு) 18:19, 5 செப்டெம்பர் 2012 (UTC) என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:[பதிலளி]
பங்களிப்பாளர் கவனத்திற்கு
தொகுத்தல் உதவிப் பக்கம்
விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--குறும்பன் (பேச்சு) 18:19, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
எனக்கும் நக்கீரனுக்கு வந்ததுபோலவே வருகிறது. கூடுதலாக ஏற்கெனவே உள்ள ஒரு கட்டுரையின் பெயரை இட்டேன். எ-டு:குரங்கு. அப்போது இதே அறிவுரைகளுடன் தொகுத்தல் பக்கத்தைத் திறக்கிறது. (பார்க்க:படம்) புதிய பயனர்கள் அறியாது ஏற்கெனவே உள்ள உள்ளடக்கத்தை அழித்து புதிய கட்டுரையாக்கக்கூடிய அபாயம் உள்ளது. மீடியாவிக்கி உருவாக்கத்தையும்தொகுத்தலையும் வேறுபடுத்தும்போது நமது அறிவுரையையும் தொகுத்தல் பக்கங்களில் மாற்றலாமே !
பயனர் வரவேற்பு பகுதி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைபயனர் வரவேற்பு பகுதியிலிருந்து உருவாக்கப்படாத கட்டுரை
பயனர் வரவேற்பு பகுதி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரை பெட்டியில் கட்டுரை தலைப்பை எழுதி தத்தலை அழுத்தியபோது (முன்தோற்றம் என ஏன் காட்டுகிறது?) கிடைத்த படிமமும், பயனர் வரவேற்பு பகுதியிலிருந்து உருவாக்கப்படாத கட்டுரையுன் படிமமும். இங்கு முன்தோற்றம் என்பது இல்லை. பயனர் வரவேற்பு பகுதி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரையும் இது போலவே இருக்கவேண்டும்.--குறும்பன் (பேச்சு) 18:05, 7 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
{{Div col}} என்ற வார்ப்புரு இண்டர்நெட்டு எக்சுப்புளோரரில் பந்திகளை நிரல்களாகப் பிரித்துத் தரவில்லை. ஆனாலும் வயர்வாக்சில் சரியாகவே உள்ளது. எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தையே இரு உலாவிகளிலும் பார்க்கவும். இதனைச் சீர்செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? --மதனாகரன் (பேச்சு) 06:50, 23 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
எனக்கு இன்னும் தீரவில்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் அதிக நேரம் எடுக்கின்றது. இதே போன்ற பிரச்சனை சில நாட்களுக்கு முன்னரும் இருந்தது. சில மணி நேரத்தில் போய்விட்டது.--கலை (பேச்சு) 08:49, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
எனக்கும் இன்னும் தீரவில்லை. தேடு பெட்டியில் உள்ளீடு செய்ய/படம் ஒன்றினை இணைக்க முற்படுகையில் கிடைத்த செய்தி. யாவா ஸ்கிரிப்டை நிறுத்தியும் பயன் இல்லை.
நிறைய பேர் Windows XP பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள், ஐ.இ பதிப்பு 9 Windows XP ஐ ஆதரிப்பதில்லை. நான் Windows XP பயன்படுத்தினாலும் நெருப்புநரியை தான் பெரும்பாலும் பயன்படுத்துவேன் அரிதாக தான் ஐ. இ-யை பயன்படுத்துவேன்.--குறும்பன் (பேச்சு) 14:56, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆமாம், எனது அலுவலகக் கணினியிலும் பழைய பதிப்பே உள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இன்னும் பழைய பதிப்புகளையே நிறையப் பேர் பயன்படுத்துவார்கள். அனைவரதும் பயன்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.--Kanags\உரையாடுக22:42, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
அண்மையில் புதிதாக வந்த ஜெகுவெரி வெளியீட்டினால் இந்தப் பிரச்சனை. பிற ஜாவாஸ்கிரிப்ட் உள்ளீட்டுக் கருவிகளிலும் இருக்க வாய்ப்புண்டு. தட்டச்சுக் கருவியில் இதனைப் நீக்க சில முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, சோதனைக்குப் பின் விரைவில் இற்றைப்படுத்தப்படும். நன்றி Srikanth WMF (பேச்சு) 09:34, 17 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
எனக்கும் அலுவலகத்தில் இருக்கும்போது பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டால் நல்லது. இதனை google transliteration, word மூலமாகத்தான் தட்டச்சு செய்து copy and paste செய்து போடுகின்றேன்.--கலை (பேச்சு) 12:09, 17 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
இன்னமும் இந்தப் பிரச்சனை தீரவில்லையே. அலுவலகத்தில் இருக்கையில் என்னால் ஓரளவு த.வி யில் பங்களிக்க முடியும். ஆனால் தொகுப்பதில் உள்ள சிக்கலால், அது மிகவும் கடினமாக உள்ளது. ஆங்கில விக்கியில் இந்தப் பிரச்சனை இல்லையே. இது தமிழ் விக்கித் திட்டங்களில் மட்டும் உள்ள பிரச்சனையா? விரைவில் பிரச்சனை தீர்ந்தால் நல்லது.
எனது பயனர் பக்கத்தில் சிவப்பு நிறப் பெட்டியினுள் கலாமணி மதனாகரன் என நான் எழுதியதில் லா, ணி, னா ஆகிய எழுத்துகள் இரண்டு எழுத்துகளாக இன்ட்டர்நெட் எக்சுப்ளோரர், கூகுள் குரோம் ஆகிய உலாவிகளில் பிரிந்து தோன்றுகின்றன. ஆனாலும் வயர்வாக்கு உலாவில் சரியாகவே இணைந்து தோன்றுகின்றன. இதனை எவ்வாறு சீர் செய்ய முடியும்? --மதனாகரன் (பேச்சு) 06:02, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
இதற்கு காரணம் அப்பகுதியில் நீங்கள் letter-spacing அளவுருவை பயன்படுதியுள்ளதுதான். ி ா போன்றவற்றை தனித்தனி எழுத்துக்களாக பாவித்து அதற்கும் இடைவெளி கொடுக்கிறது. letter-spacingஐ நீக்கினால் சரியாகிவிடும்--சண்முகம்ப7(பேச்சு) 07:32, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆமாம். letter-spacing அளவுருவைப் பயன்படுத்தும்போது மேற்கூறியவற்றைப் பிரித்துத் தனித்தனி எழுத்துகளாக எடுப்பதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமென்று தான் கேட்டிருந்தேன். --மதனாகரன் (பேச்சு) 08:00, 15 செப்டெம்பர் 2012 (UTC)
என் நகர்பேசியில் தள்ளல் எழுத்துகள் மேற்கூறியவாறே தோன்றுகின்றன. எப்படி சரி செய்வது? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
தொகுக்கும் போது பயனர் வசதிக்காக சுருக்கத்தில் எழுத பொதுவாக பயன்படும் சில சொற்களை (திருத்தம், விரிவாக்கம், உரைதிருத்தம், எழுத்துப்பிழை, மறுமொழி, துவக்கம், நீக்கம்) நாம் கொண்டுள்ளோம். இச் சொற்கள் இருமுறை தோன்றுகிறது. படத்தை பார்க்கவும் சிவப்பு கட்டம் இரண்டாவது முறை உள்ளது. இவ்வசதி கொண்டுவந்த ஆரம்பத்தில் இருமுறை தோன்றவில்லை சில மாதங்களாக இது உள்ளது (எப்ப இருந்து என்பது சரியாக நினைவில்லை) --குறும்பன் (பேச்சு) 19:19, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
அண்மைக்காலமாக விக்கிப்பீடியாவில் தொகுக்கும் போது எனக்கு ஒரு வழு வருகிறது. அதாவது, ப்ரூவ் இட் கருவி உபயோகிக்கும் போது, பக்கத்தின் முன்பகுதிக்குச் செல்லும் scroll bar வருவதில்லை. படிமத்தை இணைத்திருக்கிறேன் பார்க்கவும். இவ்வழுவை விரைந்து சரி செய்யவும். விண்டோசு 7 மற்றும் குரோம் உலாவியில் இவ்வழு அதிக தடவை வருகிறது.
ஆப்பெரா, கூகுள் குரோம் ஆகிய உலாவிகளில் இச்சிக்கல் உள்ளது. மேலும் நான் பயன்படுத்தும் இன்ட்டர்நெட் எக்சுப்ளோரரில் (பதிப்பு 9) புரூவ் இட்டு! தோன்றுவதேயில்லை. --மதனாகரன் (பேச்சு) 02:19, 29 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
தொகுத்தலுக்கு உதவியாக தொகுத்தல்பெட்டியின் கீழே பல குறியீடுகளை வைத்துள்ளீர்கள். கணிதம் தொடர்பான குறியீடுகளையும் சேர்த்தால் கணிதம் தொடர்பான கட்டுரைகளில் பயன்படுத்த உதவியாயிருக்குமே. (முக்கியமாக booradleyp, kalaiarasy, prash போன்றோருக்கு!). (இதை சீன விக்கியில் பார்த்தேன்!)
பொதுப் பக்கங்களைத் தொகுக்கும்போது நேரடியாக புதிய பகுதியை சேர்க்க இயலவில்லை. கடைசிப் பகுதியை தொகுத்து, புதிய பகுதியாக பிரிக்க வேண்டியுள்ளது. ஆலமரத்தடி பக்கத்தின் மேலே, புதிய பகுதியைச் சேர்க்க வழியுள்ளது என்றாலும், பக்கத்தின் கீழே, கடைசி தலைப்பிற்கு கீழே, தலைப்பைச் சேர் என்ற ஒட்டைச் சேர்த்தால் எளிமையாயிருக்கும். :)
நிலப் பகுப்புகள்/வார்ப்புருக்கள்: தமிழர் பண்பாட்டு நிலப் பகுப்புகளான, குறிஞ்சி, மு, ம, நெ, பாலை ஆகியவற்றை இடவமைப்பைப் பொறுத்து ஊர்க் கட்டுரைகளில் சேர்த்தால் பொருத்தமாயிருக்குமா?
இற்றைப்படுத்தல்: புதிதாக வெளிவரும் திரைப்படம், கைபேசி, மென்பொருள் என புதியவற்றைப் பற்றிய கட்டுரைகளைத் நாள்தோறும் தொடங்குகிறீர்கள். இருப்பினும், முடியாதவற்றை, கோரப்படும் கட்டுரைகள் பக்கத்தில் சேர்த்தால் இவற்றில் கட்டுரைகள் உருவாக்க வசதியாயிருக்குமே. நினைவூட்டினேன் நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:29, 1 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
நீங்கள் சொல்லும் சில வசதிகளை இங்கு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே, அங்கு படமிடுதலுக்கான தேவையைக் குறிப்பிட்டுள்ளேன். எனக்கு விக்சனரியில் அணுக்கம் இருந்ததால் அங்கு உருவாக்க இயன்றது. இங்கு பல அணுக்கர் இருந்தும், அத்தகைய மாற்றம் ஏற்படுத்த ஏன் தயங்குகின்றனர் என்று புரியவில்லை? இதனால் படமிடும் பணி வெகு எளிதாகும்.மாற்றம் செய்வார்களா?--த♥ உழவன் +உரை..04:07, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
படமிடும் பணியை எளிமைப் படுத்திய அணுக்கருக்கு நன்றி.யாரென்று தெரியவில்லை. படவணுக்களை 150 என்பதிலிருந்து, 210-240க்குள் அமைத்தால் infobox வார்ப்புரு பயன்படுத்தும் போது, சீர்மையாக வரும். படவுரையும் தெளிவாகத் தெரியும்.5000படங்களுக்கும் மேல் விக்சனரியிலும், இங்கும் இட்டுள்ள அனுபவத்தில் இதனை முன்மொழிகிறேன்.--த♥ உழவன் +உரை..03:22, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
சம்மு காசுமீர் மாநிலத்தில் சிரிநகர் இடம் தவறாக உள்ளது. அது போல் ஆளுனர் பெயரையும் சேர்க்கலாம். சம்மு காசுமீர் வரைபடத்தை மாற்றினாலும் அது இங்கு மாறவில்லை. இந்த வார்ப்புரு வேறு இடத்திலிருந்து அத்தகவல்களை பெறுகின்றது. அது எங்கு உள்ளது? தமிழகத்தின் முதலமைச்சர், ஆளுனர் ஆகியோரையும் எங்கோ மாற்றம் செய்ததால் தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் அம்மாற்றம் தெரிகிறது, எந்த வார்ப்புருவில் மாற்றம் செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.--குறும்பன் (பேச்சு) 21:05, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
வரைபடத்தை சீர்செய்ய முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இரண்டு இடங்களையும் குறிப்பது கடினமாகவுள்ளது. ஒன்றைமட்டும் பாவித்தால் என்ன?--Anton (பேச்சு) 23:53, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]