விக்கிப்பீடியா:இடைமுகப்புதமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகப்பு குறித்த ஒருங்கிணைப்புகள், உரையாடல்களை இங்கு மேற்கொள்ளலாம். முதற் பக்கம் சரியா?ஆங்கில விக்கிப்பீடியாவில் Main Page என்றிருப்பது தமிழ் விக்கிப்பீடியாவில் முதற் பக்கம் என்று உள்ளதே... இது முதன்மைப் பக்கம் அல்லது முக்கியப் பக்கம் அல்லது முகப்புப் பக்கம் என்று இருக்கக் கூடாதா? இது குறித்த விபரம் எதுவும் எனக்குத் தெரியாது. இருப்பினும் என்னுடைய சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவே இங்கு இதைப் பதிவு செய்துள்ளேன்... என்னுடைய சந்தேகத்திற்கு யாராவது சரியான பதிலளித்து என் சந்தேகத்தைப் போக்கினால் நல்லது... --தேனி.எம்.சுப்பிரமணி. 18:03, 9 நவம்பர் 2010 (UTC)
இந்த முதற் பக்கம் -> முகப்பு மாற்றத்தால், பல விக்கித்திட்டங்களிலும் இணைப்புகள் உடைகின்றன. தற்காலிகமாக இந்த மாற்றத்தை மீடியாவிக்கியில் மீளமைத்துள்ளேன். இது கொஞ்சம் கவனமாக பார்த்து செய்யப்பட வேண்டிய மாற்றம். --சோடாபாட்டில் 06:03, 20 திசம்பர் 2010 (UTC) நீக்கப்பட்ட பக்கக் குறிப்பில் மாற்றம் தேவைதமிழ் விக்கிப்பீடியாவில் நீக்கப்பட்ட பக்கத்திற்கான குறிப்புகளில் இந்தத் தலைப்புடைய கட்டுரை தற்பொழுது விக்கிபீடியாவில் இல்லை. xxxxxxxxxx குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள். xxxxxxxxxxபற்றி பிற கட்டுரைகளில் தேடிப்பாருங்கள். xxxxxxxxxx பற்றி, எங்களின் இன்னொரு திட்டமான விக்சனரியில் தேடிப்பாருங்கள் xxxxxxxxxx பற்றி, எங்களின் இன்னொரு திட்டமான விக்கிமீடியா காமன்ஸ்-இல் (விக்கி ஊடகப் பொதுக் களஞ்சியம்) தேடிப்பாருங்கள் இந்த பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற பக்கங்களை பாருங்கள் ______________________________________________________________________ இந்தக் குறிப்புகளில் xxxxxxxxxx பற்றி, ”எங்களின் இன்னொரு திட்டமான” என்று இரண்டு இடங்களில் வரும் இடத்தில் எங்களின் என்ற சொல் தேவையற்றது. விக்கிப்பீடியாவின் பொதுநிலை கருதி அந்த இடத்தில் நமது என்று இருந்தால் நல்லது. இல்லையெனில் அந்த சொல்லிற்குப் பதிலாக விக்கிப்பீடியாவின் என்று இருக்கலாம். இந்த மாற்றம் தேவையானது என நான் கருதுகிறேன். மேலும் இந்தக் குறிப்புகளில் சில இடங்களில் ஒற்று எழுத்து இல்லாமல் இருக்கிறது. அந்தப் பிழைகளையும் திருத்த வேண்டும்... என்று நான் விரும்புகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 12:09, 15 நவம்பர் 2010 (UTC)
இன்னொரு திருத்தம் தேவைஒவ்வொரு கட்டுரைக்கான தொகு பொத்தானைச் சொடுக்கிக் கட்டுரை தொகுத்தலுக்கான பக்கம் திறக்கும் போது தொகுத்தல் கட்டத்தின் கீழ் உள்ள விட்டுவிடு என்கிற சொல்லையும் மாற்ற வேண்டும். இங்கு இந்த சொல்லிற்குப் பதிலாக, தொகுப்பிலிருந்து வெளியேற அல்லது பின் செல்ல அல்லது கட்டுரைக்குச் செல்ல என்று இருந்தால் நன்றாக இருக்கும். விட்டுவிடு என்கிற சொல் இங்கு பொருத்தமற்றதாக எனக்குத் தோன்றுகிறது... மாற்றப்படுமா...? தமிழ் விக்கிப்பீடியாவின் பல இடங்களில் சிறு சிறு மாற்றம் தேவையாக உள்ளது. எனக்கென்னவோ ஏதாவது குறையைச் சொல்லிக் கொண்டே இருக்கிறோமே என்கிற கவலையாகவும் இருக்கிறது. இருப்பினும் குறை களையப்பட வேண்டும் என்கிற ஆர்வத்தில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.--தேனி.எம்.சுப்பிரமணி. 18:33, 15 நவம்பர் 2010 (UTC)
இடைமுகப்புச் சொற்றொடர்கள் மாற்றம் பற்றி விக்கிப்பீடியா பேச்சு:இடைமுகப்பு பக்கத்தில் உரையாடலாமா? முன்பு அந்தந்த மீடியாவிக்கிப் பக்கப் பேச்சுப் பக்கங்களில் உரையாடி வந்தோம்--இரவி 06:41, 16 நவம்பர் 2010 (UTC) ன
அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் தேவை ஒரு மாற்றம்அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இடம் பெற்றுள்ள செய்தி தமிழ் விக்கிப்பீடியாவில், மிக அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களை, இந்தப் பக்கத்தில் காணலாம். புது வருனர்கள் தயவுசெய்து, விக்கிப்பீடியா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், விக்கிப்பீடியா கொள்கை (முக்கியமாக பெயரிடல் மரபு, நடுநிலை நோக்கு), மற்றும் மிகப் பொதுவான விக்கிப்பீடியா ஒழுங்குமுறைப் பிறழ்வுகள் ஆகிய பக்கங்களை ஒருமுறை பாருங்கள். விக்கிப்பீடியா வெற்றி பெறுவதை நீங்கள் பார்க்க வேண்டுமானால், மற்றவர்களுடைய பதிப்புரிமையினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆக்கங்களை இதிலே சேர்க்காதிருப்பது முக்கியமாகும். சட்டம் சார்ந்த பொறுப்பு இத் திட்டத்தைப் பெரிதும் பாதிக்கும், எனவே தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர். கூடுதல் தகவல்களுக்கு அண்மைய மேல் நிலை கலந்துரையாடலைப் பார்க்கவும். ____________________________________________________________________________ மாற்றம் செய்ய வேண்டியது தமிழ் விக்கிப்பீடியாவில், மிக அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன. புது வருகையாளர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு முன்பாக, விக்கிப்பீடியாவில் இருக்கும் விக்கிப்பீடியா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், விக்கிப்பீடியா கொள்கை (முக்கியமாக பெயரிடல் மரபு, நடுநிலை நோக்கு) மற்றும் மிகப் பொதுவான விக்கிப்பீடியா ஒழுங்குமுறைப் பிறழ்வுகள் ஆகிய பக்கங்களை ஒருமுறை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
________________________________________________________________________________ மாற்றத்தைக் கலந்துரையாடிச் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 02:19, 16 நவம்பர் 2010 (UTC)
தொடர்பான மாற்றங்கள் செய்தியிலும் பிழைஇடம் பெற்றுள்ள செய்தி இணைக்கப்பட்டப் பக்கங்களுக்கு (அல்லது பகுப்பொன்றின் அங்கத்தர்வர்களுக்கு) செய்யபட்ட அண்மைய மாற்றங்களை இச்சிறப்புப் பக்கம் பட்டியலிடுகிறது. உங்கள் கவணிப்புப் பட்டியலில் உள்ளப் பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன. மாற்றம் செய்ய வேண்டிய செய்தி இந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும். _______________________________________________________________________________ -இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே...? மாற்றம் வேண்டாம் என்று கருதினால் மேலுள்ள செய்தியில் உள்ள எழுத்துப் பிழைகளையாவது மாற்றி விடுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 14:54, 16 நவம்பர் 2010 (UTC)
பயனர் கணக்கில்லாதவர்களுக்கான உரையாடல் பக்கம்இடம் பெற்றுள்ள செய்தி இது இன்னும் கணக்கொன்று ஏற்படுத்தாத அல்லது வழமையாக பயனர் கணக்கை பயன்படுத்தாத பயனர்களுக்குரிய கலந்துரையாடல் பக்கமாகும். அதனால் நாங்கள் இவரை அடையாளம் காண்பதற்கு எண் சார்ந்த ஐ.பி முகவரியை (IP address) உபயோகிக்கிறோம். இவ்வாறான ஐ.பி முகவரிகள் பல பயனர்களினால் பகிர்ந்துகொள்ளப்படலாம். நீங்கள் ஒரு முகவரியற்ற பயனராயிருந்து, தொடர்பற்ற கருத்துக்கள் உங்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், முகவரியற்ற ஏனைய பயனர்களுடனான குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு, தயவுசெய்து கணக்கொன்றை ஏற்படுத்துங்கள் அல்லது புகுபதிகை செய்யுங்கள் மாற்றப் பரிந்துரைக்கும் செய்தி தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராக இருக்கலாம் அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் புகுந்தவராக இருக்கலாம். இங்கு தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க,தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தங்களுக்கென ஒரு பயனர் பக்கம் இருக்கும் நிலையில் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கு தங்கள் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் உதவியாகவும் இருக்கும். தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது மிகவும் எளிதானது. இங்கு உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம். _______________________________________________________________________________ இந்த மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. கலந்துரையாடி மாற்றம் செய்யலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 09:33, 17 நவம்பர் 2010 (UTC)
நகர்த்தல் பக்கச் செய்தியிலும் மாற்றம் வேண்டும்இடம் பெற்றுள்ள செய்தி பின்வரும் படிவத்தைப் பயன்படுத்துவது, பக்கமொன்றின் பெயரை மாற்றி, இதனுடைய முழு வரலாற்றையும் புதிய பெயருக்கு நகர்த்தும். பழைய தலைப்பு, புதிய பக்கத்துக்கான ஒர் வழிகாட்டும் பக்கமாக ஆகும். நீங்கள் பழைய தலைப்புக்கு தானியக்கமாக வழிகாட்டும் வழிமாற்றுக்களை மாற்றியமைக்கலாம். அப்படி செய்ய நீங்கள் விரும்பவில்லை எனில்,இரட்டை அல்லது முறிந்த வழிமாற்றுகள் உள்ளனவா என்பதைச் சரி பார்த்து உறுதிசெய்யவும். இணைப்புகள் எவ்விடத்துக்குச் சென்றடைய வேண்டுமோ அவ்விடத்தைத் தொடர்ந்தும் குறிப்பதை உறுதி செய்து கொள்வது உங்கள் பொறுப்பாகும். ஏற்கெனவே புதிய தலைப்பில் ஒரு பக்கம் இருந்தால், இந்தப் பக்கம் வெறுமையாகவோ அல்லது ஒரு வழிமாற்றுப் பக்கமாகவோ இருப்பதுடன் பழைய தொகுப்பு வரலாறும் இல்லாதிருந்தால்தான், இப் பக்கம் நகர்த்தப்படும் என்பதைக் கவனிக்கவும். தற்செயலாக, நீங்கள் தவறு செய்துவிட்டால், எந்தப் பெயரிலிருந்து பெயர் மாற்றம் செய்தீர்களோ அதே பெயருக்கு மீண்டும் மாற்றமுடியும் என்பதுடன் ஏற்கெனவே இருக்கும் பக்கமொன்றை மேலெழுத முடியாது என்பதையும் இது குறிக்கின்றது. எச்சரிக்கை! இது பிரபலமான ஒரு பக்கத்துக்குச் செய்யும் கடுமையானதும், எதிர்பாராததுமான மாற்றமாக இருக்கக்கூடும்; தயவுசெய்து தொடர்வதற்கு முன் இதன் விளைவுகளை விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மாற்றப் பரிந்துரைக்கும் செய்தி தாங்கள் தற்போதுள்ள கட்டுரையை வேறு தலைப்பிற்கு மாற்றும் நோக்கத்துடன் இங்கு வந்திருக்கிறீர்கள். தற்போது இருக்கும் தலைப்பிலிருந்து மற்றொரு புதிய தலைப்பிற்கு நகர்த்த கீழ்காணும் படிவத்தை நிரப்புவதுடன் காரணம் எனும் கட்டத்தினுள் தங்கள் மாற்றத்திற்கான காரணத்தைத் தெரிவிப்பது விரும்பத்தக்கது. இந்த நகர்த்தலில் கட்டுரையுடன், கட்டுரைக்கான உரையாடல் பக்கத்தில் செய்திகள் இடம் பெற்றிருந்தால் அந்தப் பக்கத்தையும் நகர்த்துவதற்கான கட்டத்தில் குறியிடுங்கள். இப்படி நகர்த்தப்படும் பொழுது கட்டுரையின் முழு வரலாறும் அப்படியே மாற்றப்பட்டுவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகர்த்தலின் போது தாங்கள் உள்ளீடு செய்த தலைப்பில் முன்பே கட்டுரையின் தலைப்பு இருந்தால் நகர்த்தல் வெற்றியடையாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டுகிறோம். எச்சரிக்கை: இந்த நகர்த்தல் தாங்கள் அவசியமென்று கருதும் நிலையில் மட்டும் மேற்கொள்ள வேண்டுகிறோம். தாங்கள் தேவையில்லாமல் இடையூறு செய்யும் நோக்கத்துடன் தவறான நகர்த்தலை மேற்கொள்ளாதிருக்கவும் வேண்டுகிறோம். ______________________________________________________________________________________________________________
|
Portal di Ensiklopedia Dunia