இதை தொகுப்பவர்கள் [[ஜனவரி 4]], [[2012]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 4, 2012|ஜனவரி 4, 2012]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.
ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்
பிரேட்டா (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு "முகடு"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.
லேய்டின் கொள்கலன் (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.
பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் மீன் நெடிக் கூட்டறிகுறி கோளாறு உண்டாகின்றது.
தோம்பு என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.
பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே பாம்புக் கடி மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் ஜெர்மானிய மேய்ப்பன் நாயை அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.
காப்பு நிலை உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.
ஜி. யு. போப் (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.
நொதுமி விண்மீன்கள் வெளியிடும் துடிப்பலைகளை(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.
காற்பந்தாட்டத்தில்இரட்டை என்பது ஒரு காற்பந்தாட்ட அணி அந்நாட்டின் கூட்டிணைவு மற்றும் அதன் முதன்மையான கோப்பை ஆகிய இரண்டையும் ஒரே பருவத்தில் வெல்வதைக் குறிக்கும்.
இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் ஆகும்.
தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டப் பிறகு ஏழைக் குழந்தைகளின் பள்ளி வருகை நாட்கள் அதிகரித்தது.
சர்வதேசத் தர புத்தக எண்ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.
இந்து நம்பிக்கையின் படி அரைஞாண் அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.
இரும விண்மீன்கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.
வாழை இலையில் உண்ணும் போது அந்த உணவின் சுவை அதிகமாகத் தெரிவதற்கு காரணம் இலையிலுள்ள மாப்பொருட்கள் ஆகும்.
நக்கிள்ஸ் மலைத்தொடர் இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.
சஙீரான் தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.
பச்சை அறிக்கை என்பது சட்டம் இயற்றும் முன் விவாதிப்பதற்காகவும், வெள்ளை அறிக்கை என்பது விவாதிக்கப்பட்ட முடிவான கொள்கை சட்டம் ஆவதற்கு முன்னும் வரும் அறிக்கைகளாகும்.
பண்பலை என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.
பொருளாதார அல்லது சமூகக் கொள்கைகளில் அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் தாராளமயமாக்கல் எனப்படும்.
வடிவமைப்பாளர் குழந்தை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.
உழவாரப் பணி என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு டிசம்பர் இசை விழா என்றழைக்கப்படுகிறது
ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென அவகாதரோவின் விதி கூறுகிறது.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம் (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.
மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் ஸ்டீபன் சௌ நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், துக்கடா என அழைக்கப்படும்
ஊழிநாள் கடிகாரம் என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.
குலை குலையா முந்திரிக்கா விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.
பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் கர்னல் பென்னிகுக் (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.
பொன் வாரியம் என்பது பாண்டியர் நாட்டில் அமைக்கப்பட்ட நாணய வெளியீட்டு மற்றும் கண்கானிப்பு வாரியம் ஆகும்.
புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள பன்னாட்டு நாள் கோடு ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.
அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது காப்பியம் எனப்படும்.
அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் கீழ்த்தரமான போர் என அழைக்கப்படுகின்றன.
இயக்குபிடி என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.
நீத்தார் வழிபாடு என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.
தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் இரவுக்காவலர் என்றழைக்கப்படுகிறார்.
முழுவதும் கருநிறமாக இருக்கும் இரட்டைவால் குருவியின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.
அகநாடுகள் என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.
கடன் தவறல் மாற்று என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.