இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.
ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்
பெல்மேஷ் முகங்கள் என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)
வானியலில், நிலை அலைவுகள் (படம்) சுற்றிவரும் வான்பொருட்களுக்கிடையே ஒன்றிலிருந்து மற்றதைக் காணும்போது உணரப்படுகின்ற ஊசலாடும் நகர்வினைக் குறிக்கின்றது.
திருவழிபாட்டு ஆண்டு என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.
நேரு அறிக்கை என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.
தொல்பாணியியம் (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.
ஆத்தங்குடி தரைக் கற்கள், கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.
துளசி மாடக் கோலம் எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.
கரியால், இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.
திருத்தந்தையின் தவறா வரம் எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.
செப்பெலின் தொடுப்பு (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.
உயிரகச்செதுக்கு (Biopsy) என்பது நோயை ஆய்வுறுதி செய்வதில் பயன்படும் ஓர் உயிரினத்தின் உடலில் இருந்து பெறப்பட்ட உயிரணுக்கள், அல்லது இழையங்களை ஆய்வுசெய்யும் மருத்துவ சோதனை அல்லது அப்படியான மருத்துவ சோதனையில் பெறப்படும் மாதிரி ஆகும்.
புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய மெசஞ்சர் விண்கலம் (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.
சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் புதனில் கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.
சோவனிக கலாசாரம் என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.
எரிபொருள் மின்கலங்கள் எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.
அசைவுப் பார்வையின்மை (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.
தாத்தா முரணிலை (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.
திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் எட்டாம்படை வீடு எனப்படுகின்றது.
பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான எய்ன் சக்ரி காதலர் சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.
தில்வாரா கோயில் , 1219 மீட்டர் (4000 அடி) உயரத்தில், அம்பாஜி மலையிலிருந்து, அபு மலைக்கு பாறைகளை எடுத்து சென்று கட்டப்பட்ட, பளிங்கு கற்களாலான ஜெயின் கோவிலாகும்.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள கோடை அரண்மனை, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த "நெடிய ஆயுள்" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய "குன்மிங்" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.
பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் தமிழ்ப் பெண் புலி ஆகும்.
Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் ஆங்ஸ்ட்ராம் என்பது 10−10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.
கியூலெத் வினை என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.
பரதநாட்டியத்தில், பதாகம் என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.
இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.
1935 ஆம் ஆண்டில் வெளிவந்த பக்த ராம்தாஸ் எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.