விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 15பக்க இணைப்பு வழுஏசு மத நிராகரணம் கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது [XDuNHQpAMEsAALe-4ngAAADR] 2019-01-13 19:10:21: Fatal exception of type MWException என்ற பிழைப்பக்கம் காட்டுகிறது. உதவவும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 13 சனவரி 2019 (UTC)
உதவிஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து மொழியாக்கம் செய்து கட்டுரை உருவாக்கம் செய்யும் போது மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள் என்று ஒரு பகுப்பு தானாகவே சேர்ந்து விடுகிறது. இயந்திர மொழிபெயர்ப்பு செய்யாமல் இயல்பான மொழி பெயர்ப்பை மேற்கொள்ளும் போதும் இந்தப் பகுப்பு தானாகவே சேர்கிறது. காரணம் என்ன?--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:24, 20 சனவரி 2019 (UTC)
TNSE Mahalingam VNR எனக்கும் இந்த சிக்கல் உள்ளது. கி.மூர்த்தி குறிப்பிட்டது போல் உள்ளடக்க மொழிபெயர்ப்பின் புதிய பதிப்பை பயன்படுத்துவதாலேயே இது நேர்கிறது.--அருளரசன் (பேச்சு) 12:51, 21 சனவரி 2019 (UTC) பக்கம் நகர்த்தல் வேண்டுகோள்நிர்வாகிகள் கவனத்திற்கு, பயனர்:Fathima rifaa இப்பக்கத்தைச் சரியான பயனர் பெயரான பயனர்:Fathima rifaa lawக்கு வழிமாற்றியின்றி நகர்த்தக் கோருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 12:06, 21 சனவரி 2019 (UTC)
மீளமைத்தலுக்கான உதவிஎறிபந்து என்ற கட்டுரையில் [1] இந்த மாற்றத்தினைக் காணுங்கள். ஒரு பயனரின் தீக்குறுப்பினால் நல்லக் கட்டுரை பாழ்பட்டுள்ளது. இதனை முந்தைய வடிவில் மீளமைக்க இயலவில்லை. "முரண்பாடான இடைப்பட்டத் தொகுப்புகள் காரணமாக இத்தொகுப்பை மீளமைக்க முடியாது" என செய்தி வருகிறது. நடவெடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.நன்றி-சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:57, 23 சனவரி 2019 (UTC)
மொழிபெயர்ப்புக் கருவி@Ravidreams: விக்கியின் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி கட்டுரைகளை உருவாக்குவதற்கான வழிகாட்டல் பக்கம் தமிழ்விக்கியில் உள்ளதா? அவ்வாறு இருப்பின் அப்பக்கத்திற்கான இணைப்பைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:39, 24 சனவரி 2019 (UTC)
ஈ.வெ.ராமசாமி பற்றிய கட்டுரை: ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் விருது பற்றிஈ.வெ.ராமசாமி பற்றிய கட்டுரையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஈவேரா அவர்களுக்கு விருது வழங்கியதற்குச் சரியான ஆதாரம் எதுவும் கிடையாது. 1998 வரை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் விருது பெற்றவர்கள் பட்டியலை அந்த நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து கொடுத்துள்ளேன். அதில் ஈவேரா அவர்கள் பெயர் இல்லை. ஆகவே இந்தத் தகவல் நீக்கப்பட வேண்டும். https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000111158?fbclid=IwAR3ccSps4KjbY3tmnsHfv17yhUujZn9kJr27PFs0HRjj_QbQ_zBAJp-yHzk நான் இதைச் செய்தால் உங்கள் பதிப்பாசிரியர்கள் இதை அனுமதிப்பதில்லை.−முன்நிற்கும் கருத்து Jag2019 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
@Jag2019: நண்பருக்கு வணக்கம் //நான் இதைச் செய்தால் உங்கள் பதிப்பாசிரியர்கள் இதை அனுமதிப்பதில்லை.// விக்கிப்பீடியாவில் பதிப்பாசிரியர்கள் என யாரும் இல்லை. பெரியார் போன்ற ஆளுமைகள் பற்றிய கட்டுரையில் ஒரு தகவலை நீக்க விரும்பினால் அதற்கான காரணத்தை உரையாடல் பக்கத்தில் தெரிவித்து நீக்கினால் நலமாக இருக்கும். நீங்கள் நீக்கியதை நான் மீளமைத்த பிறகே நீங்கள் அந்த வலைத்தள சான்றினைக் கொடுத்துள்ளீர்கள். பொதுவாக அரசியல் தலைவர்கள் பற்றிய கட்டுரைகளில் இவ்வாறு சான்றுகள் இல்லாமல் சேர்க்கப்படும் தகவல்களை இயன்றவரை களைந்தும் சான்று தேவைஎன்ற வார்ப்புருவும் சேர்க்கப்பட்டுள்ளதை அறியவும். நன்றி ஸ்ரீ (talk) 14:35, 31 மார்ச் 2019 (UTC) சில ஊராட்சி கட்டுரைகளில் திருத்தம் தேவைஇங்கு பட்டியலிடப்பட்டுள்ளக் கட்டுரைகளில் 200+ ஊராட்சி கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் இரண்டிற்கும் மேற்பட்ட மாவட்ட வார்ப்புருக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை திருத்தப்பட வேண்டும். --அஸ்வின் (பேச்சு) 16:13, 20 ஏப்ரல் 2019 (UTC) பொதுவகத்தில் படங்கள் தேவைதமிழில் சில கட்டுரைகள் எழுதும் போது அவற்றிற்கான ஒளிப்படங்கள் பொதுவகங்களில் காணப்படாமல் உள்ளது. உதாரணமாக, அபிநந்தன், கோமதி மாரிமுத்து போன்றோரின் படங்கள், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாகும் போது அவை தொடர்பான படங்கள் கிடைப்பதில்லை. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்களில் சில தமிழ் கட்டுரைகளில் பயன்படுத்துவது எளிதாக இல்லை. யாராவது இவற்றுக்கு உதவினால் பரவாயில்லை.--TNSE Mahalingam VNR (பேச்சு) 01:07, 25 ஏப்ரல் 2019 (UTC) கோமதி மாரிமுத்து, அபிநந்தன் போன்றோரின் படங்களை எவ்வாறு பொதுவகத்தில் ஏற்றலாம்? இதற்கான உதவியை யாரிடம் கோரலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:50, 25 ஏப்ரல் 2019 (UTC)
பாலாஜி , இவ்வாறு ஊடகங்களில் அவர்களின் அப்போதைய சாதனைகளால் புகழின் உச்சிக்குச் செல்லும் ஆளுமைகளின் ஒளிப்படங்களை ஊடகத் துறைகளில் உள்ள நண்பர்களின் உதவியைப் பெற்றாவது விக்கி காமன்சுக்காக பதிவேற்றம் செய்ய ஒரு ஏற்பாடு செய்யலாமே?. இதே போல முனைய துணைக்கோள் ஏவுகலன்கள் பற்றிய படங்களையும் பொது நன்மைக்காக பயன்படும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பொதுவகத்தில் ஏற்ற ஏற்பாடுகள் செய்யலாமே? இன்னும் சில படங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளவை கூட தமிழ் விக்கியில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. உதாரணமாக, சில திரைப்பட சுவரொட்டிகள். என்ன செய்யலாம்?--TNSE Mahalingam VNR (பேச்சு) 05:15, 26 ஏப்ரல் 2019 (UTC)
மேலும் ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:15, 26 ஏப்ரல் 2019 (UTC) பாலாஜி , தங்களின் பதில்களுக்கு நன்றி. --TNSE Mahalingam VNR (பேச்சு) 08:36, 26 ஏப்ரல் 2019 (UTC) சொற்களுக்கிடையேயான இடைவெளிசில கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பொழுது இரண்டு சொற்களுக்கிடையே தேவைக்குமேல் இடைவெளி ஏற்படுகிறது. ஒவ்வொன்றாகச் சென்று திருத்தம் செய்தால் நேரவிரயம் ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் தானியக்கக் கருவிகள் உள்ளனவா? எப்படி சரி செய்வது? உதவி தேவை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:53, 16 மே 2019 (UTC)
நாட்டுத் தகவல் வார்ப்புருக்களை சீர்திருத்த உதவி தேவைஇங்கு உள்ள நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள் விக்கித்தரவில் இணைக்கப்படவில்லை. என்னால் இயன்றவரை இணைத்துவிட்டேன். இவற்றை இணைக்க வேண்டும் இல்லையேல் இன்னொரு பயனர் புதிதாக ஒன்றை இயற்றலாம். மேலும் நாட்டுத் தகவல் வார்ப்புருக்களில் Country Data XXXX என்றவை தேவையற்றவை. கிட்டதட்ட 200 வார்ப்புருக்கள் அவ்வாறு உள்ளன. இவற்றை நீக்கிவிடலாமா? அல்லது வழிமாற்றிடலாமா? --அஸ்வின் (பேச்சு) 16:03, 11 சூன் 2019 (UTC)
கல்லூரிகளில் விக்கி பயிற்சிவணக்கம். சேலம் பயிற்சி பட்டறையில் புதிய திட்டங்கள் பற்றி விவாதித்தோம். அவற்றில் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே பயிற்சி பட்டறை வாயிலாக ஏற்படுத்தலாம் என்று கூறினோம். அதற்கான ஒரு முயற்சியாக கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் ஒரு பயிற்சி பட்டறை நடத்துவதற்கு தமிழ் துறை வாயிலாக அனுமதி பெற முயற்சித்து வருகிறேன். இதற்கான பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பிற்கு என்னுடன் பணியை பகிர்ந்துகொள்ள உதவிகள் தேவைப்படுகிறது. நன்றி-- divya_kaniyam (பேச்சு) 09.57, 28 சூன் 2019 Can you help with a translation to Tamil?Greetings. On behalf of the Community Engagement department at the Wikimedia Foundation, I'd like to request some assistance in getting an important message translated to your language as soon as possible. Really appreciate your attention! --Elitre (WMF) (பேச்சு) 12:55, 19 சூலை 2019 (UTC) உதவிவணக்கம். வல்லுநர்கள் யாரேனும் Overlay செய்வதற்கு புதிதாக வார்ப்புருவை உருவாக்கும்படி வேண்டுகிறேன். இது ஒரு புகைப்படத்தின் மேல் தேவையான இடங்களில் எண்கள் இட்டு அவற்றைக் குறித்து விளக்க எளிதில் உதவும். AakashAH120 (பேச்சு) 04:00, 29 சூலை 2019 (UTC)
ஐயா, நான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பக்கத்தை விரிவாக எடிட் செய்தேன், கூடுதல் தகவல்களை இணைத்தேன், ஆனால், அது மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டது, ஒரு நண்பர் அதை மிள் அமைத்துவிட்டார், நான் எப்படி அதை நிரந்தரமாக தக்க வைக்க முடியும். மற்றவர் மீள் செய்யாமல் இருக்க நான் என்ன செய்யவேண்டும். Infobox EditingInfoboxஐ எவ்வாறு தொகுப்பது .. உதாரணமாக {{தமிழக உயர் அதிகாரிகள் மற்றும் பதவிகள்|வகை=பதவி|பதவி=தலைமை நீதிபதி}}
பயனர் தடை செய்தல்இப்பயனரை ஏன் தடை செய்யக்கூடாது . https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Abhiman2020 --Commons sibi (பேச்சு) 11:46, 21 செப்டம்பர் 2019 (UTC) உதவிகைப்பேசியில் வார்ப்புருக்களை கட்டுரைகளுக்கு எவ்வாறு இணைக்க வேண்டும்? தெரிந்திட உதவுங்கள். Fathima rinosa (பேச்சு) 22 செப்டம்பர் 2019 , 20:27
சந்தேகம்மழநாட்டிற்கும், கொங்கு நாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?? சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்கள் மழநாட்டை சேர்ந்ததா?? அல்லது கொங்கு நாட்டை சேர்ந்ததா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:24, 11 அக்டோபர் 2019 (UTC) The page I created keeps getting deleted - உறுதிக்கோட்டை நகரத்தார் வரலாறுHello Admins: The page I created in Wikipedia is based on facts and history. https://ta.wikipedia.org/wiki/பயனர்:Tkasi123/மணல்தொட்டி I tried to hyper-link the above article to another main article they have mentioned about this subject. But both my article and also the Edit at the other article gets deleted. Can you please help me on this? I am not really sure how I am deviating from Wikipedia rules. Thanks for your help. - Kasi Thiagarajan உதவி.நான் பூவல் எனும் கட்டுரையை நேற்று பதிவிட்டிருந்தேன் அதை விக்கிமுறைக்கு திருத்த வேண்டும் . உதவ முடியுமா? புதிய கணக்கில் பழைய பதிவைச் சேர்க்க முடியுமா?https://ta.wikipedia.org/s/5zvh என்ற பக்கத்தையும் https://ta.wikipedia.org/s/5zve என்ற பக்கத்தையும் https://ta.wikipedia.org/wiki/பயனர்:Kasijeeva என்ற பக்கத்தில் இணைத்துத் தரமுடியுமா? - −முன்நிற்கும் கருத்து Kasijeeva (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
பயனர் தடை செய்தல்https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:173C:DBDC:2:1:3DCC:9D94 இப்பயனர் (I.P) கணக்கு செய்யும் தொகுப்புகள் சரி தானா ? இல்லை என்றால் பயனரை தடை செய்யலாமா ?--Commons sibi (பேச்சு) 10:28, 24 அக்டோபர் 2019 (UTC) வேங்கைத்திட்டம் பற்றிய அறிவிப்பு காணப்படாமைமுதற்பக்கத்தில் வேங்கைத்திட்டம் 2.0 பற்றிய அறிவிப்பு தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லும் போது எனக்குத் தெரியவில்லை. எவ்வாறு அதை மீட்டமைப்பது?--ருக்மணி 16:30, 24 நவம்பர் 2019 (UTC) ஆங்கில பெயர்ச்சொற்களின் மொழிபெயர்ப்புகள் தேவைen:Category:Ray County, Iran, geography stubs என்பதில் உள்ள பெயர்களுக்கு தமிழ் பெயர்கள் வேண்டும். ஏதேனும் நுட்ப வழி உள்ளதா?--த♥உழவன் (உரை) 02:27, 25 நவம்பர் 2019 (UTC) ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை நீக்கினார்கள். தெளிவான காரணாம் தேவைஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை நீக்கினார்கள். தெளிவான காரணாம் தேவை ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை ஒரு குறுப்பிட்ட நபர் நீக்கி கொண்டே இருகிறார். காரணம் எப்படி அறிவது.ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை ஒரு குறுப்பிட்ட நபர் நீக்கி கொண்டே இருகிறார். காரணம் எப்படி அறிவது.
உதவி தேவைØresund என்ற சொல்லை தமிழில் எவ்வாறு எழுதுவது என யாராவது தெரிவிக்கவும். ஏனெனில் Øresund என்ற ஆங்கிலக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்க்கலாம் என்றுள்ளேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:52, 20 திசம்பர் 2019 (UTC) பதிப்புரிமை / படிம பதிப்புரிமை / காப்புரிமைச் சிக்கல் சிறிதும் இல்லாத படிமங்கள் நீக்கப் படுவது ஏன்?@ --AntanO ஐயா, ஒரு விடயம் புரிந்து கொள்ள இயலவில்லை; பதிப்புரிமை / படிம பதிப்புரிமை / காப்புரிமைச் சிக்கல் சிறிதும் இல்லாத படிமங்கள் நீக்கப் படுவது ஏன்? என்பதே அது. அடியேன் பகிர்ந்தது என் பாட்டனாரால் சுயமாக வெளியிடப்பட்ட (Self published) நூலைப் பற்றியதும் நூலில் உள்ள படி எடுக்கப் பெற்ற படிமங்களே; மேலும் அந்த பக்கத்தில் பகிர்ந்த படங்கள் நான் எடுத்தவையே. இவற்றை நீக்க வேண்டாம். ஒருநாள் விக்கிமூலப் பயிற்சிப் பட்டறைஅனைவருக்கும் வணக்கம். சென்னையிலுள்ள ஷாஷன் ஜெயின் கல்லூரியில் 24-02-2020 அன்று ஒரு நாள் விக்கிமூலப் பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இப்பயிற்சியில் சென்னையிலுள்ள நண்பர்கள் கலந்துக்கொள்ள அழைக்கிறோம். இடம்: ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி, தி. நகர், சென்னை. நேரம் : 10 மணி முதல் 4 மணி வரை. நன்றி!!! திவ்யாகுணசேகரன் (பேச்சு) 19:08, 23 பெப்ரவரி 2020 (UTC) சோழர்கள்அடையாளம் காட்டாத பயனர் 2401:4900:360D:20E8:2:1:4D9D:636F கும்பகோணம் இராமசுவாமி கோயில் பக்கத்தில் அமைத்தவர் என்ற இடத்தில் ரகுநாத நாயக்க மன்னர் என்று முன்பு இருந்த சொற்களுக்கு முன்பாக சோழ மன்னர்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரே கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் பக்கத்தில் அமைத்தவர் என்ற இடத்தில் சோழ மன்னர்கள் என்று பதிவிட்டுள்ளார். இரண்டு பதிவுகளுக்கும் உரிய மேற்கோள்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. மேலும் ரகுநாத நாயக்க மன்னர் என்ற இடத்தின் அருகில் சோழர்கள் என்று இணைப்பு தருவது உசிதமாகப் படவில்லை. இரு இடங்களிலும் நான் மீளமை என்று மாற்றிவிட்டேன். முன்பு இவரோ இவரைப்போல பிறரோ இவ்வாறு தொடர்ந்து செய்து வந்துள்ளனர். முழுமையாக அப்போது கவனிக்க நேரமின்றி அப்படியே விட்டுவிட்டேன் என்று எண்ணுகிறேன். இவ்வாறு ஐயம் வரும்போதோ/தெளிவற்ற நிலையிலோ/மேற்கோள் இன்றி வரும்போதோ மீளமை என்று தொடர்ந்து அமைக்கலாமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:30, 10 மார்ச் 2020 (UTC)
வணக்கம், சகோதரன் ஜெகதீஸ்வரன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:20, 10 மார்ச் 2020 (UTC) "தமிழர் வேளாண் நாட்காட்டி " என்ற தொகுப்பு நீக்கப்பட்டமைக்கு விளக்கம் கோரிவணக்கம் , எனது பெயர் பிரபாகரன் முருகேசன் , நான் உருவாக்கிய "தமிழர் வேளாண் நாட்காட்டி" பற்றி இங்கே ஒரு கட்டுரை தொகுத்தேன். அந்த கட்டுரை நீக்கப்பட்டுள்ளது , தமிழர் வேளாண் நாட்காட்டி என்ற வாக்கியத்தையே நான்தான் உருவாக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிட்டுள்ளேன் , தற்போது மூன்றாம் ஆண்டு தமிழர் வேளாண் நாட்காட்டி வடிவமைக்கும் பனி நடந்துகொண்டுள்ளது , இன்னும் சில தினங்களில் "தமிழர் வேளாண் நாட்காட்டி " வெளியிடப்படும் .. @Prabakaranm1984: விளம்பரங்கள் இங்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.--Kanags \உரையாடுக 03:48, 22 மார்ச் 2020 (UTC) கட்டுரை தலைப்பு தொடர்பாகSanni Yakuma என்ற கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இக்கட்டுரைக்கு சன்னி யாகுமா என்ற பெயரைக் கொடுத்திருந்தேன். இது இலங்கையில் சிங்கள மக்களின் மரபில் பேயோட்டுகின்ற ஒரு மத வழக்கமாக இருந்து வருகிறது. இக்கட்டுரைக்கு தமிழில் பெயர் மரபுக்கு முரணாக உள்ளது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதால், வேறு பொருத்தமான தலைப்பினைத் தேர்ந்தெடுத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 11:27, 28 மார்ச் 2020 (UTC)
how to type tamil in wikipediaI like to translate articles to Tamil but I couldn't type in Tamil letters. so what can I do? காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்வணக்கம். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் பக்கத்தில் 25 டிசம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன.தொடர்ந்து உரிய மேற்கோள்களைத் திரட்டி சான்றுகள் தரப்பட்ட நிலையில் சான்று தேவை என்பது தொடர்பான பெட்டிச்செய்தியை நீக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:22, 4 ஏப்ரல் 2020 (UTC)
வணக்கம், கௌதம் 💓 சம்பத். இனி அவ்வாறே செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:44, 6 ஏப்ரல் 2020 (UTC) தலைப்பு இடுதலில் தெளிவு தேவை
Help with translation(I apologize for posting in English ): Dear colleagues, We are organizing a project called WPWP that focus on the use of images collected as part of various contest and photowalks on Wikipedia articles across all languages and our team needs your help with translations into the language of this community. Here is the translation link: https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Wikipedia+Pages+Wanting+Photos&language=en&action=page&filter= I am sorry if I post in the won't venue. Thanks in anticipation. T Cells (பேச்சு) 17:48, 13 ஏப்ரல் 2020 (UTC) என்னுடைய ஊர்எனது ஊரைப் பற்றி கட்டுரை எழுத வேண்டும் எங்கு, எப்படி எழுதுவது? உதவுங்கள்.--−முன்நிற்கும் கருத்து NAGARAJAA (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
எப்படி கட்டுரையை மேம்படுத்துவது என்று சொல்லித் தராதவர்களுக்கு நீக்கும் அதிகாரத்தையும் நீக்க வேண்டும். கார்தமிழ் (பேச்சு) 09:29, 2 மார்ச் 2022 (UTC)
இராமசுவாமி கோயில், கும்பகோணம்வணக்கம், கும்பகோணம் இராமசுவாமி கோயில் என்ற தலைப்பில் 29 சூலை 2014இல் என்னால் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை உள்ளது. சற்றொப்ப அதே தலைப்பில் ராமசுவாமி கோயில், கும்பகோணம் என்ற தலைப்பில் பிறிதொரு கட்டுரை 25 டிசம்பர் 2018இல் தொடங்கப்பட்டுள்ளது. 2018இல் தொடங்கப்பட்ட கட்டுரையில் "இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்." என்ற பெட்டிச் செய்தி காணப்படுகிறது. முன்னரே 2014இல் ஆரம்பிக்கப்பட்டு, நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்னால் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரு கட்டுரைகளையும் இணைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். இணைப்புக்கான குறியீடுகளை தற்போது அமைக்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:07, 19 ஏப்ரல் 2020 (UTC) hyperlink below article பிலார் உருயிசு இலாபுயெந்தேit contains hyperlink above "From விக்கிப்பீடியா" and below "பிலார் உருயிசு இலாபுயெந்தே" in desktop mode [ i mean tapping desktop at bottom of page, NOT "request desktop site". is this some kind of error ? Leela52452 (பேச்சு) 09:19, 26 ஏப்ரல் 2020 (UTC) Wikitable தொடர்பாகவணக்கம். நான் உருவாக்கிய ஜுராசிக் வேர்ல்ட் : டொமினியன் பக்கத்தில் நடித்தவர்கள் என்ற wikitable, அதற்குரிய இடத்தில் தோன்றாமல் அப் பக்கத்தின் அடிப்பகுதியில் தோன்றுகிறது. இதை சீராக்கும் முறையை அறிய விழைகிறேன். நன்றி.
உதவி தேவை - விசமத் தொகுப்பு, சொந்த ஆய்வுவிசமத் தொகுப்பு, சொந்த ஆய்வு நீக்க உதவி தேவை. பின்வருவனவற்றைக் கவனியுங்கள்: அணைத்தையும் கவனித்து நீக்க / திருத்த வேண்டும். --AntanO (பேச்சு) 15:43, 16 மே 2020 (UTC) Traditional Indian HospitalityDear Wikipedia I am Manicklal Chakraborty - i have length of experience in Hospitality Industry (nearly 30 years) at present working as Sr, Faculty for (Hospitality) Hotel Management institute my Main subject is Front Office Management / Travel and Tourism ( also taking classes for other subjects) Now, i start writing book with regards to FRONT OFFICE OPERATION AND MANAGEMENT ( i feel, the presently available books are not equip with requirement not speak much about subject.My book will brings the simple way of at present need. why all the Hospitality education Books are only propagating western (European Culture) when it comes to HOSPITALITY/ FOOD & food Production we the INDIANS are much more older than any country culture in the world its unfortunate no body though of it. now IN my book i world like to write about TRADITIONAL INDIAN HOSPITALITY. Therefore i request Wikipedia to help me MY QUESTION 1 Thinnai : (History of thinnai. ( in traditional indian houses (especially in TAMIL NADU) where there is platform structure they build in front of their to facilitates strangers i need that detail 2. Sumaithangi Kal : Sumaithangi kal which help the travelers after their long journey which helps to keep their luggage and again easily kept in their head and start journey - i need that detail Please help me by providing answer Thanking you Sincerely MANICKLAL CHAKRABORTY
i am nor very smart in Computer technology please, i know word save mail draft sending search etc ஒருமையா பன்மையா என கொள்கைக் கேள்வி[ஆலமரத்தடியிலிருந்து வருகிறேன். அங்கு வாழ் நபர் இப்பக்கத்தில் கேட்குமாறு ஆலோசனை கூறினார்.] திரு காளமேகத்தைப் பற்றி எழுதும்பொழுது கேள்வி எழும்பிற்று. வரலாற்றுக் கட்டுரைகளில் ஆட்களை ஒருமையில் சொல்வதா பன்மையிலா என. விக்கிபீடியையின் கொள்கை அறிய ஆவல். Ambarish (பேச்சு) 02:15, 26 மே 2020 (UTC) Ambarish, ஒருமையிலேயே குறிப்பிடலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 04:58, 26 மே 2020 (UTC)
உதவி தேவை
உதவி-தமிழ் கலைச்சொல் தேவைen:Claw (graph theory), en:Claw-free graph இந்த ஆ.வி கட்டுரைகள் குறிப்பிடும் "Claw" என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமாக, கோட்டுருவியலுக்கு (graph theory) ஏற்ற தமிழ்ச் சொல் தேவைப்படுகிறது. பரிந்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:20, 6 சூன் 2020 (UTC)
நம் சுய சிந்தனைப் படைப்புகளை விக்கியில் எப்படி எங்கு பதிவேற்ற இயலும்?புது மொழிகள்- ஹைக்கூ கவிதைகள் சுய சிந்தனைப் படைப்புகள் போன்றவற்றை விக்கியில் எப்படி எங்கு பதிவேற்ற இயலும்?--−முன்நிற்கும் கருத்து சிற்றுளி (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
Black Lives Matter Logo in different languagesPlease help to translate the Black Lives Matter Logo for this wikipedia. பயனர் தரவு பக்கம் தொடர்பாகவணக்கம் என்னுடைய பயனர் தரவு பக்கத்தில் கனைக்டெட் ஆப் என்று உள்ளது. அதன் எதிர்ப் பக்கத்தில் மேனேஜ் 1 கனைக்டெட் அப்ளிகேசன் என்று உள்ளது அப்படியென்றால் என்ன? நன்றி −முன்நிற்கும் கருத்து Ethirkottaisaravanajothi (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. சான்று சேர்த்தல் - தொடர்பாகநான் எழுதியுள்ள “கடிநெல்வயல் வை.வேதரெத்தினம்” என்னும் கட்டுரைக்கு சான்றாக 10 வெளி இணைப்புகளைக் குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும் கட்டுரைக்கு ஆதாரமாகச் சான்று சேர்க்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சான்று சேர்த்தல் என்றால் என்ன ? நான் குறிப்பிட்டுள்ள 10 வெளி இணைப்புகளையும் படம் எடுத்து இணைப்பதா ? ஆம் எனில் அதை எங்கு எப்படி இணைப்பது என்பதைத் தெளிவு படுத்துக ! பதிவு -விமர்சனம் மற்றும் சமர்ப்பிக்கவும் எவ்வாறு செய்யனும்நான் ThenmozhiArunan என்ற பெயரில் என் முதல் wikipedia பதிவு எழுதியுள்ளேன்.
இதை, விமர்சனம் மற்றும் சமர்ப்பிக்கவும் எவ்வாறு செய்யனும் ? நன்றி தேன்மொழி அருணன். @Thenmozhiarunan: நீங்கள் தற்போது உங்களுடைய மணல்தொட்டியில் கட்டுரை எழுதியுள்ளீர்கள். அதை சரியான பெயருக்கு நகர்தல் செய்ய வேண்டும். அந்த பக்கத்திற்கு சென்று, மேலே (மேலும் என்று இருக்கும்) மேலும்-> நகர்த்தவும்-> என்பதற்கு செல்லவும், அங்கே இடது பக்கம் (முதன்மை) என்பதை தேர்வு செய்யவும், வலது பக்கம் பெயரை குறிப்பிட வேண்டும். பின்பு பக்கத்தை நகர்த்து என்பதை சொடுக்குவதன் மூலம் பக்கம் சரியான பெயருக்கு நகரும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:24, 26 சூன் 2020 (UTC) கௌதம் 💓 சம்பத் மேலே கூறியபடி மணல்தொட்டியிலிருந்து என்னுடைய பதிவை மா. இளஞ்செழியன் என்ற பெயருக்கு மாற்றியுள்ளேன். இந்த பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை, எப்படி அறிந்துகொள்வது? ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை எப்படி தமிழாக்கம் செய்து பதிவேற்றுவது அதற்கான வழிமுறைகள் என்னஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை எப்படி தமிழாக்கம் செய்து பதிவேற்றுவது அதற்கான வழிமுறைகள் என்ன உதவி தேவை: ஒருவரின் வாழ்க்கை வரலாறு எழுதிக்கொண்டு இருக்கின்றேன். மேற்கோள்கள் மற்றும் வெளி இணைப்பு எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. உதவி தேவை. நன்றி மேற்கோள்கள், மற்றும் வெளி இணைப்பு செய்வது எப்படி?மேற்கோள்கள், மற்றும் வெளி இணைப்பு செய்வது எப்படி
மொழி பெயர்ப்பு - விதி முறை, மற்றும் ஒப்புதல்வணக்கம், திரு கெம்ப நஞ்சம்மாணி வாணி விலாசா சந்நிதானன அவர்களுடைய பதிவு ஆங்கில விக்கிபீடியா இல் உள்ளது. [2] இதை, நான் தமிழில் எழுத விரும்புகிறான். அதற்க்கு ஒப்புதல் பெற வேண்டுமா? மற்றும் விதிமுறை யாவை? நன்றி.
மேற்கோள் கொடுத்துள்ளேன்https://ta.wikipedia.org/s/8p4a மா. இளஞ்செழியன் பக்கத்தில் சான்று தேவை என்ற இடங்களில் மேற்கோள் கொடுத்துள்ளேன். தயவு செய்து சரிபார்க்கவும், கருத்து கூறவும். நன்றி. தேன்மொழி அருணன்.
அன்ரன் தன்னிச்சையாகச் செயற்படுகிறார்அராபியர் கட்டுரையில் வேண்டுமென்றே தொகுத்தற் போரை உருவாக்கி, அக்கட்டுரையைத் தடுத்து அதன் பேச்சுப் பக்கத்தில் நான் குறித்தவற்றையும் வேண்டுமென்றே நீக்கி என்னைத் தடை செய்யப் போவதாகவும் மிரட்டுகிறார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எப்படியென்று நிருவாகிகள் கூறி அதற்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 03:32, 15 சூலை 2020 (UTC) பத்திரிகையாளர் ஆர்.ராமலிங்கம்பத்திரிகையாளர் ஆர்.ராமலிங்கம் என்ற புதுபதிவு நீக்கப்பட்டுள்ளது. பயனர் திரு கௌதம் சம்பத் நீக்கியுள்ளார். நீக்கப்பட்டதற்கான விளக்கம் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் இப்பதிவு. எதனால் நீக்கப்பட்டது என தெரிந்துகொண்டால் அது அத்தவறை தவிர்க்கலாம் அல்லவா?−முன்நிற்கும் கருத்து Mayaa usha (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. @Mayaa usha:காண்க-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:02, 19 சூலை 2020 (UTC) புகைப்படம் ஏற்றுதல் சம்பந்தமாக...வணக்கம். ”ஷாநவாஸ்” என்ற கட்டுரையை எழுதி உள்ளேன். அவரைப் பற்றி அறிதலுக்காக மட்டும் அவருடைய புகைப்படத்தை ஏற்ற விரும்பி அதற்காக விக்கியில் பதிவேற்றிய போது காப்புரிமை அடிப்படையில் அப்படம் நீக்கப்பட்டு விட்டது. அந்தக் கட்டுரையில் ஷாநாவாஸ் படத்தை எப்படி இணைப்பது? யாரேனும் வழிமுறை படுத்தினால் புதிய கட்டுரைகளுக்கும் அது உதவும்.
கட்டுரையை நகர்த்த உதவி வேண்டி”வேலு மனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லூரி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை மணல் தொட்டியில் எழுதி இருக்கிறேன். அதை விக்கிபீடியா பக்கத்திற்கு மாற்ற உதவி வேண்டும்
தமிழ் கட்டுரைக்கு ஆங்கில தலைப்பாக உள்ளது அதனை தமிழ் படுத்தவேண்டும்வணக்கம். நான் ஒரு ஆங்கில கட்டுரையை மொழிபெயர்ப்பு செய்தேன். கவனக்குறைவால் கட்டுரையின் தலைப்பை மாற்றாமல் வெளியிடு செய்து விட்டேன். அன்பர்கள் யாரேனும் அதை எப்படி தமிழில் மாற்றம் செய்வது என்பதை விளக்கவும். அதன் லிங்க் https://ta.wikipedia.org/s/8vct --Yousufdeen (பேச்சு) 08:49, 7 செப்டம்பர் 2020 (UTC) @Yousufdeen:,தற்போது Kanags அந்தக் கட்டுரையை சரியான பெயரில் (சபார் அகமது நிசாமி) சேர்த்து விட்டாரே. --TNSE Mahalingam VNR (பேச்சு) 04:42, 8 செப்டம்பர் 2020 (UTC) Princeஇக்கு என்ன தமிழ்Prince William County, Prince George's County இதில் Prince என்பதை இளவரசர் என்பதா அல்ல பிரின்சு என்றே கட்டுரையில் எழுதுவதா?--குறும்பன் (பேச்சு) 01:01, 4 அக்டோபர் 2020 (UTC)
கவுண்டி என்பது மாவட்டம் மாதிரி தான். ஆனால் அது நிர்வாக அலகின் பெயர். நாட்டுக்கு நாடு நிர்வாக அலகு மாறும். எனவே கவுண்டி்யை மாற்றமால் கவுண்டிக்கு தனி கட்டு்ரை எழுத வேண்டும்.--குறும்பன் (பேச்சு) 03:37, 4 அக்டோபர் 2020 (UTC)
கவுண்டியில் சில இடங்களை district என்கிறார்கள். அதனால் கவுண்டியை மாவட்டம் என்றால் குழப்பம் வரும். வேண்டுமென்றால் மாவட்டம் கட்டுரையில் கவுண்டி பற்றி தனியாக எழுதி விளக்கலாம்--குறும்பன் (பேச்சு) 01:30, 5 அக்டோபர் 2020 (UTC)
ராஜஸ்தான்ராஜஸ்தான், இராஜஸ்தான் மற்றும் ராசத்தான் இந்த மூன்றி எது சரி. இந்த மூன்று பெயர்களிளும் தனித்தனி பகுப்புகள் உள்ளது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஸ்ரீ (✉) 15:56, 25 அக்டோபர் 2020 (UTC)
மின்னல்@AntanO: வணக்கம் அண்ணா. விக்கியில் மின்னல் கருவி மூலம் செய்யப்படும் முன்நிலையாக்கம் வசதி பல நாட்களாக வேலை செய்யவில்லை, இதனால் துப்புரவு பணிகள் செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இதை சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:04, 30 அக்டோபர் 2020 (UTC)
கடவுச் சொல்என் விக்கி கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் மின்னஞ்சலில் புதியதை பெற்று, அதை வெட்டி ஒட்டினால் ஏற்றுக்கொள்ளவில்லை. மின்னஞ்சலை பார்த்து தட்டச்சினாலும் ஏற்றுக்கொள்ள வில்லை. போன வாரமும் இது நடந்தது சரின்னு இந்த வாரம் முயன்றேன் இப்பவும் அப்படித்தான் ஆகுது. -- குறும்பன்
2 விக்கிப்பீடியா கணக்குகள்வணக்கம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் வெவ்வேறு இரு விக்கிப்பீடியா கணக்கு பாவித்தால் பயனர் தடை ஏட்படுமா? (IP Addrass) முறையில் ஏதாவது பிரச்சனைகள் வருமா?--Thilakshan (பேச்சு) 16:13, 26 நவம்பர் 2020 (UTC) நீதி மன்றங்களில் தமிழ்நீதி மன்றங்களில் வாதிடும் மொழி குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. சட்டச்சொல் அகராதி தேவை. உதவவும்!. முன்கூட்டியே நன்றி! --A.R.V. Ravi (பேச்சு) 03:38, 27 நவம்பர் 2020 (UTC) @A.R.V. Ravi: வணக்கம் இரவி தமிழ்நாடு சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையம் 1979 இல் வெளியிட்ட சட்டச் சொல் அகராதியை பினவரும் இணைப்பிலிருந்து pdf வடிவில் பெற்று கொள்க https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0005003_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf நன்றி--A.Muthamizhrajan (பேச்சு) 05:25, 9 அக்டோபர் 2021 (UTC) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வாக்குப்பதிவு தொகுப்பில் பட்டியலை இட்டால் அது அடுத்துள்ள முடிவுகள் தொகுப்பின் கீழ் தெரிகிறது. நான் பயன்படுத்துவது நெருப்புநரி. --குறும்பன் (பேச்சு) 20:49, 8 ஏப்ரல் 2021 (UTC)
Intimation about the Research Proposal on Gender GapDear Wikimedians, Hope you are doing well. We would like to inform you that we (User: Praveenky1589 and User: Nitesh Gill) have proposed a research project for Project Grant. The study will focus on analyzing gender-based differences in leadership of Indian Wikimedia communities. The purpose of the research project is to analyse the growth of projects under different leadership, reasons behind the difference in engagement, contribution and iterations of the project. It also aims to study- How male and female leadership impacts volunteer contribution and their retention? The output of events under different leadership and the future of projects and leaders. The study will be conducted on the last 5 years of online and offline activities. For knowing more about the project please visit the proposal page and share your valuable feedback and suggestions on the talk page. We look forward to refining it more following your valuable inputs and questions. Thank you Nitesh Gill (பேச்சு) 18:12, 19 ஏப்ரல் 2021 (UTC) விக்கியன்பு நிரல் சரியாக இயங்குகிறதா?![]() சக பயனர்களைப் பாராட்டி பதக்கங்கள் வழங்க பயன்படுத்தப்படும் விக்கியன்பு சரியாகச் செயல்படுவதாகத் தெரியவில்லை. பயனரின் உரையாடல் பக்கத்திற்குச் செல்லும் போது விக்கியன்பு இலச்சினை தெரியவில்லை. அதுவரை கைமுறையாக பதக்கங்கள் வழங்கலாமா? ஆலோசனை தேவை.--TNSE Mahalingam VNR (பேச்சு) 02:35, 22 ஏப்ரல் 2021 (UTC)
தற்போது விக்கியன்பைப் பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு இங்கே விவாதிப்போம்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:23, 14 மே 2021 (UTC) உள்ளடக்க மொழிபெயர்பில் சிக்கல்உள்ளடக்க மொழிபெயர்பில் ஏதனும் சிக்கல் உள்ளதா ? நேற்று பிற்பகலில் இருந்து மொழிபெயர்ப்பு பக்கத்தில் இயங்க முடியவில்லை. இந்த சிக்கல் எனக்கு மட்டும்தானா? அல்லது எல்லோருக்குமா என்பது தெரியவில்லை. இந்த வசதியைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தால் நலம்--அருளரசன் (பேச்சு) 02:18, 29 ஏப்ரல் 2021 (UTC)
மறுமொழி அளித்த சிறீதருக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 06:51, 29 ஏப்ரல் 2021 (UTC)
படிமத்தை பதிவேற்றுவது பற்றிவணக்கம் நான் விக்கிப்பீடியாவில் படிவத்தை பதிவேற்றினேன் பயனர் AntanO அது பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கினேன் என்றார் அவர் இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் எனவை எனக்கு விக்கிப்பீடியா உட்பட்டு பதிவேற்ற உதவுங்கல் நன்றி --A.Muthamizhrajan (பேச்சு) 16:02, 3 மே 2021 (UTC) தலைப்பு பிழையை சரிசெய்யவணக்கம் நான் விக்கிப்பீடியாவில் en:George L. Hart பற்றிய கட்டுரையை கண்டேன் அதில் ஜோர்ஜ் எல். ஹார்ட் என தலைப்பு இருந்தது,இது கட்டுரையை தேடுபவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம் எனவே தலைப்பு பிழையை சரிசெய்ய உதவவும் நன்றி--A.Muthamizhrajan (பேச்சு) 12:25, 4 மே 2021 (UTC)
வணக்கம் நாம் George என்பதை ஜார்ஜ் என்றே உச்சரிப்போம், எனவே கட்டுரையை தேடுபவர் ஜார்ஜ் எல். ஹார்ட் என்றே தேடுவார் அதனால் தலைப்பை சரிசெய்ய வேண்டுகிறேன் நன்றி--A.Muthamizhrajan (பேச்சு) 10:31, 5 மே 2021 (UTC)
தமிழ்ச் சொற்கள் தேவை
இச்சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:29, 5 மே 2021 (UTC)
உதவிக்கு நன்றி பரிதிமதி. கணிதப் பகுப்புகளைச் சீரமைக்கத் தேவைப்பட்டது.--Booradleyp1 (பேச்சு) 14:08, 17 மே 2021 (UTC) மற்ற மொழிகளுக்கு இணைப்பு கொடுக்க இயலவில்லைAdd Links -- Link with the page செய்த பிறகு Confirm பொத்தானை அழுத்தும்போது இந்தப் பிழை அறிவிப்பு வருகிறது: An error has occured: You do not have the permission to carry out this action, ... ஏன்?--PARITHIMATHI (பேச்சு) 16:09, 14 மே 2021 (UTC)
சரியான தமிழ் சொற்கள் தேவைவணக்கம் இந்த ஆங்கில சொற்களுக்கு தமிழ் மொழியாக்கம் தேவை நன்றி. --Thilakshan (பேச்சு) 16:34, 15 மே 2021 (UTC)
பட்டையில் காட்டுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 கட்டுரையில் தொகுதி வாரியாக முடிவுகள் என்ற பட்டையிலும், கட்சிகள் பெற்ற வாக்குகள் என்பதற்கு கீழுள்ள தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் பட்டையிலும் புகுபதியாவிடில் காட்டு தெரிகிறது, புகுபதிந்தால் தெரிவதில்லை. ஆம் புகுபதிந்தால் தெரிவதில்லை. வார்ப்புருவை பார்க்க காட்டை அழுத்த வேண்டும்--குறும்பன் (பேச்சு) 01:55, 17 மே 2021 (UTC) மேற்கோள்களை சேர்ப்பது
மேலும் தேவை ஏற்பட்டால் ஒரே மேற்கோள் சான்றை மீண்டும் மீண்டும் சேர்ப்பதை தவிர்ப்பது எப்படி? நன்றி--A.Muthamizhrajan (பேச்சு) 11:05, 22 மே 2021 (UTC)
Josiah -- தமிழில்?Josiah என்ற பெயரைத் தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது? ஜோசைய்யா (அ) ஜோசையா (அ) ஜோசயா (அ) யோசையா (அ) பிற. தெளிவு தேவை. --PARITHIMATHI (பேச்சு) 03:52, 1 சூன் 2021 (UTC)
கட்டுரைகளில் முன்புபோல் கலைச்சொற்களுக்கு அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய முடியவில்லை.உதவுங்கள்அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் வார்த்தைகளை இணைக்க முடியவில்லை.முன்பு விக்கிப்பீடியா- இல் தேடுக பக்கம் அம்புக்குறியினை ஒரு பெட்டியில் தட்டினால் வேண்டிய மொழியினை தேர்ந்து எடுக்கமுடியும். அந்த பெட்டி தற்சமயம் வருவதில்லை.என்ன செய்ய வேண்டும்.உதவுங்கள். அருண்தாணுமாலயன். இணைய ஆவணக படிமம்
ஒரு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை (Logo) அதன் இணையத்தளத்திலிருந்து எடுக்கலாமா? இல்லை அதற்கு மாற்று வழி உண்டா? இணைய தேடு பொறியில் இருந்து எடுத்து படிமங்களை பயன்படுத்தலாமா? ஒரு கருத்துக்கு உரை சான்று (Text Proof) இல்லாத போது கிடைத்த படிமத்தை சான்றாக பயன்படுத்தலாமா? நன்றி --A.Muthamizhrajan (பேச்சு) 07:43, 31 சூலை 2021 (UTC)
Santiago -தமிழில்?Santiago -- இப்பெயரைத் தமிழில் எவ்வாறு எழுதலாம்?--PARITHIMATHI (பேச்சு) 02:08, 3 ஆகத்து 2021 (UTC) @PARITHIMATHI:: சான் டியேகோ அல்லது சான்ட்டியேகோ --தாமோதரன் (பேச்சு) 02:22, 3 ஆகத்து 2021 (UTC)
Infobox sailor -- உருவாக்க உதவி தேவைமேலே குறிப்பிட்டுள்ள வார்ப்புருவை உருவாக்கித் தந்திட இயலுமா? (குறிப்பு: sailor = பாய்மரப் படகோட்ட வீரர்) PARITHIMATHI (பேச்சு) 19:16, 3 ஆகத்து 2021 (UTC)
உதவி:இந்த திரைப்படங்களுக்கு சரியான தமிழ் மொழியாக்கம் தேவை?--Thilakshan (பேச்சு) 20:30, 3 ஆகத்து 2021 (UTC)
InternetArchiveBot தொடர்பாகவணக்கம். எனக்கு அண்மையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. ஒரு கடிதத்தின் ஆரம்பத்தினைத் தந்துள்ளேன்...... கீழ்க்கண்டவிக்கிப்பீடியா தளத்தின் மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில் பக்கம் 12 ஆகத்து 2021 அன்று InternetArchiveBot என்ற பெயருடைய பயனரால் மாற்றப்பட்டது, இப்பக்கத்தின் தற்போதைய பதிப்பை https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D என்ற இணைப்பின் வழிச் சென்று காணலாம். ..... இவற்றில் பல கடிதங்களை பார்த்து செய்தி அறிந்தபின்னர் என் மின்னஞ்சல் பெட்டியிலிருந்து (deleted after seeing these emails) நீக்கிவிட்டேன். (தொடர்பு அறுந்துவிட்ட நிலையில் என்பது போன்ற சொற்றொடரை அந்தந்த கட்டுரையில் காணமுடிந்தது) இது போன்ற கடிதங்கள் எதற்காக அனுப்பப்படுகின்றன என அறிய விழைகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:56, 12 ஆகத்து 2021 (UTC)
Request for comment notificationHere is a link to a RFC on Meta concerning all Wikimedia projects. Best, Lionel Scheepmans (பேச்சு) 00:56, 17 ஆகத்து 2021 (UTC) Seeking volunteers help for translating Hack4OpenGLAM pageHack4OpenGLAM cultural hackathon took place for the first time in 2020 at the Creative Commons Global Summit. AvoinGLAM (a joint GLAM working group of Wikimedia Finland, Open Knowledge Finland, and Creative Commons Finland) is arranging it again in 2021. The event consists of a workshop day, followed by three independent working days during the CC Summit days, and a celebration event after the summit. We are seeking volunteers help from Indian languages and also specifically in Tamil there is a scope for translating more content here. We are also looking forward for project submissions from the Tamil Wikimedia community so the translation of the event page will be helpful. Also if any volunteers interested in translating the social media pages you can write to me on bhuvanameenakshi@gmail.com or leave me a message on my பேச்சு:Bhuvana Meenakshi. Event meta page link: https://meta.wikimedia.org/wiki/Hack4OpenGLAM/ta Bhuvana Meenakshi (பேச்சு) 10:49, 23 ஆகத்து 2021 (UTC) தனி மனிதர் படிமம்@AntanO:வணக்கம், வாழ்கின்ற அல்லது மறைந்த ஒரு மனிதரின் படிமத்தை பயன்படுத்துவதற்கான (பதிவேற்ற) விதிமுறைகள் என்ன? இவ்வகை படிமம் கட்டற்ற படிமங்கள் ஆகுமா? நான் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் என்ற கட்டுரையைக் கண்டேன் இதில் தலைப்பிலுள்ள தனிஎன்ற சொல்லை தூயஎன்று மாற்ற வேண்டுகிறேன் காரணம் en:International Union of Pure and Applied Chemistry (IUPAC) என்பதன் தமிழாக்கமே இத்தலைப்பு அதிலுள்ள Pure என்பது தூய்மையான என பொருள் தரும் நன்றி--A.Muthamizhrajan (பேச்சு) 05:47, 1 செப்டம்பர் 2021 (UTC)
பெண்களும் பால்புதுமையினரும்விக்கி பெண்களை நேசிக்கிறது 2021 திட்டத்தின் ஒரு பகுதியாக பால்புதுமையையும் (queer/lgbt) கொண்டுள்ளதால், நிறைய பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தலைப்பில் உள்ள பக்கங்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு பட்டியல் பக்கம் உருவாக்கலாமா? (பார்க்க: ஆங்கில பக்கம், பிற பட்டியல் பக்கங்களின் தொகுப்பு) -CXPathi (பேச்சு) 18:16, 7 செப்டம்பர் 2021 (UTC) தாவரவியல் தொடர்பான கட்டுரைகள்சமீபகாலமாக தாவரவியல் தொடர்பான சோதனை / கலைக்களஞ்சியமற்ற / சொந்த கருத்துக்களுடன் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. ஏதேனும் பயிற்சிகள் இடம் பெறுகின்றனவா? அவ்வாறாயின் பயனர்களுக்கு முறையாக கற்றுக்கொடுப்பது நன்று. அறிவுரைகளை புறந்தள்ளிவிட்டு தன்பாட்டுக்கு செயற்படுவது முறையல்ல. --AntanO (பேச்சு) 03:55, 15 செப்டம்பர் 2021 (UTC) உதவிவணக்கம்! ஒளிப்படவியல் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட இருக்கிறேன், ஆகையால் ஒளிப்படவியலின் வளர்ச்சியின் வரலாற்று தகவல்களை , நம்பகத்தன்மை வாய்ந்த நமது விக்கிப்பீடியாவிலுள்ள ஒளிப்படவியல் பக்கத்தில் இருந்து சில தகல்வல்களை படியெடுத்து பயன்படுத்த அனுமதி வேண்டி உதவி கோருகிறேன். நன்றி! அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖ ᗗஉரையாடுக! 14:15, 20 செப்டம்பர் 2021 (UTC) ஆய்வு செய்தியை குறிப்பிட வேண்டி@AntanO: வணக்கம் நா. கோவிந்தசாமி என்ற கட்டுரையில் தமிழ் இணையத்தில் ஏறிய வரலாற்றையும் முதல் தமிழ் இணையத்தளம் உருவான வரலாற்றையும் குறித்த நா. கோவிந்தசாமி வெளியிட்ட கட்டுரையில் உள்ள செய்தியை விக்கிமப்பீடியாவில் அந்த கட்டுரையில் வெளியிட விரும்புகிறேன் இது அந்த வரலாற்றை அனைவரும் அறியலாம் எனவே http://uttamam.org/papers/97_07.pdf (ஆங்கில மொழியில்) இல் உள்ள செய்தியை படித்த பிறகு பதில் தர வேன்டுகிறேன் நன்றி--A.Muthamizhrajan (பேச்சு) 07:23, 23 செப்டம்பர் 2021 (UTC)
@AntanO: வணக்கம் தாங்கள் மீளமைத்த தனது திருத்தப்பட்டக் கட்டுரைகளை சுட்டி காட்டுங்கள் மேலும் தங்களுக்கு எனது பேச்சு பக்கத்திலிருந்து செய்தி அணுப்பும் போது அது தங்களை வந்தடைய எந்த வார்ப்புருவை பயன்படுத்துவது என்பது பற்றி சொற்களில் விளக்க வேண்டுகிறேன் காரணம் பேச்சு பக்கத்தில் செய்தியணுப்புவது பற்றி விக்கிப்பீடியாவில் எற்கனவே ஓர் காணொலியைக் கண்டேன் ஆனால் அது புரியவில்லை நன்றி --A.Muthamizhrajan (பேச்சு) 07:32, 27 செப்டம்பர் 2021 (UTC)
குடாரப்புத் தரையிறக்கம்வணக்கம்! தரையிறக்கம் பற்றி ஆங்கில ஆதாரங்களோடும் எரிமலை மாத இதழில் வெளிவந்த ஆதாரங்களோடும் சேர்த்து சொந்தமாக எழுதி வெளியிட்டால் ஏற்பளிப்பீர்களா? பெரும்பாண்டியன்2 10:46pm, 5 October, 2021 பகுப்பை இணைத்தல்ஒரு பக்கத்திற்கான பகுப்பை எப்படி இணைப்பது. நான் இந்த பக்கத்திற்கான பகுப்புகளை இணைக்க விரும்புகிறேன் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF இயந்திர மொழியாக்கம் பட்டியல்களை சரியாக மொழிபெயர்ப்பதில்லைஇந்த பக்கத்தை கூகிள் இயந்திர மொழிபெயர்ப்பு கருவியின் அடிப்படை உதவியின் மூலம் தமிழாக்கம் செய்து, பின்னர் இயல்பான மொழி நடையில் கட்டுரையை சீரமைத்துள்ளேன். இந்த பக்கத்தில் மூன்று பட்டியல்கள் உள்ளன. 2வது மற்றும் 3வது பட்டியல்களை கருவி தானாகவே மொழிபெயர்த்தது. அனால் பெரிய பட்டியலான முதல் பட்டியல் மட்டும் ஆங்கிலத்திலேயே உள்ளது. இது போன்ற பெரிய பட்டியல்களை எப்படி இயந்திரம் மூலம் மொழியாக்குவது. இது போல வேறு சில பக்கங்களிலும் பெரிய பட்டியல்களை இயந்திரம் மொழியாக்கம் செய்யவில்லை. https://ta.wikipedia.org/s/asjp Someone please imrove this article by translating from English--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. - தகவல் பெட்டியை சேர்த்துள்ளேன். சில இலக்கணப் பிழைகளை திருத்தியுள்ளேன். மற்றவர்களையும் புதிய பத்திகளை சேர்க்கவும், மற்றும் இந்த பக்கத்திற்கு தொடர்புடைய இணைப்பு பக்கங்களை உருவாக்கவும்(எ.கா. : ஆங்கில பிரெய்லி ) கேட்டுக் கொள்கிறேன். ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 07:28, 16 நவம்பர் 2021 (UTC) சாம்பியன்ஷிப் என்ற சொல்லுக்கான தமிழ்ச் சொல் என்னசாம்பியன்ஷிப் என்ற சொல்லுக்கான தமிழ்ச் சொல் என்ன என யாரேனும் கூற இயலுமா. பல விளையாட்டுப் போட்டி பக்கங்களில் சாம்பியன்ஷிப் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது.
நாம் உருவாக்கிய பக்கத்தை எப்படி அழிப்பதுஜி. ஆகாஷ் மற்றும் ஜி ஆகாஷ் என இரண்டு பக்கங்களை தவறுதலாக உருவாக்கி விட்டேன். ஜி ஆகாஷ் பக்கத்திலே தான் துல்லியமான தகவல்கள் உள்ளன. ஜி. ஆகாஷ் பக்கத்தை இணைக்கக் கோரிக்கை வைக்காமல் நானே அதை அழிக்க முடியுமா ? ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 13:51, 13 நவம்பர் 2021 (UTC) ஒரே வார்ப்புருவை பல பக்கங்களில் தானியங்கி மூலம் இணைப்பதுநான் இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர்களுக்கு ஒரு வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன் - வார்ப்புரு:Indian grandmasters. எடுத்துக் காட்டாக கிராண்ட்மாஸ்டர்கள் ஜி ஆகாஷ் மற்றும் விசுவநாதன் ஆனந்த் பக்கத்தில் வார்ப்புருவை இணைத்துள்ளேன். இதை மற்ற கிராண்ட்மாஸ்டர்கள் பக்கங்களிலும் இணைக்க வேண்டும். இந்த செயலை தானியங்கி மூலம் செய்வதற்கு யாரேனும் உதவ முடியுமா? ஒரு சிறிய அடிப்படை உதவி கிடைத்தால் கூட எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி! ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 14:45, 13 நவம்பர் 2021 (UTC)
எனக்கு இஸ்லாமிய வரலாற்றை எழுத ஆவலாக உள்ளது ..எப்படி எழுத வேண்டும் என ஒரு புரிதல் கிடைக்கவில்லை.தங்களின் உதவி மற்றும் அறிவுறுத்தல் தேவை - வணக்கம் ! தங்களது கோரிக்கையை புதிய தலைப்பில் கேட்கவும். ஆங்கில விக்கியில் இசுலாமிய வரலாறு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளதால், நீங்கள் ஆங்கிலத்தில் இருந்து பக்கங்களை மொழி பெயர்க்கலாம்.மேலும், நம்பகத்தன்மையுடைய நூல்களைக் கொண்டு நீங்களும் புதிய பக்கங்களை தக்க சான்றுகளுடன் உருவாக்கலாம். மொழி பெயர்ப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 07:35, 16 நவம்பர் 2021 (UTC) spellingCan பகுப்பு:ஆச்சிரமங்கள் be changed to "பகுப்பு:ஆசிரமங்கள்" Can தருமம் changed to "தர்மம்"--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. - தமிழில் தருமம் என்பதே சரியான சொல்லாகும். பெயர்களில் வேண்டுமானால் இது போன்ற விதி மீறல்களையும் வடமொழி எழுத்துகளையும் பயன்படுத்தலாம். ஆனால், மற்ற இடங்களில், தூய தமிழில் எழுதுவதே சிறந்தது என்பது என் கருத்து. பகுப்பு:ஆசிரமங்கள் திருத்தப் பட்டுவிட்டது. நன்றி @Tamil098 ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 04:35, 24 நவம்பர் 2021 (UTC)
Quick help pleaseI have moved from வார்ப்புரு:இந்து மெய்யியல் to வார்ப்புரு:இந்து சமயம் based on the content and other languages and its the apt title. But I don't know how to make the same changes in all pages using Bot. Anyone please do.--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
மதம் vs சமயம்1) மதம் என்பது தமிழ் சொல்லே! ஆதாரம் - பாவாணர் மற்றும் மறைமலை அடிகளின் நூல்கள். இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகியவற்றைக் குறிக்க "மதம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகியவற்றைக் குறிக்க "சமயம்" என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். நண்பர்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. இந்து vs தர்ம சமயங்கள்மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்து என்ற வார்த்தை இருவேறு கருத்துடையது. பல நாடுகள் சீக்கியர்கள், சமணர்கள், மற்றும் பௌத்த மதத்தினரையும் இந்துக்களாகவே கருதுகின்றன. ஆனால் இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் அவற்றை தனித்தனியாக கணக்கிடுகின்றன. கல்வித் மற்றும் ஆராய்ச்சி துறையில், உலகின் பெரும்பாலான சிறந்த பல்கலைக்கழகங்களில், "தெற்காசியப் படிப்புகள்" என அனைத்தும் பொதுவாகப் படிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் ஒரே மதமாகக் கருதப்படுகின்றன. பெரும்பாலான தமிழ் இலக்கியங்களில், சைவம், வைணவம், பௌத்தம் மற்றும் சமணம் பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே, கர்மா, தர்மம் போன்ற கட்டுரைகளில் அனைத்து தர்ம மதப் பெயர்களையும் குறிப்பிடுவது நல்லது. அல்லது "இந்து மற்றும் அதனுடன் சார்ந்த மதங்கள்" என்று குறிப்பிடவும்.--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. |
Portal di Ensiklopedia Dunia