விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 16பகுப்பு உருவாக்கம்நான் எப்படி உரு புதிய பகுப்பை உருவாக்கலாம்.--Vishwa Sundar (பேச்சு) 18:04, 9 பெப்ரவரி 2022 (UTC)
புத்தகம் பற்றி எழுத கூடாதா ?நான் எழுதிய கட்டுரை அயல் இனத்தார் ஆதிக்கம் நூல் இது புத்தகம் பற்றிய கட்டுரை இதனை பயனர் AntanO நீக்கினார் .விக்கிபிடியா புத்தகம் பற்றி கட்டுரை எழுத அனுமதி இல்லையா? --பாலாசி (பேச்சு) 09:16, 6 சூன் 2020 (UTC)
Kanags நன்றி நீங்கள் காட்டிய வரையரைகுள் தான் எனது கட்டுரை இருந்தது அதனை user:AntanO நீக்கிவிட்டு ஆங்கில மொழிபெயர்பு எழுத சொல்கிறார் .ஆங்கில மொழி பெயர்பு செய்வது மட்டும் என்றால் தமிழ்நாட்டிலும் புத்தகம் மற்றும் எழுத்தாளர் பற்றி விக்கில் எப்போது எழுதுவது --பாலாசி (பேச்சு) 10:02, 6 சூன் 2020 (UTC)
antano ஒரு சர்வாதிகாரியா? சர்வாதிகாரி ஆண்டனோ (antano) நீக்குகிறார். விக்கியில் தமிழ் வளர தடையாக உள்ள இது போன்ற சர்வாதிகாரிகளை நீக்கிவிட்டு தவறுகள் இருப்பின் அதை சுட்டிக் காட்ட்ம் நல்லவர்களை நியமியுங்கள்.ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பு மணவை முஸ்தபாவின் மகனாரின் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. உலகளாவிய இந்த அமைப்பு, விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது. அதற்கென பயிற்சியளிக்க தமிழ்ப்பரிதி மாரி அவர்களை நான் தொடர்பு கொண்டு பயிற்சியளித்து வருகிறேன். அவரும் பயிற்சியளித்தார். நான் முயற்சிக்க வேண்டி 2 கட்டுரைகளை எழுதினேன். ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் மணவை முஸ்தபா ஆய்விருக்கை என்ற கட்டுரையை காழ்ப்புணர்ச்சியில் தமிழ் வளரக் கூடாது எனும் சிந்தனை கொண்ட சாதி வெறியர்கள் நீக்குவதை ஏற்க முடியாது. எனது கட்டுரையில் எங்கே தவறு என்று சொல்லியிருந்தால் அடுத்த முறை நான் சரியாக கட்டுரை எழுத முடியும். ஆனால் தவறுகளைக் கூறாமல் விதிகளை வைத்துக் கொண்டு நீக்கல் நடவடிக்கை எடுக்கும் முட்டாள்களை என்ன சொல்வது? முதலில் கற்றுக் கொடுங்கள். பிறகு தவறு செய்தால் நீக்கலாம். முனைவர் ராஜ.கார்த்திக்,இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கோவை கார்தமிழ் (பேச்சு) 09:39, 2 மார்ச் 2022 (UTC)
கவனிக்க: @Arularasan. G, Gowtham Sampath, Kanags, Kurumban, Mayooranathan, and Nan:, @Neechalkaran, Ravidreams, Sundar, செல்வா, and தென்காசி சுப்பிரமணியன்:
பராமரிப்பு தொடர்பான கேள்விகள்//இந்தப் பக்கம் சற்றுமுன்னர் உருவாக்கப்பட்டது.// தொடங்கப்பட்டு ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள், வார்ப்புரு இடப்பட்டு ஏறத்தாழ மூன்றாண்டுகள். எனில் சற்றுமுன்னர் என்பதன் வரையறை என்ன? இந்தப்பக்கத்தை என்ன செய்ய வேண்டும்? 1. பயனர் வெளிக்கு நகர்த்த வேண்டுமா? எனில் அதற்கான வார்ப்புருவை எங்கே தேடுவது? 2. தோட்டக்கலை போன்ற பக்கத்துடன் இணைத்திட வார்ப்புரு இடவேண்டுமா? 3. நீக்க வேண்டி வார்ப்புரு இடவேண்டுமா? போலவே இந்தப்பக்கமும். பொதுவாக விக்கிப்பீடியா பயனர் மற்றும் பங்களிப்பாளர் நிலைகளைப் பற்றி மேலும் அறிய விளக்கப்பக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? --Stymyrat (பேச்சு) 09:52, 5 மார்ச் 2022 (UTC)
தவறாக பதிவேற்றிய புகைப்படங்களை எவ்வாறு நீக்குவது.நான் ஒலியெழுவன், நேற்று நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது அதற்கு தேவைப்படும் புகைப்படங்களை பதிவேற்றிவிட்டு அதை இனைய பக்கத்தில் பார்க்க முயன்ற போது நான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை பக்கமும் வெளியே சென்றுவிட்டது. நான் எவ்வாறு மீண்டும் இடையில் விட்ட எனது கட்டுரையை தொடர்வது தெரியவில்லை முடிந்தவரையில் நானும் விக்கிபீடியாவில் கொடுத்த தகவல்களை பார்த்தேன்.எந்த பயணும் இல்லை. எப்படி நான் பதிவெற்றிய புகைப்படத்தை நீக்குவது பற்றிய தகவல் தேவை. -−முன்நிற்கும் கருத்து Freedom CreatorTN (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கட்டுரை விரிவாக்க உதவிகவிஞர் முத்துக்கூத்தன் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இந்த வலைப்பதிவில் மட்டுமே உள்ளது. வலைப்பதிவின் சொந்தக்காரர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் கவிஞரின் மகனான மு. கலைவாணரிடம் பேசிப் பல தகவல்களை பெற்றிருக்கிறார். கடைசியில் இக்கட்டுரைச் செய்தியை எடுத்தாளுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வலைப்பதிவு தகவல்களை வைத்துக் கொண்டு முத்துக்கூத்தன் கட்டுரையை விரிவாக்கலாமா? விரிவாக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா? உதவுங்கள் நன்றி --சா அருணாசலம் (பேச்சு) 02:54, 21 மார்ச் 2022 (UTC)
பக்கத்தை நகர்த்தவும்தமிழின குடிகளின் பட்டியல் என்ற பக்கத்தை VelKadamban/தமிழின குடிகளின் பட்டியல் என்ற பயனர் பக்கத்திற்கு மாத்த உதவுங்கள். காரணம்: துறை வல்லுநர் அல்லாதவர் எழுதிய நூலை மேற்கோளாக கொடுத்ததால் --VelKadamban (பேச்சு) 13:03, 4 ஏப்ரல் 2022 (UTC)
கட்டுரைரைகளில் சான்றுகளை இணைத்தல், ஒளிப்படங்கள் மற்றும் பொருத்தமான வார்ப்புருவினை இணைப்பது குறித்து விளக்கம் கோருதல்.துப்பரவு வார்ப்புரு பற்றி விளக்கம் பெற விரும்புகிறேன். Cite News மற்றும் Cite Journal குறித்த விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் தர முடியுமா? குறிப்பிட்ட சான்றினை வேறு வேறு பத்திகளில் மீண்டும் மீண்டும் இணைப்பது குறித்து விளக்க இயலுமா? விக்கிமீடியா காமன்சில் உள்ள ஒளிப்படங்களை இணைப்பது எப்படி? அதிக ஒளிப்படங்களை, கோவையாக இணைப்பது எப்படி? வார்ப்புருவினை இணைப்பது குறித்தும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். Iramuthusamy (பேச்சு) 15:45, 5 ஏப்ரல் 2022 (UTC) ARIESன் தமிழாக்கம் உதவி/வழிகாட்டல் தேவைARIES: Aryabhatta Research Institute of Observational Sciences -- ஆர்யபட்டா காட்சிப்பதிவு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்
--PARITHIMATHI (பேச்சு) 01:40, 3 சூன் 2022 (UTC) ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கண்காணிப்பு அறிவியல் சரியாக வருமா ? --கி.மூர்த்தி (பேச்சு) 02:26, 3 சூன் 2022 (UTC) பஞ்சப்பட்டி சட்டமன்றத் தொகுதிபஞ்சப்பட்டி சட்டமன்றத் தொகுதி தொகுப்பின் தகவல் பெட்டியினை சரிசெய்ய உதவி வேண்டப்படுகிறது. --சத்திரத்தான் (பேச்சு) 15:39, 3 சூன் 2022 (UTC) கோயில் அல்லது கோவில்இலக்கண விதியின் அடிப்படையில் 'கோயில் என்பது சரியா' அல்லது 'கோவில் என்பது சரியா' என்பதில் மீண்டும் குழப்பமாக இருக்கிறது. தமிழ் விக்கியில் இது குறித்து முன்பு ஒரு உரையாடல் நடந்தது. அந்த உரையாடலுக்குச் செல்ல உதவி தேவைப்படுகிறது. நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:03, 23 சூன் 2022 (UTC)
மிக்க நன்றி @சா அருணாசலம்:--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:00, 4 சூலை 2022 (UTC) 'கட்டுரை நீக்கல்' அணுக்கம்துப்புரவுப் பணியினை செய்யும்பொருட்டு 'கட்டுரை நீக்கல்' அணுக்கத்தை ஒரு பயனருக்கு அளிக்க இயலுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:13, 4 சூலை 2022 (UTC)
நன்றி. பயனர் மகாலிங்கம் கட்டுரையாக்கம், மேம்படுத்துதல், திருத்தங்கள் செய்வதோடு துப்புரவுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரைகளை சரியான முறையில் கணித்து, நீக்கப் பரிந்துரைக்கிறார். நிர்வாகிகள் அதனை கவனித்து நீக்குகிறார்கள். நிர்வாகப் பொறுப்பு ஏற்க அவர் முன்பு மறுத்துவிட்ட காரணத்தால், இந்த அணுக்கத்தையாவது அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்து வேண்டுகோள் வைக்க நினைத்திருந்தேன். அதற்கு முன்னதாக, அதற்குரிய சாத்தியங்களை அறிய முற்பட்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:11, 4 சூலை 2022 (UTC) பகுப்புகள் சேர்வது தொடர்பான கேள்வியும், உதவி கோரலும்எடுத்துக்காட்டாக, ஆசிய நாடுகளின் பட்டியல் எனும் கட்டுரையில் ஏராளமான பகுப்புகள் சேர்ந்துள்ளன. இவை எப்படி சேர்கின்றன? இப்பகுப்புகளை நாம் உருவாக்கினால், எந்த வகையில் உதவக்கூடியவை? சேரும் பகுப்புகளை தடுக்க இயலாதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:43, 21 சூலை 2022 (UTC)
பேருதவி; மிக்க நன்றி! ஒரே ஒரு திருத்தத்தின் மூலமாக, சுமார் 3,000 கட்டுரைகளில் துப்புரவு நடந்துள்ளது. காண்க: சிறப்பு:Wantedcategories --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 22 சூலை 2022 (UTC)
@Kanags: துப்புரவுப் பணி தொடர்பான உதவிகளுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:30, 23 சூலை 2022 (UTC) மணல்தொட்டி தொகுப்பு 1 பழுது நீக்கம் - உதவிபயனர்:Iramuthusamy என்னுடைய மணல்தொட்டி தொகுப்பு 1 ஐ பயன்படுத்த இயலவில்லை. இது குறித்து உதவி கோருகிறேன். பயனர்கள், நிர்வாகிகள் யாரேனும் உதவ வேண்டுகிறேன். இரா.முத்துசாமி (பேச்சு) 15:24, 23 சூலை 2022 (UTC)
தமிழ் இலக்கணம் சார்ந்த கட்டுரைகள் துப்புரவு குறித்து@உலோ.செந்தமிழ்க்கோதை:, @Sengai Podhuvan: தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளில் இந்த வகையான கட்டுரைகளைத் தக்க வைப்பது குறித்து தங்கள் உதவி தேவை.--TNSE Mahalingam VNR (பேச்சு) 14:32, 15 ஆகத்து 2022 (UTC) தலைப்பு நகர்த்துதல்வணக்கம், கட்டுரைத் தலைப்பில் சிறிய பிழை (எழுத்துப் பிழை, தட்டச்சுப் பிழை) இருந்தால் கட்டுரை உருவாக்காத நபரால் சரியான தலைப்புக்கு மாற்ற அனுமதி உள்ளதா சிறிய பிழையாக இருந்தாலும் தகுந்த உரையாடல் மூலம் தான் மாற்ற வேண்டுமா? ஸ்ரீதர். ஞா (✉) 14:30, 30 ஆகத்து 2022 (UTC)
சேவைக்கு வாழ்த்துக்கள்ஐயா தங்களின் மேலான சேவைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் சேவைகளை மக்கள்பெற்று பயன்பெற வாழ்த்துகிறேன். 2001:861:E382:A0D0:50E5:8798:56B:FE06 09:12, 7 செப்டம்பர் 2022 (UTC) பௌத்த அறிஞர் ஜி. அப்பாதுரையார்அப்பாதுரையார் என்றாலே பலரின் நினைவுக்கு வந்து செல்பவர் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரே. பன்மொழிப் புலவருக்கு முன்பு அப்பாதுரையார் என்ற பெயரில் புகழப் பெற்று விளங்கியவர் கேப்ரியல் ஜி. அப்பாதுரையார் ஆவார். இவர் அயோத்திதாச பண்டிதரின் பௌத்த பணிகளில் பெரும் ஈர்ப்புக் கொண்டு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பௌத்தம் ஏற்றுத் தங்க வயல் பகுதியில் பௌத்தம் பணிகளை மேற்கொண்டு வந்தார். பௌத்தம் பரப்புவதில் அயோத்திதாசருக்குப் பிறகான தலைவராக அறியப்பட்டார். ஜி. அப்பாதுரையார் 15.5.1890 இல் பிறந்தவர். பூர்வீகம் சேலம் என்றாலும் இளம் வயதிலேயே தந்தையாரின் பணி நிமித்தமாகக் குடும்பத்துடன் கோலார் தங்கவயல் பகுதியில் குடியமர்ந்தனர். தங்கவயலில் பகுத்தறிவு, பௌத்த அறிவு இயக்கமாகத் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தின் கிளை சங்கம்(1907) செயல்பட்டு வந்தது. அதன் பணிகள் அப்பாதுரையாரை வெகுவாக ஈர்த்தன. கிறித்துவ பின்புலம் உடைய குடும்பத்தில் இருந்து வந்தாலும் பௌத்த சங்கத்தில் இணைந்து பணியாற்றுவது அவரது பெரு விருப்பமாக இருந்தது. 122.165.55.9 11:19, 8 அக்டோபர் 2022 (UTC) தகவல் சட்டத்தில் திருத்த உதவிகோவா (மாநிலம்) கட்டுரையின் தகவல் சட்டத்தில் ஆளுநர், முதல்வர் போன்றவர்களின் பெயர்களை இற்றைப்படுத்த முடியவில்லை நுட்பம் தெரிந்தவர்கள் இற்றைப்படுத்துங்கள் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 00:17, 13 அக்டோபர் 2022 (UTC) உதவிபயனர்களின் பங்களிப்புப் தரவரிசையை அறிந்துகொள்ள RANK இந்த இணைப்பு முன்பு உதவியது. ஆனால் இப்போது இங்கு தகவல்கள் இற்றையாவதில்லை. இற்றையாகும் உரிய இணைப்பினை சுட்டிக்காட்டி உதவவும்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:27, 11 திசம்பர் 2022 (UTC)
@Kanags: உதவிக்கு நன்றி. நீங்கள் தந்த இணைப்பு மிகவும் பயனுள்ளது. எனினும் இதில் நான் தேடுவது கிடைக்கவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:16, 12 திசம்பர் 2022 (UTC) @Neechalkaran: இந்த உரையாடலின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுப் பக்கத்தை இற்றை செய்ய இயலுமா? கவனிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:24, 12 திசம்பர் 2022 (UTC)
@Neechalkaran: (1) 50 recently active wikipedians, excl. bots ordered by number of contributions, (2) 20 recently absent wikipedians, ordered by number of contributions ஆகியன. முதலாவது அட்டவணைக்கு 100 தரவுகள், இரண்டாம் அட்டவணைக்கு 50 தரவுகள் என இருந்தால் நன்று. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:19, 19 திசம்பர் 2022 (UTC) தொடருந்து நிலையங்கள்தொடருந்து நிலையங்கள் தொகுப்பில் கட்டுரையின் முதன்மை தகவல், தகவல் பெட்டியினுள் வெளியாகியுள்ளது. இதனை சரிசெய்வது எவ்வாறு. தகவல்பெட்டி மேம்பாட்டினால் இப்பிழை ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கம். உ.ம். ஆயிரம்விளக்கு மெற்றோ நிலையம் மற்றும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் --சத்திரத்தான் (பேச்சு) 15:39, 25 திசம்பர் 2022 (UTC)
ஊராட்சித் தகவல் பெட்டிஊராட்சிகளின் தகவல் பெட்டிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிப் பெயர் வெளிப்படுவது போல் மக்களவை உறுப்பினர்களின் கட்சிப் பெயர் வெளிப்படுவது இல்லை. இதைச் சரி செய்ய இயலுமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 10:42, 27 திசம்பர் 2022 (UTC)
சட்டமன்றத் தொகுதி தகவல் பெட்டிஆங்கிலத்தில் உள்ள இந்த வார்ப்புருவை en:Template:Infobox Indian state legislative assembly constituency த.வி.யிலும் உருவாக்க கேட்டுக்கொள்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 17:02, 29 திசம்பர் 2022 (UTC)
அருணாசலம், Kanags, நன்றி!--சத்தியராஜ் (பேச்சு) 14:56, 1 சனவரி 2023 (UTC) பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தில் 'சான்றில்லை' வார்ப்புருஅணி எனும் பக்கமானது ஒரு பக்கவழி நெறிப்படுத்தல் ஆகும். Bot ஒன்றின் மூலமாக, 'சான்றில்லை' வார்ப்புரு முன்பு இடப்பட்டுள்ளது. இது போன்று பல பக்கங்களில் இடப்பட்டிருக்கும் என ஐயப்படுகின்றேன். இதனை தானியங்கி மூலமாக சரிசெய்ய வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:54, 27 சனவரி 2023 (UTC) InternetArchiveBotInternetArchiveBot இவ்வாறான பிழையான மாற்றங்களை செய்கிறது. கவனிக்கவும். --சத்தியராஜ் (பேச்சு) 08:52, 15 பெப்ரவரி 2023 (UTC) வழுதிருக்குறள் உள்ளிட்ட பல கட்டுரைகளில் Lua error in Module:Footnotes at line 275: attempt to call field 'has_accept_as_written' (a nil value). எனும் வழு காணப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:05, 26 பெப்ரவரி 2023 (UTC)
இருவருக்கும் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:05, 27 பெப்ரவரி 2023 (UTC) ஒற்று வருமா வராதாமத்திய பிரதேசம் <--> மத்தியப் பிரதேசம், எது சரி? சமீபத்தில சில பக்க நகர்த்தல்கள் நடைபெற்றுள்ளன. எ. கா.: மத்திய பிரதேசம். @Vp1994: உங்கள் கருத்துக்களும் தேவை. --சத்தியராஜ் (பேச்சு) 15:37, 12 மார்ச் 2023 (UTC)
பெல்காம் - பெளகாவிகட்டுரைகளின் தலைப்பில் பெல்காம் என ஆங்கில ஒலிப்பில் குறிப்பிடும்போது லகரமும், பெளகாவி என கன்னட ஒலிப்பில் குறிப்பிடும்போது ளகரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டுரைகளை உருவாக்கும்போது பெலகாவி என எழுத முற்பட்டுள்ளேன். எது சரியாக இருக்கும்? --சத்தியராஜ் (பேச்சு) 07:50, 23 மார்ச் 2023 (UTC) நூலோதிதமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளில், மேற்கோள்கள் பகுதியில் "நூலோதி" எனும் தலைப்பின் கீழ் நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இச்சொல் தமிழகராதியில் இருக்கிறதா? இருப்பின், இதன் பொருளென்ன? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:25, 25 மார்ச் 2023 (UTC)
ஐயம்தானியங்கி மொழிபெயர்ப்பு வாயிலாக ஒரு கட்டுரைத் தலைப்பை தொடங்கும்போது, அந்தத் தலைப்பு ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தாலும், புதிய கட்டுரையை தொடங்க முடியுமா? கிருஷ்ணன்கோவில் (நாகர்கோவில்) எனும் கட்டுரையின் வரலாற்றைப் பாருங்கள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணன்கோயில் பற்றிய கட்டுரை, நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன்கோவில் பற்றிய கட்டுரையாக மாறியுள்ளது. (விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணன்கோயில் பற்றிய கட்டுரை இன்னொரு பயனரால், பின்னொரு நாளில் எழுதப்பட்டுவிட்டது. எனவே இப்போது வேறொன்றும் செய்யவேண்டியதில்லை) இது பிரச்சனையான ஒன்று. இதே நிலை இப்போதும் உள்ளதா? -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:30, 1 ஏப்ரல் 2023 (UTC)
இது பிரச்சனைதான். நன்கு எழுதப்பட்டிருக்கும் கட்டுரை சிதைவடையும் ஆபத்துள்ளது. தொடங்க இயலாதவாறு தடுக்க வேண்டும். அறிந்த பயனர்கள் கவனத்துடன் செய்வர். அறியாதோர் பிழை செய்துவிடுவர். கருங்கல் எனும் கட்டுரையின் வரலாற்றையும் காணுங்கள். (அருளரசன் அவர்கள் இப்போது சரிசெய்துள்ளார்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:34, 1 ஏப்ரல் 2023 (UTC)
கடலியல் கட்டுரையில் ஒரு ஆசிரியர் செய்துள்ளதை அதன் வரலாற்றில் பாருங்கள். தெரிந்து செய்தாரோ, தெரியாமல் செய்தாரோ! (தானியங்கி மொழிபெயர்ப்புக் கருவிக்கும் இந்த அபத்தத்திற்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறேன். பெரியளவில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது ஆபத்தே). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:09, 3 ஏப்ரல் 2023 (UTC) நாகேஷ் நடித்த திரைப்படங்கள்நாகேஷ் அவர்கள் நடிக்காத திரைப்படங்களில் (நாகேஷ் நடித்த திரைப்படங்கள்) என்ற பகுப்பு தவறுதலாக பல பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளது. வலையொளியில் தேடிப் பார்த்ததில் பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்திருக்கவில்லை. குறிப்பாக சொந்தம் என்ற திரைப்படத்திலும், எங்கள் தாய் என்ற திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. இருந்தாலும் குறிப்பிட்ட இரண்டு திரைப்படக் கட்டுரைப் பக்கத்திலும் நாகேஷ் நடித்த திரைப்படங்கள் என்ற பகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பினை ஆராய்ந்து மாற்ற வேண்டியது அவசியமாகிறது.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:11, 24 ஏப்ரல் 2023 (UTC) பாக்கித்தான்பாக்கித்தான் கட்டுரையில் புகுபதிகை செய்யாத பயனர்கள் விசமத் தொகுப்புகளைச் செய்து வருகின்றனர். அதைத் தடுக்கும் விதமாக கட்டுரையை காப்பு செய்ய முற்பட்டால், கட்டுரையை நிருவாகிகள் மட்டும் தொகுக்கும் விதமாக அன்றனால் முடிவிலி நேரத்திற்கு காப்பு செய்துள்ளதாக தெரியவருகிறது. ஆனால் அதையும் மீறி விசமத் தொகுப்பு எவ்வாறு நடந்ததுள்ளதே. காப்பில் ஏதாவது வழு ஏற்பட்டுள்ளதா.--கு. அருளரசன் (பேச்சு) 15:30, 12 மே 2023 (UTC)
பெயரிடல் மரபு?Ordnance Factory Board என்பது படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம் என்று தமிழிலும் Advanced Weapons and Equipment India என்பது அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் அண்டு எகிப்மெண்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்று தமிங்கிலத்திலும் உள்ளன. இந்த ஏரணம் விளங்கவில்லை. இதனைச் சரிப்படுத்தாதவிடத்து சிக்கலான பெயரிடல் மரபு உருவாகிவிடும். @எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, Balu1967, Sridhar G, சத்திரத்தான், சா அருணாசலம், Almighty34, TNSE Mahalingam VNR, Selvasivagurunathan m, and Neechalkaran: ~AntanO4task (பேச்சு) 14:34, 16 மே 2023 (UTC)
தேர்தல் வார்ப்புருInfobox election இல் தலைவர் என்பதில் சிக்கல் வருகிறது. தலைவர் வேறு முதல்வர் வேறு என்னும் போது முதல்வர் படத்தை தலைவரில் இடுவது சரியா? எகா 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்--குறும்பன் (பேச்சு) 23:07, 20 மே 2023 (UTC) Deleting articleIs there anyone who can help me get this article delete:- It was deleted on English Wikipedia:- https://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Gopal_Chandra_Mukhopadhyay It needs to be deleted here as well. Thanks. Editorkamran (பேச்சு) 04:17, 10 சூன் 2023 (UTC)
ஹரிப்பிரியாஹரிப்பிரியா என்ற இராகம் தொடர்பான பக்கம் Hariprriya என்ற நடிகையின் ஆங்கிலப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நீக்கலுக்கான உதவி தேவை. --சா. அருணாசலம் (பேச்சு) 11:17, 14 சூன் 2023 (UTC)
சட்டமன்றம் - சட்டப் பேரவைஇந்திய மாநிலங்களின் சட்டமன்றங்களை சட்டமன்றம் என்றும் சட்டப் பேரவை எனவும் இருவேறு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு:
பொதுவான சொல்லாடல் வேண்டும். சில மாநிலங்களில் கீழவை, மேலவை என இரு அவைகள் உள்ளன. பொதுவான கட்டுரைத் தலைப்புகள் இருந்தால் வார்ப்புரு:Infobox Indian constituencyயில் பயன்படுத்த இலகுவாக இருக்கும். பின்வருமாறு பொதுவாக பயன்படுத்தலாமா?
வழிகாட்டுதல் தேவை. --சத்தியராஜ் (பேச்சு) 16:48, 22 சூன் 2023 (UTC)
பின்வருமாறு பயன்படுத்த விழைகிறேன், இது த.விக்கியில் வெவ்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஒழுங்கு படுத்த உதவும்.
கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 08:06, 31 சனவரி 2024 (UTC)
மேற்கோள் பிழைகள்CS1 பிழைகள் என்பதன் பொருள் என்ன? பகுப்பு:Pages with citations using unsupported parameters என்பதுவும் CS1 பிழைகளுள் அடங்குமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:44, 5 ஆகத்து 2023 (UTC) வரைவு - பகுப்புவரைவுகளுக்கான பகுப்பு உள்ளதா? இல்லாமவிடத்து உருவாக்கினால் கவனிப்பது இலகுவாகும். AntanO (பேச்சு) 05:20, 17 ஆகத்து 2023 (UTC) தொடர்பு இழந்த இணைப்பினை நீக்கலாமா?பல கட்டுரைகளின் வெளியிணைப்புகளில் சில தொடர்பு இழந்து காணப்படுகிறது. அவற்றை நீக்கலாமா? எடுத்துக்காட்டுக்கு, // "Anthemis pyrethrum record n° 135636". African Plants Database. Natural History Museum of Geneva and Tela Botanica. 2008-06-16 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]// காண்க 2: அக்கராகாரம் த♥உழவன் (உரை) 01:55, 12 செப்டம்பர் 2023 (UTC)
சரி பார்த்து நகர்த்த வரைவு வேண்டுகோள்நான் எழுதிய இந்த கட்டுரையை வரைவு:நளினி நெட்டோ தானியங்க மொழிபெயர்ப்பு போன்ற ஏதாவது உள்ளதா என்று சரி பார்த்து நகர்த்த வேண்டுகிறேன். அவ்வாறு ஏதாவது இருந்தால் மேம்படுத்துங்கள் எனக்கும் தெரிவியுங்கள் நன்றி. ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 08:27, 20 செப்டம்பர் 2023 (UTC)
சந்தேகம்ஆங்கில விக்கிப்பீடியாவில் Pond என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் எக்கட்டுரையுடனும் இணைக்கபடவிள்ளை ஆனால் மலையாள விக்கிப்பீடியாவில் കുളം (குளம்) என்பதுடன் இணைக்கபட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் குளம் என்பது Irrigation tank என்பதுடன் இணைக்கபட்டுள்ளது. Pagers (பேச்சு) 13:49, 15 அக்டோபர் 2023 (UTC)
Presidential Pride of Performance Award தமிழாக்கம் உதவிhttps://en.wikipedia.org/wiki/Bushra_Ansari என்னும் இந்த கட்டுரையை நான் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுயுள்ளேன். "Presidential Pride of Performance Award" என்கின்ற ஒரு விருது வருகிறது அதை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை. எவரேனும் உதவுக நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 07:47, 20 அக்டோபர் 2023 (UTC)
Jaag Broadcasting Systems (Pvt) Limited தமிழாக்க உதவிhttps://en.wikipedia.org/wiki/Samaa_TV என்னும் இந்த கட்டுரையை நான் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுயுள்ளேன். Jaag Broadcasting Systems (Pvt) Limited என்கின்ற ஒரு நிறுவன பெயர் வருகிறது அதை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை. முக்கியமாக Broadcasting Systems என்பதை மொழிபெயர்க்கத் தெரியவில்லை. எவரேனும் உதவுக நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 04:56, 23 அக்டோபர் 2023 (UTC) ஒலிபரப்பு ஒருங்கியம் எனக் குறிப்பிடலாம். (மூலங்கள்: ஒலிபரப்பு, ஒருங்கியம்) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:08, 23 அக்டோபர் 2023 (UTC)
நாராயணபுரம் மகாதேவர் கோயில் (குஜராத்தி கட்டுரையின் மொழி பெயர்ப்பு)நாராயண்புர் மஹாதேவ மந்திர் (https://w.wiki/7tC9) என்ற குஜராத்தி மொழி சிறு கட்டுரையை நாராயணபுரம் மகாதேவர் கோயில் என்ற தலைப்பில் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முற்பட்டு கட்டுரையை ஓரளவு முடித்தும் விட்டேன். ஆனால், கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநில, மாவட்ட, ஊர் பெயர்களையும் அங்கே ஓடும் மகாநதியை பற்றிய வர்ணனை போன்றவற்றை மீண்டும் உறுதிசெய்ய முயன்ற பொழுது பல முரண்பாடுகளை சந்திக்க நேரிட்டது. தற்பொழுதைய சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்புர் என்ற தனி மாவட்டமே உள்ளது. குஜராத்தி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மகாநதியின் கரையோரம் நாராயணபுரமோ, மகாதேவர் கோயிலோ இருப்பதாக தெரியவில்லை. எனவே, கட்டுரையை முடித்தபின் "கட்டுமானத்தில் உள்ளது" என்ற வார்புருவை பயன்படுத்தி இது இறுதியான பதிப்பல்ல என்று தெரியும்வண்ணம் தமிழ் கட்டுரையை வெளியிட்டுள்ளேன். தகுந்த ஆதாரம் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை குஜராத்தி விக்கிபீடியா எவ்வாறு அனுமதித்தது என்று தெரியவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரையை அழிக்க இயலுமா? எவ்வாறு அதை செய்வது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நிர்வாக அணுக்கம் பெற்றவர்கள் அக்கட்டுரையை எளிதில் நீக்க முடியும். நீங்கள் மற்றொரு கட்டுரையை மொழியாக்கம் செய்ய முயலுங்கள். நீங்களாகவே நீக்கல் பரிந்துரையையும் கொடுக்க முடியும். --மகாலிங்கம் இரெத்தினவேலு 11:25, 24 அக்டோபர் 2023 (UTC)
அரபு மொழி-ஆங்கில மொழி-தமிழ் மொழிஅரபு மொழிப் பெயர்களை ஆங்கில மொழியில் எழுதும்போது f எனும் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. தமிழில் எழுதும்போது, f வரும் இடங்களில் முப்புள்ளியைப் (ஃ) பயன்படுத்தலாமா? அண்மையில் எழுதிய கட்டுரைகளை இவ்விதமாகவே தலைப்பிட்டுள்ளேன்.
இக்கட்டுரைகளை ரஃபா, ரஃபா எல்லையைக் கடக்கும் பகுதி, அல்-சிஃபா மருத்துவமனை என்பதாக எழுதலாமா? @Kanags:, @செல்வா: உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:30, 28 அக்டோபர் 2023 (UTC)
@Kanags: தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:57, 29 அக்டோபர் 2023 (UTC) பன்மைச் சொற்களுக்கு தலைப்பு எப்படி வைக்கலாம்?en:Northern Provinces, en:Cape Provinces என்ற இரு கட்டுரைகள் தமிழில் இல்லை. இவையிரண்டும் மல்லிப் பேரினத்தின், இருவேறு இனங்களுக்கு பிறப்பிடமாக/தாயகமாக உள்ளன. இவை பன்மைச் சொல் என்பதால் தமிழில் எப்படி பெயர் வைக்கலாம்? உங்கள் பரிந்துரையைத் தருக. த♥உழவன் (உரை) 09:50, 17 நவம்பர் 2023 (UTC)
பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் Province என்பதை மாகாணம் என்றே மொழிபெயர்த்துள்ளனர். நானும் அவ்வாறே தொடர்கிறேன்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 01:32, 29 நவம்பர் 2023 (UTC) இக் கோயில், இக் கோட்டைஇக் கோயில், இக் கோட்டை என தமிழ் விக்கிப்பீடியாவில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளன. இது சரியா அல்லது இக்கோயில், இக்கோட்டை என எழுதவேண்டுமா? (இந்தக் கோயில், இந்தக் கோட்டை என நான் எழுதுகிறேன்) இவ் ஊர் என்றும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளன. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:47, 19 நவம்பர் 2023 (UTC)
உதவியதற்கு நன்றி. பல நேரங்களில்... நாம் பள்ளியில் கற்றது, வாசித்தது, எழுதியது இவற்றின் மீதே ஐயம் ஏற்பட்டு விடுகிறது! ஒரு பக்கம் தொழினுட்பம் வளர்ந்து கொண்டிருக்கையில்... இன்னொருப் பக்கம் மொழி சிதைக்கப்படுவது வருத்தமாக உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவை தொடர்ந்து செம்மைப்படுத்த வேண்டியது நீண்ட காலத் தேவைகளுள் ஒன்றாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:56, 22 நவம்பர் 2023 (UTC)
வேற்றுமொழி நூல்கள் பற்றிய கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்படும் போது நூலின் பெயரை எவ்வாறு எழுதுவது?Prophet Song என்ற நூலைப் பற்றிய கட்டுரையை மொழிபெயர்க்கத் தொடங்கும் போது “புரோபெட் சாங்” என்றே எழுதுவதா? தீர்க்கதரிசியின் பாடல் என மொழிபெயர்ப்பதா? தலைப்பிடல் மரபில் தமிழ் விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதல் என்ன? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 01:30, 29 நவம்பர் 2023 (UTC)
சான்றாதாரங்கள்சில கட்டுரைகளில் சான்றாதாரங்கள் என எழுதப்பட்டுள்ளது. ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள் இணைக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். மேற்கோள்கள் அல்லது சான்றுகள் என்பதாக திருத்தம் செய்யலாமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:50, 30 நவம்பர் 2023 (UTC)
அண்மையில் நான் செய்த மாற்றம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:07, 30 நவம்பர் 2023 (UTC)
@Kanags: விளக்கியமைக்கு நன்றி! மேற்கோள்கள் குறித்தான வழிகாட்டல் பக்கத்தில், இந்த நெறிமுறைகளை இற்றைப்படுத்துகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:45, 1 திசம்பர் 2023 (UTC) வழிகாட்டல் பக்கம் மேம்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டுகள் சேர்க்கப்பட்டு தொடர்ந்து மேம்படுத்தப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:56, 2 திசம்பர் 2023 (UTC) பிற மொழி விக்கித்தொகுப்புகளைத் தொகு-தொடர்பாகதமிழில் உருவாக்கப்பட்ட ஒரு சில தொகுப்புகள் ஆங்கிலத் தொகுப்புடன் இணைக்காமல் விக்கித்தரவு உருவாக்கத்துடன் உள்ளன. ஆங்கிலத் தொகுப்பிற்கும் தனியாக விக்கித்தரவு உள்ளதால் இத்தொகுப்புகளை ஆங்கில கட்டுரையுடன் இணைப்பதில் (பிற மொழி விக்கித்தொகுப்புகளைத் தொகுத்தல்) சிக்கல் உள்ளது. இதனை எவ்வாறு சரி செய்வது. உ.ம். நாராயணசாமி நாயுடு (தமிழில்), ஆங்கிலத்தில் Narayanaswamy Naidu. நன்றி சத்திரத்தான் (பேச்சு) 00:58, 6 திசம்பர் 2023 (UTC)
ஜீ சினி விருதுகள் - தமிழாக்க உதவிநான் ஜீ சினி விருதுகள் என்ற கட்டுரையை உருவாக்கியுள்ளேன். சில விருதுகள் எனக்கு தமிழாக்கம் செய்வதில் எனக்கு சிக்கல் உள்ளது. எ-கா: Zee Cine Award for Best Editing உதவுக ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 02:40, 11 திசம்பர் 2023 (UTC)
உதவி கோருதல்பகதூர் சிங் தாகத் என்ற கட்டுரையின் விக்கித்தரவு உருப்படியில் Jyotish LR Kamal Singh Kirar (Q4842260) என உள்ளது. இதனை மாற்றி சரியான உருப்படியினை ஏற்றித்தர வேண்டுகிறேன். உதவிFirst look, Teaser, Trailer இந்த ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் தேவைப்படுகிறது. இந்த ஆங்கிலச் சொற்களை தமிழில் எவ்வாறு எழுதுவது?.-- சா. அருணாசலம் (பேச்சு) 12:04, 16 திசம்பர் 2023 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia