விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 4தமிழ் வழிக் கணினிக் கல்விதமிழ் மொழியில் கணினி தொடர்பாக கற்க முடியுமா? வன்பொருள் மென்பொருள் தொடர்பில் இணைய தளத்தில் எவ்வாறு கற்பது? --59.99.137.136 12:32, 16 மே 2010 (UTC) தமிழ் மொழி மூலம் கணினி தொடர்பாக ஓரளவு கற்க முடியும். விக்கிப்பீடியாவில் உள்ள பகுப்பு:கணினியியல் கட்டுரைகளைப் பாக்கவும். வலைப்பதிவுகளில் பல கணினி நிபுணர்கள் தமிழில் எழுதுகிறார்கள். உபுண்டு குழுமம் போன்ற தமிழ் கணினி அணிகளிடமும் மேலும் கட்டுரைகள் உள்ளன. கணினித் துறை பெரியது, அதில் எதில் உங்களது அக்கறை என்று கூறினால் மேலும் சில பரிந்துரைக்க முடியும். --Natkeeran 22:37, 1 ஜூலை 2010 (UTC) divination என்று வருவதை எவ்வாறு நீக்குவது?divination என்றால் என்ன? அதை நீக்குவது எப்படி? கீழே பகுப்பு என்பதில் வரும் சிவப்பு சொற்களை நீலமாக்குவது அல்லது நீக்குவது எப்படி? Tamil35 06:02, 22 ஆகஸ்ட் 2010 (UTC) Multiple sclerosisநண்பர்களே, வணக்கம். நான் Multiple sclerosis என்ற கட்டுரையை திருத்தி வருகிறேன். மல்ட்டிபிள் ஸ்கீளீரோசிஸ் என்பதற்கு தமிழாக்கம் மூளை, தண்டுவட மரப்பு நோய் என ஒரு அகராதியில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மூளை முதுகுத்தண்டை மூடியுள்ள மையிலீன் உறை பாதிப்பினால் ஏற்படும் நோயாகும். இதனைத் தமிழில் எவ்வாறு அளிப்பது என்பதில் குழப்பமாக உள்ளது. மூளை தண்டுவட மரப்பு நோய் என்பது சரியானதாக இதற்கு தோன்றவில்லை. இதற்கு சரியான தமிழ் வார்த்தை அளிக்க உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி −முன்நிற்கும் கருத்து Kashya06 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
N.MUNIYANDI.OLDBAZARSTREET.KALLAL.SIVAGANG. விடை வேண்டும்நண்பர்களே, வணக்கம். கீழ்க்காணும் கேள்விகளுக்கு விரைவில் விடை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். -- −முன்நிற்கும் கருத்து Ramya (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தமிழாக்க உதவிwhat is tamil word for "Knowledge Representation"? representation-பிரதிநிதித்துவம் சரியா? வெளிப்பாடு சரியா? நண்பரே மொழிப் பிரதிநிதித்துவப்படுத்தல் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் அன்புள்ள அய்யா, மிக்க நன்றி...மீண்டும் கலைச்சொல்லாக்கத்தில் அறிஞர்கள் உதவி தேவைப்படுகின்றது Grid Computing,Simulation என்பதற்கு எப்படி பொருத்தமாக தமிழில் சொல்லாக்களாம். தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் படிப்பதற்கு இணையத்தளம் இருந்தால் விவரங்கள் தரவும்.... நன்றி.. இரா.சுதர்சன்..--சுதர்சன் 09:22, 26 ஏப்ரல் 2010 (UTC)
--மணியன் 09:35, 26 ஏப்ரல் 2010 (UTC) தமிழாக்க உதவிஅன்பு நண்பரே, வணக்கம். கீழ்க்காணும் கேள்விகளுக்கு விரைவில் விடை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். machine learning என்பதற்கு இயந்திர சுய அறிவூட்டம் என்பது சரியா? இல்லையென்றல் அதற்கான கலைச்சொல் என்ன?--−முன்நிற்கும் கருத்து சுதர்சன் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
machine learning என்பது எந்திரத்தின் உதவியோடு கற்றல் அல்லது பொறியூடக கற்றல் என்று கொள்ளலாம். ஆயினும் இன்னொரு அர்த்தத்தில் எந்திர தனமாக கற்றல் என்றும் பொருள் படுத்தலாம்.
நன்றி. -- −முன்நிற்கும் கருத்து 61.2.238.40 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்which one of language is best for writting my title ? wether it ll be tamil or english or both language ? if i can chosse for my title about medicine what are the basic for writing my title ? −முன்நிற்கும் கருத்து 122.165.255.178 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
how to create thalai vasal pages?
data mining may means - thakaval akazhthal கட்டுரைப் பக்கங்களை இணைத்தல்எனது கட்டுரை 'அமரர் ஜீவா' என்பதை ஜீவானந்தம் என்கின்ற கட்டுரையோடு இணைக்க செய்தி வந்துள்ளது...இதை நான் எப்படி சாத்தியப்படுத்துவது?−முன்நிற்கும் கருத்து Ragavanpandian (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
அமரர் ஜீவா,தமிழ்நாட்டு அரசியல் வாதிகலில் மதிபிர்குரியவர்.இவர் ஒரு இடது சாரி சின்தனையாலர்.இ.செங்குட்டுவன் .வத்தலகுன்டு விக்கிப்பீடியாவில் படங்களை எப்படி சேர்ப்பது.அதாவது திருப்பதி குறித்த செய்திகளை அளித்தேன். ஆனால் திருப்பதி படங்களை இணைக்க முடியவில்லை. மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள டுல்ஸ்&ல் படங்கள் எனும் ஐ கானில் படங்களை சேமிக்க முடியவில்லையே.
இணைய தளமா?இணையத் தளமா? எது சரி?இணைய தளமா?இணையத் தளமா? எது சரி?
இணையத்தளம் என்பதேசரி;தமிழ் இலக்கணப்படி சரியான ஒன்று. இணையம்+தளம்= இணையத்தளம். மரம்+கிளை=மரக்கிளை என்பதுபோல. இணையத்தின் தளம் அல்லது இணையத்தது தளம் என வேற்றுமைப்புணர்ச்சியாகக் கொண்டால்: "மகர இறுதி வேற்றுமை யாயின்/ துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே" என்ற தொல்காப்பியச்சூத்திரத்தின்படி (எழுத்ததிகாரம்,310) அது `இணையத்தளம்` என்றுதான் ஒற்றுமிகுந்து புணரும். மரக்கோடு, மரச்செதிள், மரத்தோல், மரப்பூ என்பதுபோல. இங்கு மகரம் கெட்டு வல்லெழுத்துமிகுந்தது என்பதாம். இனி இணையத்தளம் என்பதனை இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகக் கொண்டாலும் ஒற்றுமிகுவதுதான் சரி. தாமரைப்பூ என்பதுபோல். இணையம் என்பது சிறப்புப்பெயர்; தளம் என்பது பொதுப்பெயர் . பலதளங்கள் உண்டு அவற்றுள் இது இணையத்தளம் என்பதாம். எனவே அல்வழியில் பார்த்தாலும் ஒற்றுமிகுவதே சரி. பொதுவாக "இயல்பினும் விதியினும் நின்றஉயிர்முன் கசதப மிகும்" (நன்னூல், 165)என்றசூத்திரத்தின்படி, இணையம் என்பது மகரம் கெட்டு 'இணைய' என்று உயிர் ஈறாக நின்றது; அதன்பின்னர் வந்த 'தளம்' என்ற சொல்லுக்கேற்பத் தகரஒற்று மிகுந்தது. எனவே இணையத்தளம் என்று எழுதுவதே சரியான ஒன்று. அச்சு ஊடகங்கள் எப்பொழுதும் எழுத்துக்குறைப்பிலேயே கவனம் செலுத்துவன அவர்களுக்கு இலக்கணம் பற்றி என்ன கவலை?. என்னசெய்வது? இதில் மிச்சம்பிடித்துத்தான் பெரும் கோட்டை கட்டப்போகின்றார்கள்? உண்மையில் கோட்டைகட்டுகின்றார்களா? கோட்டைவிடுகின்றார்களா?--Meykandan 09:22, 28 ஏப்ரல் 2010 (UTC)
எப்படி எழுதுவது?can we add pictures to the essay or simply the text is enough? please guide me is it we have to include references within the space(A4 sheet) given for the essay?kindly guide me .--−முன்நிற்கும் கருத்து 87.238.84.64 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
How to upload the writed documents? please help me. and how to add up-loaders details?§ lovelysarathi §
"வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துகிறோம்."வாழ்க வளமுடன்" என்பது சரியா? அல்லது "வாழ்க வளத்துடன்" என்பது சரியா?(Muttuvancheri natarajan)--MUTTUVANCHERI NATARAJAN 16:43, 5 மே 2010 (UTC) தலைப்புக்கள்
Spectrometer க்கான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா என்று கேட்டிருக்கிறீர்களானால்...... இது தொடர்பான பல கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பதை நீங்கள் காணலாம். நிறமாலை ஒளிமானி (Spectrophotometery), நிறமாலையியல் (Spectroscopy) என்ற கட்டுரைகளும், நிறமாலை பகுப்பாய்வி (Spectrum analyzer) என்ற நிறைவு செய்யப்படாத ஒரு கட்டுரையும் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியாவில் Spectrometer, Photometer க்கு தனியாக கட்டுரைகள் உள்ளன. அதன் தமிழாக்கத்திற்கான இணைப்பை அங்கே காணவில்லை. வெவ்வேறு பெயர்களிட்டு தமிழ் விக்கியில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே Spectrometer க்கு தனியான கட்டுரை தமிழில் இல்லை என்றே நினைக்கிறேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பார்த்தீர்களானால், நீங்கள் தெரிவு செய்யும் தலைப்பைப் பற்ரிய முடிவுக்கு வரலாம். --கலை 12:49, 15 ஏப்ரல் 2010 (UTC) how will i write in tamil? please tell தமிழின் யாப்பிலக்கணச் சிறப்பை பற்றி எழுதிள்ளேன். உலகத்தமிழ் இணைய மாநாடு கட்டுரைப் போட்டியில் மாணவர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது பொதுமக்களும் கலந்து கொள்ளலாமா? ஆம் என்றால் என்ன செய்ய வேண்டும்.--−முன்நிற்கும் கருத்து 117.199.135.36 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
படிமங்கள் இடுதல்நீங்கள் படிமங்கள் என்று குறிப்பிடுவது புகைப்படங்கள் தானே. நான் அவற்றை கூகுள் சர்ச் என்ஜினில் இருந்து எடுத்து பயன் படுத்துகிறேன். அவற்றை பயன்படுத்தக் கூடாதா? அப்படியெனில் புகைப்படங்களை எங்கு இருந்து எடுக்க வேண்டும் என்பதை கூறவும். பெரும்பாலும் கூகுள் இணையதளத்தில் இருந்து தான் நான் புகைப்படங்களை எடுத்து வருகிறேன்.
how to add a essay in this site I have submiited my article ' World Malaria Day" for World Tamil conference. It is an Azhahi format. Shall i type it again in Latha font. Kindly send details, please. N. Bhaskar. Email: nagbhas15@yahoo.com
கட்டுரை தலைப்பை மாற்றுவது எப்படி?ஐயா, வணக்கம் விக்கிப்பீடியாவில் நான் இயற்றிய கட்டுரையில் உள்ள தவறுகளை திருத்திக்கொண்டு வருகிறேன். கட்டுரையின் தலைப்பில் சிறு தவறு உள்ளது. என்னால் தலைப்பில் உள்ள தவறை சரிசெய்ய முடியவில்லை. எவ்வாறு தலைப்பை சரிசெய்வது என்று கூற வேண்டும்?--−முன்நிற்கும் கருத்து புஷ்பலதா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
அழைப்புமதிப்பிற்குரியீர்! அன்பு வணக்கம்! நான் விக்கிபீடியாவுக்குக் கைப்பேசி வழியே பங்களிப்பவன்! ஆனால் இவ்வாறு பங்களிப்பதில் எனக்குப் பல சிக்கல்கள் உள்ளன. 'என் விருப்பத்தேர்வுகள்' பக்கத்தின் கீழ்ப் பகுதியிலுள்ள 'சேமி' பொத்தானை என்னால் பயன்படுத்த முடியவில்லை. அதை அழுத்தினால் அந்தப் பக்கம் மறுவரவு (refresh) ஆகிறதே தவிர நான் செய்த மாற்றங்கள் பதிவாக மாட்டேன்கிறது! 'செல்' , 'தேடுக' ஆகிய பொத்தான்கள், தொகுத்தல் பக்கத்தின் மேற்பகுதியிலுள்ள பொத்தான்கள் போன்றவற்றிலும் இதே சிக்கல்தான். இது மட்டுமின்றித், தமிழ் விக்சனரியில் ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடுதல், கோப்பைப் பதிவேற்றுதல் போன்ற வேலைகளையும் கைப்பேசி வழியே செய்ய இயலவில்லை! ஏன் இந்தச் சிக்கல்கள்? இவற்றுக்கு என்ன தீர்வு? ஒருவேளை எனக்குத்தான் சரியான பயன்பாட்டு முறை தெரியவில்லையா? அப்படியென்றால் அன்பு கூர்ந்து யாராவது எனக்குக் கற்பிக்க முன்வருமாறு வேண்டுகிறேன்! அப்படியில்லாமல் விக்கிபீடியாவைக் கைப்பேசி வழியாக அணுகினால் இப்படிப்பட்ட கோளாறுகள் ஏற்படத்தான் செய்யும் எனில், கைப்பேசி வழியாகவும் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கும் அளவுக்கு அதன் தரத்தை விரைவில் மேம்படுத்தக் கோருகிறேன்! விக்கிபீடியாவுக்குக் கைப்பேசி வழியே பங்களிப்பவர்கள் என்னைத் தவிர வேறு யாரேனும் இருந்தால் அவர்கள் அன்பு கூர்ந்து அவர்களின் அனுபவங்களையும் யோசனைகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்! நன்றி! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 13:40, 4 ஜூன் 2010 (UTC) நிழற்படத்தைப் பதிவேற்றுவது எப்படி? ( How can I upload an image? )நிழற்படத்தைப் பதிவேற்றும் முறைகள் குறித்து எனக்கு யாரேனும் தெளிவாகக் கூற முடியுமா? உதவி தேவை! உதவ நினைப்போர் உதவுங்கள்! --ச.அ. சூர்ய பிரகாஷ். 12:14, 7 ஜூன் 2010 (UTC)
படத்தினை இணைப்பது பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்!, செய்வீர்களா. - ஜெகதீஸ்வரன்.
பெயர் மாற்றம்விக்கியில் ஆங்கிலத்திலுள்ள என் பயனர் பேரை (Surya Prakash.S.A.) தமிழில் மாற்ற விரும்புகிறேன். மாற்ற முடியுமா? எவ்வாறு என யாரேனும் கூறினால் நன்று...பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 14:47, 15 ஜூன் 2010 (UTC)
கையெழுத்திடுதலில் ஓர் ஐயம்!அன்புடையீர்! வணக்கம்! 'வார்ப்புருக்கள்' பகுதியில், கையெழுத்திடும்பொழுது ~ என்ற குறியை நான்கு முறை இட்டால் நாள், நேரத்துடன் கூடிய கையெழுத்திடலாம் என்றும் அதையே மூன்று முறை இட்டால் நம் பயனர் பக்கத்துக்கான இணைப்பு மட்டும் இருக்குமாறு கையெழுத்திடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது போல் நம் பேச்சுப் பக்கத்துக்கான இணைப்புடன் கூடிய கையெழுத்திடுவது எப்படி என்று கனிவு கூர்ந்து யாராவது எனக்குக் கற்பிக்கக் கோருகிறேன்!--இ.பு.ஞானப்பிரகாசன் 11:34, 1 ஜூலை 2010 (UTC)
அளவில் நீண்ட பக்கங்களைச் சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒன்றையொன்று இணைப்பது எப்படி?விக்கிமூலத்தில் திருவிவிலியப் பக்கங்களைப் பதிவேற்றிவருகிறேன். ஆனால், எச்சரிக்கை: இந்தப் பக்கம் 213 கிலோபைட்ஸ் நீளமானது; 32 kb யை அண்மிக்கும் அல்லது அதிலும் கூடிய அளவுள்ள பக்கங்களைத் தொகுப்பதில் சில உலாவிகளுக்கு பிரச்சினை உண்டு. தயவுசெய்து பக்கங்களைச் சிறிய பகுதிகளாகப் பிரிப்பது பற்றிக் கவனத்தில் எடுக்கவும் என்னும் செய்தி வருகிறது.
உதவிநண்பர்களே! நான் இன்றுதான் விக்கிபீடியாவில் சேர்ந்துள்ளேன்.கட்டுரை எப்படி எழுதுவது,எதைப்பற்றி எழுதுவது எனத்தெரியவில்லை.என் புருசனும் கச்சேரிக்கு போகிறான் எனச்சொல்வதுபோல, நானும் கட்டுரை எழுத ஆசைப்பட்டுவிட்டேன். யாராவது உதவுங்களேன்.--−முன்நிற்கும் கருத்து Sivakamieswaran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
அன்பார்ந்த நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விநாயகர் அகவல் துதியில் வரும் இவ்வரிகள் நமது விகிபீடியாவிற்கு பொருந்தும் என நான் நினைக்கிறேன்: 'சொற்பதங்கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிரே.. ..' மேலும் அதை படித்து மகிழ்பவர்களுக்கு: ".. தெளிவாய் பொருந்தவே வந்து உளந்தனில் புகுந்து குருவடிவாகி குவலயந்தன்னில் திருவடி வைத்து திறம் அதுபொருள் என..' விநாயகர் அகவலில் வரும் இவ்வரிகளும் மிகவும் ஆழமான கருத்தை வழங்குவதாகும்: 'அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி' அணு என்பது ஒரு பொருளின் மிகவும் சிறிய துகளாக, மேலும் ஒரு மூலகத்தின் தனிப்பொருளாக நாம் அறிவோம். அதே போல் கணு என்ற சொல் உயிரினங்களின் மூலப் பொருளாக, அதாவது ஆங்கிலத்தில் செல் cell என்ற சொல்லிற்கு ஈடாக பயன்படுத்தலாமா? உங்கள் விருப்பத்தை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். இப்படிக்க்கு, அன்புடன் உங்கள தமிழ் 09 ராமச்சந்திரன்.
'கணு' என்பது அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு உறுப்புகள் சேரும் இடத்தைக் குறிப்பது. எ.டு: கரும்பின் கணுப் பகுதி, நம் உடம்பிலேயே அமைந்துள்ள கணுக்கால் பகுதி போன்றவை. அதை எப்படி ஐயா 'செல்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்த முடியும்? முடியாதே! 'செல்' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் ஏற்கனவே 'உயிரணு' என்ற சொல் இருக்கிறது. அதையே நீங்கள் பயன்படுத்தலாமே? அன்புடன்--இ.பு.ஞானப்பிரகாசன் 11:42, 2 ஆகஸ்ட் 2010 (UTC) அன்பரே, நான் சொல்ல நினைத்ததையே நீங்களும் வழி மொழிந்தீர்கள்! ஒரு சொல் அல்லது பதத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள் இருக்கலாம், மேலும் அவை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். எ.கா: field என்பது களம், திடல், வயல், காடு, கழனி, புலம், தரவுத்தளம், தரவிடம், பந்தை பிடிப்பது போன்றவை. கணு என்பது உயிரின் மூலப்பொருளான உயிரணுவை குறிக்கலாமல்லவா? இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்! அணுவிற்கு அப்பாலும், கணுவாக உயிரின் செயல்பாட்டிலும்! கணுமுற்றி என்பது ஒரு interface ஐ (இடைமுகத்தை) குறிபபதில்லையா? இன்று மனித வாழ்க்கையில் இடை முகங்கள் இனிதே பெரும் பங்கு வகிக்கின்றன. முற்றம் என்பதும் ஒரு இடை முகம் தானே? அன்றே அக்காலத்திலேயே நம்மவர்கள் அதை அறிந்து கொள்ளவில்லையா? சற்றே நினைத்துப்பாருங்கள், பிறகு கூறுங்கள்! தாமதமாக பதில் அளித்தமைக்கு வருந்துகிறேன், மன்னிப்பீராக. நான் சில நாட்களுக்கு வெளியூர் சென்றிருந்தேன். நன்றியுடன் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கும், தமிழ்-09 ராமச்சந்திரன் 7-08=2010. உயிரியலில் cell என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக "கலம்" என்றுதான் இலங்கையில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை அரசாங்கமும் கலம் என்று பயன்படுத்துவதை மட்டுமே அங்கீகரிக்கிறது.--பாஹிம் 16:46, 17 செப்டெம்பர் 2010 (UTC) நன்றி!கையெழுத்திடும் முறை பற்றி நான் கேட்டிருந்த ஐயத்திற்குத் திரு. சுந்தர் அவர்கள் பதிலளித்திருப்பதை இன்றுதான் கண்டேன். நன்றி நண்பரே!--இ.பு.ஞானப்பிரகாசன் 11:54, 2 ஆகஸ்ட் 2010 (UTC) வார்ப்புருத் தேவை!மதிப்பிற்குரிய விக்கியக் கிளைஞர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! அன்பர்களே! ஒரு பட்டியலுக்குள் நாம் தொடக்கத்திலோ இடையிலோ கடைசியிலோ எந்த இடத்தில் ஒரு புது வரியைச் சேர்த்தாலும் அதற்கு வரிசைப்படித் தானாகவே எண் அமைய # என்ற குறி பயன்படுகிறது இல்லையா? இதே போல் பட்டியல்கள் தானாகவே அகரவரிசைப்படி அமைய ஒரு வார்ப்புரு உருவாக்க முடியுமா? அதாவது அகரவரிசைப்படி அமைந்த ஒரு சொற்பட்டியலுக்குள் நாம் புதிதாக ஒரு சொல்லைச் சேர்க்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்; அந்தச் சொல்லை அந்தப் பட்டியலுக்குள் நாம் எந்த இடத்தில் சேர்த்தாலும் பக்கத்தைச் சேமித்தவுடன் அது தானாகவே அகரவரிசைப்படித் தனக்குரிய இடத்தில் அமர்ந்துவிட வேண்டும். மேலும் அகரவரிசைப்படி அமைந்திராத பட்டியல்களுக்குள் இந்த வார்ப்புருவைச் சேர்த்தால் தானாகவே அந்தப் பட்டியல் அகரவரிசைப்படி அமைந்துவிட வேண்டும். இப்படி ஒரு வார்ப்புருவை உருவாக்க இயலுமா? இயலுமென்றால் கனிவு கூர்ந்து யாராவது உருவாக்கித் தாருங்கள் அன்பர்களே! நான் தற்பொழுது தமிழ்ப் படைப்பாளிகள் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் அவர்தம் படைப்புகளின் பெயர்களைப் பதிவேற்றி வருகிறேன். இதில் அவர்தம் படைப்புகள் பற்றிய பட்டியல்கள் அகரவரிசைப்படி இல்லாததால் ஒவ்வொரு படைப்பின் பெயரைச் சேர்க்கும் முன்பும் அப்பெயர் அப்பட்டியலில் இல்லாதிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு முறையும் முழுப் பட்டியலையும் பார்வையிட வேண்டியதாக இருக்கிறது. எப்பொழுதுதாவது ஓரிரு முறை என்றால் தேவலை. ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் குறைந்தது பதினைந்து நூல்களின் பெயர்களையாவது கொண்டு வருபவன். அந்தப் பெயர்கள் ஒவ்வொன்றையும் சேர்ப்பதற்கு முன்பும் ஒவ்வொரு முறை முழுப் பட்டியலையும் படித்துப் பார்ப்பது என்பது மிகவும் சிரமமாகவும் நேரத்தை வீணடிப்பதாகவும் உள்ளது. இந்த இடத்தில் மட்டுமின்றி நமது தமிழ் விக்கிப்பீடியாவின் பல இடங்களில் உள்ள பல பட்டியல்கள் அகரவரிசைப்படி அமையாதிருப்பதால் அவற்றுள் புதியனவற்றைச் சேர்ப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எனக்கோ என் பணிக்கோ மட்டுமின்றி விக்கிப்பீடியாவில் பலருக்கும் பல பணிகளுக்கும் பல வருங்காலப் பணிகளுக்கும் இந்த வார்ப்புரு உதவும். எனவே கனிவு கூர்ந்து இப்படியொரு வார்ப்புருவை உருவாக்கித் தர வேண்டுகிறேன்! நன்றி! வணக்கம்! உங்கள் அன்பன்--இ.பு.ஞானப்பிரகாசன் 09:47, 3 ஆகஸ்ட் 2010 (UTC) ஐயம் போக்குவீர்!அன்புடையீர்! வணக்கம். ஒரு கட்டுரையில் ஒரே மேற்கோளை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சுட்டிக்காட்ட வேண்டி வந்தால் அதை எவ்வாறு எழுதுவது? கனிவு கூர்ந்து உதவுவீர்! ஆவலுடன் காத்திருக்கும்--இ.பு.ஞானப்பிரகாசன் 13:09, 3 ஆகஸ்ட் 2010 (UTC) எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகத்துக்கான குறிப்பு, "K.A.N. Neelakanda Sastri, A History of South India" என்று முதலில் வரும் பொழுது <ref name=Sastri>KAN Sastri, A History of South India</ref> என்று தாருங்கள். அடுத்தடுத்து வரும் இடங்களில் சுருக்கமாக <ref name=Sastri/> என்று குறித்தால் அதே நூலுக்கு சுட்டு கிடைக்கும். மேலும் விளக்கமாகப் பார்க்க என்னும் பக்கத்தையும், என்னும் பக்கத்தையும் பார்க்கலாம் --செல்வா 14:49, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
செல்வாவுக்கும் பிற விக்கிப்பீடியர்களுக்கும்மிக்க நன்றி செல்வா! நீங்கள் கூறியபடியே செய்தேன். வெற்றிகரமாக வந்தது. ஆனால் இதைத் தமிழில் செய்ய முடியவில்லையே ஏன்? தமிழிலும் ஒரே மேற்கோளை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சுட்டுவதற்கான வசதியை ஏற்படுத்தும் பொறுப்பைத் தொழில்நுட்ப வல்லாண்மையுடைய விக்கிப்பீடியர்கள் யாராவது ஏற்றுக் கொள்ளலாமே? அன்பன்--இ.பு.ஞானப்பிரகாசன் 10:07, 4 ஆகஸ்ட் 2010 (UTC) அணுசக்தி = அணுஆற்றல் / அணுவாற்றல்அணுசக்தி என்பதற்கு அணுஆற்றல் / அணுவாற்றல் என்பது தமிழ் பெயர் என எண்ணுகிறேன். இலக்கண புணர்ச்சி விதிகள் படி அணுஆற்றல் / அணுவாற்றல் இவற்றில் எது சரி? நான் பள்ளியில் படிக்கும் பொழுது இந்த மூன்று பெயர்களும் பள்ளியின் பெயருக்கு அடிக்கடி மாற்றப்பட்டது. ஸ்ரீகாந்த் 01:42, 28 அக்டோபர் 2010 (UTC) அதிவேகக் கணினி குறித்த கட்டுரைகல்லூரித் தேர்வுகள் முடிந்துவிட்ட காரணத்தினால் த.வி-யில் பங்களிக்க கணினி ஆய்வகத்திற்கு வந்தேன். எந்தத் தளம் சென்றாலும் சீனத்தின் மீத்திறன் கணினியைப் பற்றிய பேச்சே அடிபட்டது. எனவே அதனைப் பற்றி த,வி-யில் எழுதியுள்ளேன். அக்கணினிப் பெயரில் ஏதேனும் மாற்றமிருப்பின் கூறவும். கட்டுரை "டியான்ஏ-1" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். படித்துப் பார்த்துக் கருத்து கூறவும். திருத்தம் ஏதேனும் இருப்பினும் கூறவும். இந்தப் பக்கத்தில் கட்டுரைகள் எவ்வெம்மொழியிலுள்ளது என்ற பட்டியலில் தமிழின் பெயரும் இடம்பெற ஆவன செய்யுமாறு மதிப்பிற்குரிய நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையைப் படித்துப் பார்க்க மறக்க வேண்டாம்.. வேண்டுகோள்
அறிவுசார் சொத்துடைமை
Tamil TransliterationDoes Tamil Wikipedia offer 'Tamil Transliteration' features.? If yes, can you please explain how to use that feature so that it would assist the people who don't know typewriting in Tamil.
புது பதிகைபுது பதிகை ஏன்பதிவுசெய்யவேண்டும் ? நான் பலமுறை முயர்ச்சி செய்தேன் பலன் இல்லை குக்கிஸ் என்றால் என்ன?
|
Portal di Ensiklopedia Dunia