விக்கிப்பீடியா:கட்டுரை வகைப்படுத்தல் கையேடு

இயன்றவரை பொருத்தமான ஒரு பகுப்பின்கீழ் கட்டுரையை சேர்க்க வேண்டும். ஏற்கனவே பகுப்பு இல்லாவிடின் பகுப்பு ஒன்றை உருவாக்கி, சேர்க்க வேண்டும். புதிய பகுப்பு ஒன்றை ஏற்படுத்தும்பொழுது அப்புதிய பகுப்பை உரிய தாய்ப் பகுப்பின்கீழ் கொண்டுவர வேண்டும். பகுப்பு சுட்டிகள் சிகப்பாக இருந்தால் அவை வகைப்படுத்தப்படவில்லை எனப் பொருள்.

எப்படி பாகுபாடு செய்வது?

  • ஒரு பக்கத்தை வகைப்படுத்த,கீழ்க்காணும் Tag-ஐ பக்கத்தின் இறுதியில் (வேற்று மொழி இணைப்புகளுக்கு முன்னர்) சேர்க்கவும்.

[[பகுப்பு:பக்க வகையின் பெயர்]]

  • பொருந்தக்கூடிய சமயங்களில், ஒரே கட்டுரைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பக்க வகைகளையும் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, கண்ணதாசன் குறித்த கட்டுரையை, கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகிய இரண்டு பக்க வகைகளிலும் சேர்க்கலாம்.

எந்த பகுப்பில் சேர்ப்பது என்று சந்தேகம் எழுந்தால் என்ன செய்வது?

  • பின்வரும் தாய் பகுப்புக்கள் ஒன்றில் சேருங்கள் (இலக்கியம், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், புவியியல், சமூகம், தொழில்நுட்பம்).
  • உங்கள் தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை இருந்தால், அங்கே என்ன மாதிரி வகைப்படுத்தப்பட்டிருக்கின்றதோ, அப்படியே வகைப்படுத்துவது பொருத்தமாக அமையலாம்.
  • பிறபயனரிடம் ஆலோசனை கேளுங்கள்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya