இங்கு உயிரியற் கலைச்சொற்களுக்கான பரிந்துரைகள், ஐயப்பாடுகள், வேண்டுகோள் ஆகியவற்றைத் தொகுக்கலாம். ஆய்ந்து முடிவடைந்த சொற்கள் அகரவரிசைப்படி ஆவணப்படுத்தப்படும்; இது இலகுவில் சொற்களைத் தேடுவதற்கு உதவியாக அமைகின்றது. உதவிப்பக்கத்தில் சொல்லாக்கத்திற்குத் தேவைப்படக்கூடிய சில வழிமுறைகள் அறியலாம் அல்லது பரிந்துரைகளைப் பதிவு செய்யலாம் . விக்கிபீடியாக் கட்டுரையில் புதிய உயிரியற் சொற்களைச் சேர்ப்போர் இங்கே அவற்றிற்கான விளக்கம், சொற்பிறப்பு போன்றவற்றைப் பதியலாம்.
DNA - டி.என்.ஏ அல்லது ஒக்சியகற்றப்பட்ட இரைபோ கருவமிலம்
RNA - ஆர்.என்.ஏ அல்லது இரைபோ கருவமிலம்
mRNA - செய்திகாவும்/செய்திப்பரிமாற்ற/தூது ஆர்.என்.ஏ அல்லது செய்திகாவும்/செய்திப்பரிமாற்ற/தூது இரைபோ கருவமிலம்
tRNA - இடமாற்று/காவும்/காவு ஆர்.என்.ஏ அல்லது இடமாற்று/காவும்/காவு இரைபோ கருவமிலம்
rRNA - இரைபோசோமல்/இரைபோசோம் ஆர்.என்.ஏ அல்லது இரைபோசோமல்/இரைபோசோம் இரைபோ கருவமிலம் (இதில் ஒலிபெயர்ப்புக்காக இரைபோசோமல் என்று கூறினாலும், மல் என்பது குறிப்பிட்ட பெயரை ஒட்டியதாக இல்லாமல் இருப்பதால் பொருத்தமற்றதோ எனத் தோன்றுகிறது).
இவற்றிற்கான தமிழ்ச் சொற்களில் குழப்பம் இருக்கின்றது. பேச்சு:ஆரஞ்சுப்பழம் பக்கத்தில் Citrus, Orange, Bitter Orange ஆகியவற்றிற்கான பெயர்க் குழப்பம் தொடர்பான உரையாடல் உள்ளது. அத்துடன் Lime and Lemon க்கும் தமிழில் எனக்கு பெயர்க் குழப்பம் உண்டு. பார்த்து கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:09, 12 மே 2013 (UTC)[பதிலளி]
பேய்வாய் அல்ல பேழ்வாய். பேழ் + வாய் என்றால் பெரியதாய்திறக்கும் வாய் என்று பொருள். பேழை என்றால் பெட்டி (முழு அகலநீளத்துக்கும் திறக்கும் பெட்டி), ஆனால் பெரிய மதிப்புடைய பொருள் வைத்திருக்கும் அழகுப்பெட்டி என்றும் பொருள். புலியைப் பேழ்வாய் என்றே புலி என்னும் சொல் இல்லாமலே அழைப்பதும் உண்டு. குளிர்ப்பேழை என்று கூறுவதும், அது முழுக்கதவும் திறக்கும் பெரிய பெட்டி என்னும் பொருளில். பேழ் = பெரிய, பெருமை. --செல்வா (பேச்சு) 15:02, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
2012க்கான சிறப்பு உயிரினங்கள் (Top 10 New Species - 2012)
chimera என்பது chimaera என்ற சொல்லின் மற்றொரு வடிவம். இச்சொல்லுக்கு, மரபியில் அடிப்படையில், 'வேறுபட்ட மரபுஅணுக்கள் உடையவை' என்பது பொருளாகும். கிரேக்க புராணங்களின் படி, வேறுபட்ட விலங்கினங்களின் புறஉறுப்புகளை உடைய விலங்கினைக் குறிக்கும். இவற்றைக் கொண்டு, இம்மீனுக்கு ஒரு பெயரிடுக.
தமிழகத்தில் 'ஹெர்பாரியம்' என்றே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மூலிகை என்ற அடிப்படையில் ஒரு சொல்லாகத்தைக் கண்டேன். ஆனால், இங்கு அனைத்து தாவரங்களுமே பக்குவபடுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. எனவே, உலர் தாவரகம் என்ற சொல்லை அமைத்து கட்டுரையை உருவாக்கியுள்ளேன். மாற்றுக் கருத்து இருப்பின் பேச்சு:உலர் தாவரகம் என்பதில் தெரியப்படுத்துக.வணக்கம்.--≈ த♥உழவன்( கூறுக )02:35, 12 சூன் 2014 (UTC)[பதிலளி]
ஆங்கிலத்தில் Larva/Larvae எனப்படுவது, பூச்சியின் வாழ்க்கை சுழற்சி பருவங்களின் ஓன்றாகும். இதற்கு இணையான தமிழ் பக்கம் நமது விக்கியில் இல்லை. நான் இதனை தொடங்க விரும்புகிறேன். இதனை 'முட்டை புழு' என்று அழைக்கலாமா? இயற்பியல் அறிந்த தமிழ் அறிஞர்கள் யாரேனும் தெளிவுப்படுத்தினால் நன்றாகயிருக்கும். --}- Cyarenkatnikh (பேச்சு) 01:25, 15 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
பயனர் பேச்சு:Cyarenkatnikh! ஒரு ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான தமிழ்க் கட்டுரை ஏற்கனவே உள்ளதா என்பதனை அறிய, ஆங்கிலக் கட்டுரைப் பக்கத்திற்குப் போய், இடது பக்கத்திலுள்ள ஏனைய மொழிக் கட்டுரைகளுக்கான இணைப்புக்களில் தமிழ் உள்ளதா என்று பாருங்கள். எ.கா. en:Larva கட்டுரைக்குப் போய், பார்த்தால், அந்தக் கட்டுரை குடம்பி என்னும் தமிழ்க் கட்டுரைக்கு இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஏற்கனவே குடம்பி என்ற கட்டுரை உள்ளது. வாழ்க்கை வட்டம் (உயிரியல்), மற்றும் பூச்சி கட்டுரைப் பகுதிகளையும் பாருங்கள்.--கலை (பேச்சு) 18:01, 16 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]