2009 ஆம் ஆண்டில், கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாகச் சுமார் 1,200 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகளைத் திருத்தி, சீரமைத்து, செம்மைப்படுத்துவதற்கான திட்டப் பக்கம் இதுவாகும்.
முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:மேம்பாடு
ஆயத்தப் பணி
கட்டுரைகளைத் துறைவாரியாக வகைப்பிரிக்கும் வேலை (துணைப் பகுப்புகளை உருவாக்குதல்) நடந்தது. குறிப்பிட்ட துறையில் ஆர்வமுள்ளவர்கள், தமக்கு விருப்பமான கட்டுரைகளைத் தெரிவுசெய்து பங்களிக்க இந்த ஏற்பாடு ஆகும்.
- துணைப் பகுப்புகளின் தற்போதைய எண்ணிக்கை : 96
- வகைப்பிரிக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தற்போதைய எண்ணிக்கை : 654 (Purge)
அதிக கட்டுரைகளைக் கொண்டிருக்கும் துறைகள்
எண் |
துறை |
கட்டுரைகளின் எண்ணிக்கை
|
1 |
மருத்துவம் |
58
|
2 |
ஆங்கிலத் திரைப்படம் |
36
|
3 |
நிறுவனங்கள் |
33
|
4 |
ஆங்கில இசை |
34
|
முன்னெடுப்புகளும், பெற்ற பலன்களும்
☆ கடைசியாக இற்றை செய்யப்பட்ட நாள்: 12-மே-2025
செயலாக்கம்
- கட்டுரைகளின் பட்டியல் - பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
- செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. பங்களிப்பாளர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறையைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தலாம்.
- 44 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். தேவைப்படின் மேலும் செம்மைப்படுத்தலாம்.
செல்லும் பாதை
எண் |
தேதி |
செம்மைப்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை |
திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை |
செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளின் எண்ணிக்கை |
குறிப்புகள்
|
1 |
10-செப்டம்பர்-2022 |
111 |
58 |
1075 (தோராயமாக)^ |
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சுமார் 1030 கட்டுரைகளில் 380 கட்டுரைகள் வகைப்பிரிக்கப்பட்டன.
|
2 |
16-செப்டம்பர்-2022 |
111 |
58 |
1048^ |
(1) சுமார் 1030 கட்டுரைகளில் 530 கட்டுரைகள் வகைப்பிரிக்கப்பட்டன. (2) துணைப் பகுப்பில் உள்ளடங்கி, தாய்ப் பகுப்பிலும் அடங்கியிருந்த சுமார் 27 கட்டுரைகள், துணைப் பகுப்பில் மட்டும் இருக்கும்படி செய்யப்பட்டன. அப்போதுதான் கட்டுரைகளின் எண்ணிக்கையைத் துல்லியமாக அறிய இயலும். வகைப்பிரித்தலும் முழுமையடையும்.
|
3 |
21-சனவரி-2023 |
201 |
50 |
948^ |
(1) கட்டுரைகளை வகைப்பிரிக்கும் பணி இன்று நிறைவுற்றது. (2) துணைப் பகுப்பில் உள்ளடங்கி, தாய்ப் பகுப்பிலும் அடங்கியிருந்த மேலும் சில கட்டுரைகள், துணைப் பகுப்பில் மட்டும் இருக்கும்படி செய்யப்பட்டன. எனவே, செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் குறைந்தது. (3) செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளுள், திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுரைகளும் அடங்கும்.
|
4 |
இன்று |
481^^ |
44^^ |
654^^ |
செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளுள், திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுரைகளும் அடங்கும்.
|
^ - மனித ஆற்றல் மூலமாகக் கூட்டுத்தொகை கணக்கிடப்பட்டது.
^^ - தரவுகள் தானாகவே இற்றையாகிறது.
தூர அளவுக்கற்கள்
வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்
எளிய முறைக்கான பரிந்துரைகள்
பரிந்துரை 1:
- கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ளுதல்.
- ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமித்தல் (பதிப்பிடுதல்).
- அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்தல்.
பரிந்துரை 2:
- ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து, தனது மணற்தொட்டியில் உள்ளடக்கத்தை இட்டுக்கொள்ளுதல்.
- சிறு திருத்தங்களை மணல்தொட்டியில் செய்தல்.
- இறுதியாக மணல்தொட்டியிலுள்ள உள்ளடக்கத்தை கூகுள் கட்டுரையில் replace செய்தல். எடுத்துக்காட்டு: செயல் 1 & செயல் 2, செயல் 3
- இந்த மூன்று பரிந்துரைகளின்படி செயல்பட்டால், முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.
கட்டுரையின் அமைப்பு
- தகவற் பெட்டி இருத்தல் நல்லது
- முன்னுரை
- 5 அல்லது 6 துணைத் தலைப்புகள்
- மேற்கோள்கள்
- உகந்த பகுப்புகள்
- உகந்த விக்கி மொழியிடை இணைப்புகள்
செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு
- {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டும்.
- கட்டுரையில் இருக்கும் துணைப் பகுப்பினை நீக்க வேண்டும். உதாரணமாக, உயிர்ச்சத்து கே எனும் கட்டுரை செம்மைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டால், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-உணவு அறிவியல் என்பதனை நீக்க வேண்டும்.
2022
விக்கி மாரத்தானுக்காகப் பதிவு செய்தல்
விக்கி மாரத்தான் 2022 நிகழ்விற்கு முன்னரோ, விக்கி மாரத்தான் நிகழ்வின்போதோ இக்கட்டுரைகளை செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கட்டுரைகளின் பெயர்களை இங்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற பயனர்களின் திட்டமிடலுக்கு இது உதவியாக இருக்கும்.
செல்வசிவகுருநாதன்
மாரத்தான் நிகழ்வு அன்று -
- அடைப்பிதழ்
- ஆற்றல் திசைமாற்றி
செய்ய இயலவில்லை. சிறப்பு மாத நிகழ்வின்போது செய்யப்படும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:12, 26 செப்டம்பர் 2022 (UTC)
மகாலிங்கம் இரெத்தினவேலு
- உளவியல்
Y ஆயிற்று
கி.மூர்த்தி
- சதுரங்க விதிமுறைகள்
Y ஆயிற்று
- நீர் பாதுகாப்பு
Y ஆயிற்று - (சிறப்பு மாதம் நிகழ்வின்போது செய்யப்பட்டது)
பாலசுப்ரமணியன்
- இந்திய பாரம்பரிய இசை
Y ஆயிற்று
- சஞ்சய் காந்தி
Y ஆயிற்று
- விஜய் மல்லையா
Y ஆயிற்று
- பர்கான் அக்தார்
Y ஆயிற்று
- நானா படேகர்
Y ஆயிற்று
பார்வதி
- நந்திதா தாஸ்
Y ஆயிற்று
- கிரேட் டேன்
Y ஆயிற்று
துணைப் பக்கங்கள்