விக்கிப்பீடியா:கேள்விக்குட்படுத்தல்
தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை ஆக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும். ஒரு கட்டுரை எந்த நிலையில் உள்ளது என்ற தகவல் இன்னும் முறையாக சேர்க்கப்படவில்லை. எனவே மேம்படுத்த முடியும் என்று தோன்றினால், உடனேயே செய்து விடுங்கள். அது வரவேற்கப்படுகின்றது. தமிழ் விக்கிபீடியாவின் முறைகள், வழக்கங்களும் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுபவையே. இவற்றைப் பற்றி உங்களுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தால் தயக்கமின்றி நேரடியாக முன்வையுங்கள், கேள்விக்குட்படுத்துங்கள். பொறுப்புள்ள பயனர்கள் அவற்றை இயன்றவரை ஆய்ந்து மேம்படுத்த முயல்வார்கள். எப்படி கேள்விக்குட்படுத்துவதுகட்டுரைகளில் உள்ள தகவல்களை கேள்விகுட்படுத்துவதற்கு ஒரு சிறந்த முறை விமர்சன அல்லது திறனாய்வு பார்வையைச் சேர்ப்பது. பேச்சுப் பக்கத்தில், ஆலமரத்தடியில், பிற பயனர் பகுதிகளிகளிலும் உங்கள் கேள்விகளை, மாற்றுக் கருத்துகளை முன்வைக்கலாம். இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia