விக்கிப்பீடியா:சூன் 13, 2009 வலைப்பதிவர்களுக்கான விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்விக்கிப்பீடியாவுக்குத் தமிழ் வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி ஒரு கூட்டம் நடைபெற்றது. நாள்: சூன் 13, 2009 மாலை 6.30 - 8.30 மணி. இடம்: கிழக்குப் பதிப்பகம் முகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018
நிகழ்ச்சி நிரல்
முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள்
25 பேர் அளவில் கலந்து கொண்டனர். நிகழ்வு மிகுந்த பயன் அளித்ததாகத் தெரிவித்தனர். கலந்து கொண்டோர்
ஒருங்கிணைப்பாளர்கள்
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்நிகழ்வை முன்மொழிந்து இடம், கருவிகள் ஆதரவு வழங்கிய கிழக்கு பதிப்பகம் நிறுவனத்தாருக்கு நன்றி. குறிப்பாக, பெரும் ஆர்வமும் ஒருங்கிணைப்பும் நல்கிய NHM மென்பொருள் பிரிவு மேலாளர், K. S. Nagarajan. விளம்பர ஆதரவாளர்கள்தங்கள் தளத்தில் அறிவிப்பு தந்து நிகழ்வு பற்றிய தகவலைப் பரப்ப உதவியோருக்கு நன்றி. கூட்டத்துக்கான அறிமுகம்இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன. ஆனால், இந்தத் தமிழ் உள்ளடக்கம் பெருமளவு பக்கச் சார்புடையதாகவும், கருத்து சார்ந்ததாகவும், அரசியல்-திரைப்படம்-சமையல்-ஆன்மிகம்-கிரிக்கெட் என்று குறுகிய வட்டத்தில் உழல்வதாகவும் உள்ளது. கல்வி நோக்கில் ஒரு தலைப்பு குறித்துத் தேடினால், தகவலை முன்வைத்து நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகள் குறைவே. ஆங்கிலத்தில் இந்தத் தேவையை நிறைவு செய்ய ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது ஆங்கில விக்கிபீடியா. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கலைக்களஞ்சிய ஆங்கிலக் கட்டுரையைப் புரிந்து பயன்படுத்தும் மக்கள் 30 விழுக்காடாவது இருப்பார்களா என்பது கேள்விக்குரியது. ஆங்கிலம் போல் தமிழில் ஏராளமான தகவல் தளங்கள் இல்லை. தமிழ் விக்கிபீடியா மட்டுமே ஒரே ஒருங்கிணைந்த தகவல் தளமாக இருப்பதால், தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டியது முக்கியம். கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ் விக்கிபீடியாவில் 18,000+ கட்டுரைகளே உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க அளவு குறுங்கட்டுரைகள். இன்னும் பல முக்கிய துறைகளைக் குறித்து அடிப்படைக் கட்டுரைகள்கூட இல்லை. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது இருந்தாலே ஒரு குறைந்தபட்ச பயனை நல்க இயலும். தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்க இருக்கும் மிகப் பெரிய தடைகள்:
தமிழ் வலைப்பதிவர்கள், இந்தத் தடைகளைக் கடந்தவர்கள். பல நாடுகளில் இருந்து பல துறைகள் குறித்து எழுதக்கூடியவர்கள். எனவே, வலைப்பதிவர்களிடம் இருந்து பெரிய அளவில் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். இருப்பினும், ஏறத்தாழ பத்து தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களித்து வருகிறார்கள். வலைப்பதிவர்கள் பங்களிப்பதற்கான தடைகள்:
வலைப்பதிவர்கள் மனத்தில் இருக்கும் இக்கேள்விகளுக்கு விடை அளிக்கும் முகமாகவும், கூடிய பங்களிப்புகளை வேண்டியும் இந்தக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்:
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மேலதிகப் பயிற்சி பெற விரும்புபவர்கள் சூன் 14, சென்னையில் நடக்கும் விக்கிபீடியா பட்டறையிலும் கலந்து கொள்ள வரவேற்கிறோம். விவரங்களுக்கு விக்கிப்பீடியா:சூன் 14, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை பார்க்கவும். |
Portal di Ensiklopedia Dunia