2017 ஆம் ஆண்டில் தமிழகத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, அதன் வாயிலாக சுமார் 10,000 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. பயிற்சிக்குப் பிறகு, அக்கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணி நடந்தது.
செம்மைப்படுத்தும் பணியினை விரைவாக்கும் பொருட்டு 2022 ஆம் ஆண்டில் சில முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. அப்பணியினை 2023 ஆம் ஆண்டிலும் தொடர்கிறோம்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கும், இதுவரை எட்டியவையும்
- ஒவ்வொரு மாதமும் குறைந்தது 5% கட்டுரைகள் கையாளப்பட வேண்டும்.
- சிறப்புக் காலாண்டு ஒன்றின் மூலமாக பணிகளைச் செய்தல். இக்காலத்தில், மாதம் 20% கட்டுரைகளைக் கையாளுதல் - விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023
- விக்கி மாரத்தான் நிகழ்வில் கவனக்குவியம் கொள்ளுதல் - விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023 - கட்டுரைகள் எதுவும் கையாளப்படவில்லை.
வழிகாட்டல்
பொதுவானவை
- கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரைகளை நீக்கப் பரிந்துரைக்கலாம்.
- தானியங்கித் தமிழாக்கக் கட்டுரைகளை நீக்கப் பரிந்துரைக்கலாம்.
- கட்டுரைகளை ஒருங்கிணைக்க வார்ப்புரு இட்டுவிட்டால், துப்புரவு முடிந்ததாகக் கருதலாம்.
- துப்புரவு முடிந்துவிட்டதாகக் கருதினால், துப்புரவு முடிந்த ---- மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பாக மாற்ற வேண்டும். (உ.ம் :
விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
என்பதனை துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
என மாற்ற வேண்டும்) தரவுகளைக் கொண்டிருப்பதற்காக இந்த வேண்டுகோள்.
குறைந்தபட்ச செம்மையாக்கம்
- குறைந்தது 5 முழுமையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- கலைக்களஞ்சியத்திற்குரிய நடையில் அறிமுகம் இருத்தல் வேண்டும்.
- குறைந்தது ஒரு மேற்கோள் இருக்க வேண்டும். அது முறையாக காட்டப்படல் வேண்டும்.
- குறைந்தது ஒரு பகுப்பாவது இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பொருத்தமான பகுப்பை, இயன்றளவு துல்லியமானதை இடவேண்டும்.
- சிவப்பிணைப்புகளை நீக்க வேண்டும்.
- கட்டுரைத் தலைப்பை விக்கித் தரவில் இற்றை செய்யவேண்டும்.
செயலாக்கம்
செம்மைப்படுத்தப்பட வேண்டிய அனைத்துக் கட்டுரைகளும் அகர வரிசையில் இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளன.
அகர வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ள அட்டவணைகளில் உங்களின் பங்களிப்பை ஒவ்வொரு கட்டுரைக்கும் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:29, 30 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
- --மகாலிங்கம் இரெத்தினவேலு
- ஸ்ரீதர். ஞா (✉) 12:15, 16 சனவரி 2023 (UTC)[பதிலளி]
அறிதல்கள்
- நீக்கப்பட்ட கட்டுரைகளில் தானியங்கித் தமிழாக்கக் கட்டுரைகள் அடங்கும்; சோதனை முயற்சியாக எழுதப்பட்டவையும் அடங்கும்.
- வேளாண்மை குறித்த கட்டுரைகள் கலைக்களஞ்சியத்திற்கு தேவை. ஆனால், அக்கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையில் எழுதப்படவில்லை என்பதால் நீக்கப்படுகின்றன. வேளாண்மை குறித்த கட்டுரைகளை அந்தத் துறையைச் சார்ந்தவர்களே மேம்படுத்த இயலும்.
- சிறிதளவும் முன்னேற்றம் செய்ய இயலாத உள்ளடக்கங்களையும் சில கட்டுரைகள் கொண்டுள்ளன. அக்கட்டுரைகள் நீக்கப்படுகின்றன.
- உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சிற்றூரைப் பற்றி தானியங்கித் தமிழாக்கம் மூலம் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதனைத் துப்புரவு செய்து, செம்மைப்படுத்துவதன் மூலமாக தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க இயலாது. எனவே இது போன்ற கட்டுரைகள் நீக்கப்படுகின்றன.
- பார்ப்பதற்கு பெரிய கட்டுரை போன்று தெரியும். உள்ளே படித்துப் பார்த்தால், தானியங்கித் தமிழாக்கமாக இருக்கும். இது போன்ற கட்டுரைகள் நீக்கப்படுகின்றன.
- தாவர உடற்செயலியல் உள்ளிட்ட பல தாவரவியல் கட்டுரைகள் சிறிய அளவில் எழுதப்பட்டுள்ளன. அவை தானியங்கித் தமிழாக்க முறையில் எழுதப்படவில்லை. எனவே அவற்றை நீக்காமல் வைத்துள்ளோம்.
- அலெக்சாந்தர் பிரீடுமேன், வேதிய உயிர்வளித் தேவை, உள்மனம் ஆகிய கட்டுரைகள் பிற விக்கிப் பயனர்களால் எழுதப்பட்டவை. இக்கட்டுரைகளில் 'ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகள்' எனும் பகுப்பை தவறுதலாக Bot ஒன்று சேர்த்திருக்கிறது. தவறுதலாக சேர்க்கப்பட்ட பகுப்பை இப்போது நீக்கினோம்.
- தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகள் குறித்தான கட்டுரைகளில், போதிய உள்ளடக்கம் இல்லாதவை நீக்கப்பட்டன.
- பீட்டில்ஸ் கட்டுரையை விரிவாக்கம் செய்தவர், 'ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்' எனும் பகுப்பினை சேர்த்திருக்கிறார். கட்டுரையிலிருந்து அப்பகுப்பு நீக்கப்பட்டது.
புள்ளிவிவரம்
பயனர்கள் வாரியாக
01-ஏப்ரல்-2023 அன்றிலிருந்து பயனர்களின் பங்களிப்புகள் தரவுகளாக கீழ்க்காணும் அட்டவணையில் பட்டியலிடப்படுகின்றன.
- கடைசியாக இற்றை செய்த நாள்: டிசம்பர் 24 (இந்திய நேரம், இரவு 09:05)
செயல்திறன்
எண் |
தேதி (முன்பு) |
தேதி (அன்று) |
துப்புரவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்படாத கட்டுரைகளின் எண்ணிக்கை (முன்பு) |
துப்புரவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்படாத கட்டுரைகளின் எண்ணிக்கை (அன்று) |
மாதாந்திர செயல்திறன்^^ |
ஒட்டுமொத்த செயல்திறன்^^^
|
1 |
31-டிசம்பர்-2022 |
31-சனவரி-2023 |
2,713 |
2,418 |
10.87% |
10.87%
|
2 |
31-சனவரி-2023 |
28-பிப்ரவரி-2023 |
2,418 |
2,309 |
4.51% |
14.89%
|
3 |
28-பிப்ரவரி-2023 |
31-மார்ச்-2023 |
2,309 |
2,238 |
3.07% |
17.51%
|
4 |
31-மார்ச்-2023 |
30-ஏப்ரல்-2023 |
2,238 |
1,946 |
13.05% |
28.27%
|
5 |
30-ஏப்ரல்-2023 |
31-மே-2023 |
1,946 |
1,262 |
35.15% |
53.48%
|
6 |
31-மே-2023 |
30-சூன்-2023 |
1,262 |
829 |
34.31% |
69.44%
|
7 |
30-சூன்-2023 |
31-சூலை-2023 |
829 |
768 |
7.36% |
71.69%
|
8 |
31-சூலை-2023 |
31-ஆகத்து-2023 |
768 |
762 |
0.78% |
71.91%
|
9 |
31-ஆகத்து-2023 |
30-செப்டம்பர்-2023 |
762 |
760 |
0.26% |
71.99%
|
10 |
30-செப்டம்பர்-2023 |
31-அக்டோபர்-2023 |
760 |
743 |
2.24% |
72.61%
|
11 |
31-அக்டோபர்-2023 |
30-நவம்பர்-2023 |
743 |
742 |
0.13% |
72.65%
|
எண் |
தேதி (முன்பு) |
தேதி (அன்று) |
துப்புரவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை (முன்பு) |
துப்புரவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை (அன்று) |
மாதாந்திர செயல்திறன்^^ |
ஒட்டுமொத்த செயல்திறன்^^^
|
1 |
31-டிசம்பர்-2022 |
31-சனவரி-2023 |
2,610 |
2,707 |
3.72% |
3.72%
|
2 |
31-சனவரி-2023 |
28-பிப்ரவரி-2023 |
2,707 |
2,750 |
1.59% |
5.36%
|
3 |
28-பிப்ரவரி-2023 |
31-மார்ச்-2023 |
2,750 |
2,778 |
1.02% |
6.44%
|
4 |
31-மார்ச்-2023 |
30-ஏப்ரல்-2023 |
2,778 |
2,983 |
7.38% |
14.29%
|
5 |
30-ஏப்ரல்-2023 |
31-மே-2023 |
2,983 |
3,506 |
17.53% |
34.33%
|
6 |
31-மே-2023 |
30-சூன்-2023 |
3,506 |
3,861 |
10.13% |
47.93%
|
7 |
30-சூன்-2023 |
31-சூலை-2023 |
3,861 |
3,870 |
0.23% |
48.28%
|
8 |
30-சூலை-2023 |
31-ஆகத்து-2023 |
3,870 |
3,875 |
0.13% |
48.47%
|
9 |
31-ஆகத்து-2023 |
30-செப்டம்பர்-2023 |
3,875 |
தரவு பதிவு செய்யப்படவில்லை |
கணக்கிட இயலவில்லை |
கணக்கிட இயலவில்லை
|
10 |
30-செப்டம்பர்-2023 |
31-அக்டோபர்-2023 |
தரவு பதிவு செய்யப்படவில்லை |
3,884 |
கணக்கிட இயலவில்லை |
48.81%
|
11 |
31-அக்டோபர்-2023 |
30-நவம்பர்-2023 |
3,884 |
தரவு பதிவு செய்யப்படவில்லை |
கணக்கிட இயலவில்லை |
கணக்கிட இயலவில்லை
|
- ^^ ஒவ்வொரு மாதமும் இறுதி நாளன்று, முந்தைய மாதத்தின் இறுதி நாளைய தரவுகளுடன் ஒப்பீடு நடக்கும்
- ^^^ ஒவ்வொரு மாதமும் இறுதி நாளன்று, 31-டிசம்பர்-2022 அன்றைய தரவுகளுடன் ஒப்பீடு நடக்கும்
குறிப்புகள்
மாதம் |
செயல்திறன் இலக்கு |
அடைந்த செயல்திறன் |
குறிப்பு
|
சனவரி 2023 |
5% |
10.87% |
பெருமளவில் கட்டுரைகள் நீக்கப்பட்டது.
|
பிப்ரவரி 2023 |
5% |
4.51% |
அந்தந்தத் துறையைச் சார்ந்த பயனர்களிடத்து, தனிப்பட்ட முறையில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களை அவர்கள் நிறைவேற்றித் தந்தனர். அத்தோடு, இந்த முன்னெடுப்பினை கவனித்துவந்த பயனர்கள் தங்களால் இயன்றளவு தொடர்ந்து பங்காற்றினர்.
|
மார்ச் 2023 |
5% |
3.07% |
சிறப்புக் காலாண்டைக் கருத்திற் கொண்டு, சில முன்னேற்பாட்டுப் பணிகள் நடந்தன. மூர்த்தி அவர்கள் வேதியியற் கட்டுரைகளை செம்மைப்படுத்தினார். பொருந்தாதக் கட்டுரைகள் நீக்கப்பட்டன.
|
ஏப்ரல் 2023 |
20% |
13.05% |
சிறப்புக் காலாண்டுத் திட்டத்தின் முதல் மாதத்தில் பயனர்களின் பங்களிப்பு காரணமாக இந்த செயல்திறனை அடைந்தோம். நினைவுப் பரிசு, பதாகை அறிவிப்பு, பயனர் பக்க அறிவிப்பு ஆகிய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.
|
மே 2023 |
20% |
35.15% |
சிறப்புக் காலாண்டுத் திட்டத்தின் இரண்டாம் மாதத்தில் பயனர்களின் பங்களிப்பு காரணமாக இந்த செயல்திறனை அடைந்தோம்.
|
சூன் 2023 |
20% |
34.31% |
சிறப்புக் காலாண்டுத் திட்டத்தின் மூன்றாம் மாதத்தில் பயனர்களின் பங்களிப்பு காரணமாக செயல்திறனை அடைந்தோம்.
|
சூலை 2023 |
5% |
7.36% |
சிறப்புக் காலாண்டுத் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்தச் செயல்திறனை அடைந்தோம்.
|
ஆகத்து 2023 |
5% |
0.78% |
சிறப்புத் திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை.
|
செப்டம்பர் 2023 |
5% |
0.26% |
சிறப்புத் திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை.
|
அக்டோபர் 2023 |
5% |
2.24% |
சிறப்புத் திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை.
|
நவம்பர் 2023 |
5% |
0.13% |
சிறப்புத் திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை.
|
திட்டத்தின் போக்கு
செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டில், திட்டமிட்டிருந்த இலக்கினை மிக விரைவிலேயே எட்டியதால், மீதமுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 829 என்றானது.
சூன் 30, 2023 அன்று ஒட்டுமொத்தமாக ஓராண்டு என்பது நிறைவடைந்தது. இந்த ஓராண்டு கால செம்மைப்படுத்துதல் பணியானது பயனர்களுக்கு சலிப்பினைத் தந்திருக்கலாம். புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையையும் குறைத்திருக்கலாம். எனவே, சூலை 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை இந்தத் திட்டமானது அலுவல்முறையில் இயக்கப்படாது.
எனினும், மீதமுள்ள கட்டுரைகளை பயனர்கள் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். சிறப்புக் காலாண்டில் பங்குகொண்ட பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் முறையான அறிவிப்பு சூலை 5 அன்று இடப்பட்டது.
துணைப் பக்கங்கள்
தொடர்ச்சி