விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்விக்கிப்பீடியா என்பது இணையத்தில் இயங்குவதும், கூட்டுமுயற்சியால் உருவாக்கப்படுவதுமான கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட விக்கிமீடியா பவுண்டேசன் எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பு இதனை நிருவகித்து வருகின்றது. உலகெங்கும் உருவாகும் அறிவுத்திரளைத் திரட்டி எவரும் இலவசமாகப் பெறக்கூடிய வகையிலும், காப்புரிமைகள் போன்ற கட்டுப்பாடுகள் இன்றியும் வழங்குவதே விக்கிப்பீடியாத் திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும். இந்த நல்ல நோக்கத்தைச் செயற்படுத்துவதில் இலட்சக்கணக்கான தன்னார்வலர்கள் ஒன்றுகூடி உழைத்து வருகிறார்கள். விக்கிப்பீடியாத் திட்டத்தின் கீழ் தற்போது 267 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் செயற்பட்டு வருகின்றன.
தமிழ் விக்கிப்பீடியாதமிழ் விக்கிப்பீடியா, உலகளாவிய விக்கிப்பீடியாத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2003 ஆம் ஆண்டில் தொடங்கியது. இன்று வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 21,452 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொடக்கத்தில் மிகவும் மெதுவாகவே வளர்ந்தாலும், எவ்வித தொய்வும் இல்லாமல் படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்ட கட்டுரைகள் சராசரியாக ஆண்டொன்றுக்கு 3,500. கடந்த இரண்டு ஆண்டுகளின் சராசரி 4,000 கட்டுரைகளாகக் கூடியுள்ளது. 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 2.6 மில்லியன் தடவைகள் தமிழ் விக்கிப்பீடியா பார்வையிடப் பட்டுள்ளது. இது நாளொன்றுக்கு ஏறத்தாழ 88,000 பார்வைகள் ஆகும். பயனர்கள்இதுவரை 15,800 க்கு மேற்பட்டவர்கள் தம்மைப் பயனர்களாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். எனினும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 எனலாம். இவர்கள், இந்தியா, இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, செருமனி, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகளில் இருந்து பங்களிப்புச் செய்கின்றனர்.
வாய்ப்புஆங்கிலத்திலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள வேறு பல மொழிகளிலும், பல தொகுதிகளைக் கொண்ட கலைக் களஞ்சியங்களை அச்சிட்டு வெளியிடுகிறார்கள். இவற்றை குறித்த கால இடைவெளீகளில் இற்றைப்படுதியும், விரிவாக்கியும் புதிய பதிப்புக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். தமிழில் இத்தகைய ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதானால் மிகுந்த உழைப்பும் பெருமளவு பணமும் தேவைப்படும். பின்னர் இவற்றைக் குறித்த கால இடைவெளிகளில் புதுப்பித்து வெளியிடுவதென்பது ஏறத்தாழ முடியாது என்றே கூறிவிடலாம். இவற்றையெல்லாம் ஒருவாறு செய்யலாம் என்று வைத்துக்கொண்டாலும், சாதாரண மக்கள் இலகுவாகப் பயன்பெறும் வகையில் இவற்றின் விலை இருக்காது.
கூடுதல் தகவல்கள்மாநாடுகளில் தமிழ் விக்கிப்பீடியா
ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா
வலைப் பதிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா
|
Portal di Ensiklopedia Dunia