விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற கூடல் நிகழ்வு மற்றும் பண்பாட்டு சுற்றுலா பற்றிய பயனர்கள் மற்றும் பிறரது கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன. தங்களுடைய கருத்தினையும் சேர்க்க விரும்புவோர் கட்டுரையின் இறுதியில் சேர்க்க வேண்டுகிறோம். நேற்று ஞாயிற்றுக்கிழமை (29-09-2013) அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ் விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தேன். தவிர்க்க முடியாத சில அவசர வேலைகள் காரணமாக சனிக்கிழமை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே போல் இன்றும் தாமதமாகவே கூட்டத்திற்கு செல்ல முடிந்தது. இருந்தாலும் கூட்டம் முடியும் வரை அமர்ந்திருந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இருந்தாலும், என் மனதிற்கு தோன்றிய சிலவற்றை இங்கே எழுதுவது உசிதம் என எண்ணுகிறேன். சில வருடங்களுக்கு முன்பு குரோம்பேட்டை எம்.ஐ.டியில் நடைபெற்ற ஆங்கில விக்கிப்பீடியாவின் 10 ஆண்டு விழாவிற்கும் சென்றிருந்தேன். அப்போது ஒரு வகுப்பறையில் கூட்டம் நடைபெற்றது. ஒரு ஐம்பது பேர் வந்திருந்தார்கள். நண்பர் தேனி சுப்ரமணியம் அவர்களின் விக்கிப்பீடியா நூல் அப்போது வெளியிடப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் ஒரு டி-சர்ட் கொடுத்தார்கள். (எனக்கும் ஒன்று கொடுத்தார்கள் இன்றும் என்னிடம் உள்ளது) நிற்க... நேற்று நடைபெற்ற விழாவில்... பரிணாம வளர்ச்சி என்று பார்த்தால்... - குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் நடைபெற்றது. - சுமார் 100 பேர் வந்திருந்தனர். - மாலை கொடுக்கப்பட்ட கொழுக்கட்டை, கட்லெட் அருமை - பேச்சாளர்கள் மிகச் சுருக்கமாக பேசி, சரியான நேரத்தில் விழாவை முடித்தார்கள். குறைகள்... விழா நடைபெறும் டேக் அரங்கின் பெயரை மறந்து விட்ட எங்களுக்கு விக்கிப்பீடியா விழா நடைபெறும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்குள் அரை மணி நேரம் ஆகிவிட்டது. இத்தனைக்கும் நான் அண்ணா பல்கலை வளாகத்தில் தங்கி தான் M.Phil. படித்தேன். யாரைக் கேட்டாலும் அப்படி ஒரு விழா நடைபெறுவதாகவே தெரியவில்லை. வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரு சிறு பேனர் வைத்து இடது புறம் சென்று வலது புறம் திரும்பினாலே அரங்கு வருகிறது... ஆனால் அதைச் சொல்வதற்கும் ஆள் இல்லை... வழிகாட்டியாக ஒரு சிறு பேனர் கூட இல்லை. விழா ஏற்பாட்டாளர்களின் முதல் சொதப்பல் இது... அரங்கத்திற்கு வெளியே பெரிய பேனர் வைத்து என்ன பயன்.. மாணவர் கூடும் இடங்களில் சிறு சிறு பேனர்கள் வைத்திருக்கலாமே... உள்ளே விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்குக் கூட தெரியாமலேயே ஒரு விழா நடப்பதற்கு அண்ணா பல்கலை எதற்கு?... அதற்கு எதாவது இலவசமாகக் கிடைக்கும் சத்திரத்தில் நடத்தியிருக்கலாமே... விழாவில் பேசியவர் எந்த பல்கலையும்... கல்வி நிறுவனங்களும் தமிழ் விக்கிப்பிடியாவை கண்டு கொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டார். எப்படி அவர்கள் உதவ முன்வருவார்கள் யாருக்கு நீங்கள் பத்தாம் ஆண்டை கடந்தது தெரியும்?... ஒரு விழா எடுக்கிறீர்கள் அழைப்பிதழ் அச்சிட்டீர்களா? எந்த கல்வி நிறுவனத்திற்காவது அனுப்பி வைத்தீர்களா? இல்லையே... மின்னஞ்சலிலாவது அனுப்பினீர்களா? கேட்டால் தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் போட்டிருக்கிறோமே என்கிறீர்கள்?... அப்படியென்றால் அந்த தளத்துக்கு வருவோருக்கு மட்டும் தான் தெரியும்? மற்றவர்களுக்கு? அரசியல்வாதிகள் வேண்டாம்... அரசுத் துறை சார்ந்த எவருக்காவது அழைப்பு அனுப்பினீர்களா? தமிழ்த் துறைக்கு, உயர் கல்வி துறைக்கு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு, செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு நீங்கள் விழா நடத்தியது தெரியுமா?... அவ்வளவு ஏன் மேடையில் நீங்கள் நடத்தும் விழாவின் பேனரையாவது நடுநாயகமாக வைத்தீர்களா? அதை ஏன் ஓரத்தில் கொண்டு போய் யாருக்கும் தெரியாமல் எந்த புகைப்படத்திலும் அது பதிவாகாத வகையில் வைத்தீர்கள். இதைக் கூட யாரும் சுட்டிக் காட்டவில்லையா? அல்லது அவ்வாறு சுட்டிக்காட்டியும் ஏற்கும் மனம் விழா ஏற்பாட்டாளர்களுக்கு இல்லையா? விழாவிற்கு எல்லோரையும் கூட்டி வாருங்கள் என்றீர்கள். வந்தவர்களுக்கு ஒரு பத்து பக்கம் அளவில் விக்கிப்பீடியா குறித்த கையேடாவது கொடுத்தீர்களா? அதை விட கேவலம் உங்களுக்கு நீங்களே ஒரு சர்ட்டிபிகேட் கொடுத்து அதில் கையெழுத்துக் கூட யாரிடம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஏற்கனவே கையெழுத்திட்டிருந்த திரு மயூரநாதனின் ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்... அரங்கம் மட்டும் நன்றாக இருந்து பயனில்லை... அதில் விழா ஏற்பாடு செய்யும் திறன் கொண்டவர்கள் விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும்... கடைசியாக ஒன்று ஆங்கில் விக்கிப்பீடியா விழாவில் நிறைய டிசர்ட் கொண்டு வந்திருந்தார்கள் ஆனால் வந்தவர்கள் குறைவு... இங்கு நடைபெற்ற விழாவில் ஒன்றும் அதிகம் பேர் வந்துவிடவில்லை. வந்த 100 பேருக்கு கூட கொடுக்க உங்களிடம் டிசர்ட் இல்லை... அல்லது கொடுக்க மனம் இல்லை... மொத்தத்தில் தடை செய்யப்பட்ட குழுக்கள் கூட்டம் நடத்துவது போல் விழா ரகசியமாக நடைபெற்று முடிந்தது... நல்லவேளையாக இன்று காலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிலில் செய்தி வந்திருந்தது... (மற்றதிலும் வந்திருக்கும்...) விழா முடிந்த பிறகு செய்தி வந்து என்ன பிரயோஜனம்... வாழ்க விழா ஏற்பாட்டாளர்கள். வளர்க தமிழ் விக்கிப்பீடியா... பின்குறிப்பு: கவலைப் படாதீர்கள் 15 ஆம் ஆண்டு விழாவிற்கு இதைவிட ரகசியமான ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாமல் நடத்துங்கள் அப்போது கூட 200 பேர் வருவார்கள். அதுவே மிகப்பெரிய சாதனை என்று முழங்கலாம்... (என்னுடைய கட்டுரையை இங்கிருந்து அகற்றினாலும் எனக்கு கவலையில்லை... எனது முகநூல் பக்கத்திலும், எனது வலைதலங்களிலும் இதனை வெளியிட இருக்கிறேன்... அப்படியாவது நாலு பேர் இப்படி ஒரு விழா ரகசியமாகவேனும் நடைபெற்றதே என்று அறியட்டும்)
புருனோ கருத்துசார், உங்கள் மொழி நடை சரிதானா என்று நீங்கள் மற்றொரு முறை சரி பார்த்துக்கொள்ளவும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:55, 1 அக்டோபர் 2013 (UTC) அருண்தாணுமாலயன் அவர்களின் கருத்து
அரங்கில் இருந்தவர்கள் இதனை அறிவர். .
கொடுக்கப்பட்டுள்ளது.புதிதாவும் ஆர்வமுடைய சிலர் வந்திருந்தனர்.
இரவியின் மறுமொழிசேகரன், நிகழ்வு அரங்கு குறித்து இன்னும் தெளிவான வழிகாட்டலைத் தந்திருக்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறேன். நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் உங்களின் மற்ற கருத்துகள் குறித்து இன்னும் ஓரிரு வாரத்தில் விரிவாக மறுமொழி அளிக்கிறேன். அதுவரை மற்ற பயனர்களும் இவ்விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றாமல் பொறுத்திருக்க வேண்டுகிறேன். மற்றபடி, தங்களின் தனிப்பட்ட கருத்துகள், விமரிசனங்கள், பரிந்துரைகளைத் தனியே இதன் கீழே தாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 20:43, 30 செப்டம்பர் 2013 (UTC) 29 செப்டம்பர் 2013, சென்னை. தமிழ் விக்கிபீடியாவின் பத்து ஆண்டு நிறைவு விழாவை கொண்டா டும் விதமாக பலநாடுகளை சேர்ந்த பங்களிப்பாளர்கள் நேற்று சென்னை அண்ணாபல்கலைகழகத்தில் ஒன்று கூடினர். நேற்றைக்கு முந்தைய நாள் பங்களிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பேருந்து மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று இதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளனர். மேலும் இதுபற்றி பங்களிப்பாளர் ரவிசங்கர் கூறும்போது. இதில் 935 பங்களிப்பாளர்கள் எட்டியுள்ள தமிழ் விக்கிபீடியாவில் ஏறத்தாழ இரண்டு கோடி சொற்களை கொண்ட 55,475கட்டுரைகள் பதிவேற்றம் செய்துள்ளோம் என்றும், பலநாடுகளை சேர்ந்த 11 வயது முதல் 77 வயது வரையிலான பங்களிப்பாளர்கள் எழுதிவருவதாக கூறினார். நாளொன்றுக்கு 1,75,00 முறைகளுக்கு மேல் தமிழ் விக்கிப் பீடியா படிக்கப்படுகிறது. தமிழ் விக்கிபீடியாவை செறிவாக்குவதற்கு கட்டுரை ஆக்குநர்கள் தவிர வரைகலையாளர்கள், ஒளிப்படக்காரர்கள், மொழிப்பெயர்ப்பாளர்கள் பல்வேறு பிண்ணனியில் உள்ளவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. முதன்மையான கோரிக்கையாக தமிழ் விக்கிபீடியா அறிமுகத்தை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் மாணவர்களுக்கு பயனாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் இந்திய விக்கிப்பீடியா கிளை மேலாளார் திருமூர்த்தி, கனடா வாட்டர்லு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் செல்வக்குமார், மொழி பெயர்ப்பு குறித்து ஆழிப்பதிப்பகத்தின் சே.ச.செந்தில்நாதன், ஒளிப்படக்கலைக் குறித்து ஹரிபிரசாத், கட்டற்ற மென்பொருள் இயக்கம் குறித்து அருண்குமார் ஆகியோர் பேசினர். தமிழ் விக்கிபீடியாவின் நிறைவுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசு ரூ30000 வழங்கப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டங்களைக் கொண்டாடி முடித்திருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சி குறித்த என்னுடைய சில கருத்துக்களை இங்கே பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். பாராட்டுகள் நிகழ்ச்சியினை வடிவமைத்து செயல்படுத்திய இரவியின் செயல்பாட்டுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். அவருக்கு உதவிய அனைத்துப் பயனர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். சிறப்புகள்
குறைகள்
கருத்து இங்கு சுட்டிக்காட்டியிருப்பது போல் மேலும் சில குறைகள் இருக்கலாம். இந்தக் குறைகள் எல்லாம் இங்கு சுட்டிக்காட்டிருப்பது யாரையும் குறை சொல்வதற்காக அல்ல. இது போன்று அடுத்து ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்யும் நிலையில் இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க உதவும் என்கிற எண்ணத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகிறது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:23, 1 அக்டோபர் 2013 (UTC) தேனியார் கூறியபடி தங்கும் இடம் அற்புதம்.குடிநீர் வசதி,குறைந்த செலவில் அருமையான உணவு கிடைக்கும்படி அண்ணா பல்கலைகழகத்தில் தங்கும் இடம் ஏற்பாடு செய்திருந்தது , குளிரூட்டப்பட்ட அறை , சுகாதாரமான இடம் , பாதுகாப்பான இடம் என சிறு குறை கூட சொல்ல முடியாது.இப்படிபட்ட ஏற்பாட்டை செய்த இரவி அவர்களுக்கு மிக்க நன்றி.மேடையில் மட்டும் சில சொதப்பல்கள் இருந்தன . தெளிவான ஒருங்கிணைப்பு இல்லை.எல்லோரும் ஒரே நேரத்தில் மேடை ஏறுவது இல்லையேல் யாருமே இல்லாமல் இருப்பது என்பது மட்டும் குறை. சோடாபாட்டில்ஞாயிரன்று நடந்த நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தன. முழுத்திட்டம், நோக்கு என்பதை நான் சரிவர அறியவில்லை என்பதால், அரங்கில் என்ன செய்திருக்கலாம் என்று தோன்றியதை மட்டும் கீழே தருகிறேன்: அரங்கின் வெளியில் சில மேசைகளிட்டு அங்கு ஒரு நான்கு பயனர்கள் எப்போதும் கணினி + இணையத்துடன் அமர்ந்து புதியவர்களுக்கும், ஐயமிருப்பவர்களுக்கும் நேரடிப் பட்டறை போன்று எடுத்திருக்கலாம். கட்டும்படியான விலையில் வைஃபை கிட்ட வில்லையென நினைக்கிறேன். 2010 இல் செம்மொழி மாநாட்டு அரங்கில் இரவி ஏற்பாடு செய்தது போல கிண்டிக் கல்லூரி மாணவர்களை மடிக்கணினியோடு (தினப்படி அளித்து) ஏற்பாடு செய்திருந்தால், ஒரு தொடர் பட்டறை போன்று முன் ஏதாவது நடந்து கொண்டிருக்கும். அவர்களுடன் நாம் ஒரு நான்கைந்து பேர் முன் அமர்ந்து ஒரு “விக்கி உதவி மேசை” (live helpdesk) போட்டார் போல இருந்திருக்கும். --சோடாபாட்டில்உரையாடுக 03:56, 1 அக்டோபர் 2013 (UTC) புருனோவிமர்சனங்கள் என்பது உரையாடல் தானே எனவே உரையாடல் பக்கத்தில் நடத்துவது பொருத்தம் என்பது என் கருத்து #1. இந்த நிகழ்ச்சியை மேலும் மேம்படுத்த கீழ்க்கண்ட ஆலோசனைகளை வழங்குகிறேன் 2. இந்த நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட குறைகள் உள்ளன இரண்டும் வெவ்வேறு அர்த்தம் கொண்ட வாக்கியங்கள் இரண்டும் ஒன்று தான் என்று நினைப்பவர்கள், தயவு செய்து உங்கள் மொழி அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் -oOo- 1. I propose the following suggestion to improve this program 2. The program has following flaws The meaning of both these sentences are not the same If you think that they are same, it is time to improve your language, please ! புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 04:26, 1 அக்டோபர் 2013 (UTC)
##எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அங்கு சுட்டிக்காட்டப்படும் குறைகள் குறித்த விமர்சணங்களை நான்கு விதமாக பகுக்கலாம் 1. முதல் வகை : அந்த நிகழ்ச்சி குறித்து சரியான புரிதலோடு, அடுத்த முறை சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கூறப்படும் ஆலோசனைகள். (suggestion to improve this program) உதாரணமாக : மகாபலிபுரம் செல்லாமல் சென்னையில் இருக்கும் எழூம்பூர் அருங்காட்சியகம் சென்றிருக்கலாம், முதல் நாள் நிகழ்ச்சியும் இரண்டாவது நாள் சுற்றுலாவும் செல்லலாம் . . . 2. இரண்டாவது வகை : அந்த நிகழ்ச்சி குறித்து சரியான புரிதலோடு, அடுத்த முறை சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கூறப்படும் குறைகள். (program has following flaws) உதாரணமாக : Master of Ceremony இல்லை. Compere செய்ய ஆள் இல்லை. பல்கலைகழக வாயிலில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை கோடு போட்டிருக்கலாம் முதலிரண்டு வகைகளையும் ஆங்கிலத்தில் இவற்றை Constructive Criticism என்று அழைப்பார்கள் 3. மூன்றாவது வகை : அந்த நிகழ்ச்சி குறித்த புரிதலின்றி, தாங்களாகவே இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு, கற்பனையின் அடிப்படையில் கூறப்படும் குறைகள் முதலில் இது பொதுக்கூட்டமோ, பொதுக்குழுவோ, மாநாடோ அல்ல. இது விக்கிபயனர்களில் கூடல். அவ்வளவே. ஒரு சர்தார்ஜி கடைக்கு கோபமாக வந்து. “என்னை ஏமாற்றி விட்டாய், இதில் டி டி ஸ்போர்ட்ஸ் தெரியவில்லை” என்று கத்தினாராம், கடைக்காரர் சொன்னாராம் “இது ரேடியோ, டி டி ஸ்போர்ட்ஸ் பார்க்க வேண்டுமென்றால் டிவி வாங்க வேண்டும்” இங்கும் இதை போல் பல குறைகளை காண முடிகிறது இது Unconference முறையில் நடத்தப்பட்ட ஒரு family reunion (ரேடியோ) . இதை ஒரு மாநாடாக (டிவி) பாவித்து, மாநாடு இப்படி நடக்கவேண்டும். இந்த நிகழ்வு அதன்படி நடக்கவில்லை (டிடி ஸ்போர்ட்ஸ் தெரியவில்லை) என்று கூறுவது புரிதல் குறைவையே காட்டுகிறது என்பது என் கருத்து 4. நான்காவது வகை : புரிதல் இருக்கிறதோ, புரிதல் இல்லையோ, குறை சொல்லவேண்டும் என்பதற்காக காரணங்களை அடுக்குவது :) :) இதை மேலாண்மை வகுப்புகளில் Steam Boat Testing Critics என்பார்கள். அதாவது என்ன செய்தாலும், அதை விடுத்து மற்றொரு குறையை கூறுவது first the critics told The boat won't start , - Engine started . Then they told it won't move - The boat start to move , They told it won't go fast - Its gained speed and was going very fast , finally they told " He can't stop it " - so critics are always critics. what ever evidence you show, they won't mind, they just want to criticize . என் வேண்டுகோள் இது தான் : மூன்றாவது மற்றும் நான்காவது வகை குறைகளை புறந்தள்ளிவிட்டு, முதலிரண்டு வகை குறைகளை மட்டும் கணக்கில் எடுங்கள். அப்படி செய்தால் தான் அடுத்த முறை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 23:01, 2 அக்டோபர் 2013 (UTC)
சுந்தர்ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மதிப்பிடும் முன்னர் அதன் நோக்கத்தையும் சூழலையும் மனதிற்கொண்டு செய்ய வேண்டும். அவ்வகையில் என்னுடைய கருத்துகள் கீழே. -- சுந்தர் \பேச்சு 08:03, 1 அக்டோபர் 2013 (UTC) நோக்கம்முன்னுரிமை வரிசையில் இந்த நிகழ்வின் நோக்கங்கள்:
சூழல்
கருத்துகள்
![]() இனிதே நிகழ்ந்தது. முதல் முறையாக இத்தனை பயனர்கள் ஒன்றுகூட முடிந்ததே பெரிய வெற்றி. நல்கைத் தொகையும் கிடைத்ததால் எவருக்கும் செலவு பெரிய சிக்கலாக இல்லை. நேரம் வாய்க்காததால் நற்கீரன், கார்த்திக்பாலா, சிவக்குமார் போன்ற சில பயனர்களால் கலந்துகொள்ள முடியவில்லை. சோடாபாட்டிலும், பூவும் இரண்டாவது நாள் மட்டும் வரமுடிந்தது. ஒரு அரங்குக்குள்ளேயே இரு நாட்கள் இருப்பதைக் காட்டிலும் மாமல்லபுரம் சென்றுவந்தது ஒரு நல்ல மாறுதல், நட்புறவுகளைப் பேண வாய்ப்பு. பல சுவையான தகவல்கள் தெரிய வந்தன. கபிலன் கூறுகையில் அவரது மாணவர் ஒருவர் வீட்டுப்பாடத்தை விக்கியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தியிருந்தார் என்றும் அதில் [தொகு] என ஒவ்வொரு பத்திக்கு அருகிலும் இருப்பதைக் கொண்டே அவர் தமிழ் விக்கிப்பீடியாவைக் கண்டுபிடித்தார் என்றும் சொன்னார். :) பேருந்தில் வட்டமாக அமர்ந்து பேச வாய்ப்பில்லாததால் கடற்கரையில் இதற்கென நேரம் ஒதுக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தங்குமிடமும் நல்ல வசதியாக அமைந்தது. நிகழ்ச்சி நடந்த இடமும் சென்னையில் எளிதில் அணுகக்கூடிய இடம். கட்டுரைப்போட்டியும் ஒரு நல்ல தொடர்முயற்சி. சட்டைகள் வடிவமைப்பு நன்றாக இருந்தது. நம்பிக்கை அடிப்படையில் கையெழுத்து எதுவும் வாங்காமல் சட்டைகளைக் கொடுத்தபடியால் விக்கிப்பீடியர் அல்லாத சிலர் எடுத்திருக்கும் வாய்ப்பும், சிலருக்குக் கிடைக்காமல் போன வாய்ப்பும் ஏற்பட்டது. யாராவது ஒருவர் அந்தப் பொறுப்பைத் தாமாக முன்வந்து ஏற்றிருக்கலாம். மதியத்துக்குப்பிறகு சட்டைகள் அங்கேதான் இருந்தன. மயூரநாதன் தானாக அனைவருக்கும் சாவிக்கொத்து ஒன்றை வழங்கியது நல்ல நினைவுப்பரிசு.
![]() சனிக்கிழமை இரவு தற்செயலாக விசுணுவர்தன் (CIS A2K), சௌமியன் (விக்கிமீடியா இந்தியா) போன்றோருடன் ஒரு சில பங்களிப்பாளர்கள் சந்தித்துப் பேச முடிந்தது. இவர்கள் இருநாட்களிலும் மேலும் பல விக்கிப்பீடியர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். இது இருவழியுறவை மேம்படுத்தும். தெலுகு விக்கிப்பீடியர் இரஃகீம் கூடவே தங்கியிருந்து நிறைய தகவல்களைப் பகிர்ந்தார். மேடையிலும் சிறிது பேசினார். நிகழ்வு முடிந்தபிறகு நமக்கு ஓர் அறிய வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலை நெறிப்படுத்தி முதலில் தொலைநோக்குத் திட்டங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். மொழிநடை பற்றிய சிக்கல்களைப் பற்றிய பேச்சு நீண்டுவிட்டதால் அந்த வாய்ப்பில்லாமல் போனது சிறு குறை. வருங்காலத்தில் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
![]() விக்கிமீடியா நிறுவனத்திடம் முன்வைத்த பரிந்துரை மிகச் சிறப்பாக இருந்தது. இருந்தாலும் காலம் குறைவாக இருந்ததால் பணம் கைக்கு வரும்வரை ஈடுகட்ட இரவி சற்று சிரமப்பட வேண்டியதாயிற்று. தெலுங்கு விக்கிப்பீடியா, CIS A2K, விக்கிமீடியா இந்தியா தவிர செல்வாவின் நண்பரும், தமிழ் விக்கிப்பீடியாவின் நலம்விரும்பியுமான முனை.ப.அர.நக்கீரனுடன் (தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குனர்) நிகழ்வுக்கு முன்னால் நிறைய பேச முடிந்தது. மயூரநாதனும் செல்வாவும் இரவியும் நானும் ஓரிரு நாட்கள் முன்கூட்டியே வந்தபடியால் இதுபோன்ற பணிகளைச் செய்ய முடிந்தது. அதன்வழியாக சில முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவரே தானாக முன்வந்து த.இ.கழகத்தில் விக்கிப்பீடியாவில் பங்களிக்க உதவும் கணி வசதியைச் செய்து தருவதாகச் சொல்லியுள்ளார். செல்வாவின் முன்னெடுப்பில் முனை.நக்கீரனின் துணையுடன் பேரா.வா. செ. கு. அவர்களைச் சந்தித்துப் பேசி தமிழ் வளர்ச்சிக் கழகக் கலைக்களஞ்சியத் தொகுப்பை கொடையாகப் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எத்தகைய பெரிய விளைவு என்பது கூடிய விரைவில் தெரிய வரும். உத்தமம் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டம் நடத்தி அதில் செல்வா உரையாற்றினார். தொடர்ந்து நடந்த உரையாடலில் பலரும் மிகமிக ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். நம்முடன் ஒத்த நோக்குடைய இலினக்சு மற்றும் கட்டற்ற மென்பொருள் அமைப்பினருடன் நல்ல உறவு மேம்பட்டுள்ளது. சீனிவாசன் நிறைய உழைத்தார், நாமும் கலந்துரையாடலின்போது அவர்களுடைய கருத்துக்களைப் பெற்றோம்.
![]() புதன்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பையடுத்து மிகப்பல செய்திக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பி.பி.சி. தமிழோசையிலுங்கூட செவ்வி வந்திருந்தது. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. நிகழ்ச்சியன்றும் பல ஊடகங்களில் இருந்து வந்திருந்தனர். விக்கி முறைப்படி அவரவர் அங்கிருந்த விக்கிப்பீடியர்களிடம் பேசினர். அதனால் பல்வேறு விக்கிப்பீடியர்களை அவர்கள் சந்தித்துள்ளனர். இருப்பினும் ஊடகங்கள் சில சுவையான அல்லது ஊடகக்கவர்ச்சியான கதைகளைச் சொல்லவே விரும்புவதால் நம்மால் வெளியாகும் செய்தியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாது. ஊடக அறிக்கையின் அச்சடித்த தாள்களை ஞாயிறன்றும் கொடுத்திருக்கலாம், அடுத்தமுறை கவனமாக இருக்க வேண்டும். ஊடகத் தொடர்புகளைத் தந்த விசுணுவரதன், சேசன் ஏழுமலை (செல்வாவின் நண்பர்) ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் நன்றிகள். எவ்வித சிறப்பு அழைப்பும் இல்லாமல் முக்கிய வலைப்பதிவர்கள், முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள் எனப்பலர் வந்திருந்தது என்னைப் பொருத்தவரை பெருஞ்சிறப்பு. வழக்கமான சிறப்பு அழைப்பாளர் என்ற மெனக்கெடல், பரிசு கொடுத்தல், பொன்னாடை போர்த்தல் என எதுவும் இல்லாமல் தாமாக அக்கறையுடனும் அன்புடனும் நம் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் வந்தது ஒரு புதிய போக்கை நிறுவும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. வந்தவர்களில் நாம் கண்டு பேசியிருக்கவோ, மேடையில் பேச அழைக்கவோ வேண்டியவர்கள் (எ.கா. திரு.வி. சுந்தரேசுவரன்) இருந்தது தெரிந்த விக்கிப்பீடியர்கள் அவர்களாக முன்னே வந்து அவர்களை அறிவிப்பாளரிடம் அறிமுகப்படுத்தும் முறையை வருங்கால நிகழ்வுகளில் கையாள வேண்டும்.
![]() முதலில் நிகழ்வு தொடங்கும்போது தமிழ் விக்கிப்பீடியர்கள் பலரும் இல்லாதது ஒரு குறை. அதனால் சில பணிகளுக்கு ஆளில்லாமல் இருந்ததும் வருந்தத் தக்கது. அதற்கு என்ன செய்யலாம் என்பதைக் கீழே தனியாகச் சொல்கிறேன். முதலில் சிவகோசரனும் சூரியாவும் தந்த பட்டறை நன்று. ஆழிப் பதிப்பகத்தின் செந்தில்நாதன் உரை மிகமிகப் பொருத்தமான ஒன்று. மொழிபெயர்ப்பு பற்றிய துறையறிவையும் பட்டறிவையும் பகிர்ந்தது பயனுள்ளது. முதல்முறையாக விக்கிக்கு வெளியே ஒரு குரல் நமது நடைத் தேர்வையும் சொல்லாட்சிக் கொள்கையையும் ஏற்றது மகிழ்ச்சி. பிறகு தனியாகப் பேசும்போது அவருக்கு இருக்கும் வணிகக் கட்டாயம் நமக்கு இல்லாததால் நாம் இதைத் தொடர வேண்டும் எனத் தோன்றியது. பரப்புரை பற்றிய பல பார்வைகள் நமது ஒத்த அமைப்புகளிடம் இருந்து வந்தது சிறப்பு. அது கலந்துரையாடலாக அமையாவிட்டாலும் பல கருத்துகள் வெளிவந்தன. சீனிவாசன், சிபி, அருண் ஆகியோரின் பேச்சிலிருந்து மாணவர்களை அணுகுவதைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டோம். இரண்டாவதாக நடந்த கூட்டுரையில் முனை.நக்கீரன் பல சிறப்பான அறிவிப்புக்களை வெளியிட்டார். (அதில் பல நாம்கூட கேட்டிராதது, உணவு இடைவேளையின்போது அவராகவே இது இருந்தால் உங்களுக்குப் பயனாக இருக்குமல்லவா எனக் கேட்டுக் கொண்டார்!) வாழ்த்திப் பேசிய மணி மணிவண்ணன் (உத்தமத்தின் தலைவர்), நாக.இளங்கோவன் போன்றோர் சிறப்பான கருத்துக்களை முன்வைத்தனர். இராம.கி. ஐயா தனது ஆதங்கத்தைக் காட்டினார், அதற்கான விளக்கத்தை மேடைக்கு வெளியே செல்வா தந்தபடியால் அவரும் தெளிவுபெற்றார். பார்வதி, அபிராமி, நந்தினி ஆகியோர் மேடைக்குக் கீழே இருந்து உதவினர். பங்களிப்பாளர் அறிமுகம் சிறப்பு. அதை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவாகவும் வந்திருந்தவர்களை மேடைக்கு அழைத்தும் செய்ய முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு இனிமேல் பல வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன். மயூரநாதனின் தொலைநோக்கு உரை மிக மிக நன்று. சாலப் பொருத்தம். நிகழ்ச்சியில் பேச விரும்பும் விக்கிப்பீடியர்கள் ஒரு விக்கிப் பக்கத்தில் விருப்பத்தை இடும் முறையைக் கையாளலாம். இதற்கென திறமூல வலைமென்பொருளும் உள்ளது. விக்கிமேனியாவில் பயன்படுத்தக் கண்டிருக்கிறேன். இருந்தாலும் நிகழ்வின்போது திட்டமிடாமல் பேச வேண்டியது இருக்கும். நான் பரப்புரை பற்றிய கலந்தாய்வில் விடுபட்டவற்றைக் கூற வேண்டும் என்றேன், இரவி பேசுங்கள் என்றார். பார்வதி ஒரு தலைப்பில் பேச விரும்பினார், அவரும் பேசினார். அப்படி நிகழ்வது விக்கி முறைதான். நிறைய பயனர்கள் பேச விருமபினால் பார்கேம்பு, விக்கிமேனியா போல பல அரங்குகளில் ஒரே நேரத்தில் நிகழ்வை நடத்தலாம். பார்வையாளர்களும் விரும்பும் பேச்சைக் கேட்கலாம்.
ஊடகப்போட்டியில் வென்றவரின் நிழற்பட நிறுவனத்தைப் பணியமர்த்தியது சிறப்பு. படங்கள் சிறப்பாக வந்திருக்குமென நம்புகிறேன்.
ஒருங்கிணைப்பில் இரவிக்கு சில நேரங்களில் சுமை மிகவும் கூடுதலாக இருந்தது. சீனிவாசனும் மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாதவரும் மிகவும் உதவியதால் இது சற்று குறைந்தது. இது நம் நிகழ்வு தானே? திருமண நிகழ்வு போல அல்லாமல் ஊர்த்திருவிழா போலவும் கல்லூரி விழா போலவும் தான் இதை அணுக வேண்டும். நடுவில் ஒருவரோ ஒரு குழுவோ நெறிப்படுத்தி கட்டுப்பாட்டு அறை வைத்துச் செய்யும் முறை நமக்கு ஒவ்வாது. மாறாக, இனி வரும் unconference கூட்டங்களில் ஒரு சிறு பங்களிப்பாளர் அறையும் வெள்ளைப்பலகை ஒன்றையும் போட்டு ஒரு நிகழ்வாழ்வு விக்கி போலச் செய்யலாம். ஒருவர் உள்ளே வந்து பலகையில் எழுதிவிட்டு, சட்டைகளை நான் அரங்ககுக்குக் கொண்டு செல்கிறேன் எனலாம். வேறொருவர் நான் தண்ணீருக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று எழுதலாம். ஒருவர் அறிக்கையின் பிரதிகள் உள்ளனவா? எனக் கேள்வியை எழுதி வைக்கலாம். இவ்வாறு நடந்தால் ஒருங்கிணைப்பாளரின் பணிச்சுமை குறையும், அனைவராலும் பங்காற்ற முடியும். இருந்தாலும் நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் முன்னமே கூட உள்ளூரில் போதிய பணிக்குழு வலு இல்லாமல் இருந்துள்ளது தெரிகிறது. சில பணிகளை விக்கியில் இட்டிருந்தாலும் பலருக்கு ஏற்றுச்செய்யவியலாமல் போய்விட்டது. (அவரவர் சூழலின் காரணமாகத்தான்.) இனி வரும் காலத்தில் நமது பங்களிப்பாளர் எண்ணிக்கை கூடும் என்பதால் இது சரியாகும். இயன்றவரை பணிகளை முன்கூட்டியே விக்கியில் பகிர்ந்து கொள்ள முடியுமா பார்க்க வேண்டும். அவ்வகையில் நற்கீரன், அன்ரன், பார்வதி, மணியன் போன்றோரும் (இன்னும் பலர் உதவியிருப்பார்கள், எடுத்துக்காட்டுக்கு மட்டுமே.)
நீச்சல்காரன்தேனியார் மற்றும் சோடாபாட்டிலின் கருத்துகளையே வழிமொழிகிறேன். முன்னிரவு பேருந்திலோ, அல்லது கடற்கரையிலோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பற்றி விவாதித்திருந்தால் சீர்படுத்தியிருக்கலாம். எங்கிருந்து தொடங்குவது என்ற ஐயத்தாலேயே பல விசயங்கள் என்னால் தொடங்க முடியவில்லை. --நீச்சல்காரன் (பேச்சு) 07:28, 1 அக்டோபர் 2013 (UTC) யோகிசிவம்தேனியாரின் 11 சிறப்புகள் அப்படியே... ஏற்கிறேன். இரவி அவர்களின் கடுமையான உழைப்புக்கு ஒரு பாராட்டு!!!. ஒருவரே அனைத்தையும் செய்து சோர்ந்து போனார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பற்றி விவாதித்திருந்தால் சீர்படுத்திருக்கலாம்?! திட்டமிடலில் சறுக்கலா? அல்லது திட்டமிடவில்லையா? வேலைப் பங்கீடு இல்லை. இது குறித்து இரவி அவர்களிடம் குறைந்த பட்சம் பேசியிருக்க வேண்டும். மல்லைக்கு பேருந்தில் செல்லும் போது தான் இரவி அவர்களை சந்தித்தேன். புதிய இடம், புதியகளம், அதனால் அமைதி காத்தேன். போகட்டும் எதிர்காலத்தில் மிக மிக நேர்த்தியாக தேனீயாரின் குறைகள் (11) மேலும் இன்றி அனைவரும் பங்கெடுக்கும் கற்றட்ட கலைக்களஞ்சியம் என்பதை செயலில் காட்டலாம் அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 08:08, 1 அக்டோபர் 2013 (UTC)
தென்காசி சுப்பிரமணியன்தமிழ் விக்கிப்பீடியாவின் மிகப்பெரிய கூடலை நாம் இப்போது தான் முதலில் நடத்துகிறோம் என்பதை நினைவில் வைத்து சில விடயங்களை கூறுகிறேன். அடுத்துவரும் கூடல்களில் தான் நாம் குறைகள் ஏதும் வராமல் செய்ய இயலும் என்பது என் கருத்து. மேலே அனைவர் கூறிய நல்ல விடயங்களையும் நானும் வழிமொழிகிறேன். முதல் கூடலிலேயே குறைகள் இல்லாமல் செய்ய முடியும் என்றால் எப்படி? அதனால் குறைகள் என்ற பெயரில் நான் எதையும் கூறவில்லை. அதனால் எல்லாமே ஆலோசனைகள் தான்.
ஸ்ரீனிவாசன்குறைகளுக்கான எனது கருத்துகள்
இந்த 'லாம்' களை அடுத்த முறை நீக்க, அதிக ஆள் பலம் தேவை. முதலில் ஆட்களை தந்துவிட்டு, பின் (திட்ட)மிட வேண்டுகிறேன். --Tshrinivasan (பேச்சு) 14:08, 1 அக்டோபர் 2013 (UTC) தேனி மு. சுப்பிரமணியின் பதில்நான் முதலில் குறைகள் அடுத்து வரும் நிகழ்வுகளில் இல்லாமல் இருக்கட்டும் என்பதற்காகவே தெரிவித்திருந்தேன். ஸ்ரீனிவாசன் பதிலைப் பார்த்த பின்புதான் பல உண்மைகள் தெரிய வருகின்றன.
நான் பொதுவாகத் தெரிவித்திருந்த சில குறைகள் என்கிற தலைப்புக்குப் பதிலளிக்கிறேன் என்று ஸ்ரீனிவாசன் பதிலளித்ததாலேயே நானும் எனது பதில்களைத் தொடர வேண்டியதாகி விட்டது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:06, 1 அக்டோபர் 2013 (UTC)
துரை மணிகண்டன்நடந்து முடிந்த தமிழ் விக்கிப்பீடியா 10 ஆம் ஆணடு நிறைவு விழா இனிதே நடந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திரு.ரவி அவர்களுக்குப் பாராட்டுக்கள். நிகழ்வில் என்போன்ற தமிழ் விக்கிப்பீடியாவில் அறிமுக நிலையில் இருப்பவர்களுக்கு இது போதுமானதாகக் இருக்கும் என்று கருதுகின்றேன். மேலும் இலங்கையைச் சார்ந்த திரு.சிவகோசரன் விளக்கம் தெளிவு. அடுத்து திரு.இ.மயூரநாதனின் உரை மிகவும் என்னை கவர்ந்தது. மொத்ததில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதற்கு நான் பெருமையடைகின்றேன்.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 14:28, 1 அக்டோபர் 2013 (UTC)
பார்வதி ஸ்ரீ
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:57, 1 அக்டோபர் 2013 (UTC) ஜெகதீஸ்வரன்கூடல் என்பது இத்தனை இன்பமயமானதாக இருக்கும் என்று இதுவரை அறிந்ததில்லை. முதலில் சந்தித்த ஹரீஸ் முதல் இறுதியாக சந்தித்த சோடாபாட்டில் வரை அனைத்து பயனர்களும் அன்பாக இருந்தார்கள். முகம் முழுவதும் தவழுகின்ற மகிழ்வோடு வரவேற்று உரையாடினார்கள். மல்லை சுற்றுலா இல்லையென்றால் பலருடன் அளவுளாவ நேரம் கிடைத்திருக்காது. நிகழ்வுக்கு முன்பே சௌமியன், விஷ்ணுவரதன், ரகீம், சஞ்சீவி சிவகுமார் போன்றோருடன் பேசினேன். பேருந்தில் ரீதர் ஐயா அருகில் அமரவைத்து ஒரு மகனைப் போல என்னை பாவித்து ஆசி வழங்கினார். மயூரநாதன், சிவகோசரன், ஹப்துல்லா, நீச்சல்காரன், சண்முகம், ஹரீஸ் என பலருடன் பேருந்திலேயே அளவளாவ முடிந்தது. மல்லையில் யோகிசிவம் அவர்கள் தன்னுடைய உடல்நலத்தினையும் பெரியதாக கருதாமல் எங்களுக்கு வழிகாட்டியதை குறிப்பிட்டே ஆகவேண்டும். துரை மணிகண்டன், மணிகண்டன், தேனியார், செல்வா, தகவல்உழவன் போன்றோருடன் ஐந்துரதத்திற்கு செல்லும் போது அளவுளாவும் வாய்ப்பு கிடைத்தது. செங்கை ஐயா, அம்மா, தமிழ்பரிதி போன்ற பலருடன் மல்லையின் கடற்கரையில் அளவுளாவினேன். (எனக்கு சற்று ஞாபகமறதி வியதி இருப்பதால் பெயர் விடுப்பட்டிருப்பவர் மன்னிக்கவும்) விக்கி கூடலன்று பூங்கோதை அம்மாவின் ஆசிகள் கிடைத்தன. சோடபாட்டில், தென்காசியார், தினேஷ்குமார் பொன்னுசாமி போன்றோருடன் பேசினேன். நிகழ்வினை காணுவதற்கு அமர்ந்துவி்ட்டதால் கூடலன்று வெகுசிலருடன் மட்டுமே பேசும் வாய்ப்பு கிடைத்தது. இரவி, பார்வதி, சுந்தர், சூரியபிரகாஸ் மற்றும் பலரை நேரில் கண்டும் உரையாட வாய்ப்பு கிடை்ககவில்லை. (நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை) ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட விக்கிப்பயனர்களை காணவும், உரையாடவும் கிடைத்த நல்வாய்ப்பினை என்னும் நினைவில் வைத்திருப்பேன். அனைவருக்கும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:05, 1 அக்டோபர் 2013 (UTC)
வத்சன்34மிகவும் அருமையான நிகழ்ச்சி! செல்வா அவர்களுடன் நான் ஃபேஸ்புக் தமிழாக்கத்தில் பணியாற்றிய காலங்களில் ,தமிழ் மொழி அல்லாது பல்வேறு மொழிகளில் அவரது புலமையை கண்டு வியந்துள்ளேன்.அவரை நேரில் சந்தித்ததோடு அல்லாமல், அவரே என் பெயரை கேட்டதும் ஆச்சரியப்பட்டது, எனக்கு பெருமையாக இருந்தது. பல்வேறு தமிழ் விக்கிப்பீடியர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இதே போல் விக்கிப்பீடியர்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கவும், வருடத்தில் ஒரு முறை, இவ்வாறு கூடலாம். மற்றும் இலங்கை தமிழருடன் பேசியது இதுவே எனக்கு முதல் முறை. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இரவி, சுந்தர் மற்றும் அனைவருக்கும் எனது நன்றி.-Vatsan34 (பேச்சு) 17:01, 1 அக்டோபர் 2013 (UTC) சூர்யபிரகாஷ்கருத்துகள் வளர்முகமாக (பூனை தன் குட்டியைத் தூக்குவது போல) இன்றி மிகவும் விலகிச் செல்வதால் (புலி எலியைத் தின்பது போல) நான் சில (கூறக்கூடாத) விளக்கங்களையும் நிகழ்வுகளையும் கூறவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இதனை நான் சில பிரிவுகளாகக் கூற விரும்புகிறேன்.
தினேஷ்குமார் பொன்னுசாமிதமிழ் விக்கியின் பத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. சனிக்கிழமையன்று தேர்வு இருந்ததால், ஞாயிறன்று மட்டும் கலந்துகொண்டேன். நான் பங்குபெறும் விக்கி சார்ந்த முதல் கூடல் இதுவே. ஆரம்பத்தில் சற்று தயக்கத்துடன் ஓரிரு விக்கிப்பீடியர்களிடம் பேசத்துவங்கினேன். முதல்முறை தன்னலமற்ற, கட்டற்ற கலைக்களஞ்சியத்திற்காக பங்களிக்கும் பல பயனர்களை ஓரிடத்தில் கண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி. இன்னும் ஒரு நாள் முன்னரே வந்து அனைவரிடமும் பேசியிருக்கலாம் என்றே எண்ணினேன். மயூரநாதன், செல்வா, நக்கீரன் (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்), பூங்கோதை, அவர்களுடைய மகன் சோடாபாட்டில் (:D), நீச்சல்காரன்,சண்முகம், தகவலுழவன், பார்வதிஸ்ரீ, அபிராமி, நந்தினி, துரை மணிகண்டன், மணி. மணிவண்ணன், ஜெகதீஸ்வரன், சூர்யபிரகாஷ், தென்காசி சுப்ரமணியன், தேனி எம். சுப்ரமணி, போன்றோரிடம் சற்று அதிக நேரமும், இரவி, சுந்தர், சிவகோசரன், யுவராஜ் பாண்டியன், கிருஷ்ணபிரசாத், v.b.மணிகன்டன், ஸ்ரீதர், விஷ்னுவர்தன், சௌமியன், ரகீம் (தெலுங்கில் :D), சஞ்சீவி சிவகுமார் ஆகியோரிடம் சற்று குறைவான நிமிடங்களும், புருணோவிடம் என்னை அறிமுகம் செய்துகொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. குறைகளென்று எதுவும் எனக்கு தெரியவில்லை.. நிறைகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கமே உள்ளது. அடுத்த முறை நடைபெறும் கூடலில் இரண்டு அல்லது மூன்று நாட்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்விழாவினை சிறப்பாக நடத்திய, நடைபெற நேரடியாக, மறைமுகமாக, உதவிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. எனக்குத் தெரிந்து, தமிழை மையமாகக் கொண்டு இணையத்தில் பங்குபெறும் அனைவரும் கூடிய மிகப்பெரிய நிகழ்வு இதுவே..! வாழ்க தமிழ்! வளர்க விக்கிப்பீடியா! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:25, 1 அக்டோபர் 2013 (UTC) முதல்வா கருத்துவிக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவுக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளூம் வாய்ப்பை முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் எனக்கு ஏற்படுத்திகொடுத்தமைக்காக அவருக்கு முதலில் நன்றியைத்தெரிவித்துகொள்கிறேன்.இந்த நிகழ்வு ஒரு முறையான தமிழ் விழவுபோல் அல்லாமல் மிக இயல்பாக அமைந்தது தனிச்சிறப்பு என்றால் அது மிகையாகாது. இது ஒரு நல்ல துவக்கம்.பழமையை விடுத்து காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய சிந்தனைகளையும்,புதிய முயற்சிகளையும் புகுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்தது. விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நிகழ்வின் இறுதியில் கேக் வெட்டிக்கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.சில பங்களிப்பாளர்கள் குறிப்பிடுவதுபோல் பெரிதாக ஒன்றும் குறைகூற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இது ஒரு தன்னார்வ அமைப்பு. இதில் ஒவ்வொருவரும் விரும்பி வந்து பணிகளைத் தானே ஏற்கவேண்டும். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் விழைவாக எங்கள் பல்கலையில் நான் செல்லும் வகுப்புகளில் மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவின் செயல்பாடுகளையும் அதில் பங்கெடுத்துச் செல்பவர்களையும் குறிப்பிட்டு மாணவர்களும் இதில் பங்கெடுக்க முயற்சி செய்து வருகிறேன். அந்த வகையில் அடுத்த வார இறுதிக்குள் சுமார் 230 கட்டுரைகளை வழங்க எனது மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடைபெற்ற 12-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் எங்களது பல்கலைக்கழகத்திற்கு உத்தமம் மாணவர் அமைப்பு தொடங்க அனுமதி பெற்றுள்ளேன். அதன் தொடக்க விழா விரைவில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறேன். அந்த விழாவிலும் விக்கிப்பீடியா குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டு சில முன்னெடுப்புகளை தொடங்கிவிட்டேன். இது போன்று தன்னார்வ முனைப்பில் அந்தந்தப் பகுதியில் இருக்கும் விக்கிப்பீடியர்கள் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டுமாய் மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவுக்கொண்டாட்டத்தை சிறந்த முறையில் அமைத்திருந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றிகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிற்றெறும்பு செங்கைப் பொதுவன்
வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் நடத்திப்பார் என்பார்கள். பம்பரமாகச் சுழன்ற மாணாக்கர் - பயனர்கள் ஊதா பனியனை முதலிலேயே அணிந்திருந்ததால் என்ன ஐயப்பாடு எழுந்தாலும் அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள எளிதாய் இருந்தது. பெயர் மட்டும் தெரியும் முகம் தெரியாது என்ற நிலையில் ஒருவரை ஒருவர் விரைவாகப் புரிந்துகொள்ள அவர்களின் உதவி பெருந்துணையாய் அமைந்தது. எனவே பிற்பகலில் பனியன் வழங்கியதைப் பெருங் குறையாகப் பட்டியலிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. நிகழ்ச்சி நிரலை எழுதி வைத்துக்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில் கூட திணறல்கள் ஏற்படும். அமைப்பாளர்கள் திட்டமிட்ட வரிசையில் குறிப்பிட்ட நேரப்படி நிகழ்ச்சியைத் தொடர்ந்தது பெரிதும் பாராட்டத்தக்கது. மதியம் காலம் சில நிமிடங்களைக் கடந்தபோது அதற்கான காரணத்தையும் கூறிவிட்டு பேசியதில் என்ன தவறு இருக்க முடியும் ? விடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமை கல்லூரி உணவகத்தைத் திறக்கச் செய்து குறைந்த விலையில் மதிய உணவினை ஏற்பாடு செய்ததை மறக்கவே முடியாது. இவ்வசதி இல்லை என்றால் உணவிற்காக அடையாறு வரை சென்றிருக்க வேண்டும். தனித்தனியாகப் பயனர் அறிமுகம் மேடையில் செய்திருந்தால் குழப்பமே முடிவாக இருந்திருக்கும். ஏனெனில், சிலர் காலையிலும், தாமதமாகவும், சிலர் மாலையிலும், வந்திருந்த சிலரும் சொந்த வேலையாக வெளியே சென்று வந்த சூழலே நிலவியது. பிற்பகலில் கூட்டத்தைத் துவங்கியபோது காலை நிகழ்ச்சிகளின் தொகுப்பாக எடுத்துரைத்ததும் போற்றத்தக்கது. எந்தவிதமான தொய்வுமின்றி விழாவைத் தொடர்ந்து நடத்தியதும் பாராட்டுக்குரியது. வருகை தந்தவர்கள் பலர் பல்வேறு வகைகளில் முக்கியமானவர்கள். மேடை ஏற்றினால் எல்லோரையுமே மேடையில் அமரச் செய்திருக்க வேண்டும். முடிந்தவரை தக்கோருக்கு உரியவகையில் சிறப்பளிக்கவே செய்தனர். மாலை போடல் / துண்டு அணிவித்தல் போன்ற அபத்தங்கள் இல்லாதது பெருஞ் சிறப்பெனவே கூறிட விழைகின்றேன்.தேவைப்பட்ட நேரங்களில் மட்டும் நாற்காலிகளை மேடையில் போட்டிருந்தால் யாரும் குறை சொல்லியிருக்க இயலாது. ஈரோட்டிற்கு கவிஞர் தமிழன்பன், மதுரைக்குப் பெரியவர் தமிழண்ணல் என்பதுபோல் சென்னைக்கு முதுபெரும் தமிழறிஞர் செங்கைப் பொதுவன் அவர்கள மூலமாக, தமிழில் விக்கிப்பீடியாவைத் துவக்கிய மயூரநாதன் கையெழுத்திட்ட சான்றிதழை உரியோருக்கு வழங்கிய மாண்பினை பங்கேற்றோர் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அவர் விக்கிப்பீடியாவிற்கு ஆற்றிவரும் பணிக்காகவே தனியாக ஓர் விழா எடுக்கவேண்டும். அதுவே ஓர் சிறந்த பயிற்சிப் பட்டறையாகவும் இருக்கும். இந்நிகழ்சியையைக் குறைமட்டுமே சொல்வோர்க்கு, செங்கைப் பொதுவன் பேசியதன் கருத்தை மட்டுமே பதிலாகக் கொள்ள வேண்டுகின்றேன். செங்கைப் பொதுவன் பேசியது :- "நான் வழங்கிய சான்றிதழ்களை ஒவ்வொருவரிடமிருந்தும் நானே பெற்றுக்கொண்டதாக எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.". கூட்டு முயற்சிக்குத் தேவையான தன்னடக்கம்.
சஞ்சீவி சிவகுமார்ஒரு பாரிய நிகழ்ச்சியை நடாத்துவதில் உள்ள பழுவும் வலியும் பெரியது. பலரும் தனிப்பட்ட பணிச்சுமையுடன் குமையும் இக்கால கட்டங்களில் வெற்றி தரக்கூடிய, தமிழ் விக்கியின் எதிர்காலத்தை வெளிச்சப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வை நடாத்தியுள்ளோம் என்பதே என் முடிபு. இதில் பலரும் பலவகைப் பங்களிப்பை செய்துள்ளனர். ஆயினும் அதிக பணிகளை முன்னின்று தொடர்ந்த இரவி, சூரிய பிரகாசு முதலானவர்கள் மனங்கொள்ளப் படவேண்டும். பாராட்டப் படவேண்டும். கூடலை ஒட்டி பல வெற்றிதரக்கூடிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. அவை த.விக்கியின் எதிகால வளர்ச்சிக்கு மிகத்துணையாக அமையும் என நம்புகின்றேன், கூடிப்பயிரிடுவோம்; மிளிர்க நலம். குறைகள் இருந்தது தான். பார்வையாளர் அரங்கில் அமர்ந்துகொள்ளாமல் மேடை ஒழுங்கில் நானும் பங்குபற்றியிருக்கலாம் என திரும்பும் பயணிப்பின் போது எனக்குள் ஒரு குற்ற வருடலும் இருந்தது. பொறுப்புக்களை யாரும் பகர்ந்து தந்தால் தான் செய்யலாம் என நினைப்பது சரியல்ல.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:42, 2 அக்டோபர் 2013 (UTC) தகவலுழவன்நண்பர் சேகரனுக்கு!மிகவும் வெளிப்படையாக தங்கள் எண்ணங்களை, புகுபதிகை செய்து வெளிப்படுத்தியமைக்கு, முதலில் நன்றி கூற விரும்புகிறேன். ஏனெனில், இச்சமூகம் வளர்ச்சியை நோக்கியது. சமூகம் என்பதை விட குடும்பம் என்றே நான் கூறுவேன். இக்குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே இருந்த எங்களுக்கு, நேரில் பார்த்துக் கொண்ட போது ஏற்பட்ட மனத்துள்ளலுக்கு, எல்லைகளே இல்லை. இத்தகைய மனத்துள்ளல் ஏற்படும் என்று எங்களுக்குத் தெரிந்து இருந்தால், இன்னும் பலர் இதற்காக உழைத்திருப்பர். எதிர்காலத்தில் உங்களது பல சுட்டல்கள் இருக்காது. இது முதல் கூடல். முதல் கொண்டாட்டம். கட்டற்ற குடும்பம் என்பதால், கட்டுபாடுகளற்றவர்கள் என்பது பொருளல்ல. இங்குள்ள தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டிருந்தால் ஓடோடி வந்து உதவியிருப்பர். ஒரு அழைப்புக்கு பலர் ஓடி வந்து உதவும் குடும்பத்தவர் நாங்கள். நீங்களும் தொடர்ந்து வருக. பங்களிப்பு தருக. இங்குள்ள பல உரையாடற்பக்கங்களில் கவனித்தீர்கள் என்றால், எங்களுக்குள்ளே நடந்த சூடான விவாதங்கள் தெரியும். இங்கு தொடர்ந்து இருப்பவர்கள், அனல் பரக்க பேசியவர்கள் மட்டுமல்ல. பிறருக்கு, அணையாக மாறியவர்களும் ஆவர். நீங்களும் தொடர்ந்து வந்தால், எங்களின் இடர்களை உணர்ந்தால், தடைகளை உணர்ந்தால், அவ்விதம் மாறுவீர்கள் என்றே நம்பிக்கைக் கொள்கிறேன். உங்களை நேரில் சந்திக்க விருப்பம். நான் ஆத்தூரில் வசிக்கிறேன். எனது எண்:9095343342. பலரின் மேலாண்மை தேவை. வருக. மதிப்பிடுதல் மட்டுமே வளர்ச்சியைத் தராது. இணையத்தமிழுக்கு தங்களின் இணையற்ற படைப்புகளைத் தருக. நண்பர்களே!
இறுதியாக, ஏதாவது ஒரு குறை சொல்லணும். அது தானே இப்ப தமிழக 'டிரண்டு'. இதுக்காகவே, ஒரு 'ரூம்' போட்டு யோசிக்கிறேன்.('ரூம்ல' போட்டு இல்ல.!)அவற்றை அடுத்த கூடலில் சொல்கிறேன். வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 19:41, 2 அக்டோபர் 2013 (UTC) மயூரநாதன்தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவுக் கூடல் வெற்றிகரமாக நடைபெற்று அது தொடர்பிலான நிறைகள் குறைகள் குறித்த உரையாடல்களும் உடனடியாகவே தொடங்கியிருப்பதை ஒரு நல்ல விடயமாகவே நான் பார்க்கிறேன். இந்த நிகழ்வை ஒரு மாநாடாகவோ அல்லது ஒரு பெரிய பொது நிகழ்வாகவோ நடத்த முயலவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம். அதனாலேயே இதற்குக் கூடல் என்று பெயரும் வைத்தோம். நமது நோக்கம் பெருமளவுக்கு நிறைவேறியது என்பதே எனது கருத்து. இதற்காக இந்நிகழ்வை முன்னின்று ஒழுங்கு செய்த இரவிக்கும், தனது கல்லூரி வேலைகளுக்கு மத்தியிலும் இதற்கும் நேரம் ஒதுக்கிப் பணியாற்றிய சூரியப்பிரகாசுக்கும், சளைக்காது பல்வேறு தேவைகளுக்காகவும் வடிவமைப்புக்களை உருவாக்கி வழங்கிய அன்டன், தாரிக் ஆகியோருக்கும், இந்தியாவில் இருந்தும், இந்தியாவுக்கு வெளியில் இருந்தும் பல்வேறு வகைகளில் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ச்சியாகப் பயனர்களுக்குத் தகவல்களை வழங்குவது முதற்கொண்டு, பரப்புரை, பத்திரிகையாளர் தொடர்பு, நிதி ஒழுங்குகள், வெளியில் இருந்து வந்தவர்களை வரவேற்று வேண்டிய வசதிகளைச் செய்தல் என மூன்று நாட்களுக்கு மேலாகப் போதிய தூக்கமும் இன்றி உழைத்த இரவியின் பங்களிப்பு கூடலின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்றால் மிகையாகாது. கூடலின் இரண்டு நாட்களும் தமிழ் விக்கிப் பயனர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு, பழகிப் புரிந்து கொள்வதற்குப் போதிய அளவு நேரமும், வாய்ப்பும் கிடைத்தது மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் ஏற்பட்ட நெருக்கம் தமிழ் விக்கியின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது எனது நம்பிக்கை. இது மட்டுமன்றி, தமிழ் விக்கிப் பங்களிப்பாளர் சமூகத்துக்கு வெளியில் தமிழ் விக்கியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பலரையும் நிகழ்வின்போதும் நிகழ்வுக்கு வெளியிலும் சந்தித்துத் தொடர்புகளைப் பேணிக்கொள்ளவும் இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. தவிர, இந்திய விக்கிமீடியாப் பிரிவைச் சேர்ந்த சௌமியன், CIS A2Kஐச் சேர்ந்த விஷ்ணுவர்தன், தெலுங்கு விக்கிப்பீடியர் ரகீம் ஆகியோர் நமது பயனர்களோடு இரண்டு முழு நாட்களும் தங்கியிருந்தது, தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், நமது தேவைகள், ஆற்றல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும், அவர்கள் எவ்வாறு நமக்கு உதவ முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ளவும் பெரு வாய்ப்பாக அமைந்தது. பல முக்கியமான ஊடகங்களில் ஒரே நாளில் பத்தாண்டு நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளிவந்தன. பிபிசி தமிழோசை இரவியின் பேட்டியை ஒலிபரப்பியது. அனைத்திந்திய வானொலியிலும் நமது பேட்டியை ஒலிபரப்பவிருக்கிறார்கள். எதிர் காலத்திலும் நமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தர ஒத்துக்கொண்டுள்ளனர். இவற்றுக்கும் மேலாக நிகழ்வுக்காகப் பயனர்கள் ஒன்று சேர்ந்திருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, முன்னர் வெளியிடப்பட்டு மறுபதிப்புக் காண முடியாமல் இருக்கும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தை விக்கிமூலத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இம்முயற்சி வெற்றி பெற்றால் அது தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சிக்குப் பெரும் உந்து சக்தியாக அமையும். இவ்வாறான ஒரு பரந்த நோக்குப் பின்னணியின் அடிப்படையில்தான் நிகழ்வின் வெற்றி தோல்விகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். டீசர்ட் கிடைத்ததா இல்லையா, மேடையில் இருக்கைகளில் ஏன் எவரும் இருக்கவில்லை, விக்கிப்பீடியா பதாகை ஏன் நடுவில் இருக்கவில்லை, சான்றிதழ்களில் யார் கையொப்பம் இடுவது போன்ற முக்கியத்துவம் குறைந்த விடயங்களில் கவனம் செலுத்தித் தலையை உடைத்துக்கொள்வதில் எவ்வித பயனும் கிடையாது. இவை எல்லாம் சாப்பாட்டுக்குப் போடும் "பிளேவர்" போல. இருந்தால் நல்லது ஆனால் உடல் ஆரோக்கியத்துக்குக் கட்டாயம் இல்லை. எனவே இவ்வாறான சிறு சிறு விடயங்களில் கவனத்தைச் செலுத்தி பெரிய நோக்கங்களில் இருந்து திசைதிரும்பவேண்டிய அவசியம் இல்லை. ஒரு பயனர், நான் முதலில் கையொப்பம் இட்டபின்னர் விரும்பினால் மற்றவர்களிடமும் வாங்கிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு எனக்கு அவமானம் என்ற வகையில் ஒரு குறிப்பை இட்டிருக்கிறார். என்மீது மதிப்பு வைத்துள்ள அவருக்கு எனது நன்றி. ஆனால், அந்த மாதிரி எண்ணும் அளவுக்கு நான் இல்லை. நானும் எனது சான்றிதழில் முடிந்த அளவுக்குப் பல பயனர்களின் கையெழுத்துக்களை வாங்கியுள்ளேன். வாங்க விரும்பிய சிலரிடம் வாங்க முடியாமலும் போய்விட்டது. என்னோடு சேர்ந்து உயர்ந்த நோக்கமொன்றை அடைய உழைக்கும் பலருடன் சேர்ந்து இன்னொரு பயனரை அங்கீகரிப்பதில் எனக்கென்ன அவமானம். அது எனக்குப் பெருமையே. அடுத்த தடவை நமது செயற்பாடுகளை மேம்பட்ட முறையில் செய்வதற்கான கருத்துக்களை முன்வையுங்கள். ஆனால், தன்னார்வமாக உழைப்பவர்களின் ஊக்கத்தைக் கெடுக்கும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்காதீர்கள். ---மயூரநாதன் (பேச்சு) 19:54, 2 அக்டோபர் 2013 (UTC) நற்கீரன்நான் இந்த நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஒருங்கிணைப்புப் பணிகள் சிலவற்றை செய்ததன் அடிப்படையில் எனது கருத்துக்கள் சில. சிறப்பாகச் செய்யப்பட்டவை
மேலும் சிறப்பாக செய்திருக்கக் கூடியவை
நன்றிகள்
--Natkeeran (பேச்சு) 00:27, 3 அக்டோபர் 2013 (UTC)
பவுல்நண்பர்களே, தமிழ் விக்கியின் பத்தாம் ஆண்டு விழாவைச் சென்னையில் கொண்டாடியபோது அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனால் அக்கூடலில் கலந்துகொண்டு தமிழ் விக்கியின் சாதனைகளை நினைவுகூர்ந்து, வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களை முன்மொழிந்து, செயலாற்ற முன்வந்தோர் அனைவரையும் உளமார பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன். தமிழ் விக்கி என்பது ஒரு பொதுத் திட்டம். அதன் வளர்ச்சிக்கு உதவுவோர் யாவருமே தமிழ் வளர்ச்சியையும் மக்களின் பொது நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகின்றவர்கள். எனவே, சென்னையில் நடந்த கூடலை ஒருங்கிணைத்து, நடத்திச் சென்றதில் கூடுதல் குறைவுகள் இருந்தது பற்றி நாம் வியப்புறத் தேவையில்லை. யாரையும் குற்றப்படுத்துவதிலும் அர்த்தமில்லை. ஆனால், கடந்த காலம் என்பது வருங்காலத்திற்கு வழிகாட்டி என்பது உண்மையென்றால், நடந்து முடிந்த நிகழ்விலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ளும் பாடங்கள் பல இருக்கக் கூடும். அவற்றைத் தமிழ் விக்கி சமூகமாக நாம் அனைவருமே பொறுப்பேற்று, கற்றறிந்து முன்னேறுவதே பலன் தரும் செயலாகும். எனவே, "குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் என்னும் வள்ளுவர் கூற்றுக்கு ஏற்ப, நடந்து முடிந்த கூடலில் நலமானதைப் போற்றுவோம், குறையானதை அடையாளங்கண்டு நிறைவு நோக்கி நடைபோடுவோம். காழ்ப்புணர்வைக் களைந்து கூட்டுறவை வளர்த்தால் தமிழ் விக்கியும் வளரும், தமிழும் வளரும். அதுவே நம் குறிக்கோளாகட்டும். பாராட்டும் வாழ்த்தும் கூறி அமைகின்றேன்.--பவுல்-Paul (பேச்சு) 02:26, 3 அக்டோபர் 2013 (UTC) இரவிதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளைக் கொண்டாடலாமா, எப்படிச் செய்யலாம் என்று மே 9, 2013 அன்று ஆலமரத்தடியில் கேட்டிருந்தேன். பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் , விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு88 அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு செப்டம்பர் 29, 2013 அன்று சென்னையில் விக்கிப்பீடியர் கூடி தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளோம். இது வரை நடந்துள்ளவை குறித்து எனது தனிப்பட்ட நோக்கில் ஒரு இடைக்கால அறிக்கையை இங்கு முன்வைக்கிறேன். இப்பக்கத்தில் உள்ள கருத்துகள் அனைத்தும் செப்டம்பர் 29, 2013 ஒரு நாள் நிகழ்வைப் பற்றிய கருத்துகளாகவே பெருமளவு இருந்தாலும், ஒரு சிலர் மே மாதம் தொடங்கி, நல்கை பெற்றது முதல் இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டி எழுதியுள்ளனர். அவர்களுக்கு நன்றி. நமக்கு இப்போது தேவைப்படுவது பெரு நோக்கும் தொலை நோக்கும் தான். மே 9 உரையாடலைத் தொடர்ந்து அனைவரும் நமது பத்தாண்டுகள் நிறைவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கருதி பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தார்கள். இவற்றை முறையாக, வெளிப்படையாக உரையாடி பெரும்பான்மையானவற்றைச் செய்யப்படுவது என முடிவெடுத்தோம். இங்கு யார் யோசனையை முன்வைத்தார்கள், யார் இதனைச் செயற்படுத்தப் போகிறார்கள் என்று எண்ணாமல் எதனைச் செய்வது சரி, எப்படிச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அனைத்துச் செயற்பாடுகளும் கூட்டு முயற்சியாகவே செய்யப்பட்டது. இதுவே விக்கி மரபு. நோக்கம்முதலில் இந்தக் கொண்டாட்டங்களின் நோக்கங்களாக சுந்தர் சுட்டி எழுதியிருந்தனவற்றை வழிமொழிகிறேன்.
நல்கை வேண்டல் பக்கத்தில் இதனைச் சுருக்கமாக To commemorate 10 years of Tamil Wikipedia and strengthen Tamil Wikipedia community and its outreach efforts. என்று குறிப்பிட்டுள்ளோம். தாக்கம்நமது கொண்டாட்டங்களின் வெற்றியை அகவயமாக ஒவ்வொருவர் பார்வையில் இருந்தும் அளவிடுவதை விட நாம் ஏற்கனவே திட்டமிட்டு ஆவணப்படுத்திக் கொண்ட இலக்குகளை முன்வைத்து அளவிடுதல் நன்று. என்னைப் பொருத்த வரை இது வரையிலான கொண்டாட்டங்கள் பெரு வெற்றி. எப்படி? நல்கை வேண்டல் பக்கத்தில் நாம் வெற்றியின் அளவீடுகளாப் பின்வருவனவற்றைக் குறித்துள்ளோம்.
இந்த அளவீடுகளை எந்த அளவு எட்டிப் பிடித்துள்ளோம்?
நல்கைப் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம். We are planning a two day meetup of Tamil Wikipedians during September 28 and 29. So far there has been no single major international event that brought all Tamil Wikimedians under one roof. This gathering can be thought of as a WikiConference for Tamil Wikimedians. We expect around 40 core Tamil Wikimedians from India, Sri Lanka, Malaysia, UAE and Canada to attend this event besides fellow Wikimedians from other Indian language communities, Wikimedia India chapter and organizations like CIS A2k which work towards a common goal. More than hundred participants are expected to attend the 2nd day evening event. A good number of these will be like-minded people from the academia, press and other FOSS projects. The first day of this gathering will be marked by a tour to places of cultural interest in and around Chennai. The objective is for the participants to get to know each other, engage in informal brainstorming and also to capture as many snapshots for Wikimedia Commons as possible. The second day will have two sessions. In the morning, there will be tutorials for Tamil Wikimedians. In the evening, there will be a public event to celebrate the 10 years of Tamil Wikimedia. இந்தக் குறிப்பின் பெரு நோக்கம் நிறைவேறியது என்பது உறுதி. சிறப்பாகச் செய்தவை
நாம் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கக் கூடியவைநல்கை
புரவலர் ஆதரவு
பிற
படிப்பினைகள்
பிற நிகழ்வுகளுடனான ஒப்பீடுகள்நமது நிகழ்வுக்கு மிக அருகில் வருவது மலையாள விக்கிப்பீடியர்களின் பத்தாண்டு கொண்டாட்டங்களும் தெலுங்கு விக்கிப்பீடியர்கள் அண்மையில் நடத்திய மகோத்சவமும் ஆகும். இவர்களின் இரு நாள் நிகழ்வுக்கு முன்வைத்துள்ள நல்கை வேண்டலை இங்கும் இங்கும் காணலாம். நமது நிகழ்வுக்கு வந்திருந்த தெலுங்கு விக்கிப்பீடியர் தெரிவித்த ரகீம் சுட்டியபடி, மகோத்சவம் நிகழ்வுக்கு 30 விக்கிப்பீடியர்கள் பொதுவான நிகழ்வுக்கு ஏறத்தாழ 50 பேரும் வந்திருந்தார்கள். இதற்கான செலவு தோராயமாக இரண்டு இலட்சம் இந்திய உரூபாய். ஒருவருக்கு 4000 இந்திய உரூபாய் என்று கணக்கு வருகிறது. நமது நிகழ்வுக்கு நாம் செலவு செய்தது தோராயமாக 1,75,000 இந்திய உரூபாய். 150 பயனர்கள் கலந்து கொண்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு பயனருக்கான செலவு 1160 இந்திய உரூபாய். மலையாள விக்கிப்பீடியர்களின் பத்தாண்டு கொண்டாட்டங்களுக்குச் செலவு செய்த தொகை தோராயமாக 27,000 இந்திய உரூபாய். அவர்களைப் போல் தங்குமிடம், பயண உதவி, பண்பாட்டுச் சுற்றுலா, தொழில்முறை ஒளிப்பதிவு இல்லாமல் நாமும் செய்தால் இதனை விடக் குறைவான தொகைக்கும் நிகழ்ச்சி நடத்த முடியும். 2011ல் நடந்த இந்திய விக்கிப்பீடியா மாநாட்டுக்கு 600+ பேர் வந்தனர். 24 இலட்சம் இந்திய உரூபாய் செலவானது. இதற்கு எத்தனைக் குழுக்கள் பணியாற்றின என்பதை இங்கு காணலாம். அதைத் தாண்டியும் அந்த நிகழ்வில் எத்தனைச் சர்ச்சைகள் இருந்தன, சொதப்பல்கள் இருந்தன, பணிச்சுமை இருந்தது என்பதனை அதில் ஈடுபட்ட சோடாபாட்டிலையும் logicwikiஐயும் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். இவ்வளவு ஏன், 2010ல் தமிழ்நாட்டின் மொத்த அதிகார இயந்திரமும் குவித்துச் செய்யப்பட்ட செம்மொழி மாநாட்டோடு இணைந்த தமிழிணைய மாநாட்டில் கூட எத்தனைப் பிரச்சினைகள் இருந்தன என்பது கலந்து கொண்டவர்களுக்குத் தெரியும். இதே நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக மூன்று நாட்கள் நான் பொறுப்பேற்று நடத்தி பயிற்சிப் பட்டறைகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதற்கு ஏன செலவு வெறும் 16,500 இந்திய உரூபாய் மட்டுமே. ஒவ்வொரு நிகழ்வும் குறிப்பிட விதமாக நடைபெற ஆயிரம் காரணங்கள் உள்ளன. நம்மால் இயன்றது அதில் பங்கேற்பதற்கான வாய்ப்பைத் திறந்த முறையில் தருவதும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுமே ஆகும்.
நிகழ்ச்சி நிரல் திட்டமிடல்ஒவ்வொரு பெரு நிகழ்விலும் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட Programme committee என்று ஒன்று இருக்கும். இது நிகழ்வின் காலை செய்யப்படுவது இல்லை. பல வாரங்கள் முன்பு திட்டமிட வேண்டியது. நமக்கு அவ்வாறு செய்ய எவரும் முன்வரவில்லை என்பது நிகழ்வின் நோக்கத்துக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட்டு முன்கூட்டியே விக்கியில் அறிவித்து விட்டேன். அதற்கு மாற்றுக் கருத்து ஏதும் வரவில்லை. நிகழ்வில் என்னென்ன பயிற்சிகள் வேண்டும், யார் யார் பயிற்சிகள் அளிக்க விரும்புகிறார்கள் என்று இங்கு கோரப்பட்டது. யாரும் பயிற்சியளிக்க விரும்புவதாக பெயர் தரவில்லை. பயிற்சியின் காலம், தலைப்புகள் குறித்து நற்கீரன் பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டிருந்தார். அது கணக்கில் கொள்ளப்பட்டது. புதியவர்களுக்கும் பழகியவர்களுக்கும் தனித்தனியாக இரு வகுப்புகளில் பயிற்சிகள் தரத் தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். எனினும், ஞாயிறு அன்று வகுப்பறைகள் கிடைக்காது என்று தெரிய வந்த பிறகு, ஒரே அரங்கத்துக்குள் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டி வந்தது. அதற்கு ஏற்ப அனைவருக்கும் ஏற்ற பயிற்சிகள், உரைகள் முடிவு செய்யப்பட்டன. தானியங்கிகள் போன்ற விசயங்கள் வந்திருந்த பெரும்பான்மை கூட்டத்துக்கு ஏற்ற தலைப்பில்லை என்பதால் கைவிடப்பட்டது. 12.30 வரை பயிற்சிகள் தரலாம் என்று கோரிக்கை. அந்தக் கோரிக்கையையும் தாண்டி 1.30 வரை அந்த அமர்வு நீடித்தது. மாலை நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் துல்லியமாக நிமிடக் கணக்கு அளவு முதற்கொண்டு முன்பே திட்டமிடப்பட்டு இங்கு அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏதும் உரையாடல் பக்கத்திலோ மற்ற வழிகளிலோ வந்து சேரவில்லை. மாலை அமர்வுக்கு அனைவரும் தாமதமாக வந்ததால் சில மணித்துளிகள் வீணாகின. நேரமின்மையால் வாழ்த்துரை பகுதி கைவிடப்பட்டது. மாலை 5 மணி வரை அரங்கத்துக்கு நேரம். 6 மணிக்கு நிகழ்வு முடிந்து கூட்டம் கலைய மாலை 7 ஆனது. அது வரை அரங்க ஊழியர்கள் பொறுமை காத்தனர். இவ்வளவு நெருக்கடியாக கால அளவில் பங்களிப்பாளர் அறிமுகம் போன்ற புதிய தலைப்புகளை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வாய்ப்பில்லை. அதற்கான கோரிக்கையும் எழவில்லை. நிகழ்ச்சியைத் திட்டமிட்ட இடத்தில், நேரத்தில், வரிசையில் செய்து முடித்திருக்கிறோம்.
தன்னிச்சையாக செயல்படுகிறேனா?
உலக விக்கிப்பீடியா திட்டங்களிலேயே தமிழ் விக்கிப்பீடியா போல் பங்களிப்பாளர் படங்களை முதற்பக்கத்தில் இட்டு அறிமுகப்படுத்தியது நாம் நான். அத்திட்டத்தை முன்மொழிந்தது நான் தான். 10,000க்கு மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட விக்கிப்பீடியா திட்டங்களில் நாம் மட்டும் தான் ஆகக் கூடுதலாக 30 நிருவாகிகளைக் கொண்டுள்ளோம். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்களையாவது நான் தான் முன்னின்று பரிந்துரைத்தேன். எல்லாரும் கட்டுரை எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படும் போது, கூடுதல் பங்களிப்பாளர்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் விக்கித்திட்டம் 100ஐ முன்னெடுத்து வருவதும் நான் தான். இங்கு நான் நான் என்று சொல்லிக் கொள்வதற்குக் கூசுகிறேன். இருந்தாலும், எந்த அளவுக்கு மற்ற பங்களிப்பாளர்களுக்கான இடத்தை அளிப்பதற்கு முயன்று வருகிறேன் என்பதற்கு இத்திட்டங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இணையத்திலும் சரி நேரிலும் சரி எங்கெல்லாம் கூடிச் செயற்பட்டு பணிகளைப் பிரித்துக் கொள்ள முடியுமோ அங்கெல்லாம் பிரித்துக் கொண்டே செய்தோம். வெளிப்படையாக கலந்துரையாடிச் செய்தோம். என்னிடம் அனுமதிகளை சிலர் எதிர்பார்த்த வேளையிலும் கூட நீங்களே இதனை எடுத்துச் செய்யுங்கள் என்றே கூறினேன். எங்கெல்லாம் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள ஆட்கள் முன்வந்தார்களோ அங்கெல்லாம் அதற்கான ஆதரவை அளிக்கவே செய்தேன். எல்லா வேலையையும் நானே செய்தேன், நானே முடிவு எடுக்கிறேன் என்ற தோற்றம் வரக்கூடாது என்பதைக் கருதியே பயண / தங்குமிட உதவி போன்ற பணிகளுக்கு உதவிகளைக் கோரினேன். கிடைக்கவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் எப்படியும் உதவி கோரினாலும் கிடைக்கப்போவதில்லை என்ற சூழ்நிலை புரிந்து பிறகு என்னால் முடிக்கக்கூடிய பணிகளை நானே விரைந்து முடித்தேன். அதற்கு உதவி கேட்டுக் காத்திருக்கும் நேரத்தை விட பணியை முடித்து விடுவது இலகு. அல்லது, அவர்கள் ஒரு வேலையாக கருதியதைச் செய்வதற்கு உதவி தேவைப்படவில்லை. அல்லது, குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிப்பதற்கான ஆட்கள் இல்லை. இன்னொன்று, வேலைப் பங்கீடு இல்லை என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படிச் சொல்பவர்களுக்கு என்னென்ன வேலைகள் பின்னணியில் நடந்தன என்பது தெரியவில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பான அரங்க ஏற்பாடுகளைச் சுந்தர் பார்த்துக் கொண்டார். பதாகைகளைக் கட்டும் பணியைச் சிலர் பார்த்துக் கொண்டார்கள். அரங்கம் திறந்த பிறகு தான் அங்கு தண்ணீர் இல்லை என்பது தெரியும். அதற்காக ஒரு பெயர் சொல்ல விரும்பாத விக்கிப்பீடியரும் நிகழ்ச்சிக்கு எனக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த தம்பியும் அலைந்து திரிந்தார்கள். உரிய நேரத்தில் cakeஐ வாங்கிக் கொண்டு வந்தார்கள். சான்றிதழ்களை எழுத அபிராமி உதவினார். நீச்சல்காரனும் சௌமியனும் அவர்களது கருத்துக் கேட்புப் படிவத்தை எடுப்பதற்கான மின்பிரதிகளை எடுத்து வர போக்குவரத்து உதவி செய்யப்பட்டது. இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து தான் ஒரு பணியைப் பிரித்தளிக்க முடியும். சென்னைக்குள் சுற்றித் திரிய அதன் தெருக்கள் தெரிய வேண்டும், வண்டி ஓட்டத் தெரிய வேண்டும், அதற்கான வண்டி வேண்டும், சிறிய வேலைகளைச் செய்வதற்கான மனமும் வேண்டும். சரியான நேரத்துக்குச் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. உதவித் தொகை வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களின் பெயர் பதியப்பட்டது. வந்திருந்த ஊடகக்காரர்களுக்கு உரிய வழி காட்டி யாரிடம் பேசலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது. பயனர்களின் கருத்துகளை ஒளிப்பதிவு செய்து வந்த Jasan Picturesக்கான குறிப்புகள் தரப்பட்டன. நாம் அனைவரும் மாமல்லபுரம் சென்றிருந்த போது பெயர் சொல்ல விரும்பாத விக்கிப்பீடியர் சென்னையின் தெருக்களில் சுற்றித் திரிந்து பதாகைகளை அச்சடித்துக் கொண்டும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டும் வந்தார். அதற்கு இரண்டு நாட்கள் முன்பு விருந்தினராக வந்திருந்த ரகீமும் இலங்கையில் இருந்து அப்போது தான் வந்திருந்த சஞ்சீவி சிவக்குமாரும் சட்டைகளை வாங்கி வரச் சென்றார்கள். நிகழ்வுக்கு நான்கு நாட்கள் முன்பே சென்னை வந்த சுந்தர் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டதோடு, கட்டற்ற உள்ளடக்கங்களைப் பெறுவதற்கான பல்வேறு கூட்டங்களிலும் இணைந்து சிறந்த பங்களிப்பைச் செய்தார். இவை எல்லாம் பின்னணியில் நடந்தவை. இவற்றை எல்லாம் ஒப்பிடும் போது ஒரு சில சட்டைகளை வழங்குவது ஒரு பெரிய வேலை இல்லை. அதனால், உதவி கோரவில்லை. நாற்காலியில் உட்கார ஆள் இல்லையே, மேடையில் நம்மைப் பேச அழைக்கவில்லையே என்று அதை மட்டும் ஒரு வேலையாக நினைத்துக் கொண்டு இருந்தால் மேற்கண்ட வேலைகள் கண்ணுக்குப் புலப்படாது. நிகழ்ச்சித் தொகுப்புப் பணியை இன்னொருவர் செய்திருக்கலாம், இரண்டு பேர் பிரித்துச் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்து வருகிறது. அப்படிச் செய்வதற்கு இது எழுதியதை மட்டும் அறிவிக்கும் அறிவிப்பாளர் பணி இல்லை. ஒட்டு மொத்த அரங்கையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆளுமை தேவை. பின்னணியில் என்னென்ன பணிகள் எந்த அளவு நடந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து அதற்கேற்ப நிகழ்ச்சியின் நேரத்தையும் போக்கையும் கொண்டு செல்ல வேண்டும். விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுடனும் சரி வந்திருந்த விருந்தினர்களுடனும் சரி ஓரளவாவது புரிதலும் நட்பும் இருந்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனம் கோணாமல் உரிய இடத்தில் குறுக்கிட முடியும். முக்கியமாக, நிகழ்ச்சியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு வரலாற்றையும் தொடர்ச்சியையும் விளம்ப வேண்டும். பெரும்பாலான இடங்களில் பெருமளவு ஒருங்கிணைப்பைச் செய்தவர்களுக்குத் தான் இது சாத்தியப்படும். பின்னணித் தகவல் என்னிடம் இருக்க மேடையில் தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவரை ஒவ்வொரு முறையும் பின்னிருந்து தொடர்பு கொண்டு இயக்கிக் கொண்டிருக்க முடியாது. என்னைப் பொருத்தவரை தொகுப்புப் பணியும் ஒரு பணி. நிகழ்வுக்கு முந்தைய இரண்டு மூன்று வாரங்களாக அலைந்து திரிந்து பணிகளை முடித்ததைப் போல் இதுவும் ஒரு பணி. இது என்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதான ஒரு தோற்றம் வரும் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை. மேடையில் எனக்கான உரை என்று எதையும் நான் ஆற்றவில்லை. நாற்காலிகளில் அமரவில்லை. அரங்கில் கூட உட்கார நேரம் இல்லாமல் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். இவ்வளவு ஏன், முதல் முறை சந்தித்த பல விக்கிப்பீடியர்களுடன் பேசிக் கொண்டிருக்கக் கூட நேரம் இல்லை. மாமல்லபுரத்தில் எடுக்கப்பட்ட குழுப்படங்களில் எத்தனைப் படங்களில் நான் இருக்கிறேன்? ஏன் என்றால் அன்று முழுதும் பங்களிப்பாளர்களின் நேர்காணல்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். மேடையில் விருந்தினர்களையும் நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தியதோடு சரி. மாலை நிகழ்வில் பார்வதியின் உரையின் தொடர்ச்சியாக எஞ்சிய பயனர்களைப் பற்றிய அறிமுகம் கோரப்பட்டதால் அதனை முடித்துக் கொடுத்தேன். ஏன் அதனைச் செய்தேன் என்றால் பங்களிப்பாளர்களை அறிமுகப்படுத்துவது என்ற செயற்பாட்டைத் தமிழ் விக்கிப்பீடியாவில் முன்னெடுத்ததே நான் தான். துரை மணிகண்டனின் நூலைப் பெற்றுக் கொள்ள வருமாறு அவரே அழைத்தால் கலந்து கொண்டேன். தொகுப்புப் பணியை நான் எடுத்துச் செய்தேன் என்பதை ஒரு பிரச்சினையாக காண்பதை விட, தொகுப்புப் பணியில் என்ன குறையைக் கண்டீர்கள், எப்படி மேம்படுத்தலாம் என்று மேம்பாடுகளைத் தெரிவித்தால் அடுத்த முறை தொகுத்து வழங்குபவருக்கும் உதவும். யார் செய்கிறார்கள் என்பதை விட என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். ஏனெனில், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் அனைவரும் சமமே. என்னுடைய தொகுப்புப் பணியில் குறைகள் இருந்திருந்தால் வருந்துகிறேன். மற்ற பொறுப்புகளின் சுமை குறைந்திருந்தால் ஒரு வேளை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும். ஒரு சிலர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்களா?முதலில் இது தமிழ் விக்கிப்பீடியர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இல்லை. அப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று திட்டமிடலில் எங்கும் யாரும் கோரவில்லை. சில தலைப்புகளில் பேச இருக்கிறோம் என்று நிகழ்ச்சி நிரல் இருந்தது. அதற்குப் பொறுப்பெடுத்துப் பேச விரும்பியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. காலை 9 மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்வுக்குப் பலரும் கால தாமதமாக வந்ததால் சற்று காலத்தைக் கடத்த விக்கிப்பீடியா அறிமுகத்தைப் பேசத் தொடங்கினேன். அடுத்து செயல்முறை விளக்கத்தை யார் தருகிறீர்கள் என்று வெளிப்படையாக திறந்த அழைப்பாகவே கேட்டேன். அப்பொழுது யார் வேண்டுமானாலும் மேடைக்கு வந்திருக்கலாம். ஒருவரும் முன்வராத போது சிவகோசரனிடம் கேட்டேன். அவர் முன்வந்தார். ஏன் அவரை அழைத்தேன் என்றால் அவர் அடுத்த மாதம் இலங்கையில் இதுபோன்ற ஒரு நிகழ்வுக்குத் திட்டமிட்டுள்ளார். அதற்கான பயிற்சியாக இருக்கும். ஏன் முன் கூட்டியே பேச்சாளரை முடிவு செய்யவில்லை என்றால், விக்கிப்பீடியர்களைத் தூக்கத்தில் உலுப்பிக் கேட்டாலும் விளக்கிச் சொல்லக்கூடிய ஒரு விசயத்துக்கு முன்கூட்டியே பேச்சாளரைத் தேர்ந்தெடுப்பது தேவையற்றதாக இருந்தது. தவிர, இது unconferenceஐ நோக்கிய ஒரு முயற்சி. அடுத்து மொழிபெயர்ப்புகள், ஒளிப்படக்கலை பற்றிய பயிற்சிகள், உரையாடல்கள் நடந்தன. இதில் ஏதும் சர்ச்சை இருக்கும் என்று தோன்றவில்லை. அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவைக் கட்டற்ற மென்பொருள்கள் போல் எப்படி கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும் பரவலாக்கலாம் என்பது பற்றிய கலந்துரையாடல். ஏன் இந்தத் தலைப்பு என்றால், அதற்கான தேவை நமக்கு இருக்கிறது. ஒரு பல்கலையில் நிகழ்வு நடத்த அரங்கம் வாங்கவே நாம் போராட வேண்டியிருக்கிறது. ஆனால், கட்டற்ற மென்பொருள் இயக்கத்தவர்கள் தமிழ்நாடு முழுக்க வலுவான வலையமைப்பை வைத்திருக்கிறார்கள். இலவசமாக வேண்டிய வளங்களைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. எனவே, அவர்களிடம் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று உரையாடலாம். தவிர, நிகழ்வுக்கு வந்திருந்த கட்டற்ற மென்பொருள் இயக்கத்தாருடன் நமது பிணைப்பை வெளிப்படுத்தவும் இந்த உரையாடல் உதவும். ஆனால், இந்த உரையாடலின் நோக்கம் சரியாக உள்வாங்கப்படாமல் சற்று திசை மாறியது உண்மை. இது போன்ற சறுக்கல்களை எப்படித் தவிர்க்கலாம் என்று சிந்திக்க வேண்டும். இந்நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக சூரியாவும் தமிழ்ப்பரிதி மாரியும் கலந்து கொண்டார்கள். ஏன் சூரியா என்றால் அவர் ஒரு மாணவர், எந்த கல்லூரிகளுக்குள் நாம் நுழைய வேண்டும் என்று நினைக்கிறோமா அந்த நோக்கில் இருந்து கருத்துகளை எடுத்துரைக்கவல்லவர். தவிர, அண்மையில் தான் விக்கிப்பீடியாவை முன்னிறுத்தி வேலை வாய்ப்பைப் பெற்றார் என்ற முக்கியமான விசயத்தை மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. ஏனெனில், தமிழ் விக்கிப்பீடியாவை வளர்ப்பது என்றாலே தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழர் நலம் என்றே பேசி வருகிறோம். இனியும் இதனை முன்னிறுத்தி நம்மால் பெரிய பாய்ச்சல்களைச் செய்ய முடியுமா என்ற ஐயம் உள்ளது. விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மேம்பாடுகள் என்ன, பயன்கள் என்ன என்பதை இனங்கண்டு அவற்றை முன்னிலைப்படுத்தியே நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். தமிழ்ப்பரிதி மாரியை ஏன் அழைத்தேன் என்றால் அவர் பல கல்லூரிகளில் விக்கிப்பீடியா பட்டறைகள் நடத்தி வருகிறார். கல்லூரிகளின் நோக்கில் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வாய்ப்புகள் என்ன என்று புரிந்து வைத்திருக்கக்கூடியவர். அடுத்து இனிப்புகள் வழங்கினோம். இதில் இளையவர்கள், புதியவர்கள், மாணவிகள், பெண்கள் என்ற முறையில் நந்தினியையும் அபிராமியையும் விளக்கேற்றச் சொன்னோம். நாளை தலைமுறைக்கான நம்பிக்கையாக இருக்கட்டும் என்று எனது குழந்தைக்கு இனிப்பூட்டச் செய்தேன். ஒளிப்பதிவுகளில் இது போன்றவற்றை sentimentஆக காட்ட முடியும் என்பதும் ஒரு எண்ணம் :) மாலை நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பங்களிப்பாளர் என்ற முறையில் மயூரநாதன் பேசினார். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சுந்தர் 4 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய Tamil Wikipedia: A case study என்ற அருமையான கட்டுரை இன்றவும் உலகளவில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான அறிமுகத்தைத் தருகிறது. இந்திய விக்கிமீடியா கிளையின் நிறுவன உறுப்பினர், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் நிருவாகி என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய முழுமையான பார்வையைத் தர வல்லவர், தமிழ் விக்கிப்பீடியாவை மற்ற பல திட்டங்களோடு ஒப்பிட்டுப் பேச வல்லவர் என்பதால் அவரைப் பேசுமாறு அழைத்தேன். ஏற்கனவே பல ஊடகங்களில் பேசி தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி நல்ல முறையில் எடுத்துரைத்து வருகிறார் என்று முறையிலும் பெண்களை முன்னிறுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும் பார்வதி பேசினார். முதலில் இவ்வாறு பேச முடியுமா என்று பூங்கோதையைக் கோரி அவர் மறுப்பு தெரிவித்தார் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். அதன் பிறகே பார்வதி முன்வந்தார். எஞ்சிய பெண்கள் இருவரும் புதியவர்கள். மயூரநாதனும் செங்கைப் பொதுவனும் சான்றிதழில் கையெழுத்திட வேண்டும் என்ற பொதுவான புரிந்துணர்வு ஏற்கப்பட்டது. கைநடுக்கம் காரணமாக செங்கைப் பொதுவனால் கையெழுத்திட முடியாது என்பதால் அவரை வைத்தே சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த மற்றவர்களுக்கும் உரிய மரியாதை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழிணையக் கல்விக்கழக இயக்குநரும் பெங்களூரில் உள்ள இணையத்திற்கும் சமூகத்திற்குமான மையத்தின் திட்ட இயக்குநருமான விசுணு வர்த்தனும் சான்றிதழ்களை வழங்கினர். சான்றிதழ்களை யாரேனும் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் மூலம் வாங்கினால் தங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஒரு சிலர் கருதியது என் கவனத்துக்கு வந்திருந்தது. அதையும் இங்கு நிறைவேற்றித் தந்தாயிற்று. இறுதியாக, இலங்கைப் பயனர்களுக்குப் பரிசு தந்தது. முதலில், ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நல்கைப் பணத்தில் தரப்பட்ட பரிசு அன்று. தமிழ் விக்கிப்பீடியாவின் மிகப் பெரும் பங்களிப்பு நல்குபவர்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் இருந்து இந்நிகழ்வுக்காக மெனக்கெட்டு வந்திருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாகவே, செருமனி, நெதர்லாந்து தொடங்கி இலங்கை வரை இணையத்திலும் நேரிலும் பல இலங்கைத் தமிழர்கள் எனக்கு மிகச் சிறப்பான விருந்தோம்பலை நல்கியிருக்கிறார்கள். இவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஏதாவது பரிசு தரலாமே என்று எண்ணி இந்தப் பட்டுச் சேலை தரும் சிந்தனையைச் சிலரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களும் நன்றாக இருக்கிறது என்றார்கள். இந்தப் பட்டுச் சேலைகளை வாங்கித் தந்து உதவ முடியுமா என்று பார்வதியிடம் கேட்டிருந்தேன். இதற்கான தொகையை அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களும் பகிர்ந்து கொள்ளலாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், தானே இதற்கான செலவை ஏற்றுக் கொள்வதாக பார்வதி முன்வந்த போது அதனை மறுக்க முடியவில்லை. இந்தப் பரிசைப் பேருந்திலோ நிகழ்வுக்குப் பின்போ கூட கொடுத்திருக்கலாம். மேடையில் தருவது இலங்கைத் தமிழர் - தமிழகத் தமிழர் ஒற்றுமைக்கும் பிணைப்புக்கும் ஒரு சான்றாக இருக்கும் என்று கருதி செய்தேன். ஆனால், இதில் கூட ஏன் ஒருவரே பரிசு தந்தார் என்று கேட்டால் எப்படித் தான் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது? பூங்கோதை முன்பே மேடை ஏற மறுத்திருந்தார். எஞ்சியிருப்பது நந்தினியும் அபிராமியும் தான். அபிராமியை வைத்துத் தந்தால் கூட அம்மாவும் மகளும் முன்னிறுத்தப்பட்டார்கள் என்று விமரிசிக்க ஆட்கள் இருக்கிறார்கள் :) ஊடகங்களில் ஏன் குறிப்பிட்ட சில பெயர்களும் முகங்களும் திரும்பத் திரும்ப வருகின்றன என்பதற்கான விளக்கம் இங்கு உள்ளது. இப்படி ஒவ்வொன்றுக்கும் அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தால் ஒன்றையும் செய்ய இயலாது. எந்த உள்நோக்கமும் இன்றி இதனை இவர் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நேர்மையுடனும் துணிவுடனும் முடிவுகளை எடுத்துச் செய்தோம். அதற்கான உதவிகளைப் பெற்றுக் கொண்டோம். BE BOLD என்று தான் விக்கிப்பீடியா வலியுறுத்துகிறது. நிகழ்வில் பேசப்பட்ட தலைப்புகள், பேசப்பட்ட விதம் ஆகியவற்றில் குறை இருந்தால் தெரிவியுங்கள். அடுத்த முறை மேம்படுத்துவோம். இன்னாரை ஏன் பேச அழைக்கவில்லை என்று கேட்பதெல்லாம் ஒரு குறையில்லை. இறுதியாக சில எண்ணங்கள்
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி 10 ஆண்டுகள் ஆனாலும் நமது திட்டத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என்று நமக்குத் தெரியும். அதற்காக நமது திட்டத்தை வெளியில் விட்டுக் கொடுப்பதில்லை. நமது பங்களிப்பாளர்களை மட்டம் தட்டுவதில்லை. விக்கிப்பீடியா என்ற கூட்டு முயற்சியின் பயன் இடர்களை உணர்ந்து அவற்றை எடுத்துச் சொல்லி தொடர்ந்து இத்திட்டத்தை மேம்படுத்த முனைகிறோமா இல்லையா? அதே போன்ற அணுகுமுறை தான் நமது அனைத்துச் செயற்பாடுகளிலும் தேவை. இந்நிகழ்வுக்கு வரும் கருத்துகள் என்பன, "அடடா, இதைக் கவனிக்காமல் விட்டு விட்டோமே, கட்டாயம் அடுத்த முறை இதனைச் சரியாகச் செய்து விட வேண்டும்" என்று நிகழ்வுக்காக உழைத்தவர்களை உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, "ஏனடா இதற்காக உழைத்தோம்" என்று வருந்தும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடாது. இவ்வாறான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவது அதே பங்களிப்பாளர்கள் அடுத்தடுத்த நிகழ்வுகளில் பங்கேற்பதை மனத்தடை உருவாக்குவதாகவும் வேறு எவருமே "இத்தனை வசைகளை வாங்கிக் கொண்டு இதில் ஈடுபடத்தான் வேண்டுமா" என்று அச்சமூட்டுவதாகவும் இருக்கக்கூடாது. விமரிசனங்களே கூடாது என்று சொல்லவில்லை. அதனை நமது இயக்கத்துக்கு வெளியில் உள்ளவர்கள் சொன்னால் புரிந்து கொள்ளலாம். ஆனால், முழுக்க வெளிப்படையாக திட்டமிடப்பட்டு நிகழ்வுக்கு முன்பும் நிகழ்வு நடந்த அன்றும் நிகழ்ச்சியை மேம்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் தந்த பிறகு, எளிதாக சரி செய்திருக்கக்கூடிய பிரச்சினைகளைக் கூட அன்றே பொறுப்பெடுத்துச் செய்ய முனையாமல், திரைப்பட விமரிசகர் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு குதறுவது போல் குற்றம் சாட்டி இங்கு கருத்துகளைப் பதிவது நேர்மையான செயற்பாடு அன்று. விக்கி மரபுக்கு உட்பட்டதும் அன்று. நல்லெண்ண நன்னம்பிக்கை கொள்ளுங்கள் என்பது விக்கியில் கட்டுரை எழுதுவதற்கு மட்டும் உரித்தான ஒன்று அன்று. நமது அனைத்துச் செயற்பாடுகளிலும் தேவை. தன்னார்வக் கூட்டு முயற்சித் திட்டங்களில் பொறுப்பு என்பது கொடுக்கப்படுவது அன்று. எடுக்கப்படுவது. இந்தக் கொண்டாட்டங்களை முன்னின்று செய்யுமாறு என்னை யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. அரங்க ஏற்பாடுகளைச் செய்து தருமாறு சூரியாவை யாரும் கேட்கவில்லை. சனியன்று நான் களைத்திருந்த போது பண்பாட்டுற் சுற்றுலாவை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பை சீனிவாசன் முன்வந்து கேட்டு வாங்கி எடுத்துக் கொண்டார். நிகழ்வுக்கு முன்பும் பின்பும் பல முறை ஏதாவது உதவ முடியுமா என்று கேட்டு உதவினார். இது போல் உதவியோர் பலர். பல்வேறு தேவைகளுக்காக குறிப்பிட்டவர்களின் பக்கங்களில் உதவி கேட்டுப் பெற்றிருந்தாலும் அவர்களாக விரும்பினால் தான் செய்ய முடியுமே தவிர யாரையும் வற்புறுத்த முடியாது. மே மாதம் தொடங்கி நிகழ்வு முடியும் வரை உரையாடல் பக்கங்களிலும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் நேரிலும் தொலைப்பேசியிலும் மின்மடலிலும் எடுத்துரைக்கப்பட்ட நல்ல ஆலோசனைகள் யாவுமே செயற்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் இருந்தவர்களுக்குத் தெரியும். பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டினால் தான் சரி செய்ய முடியுமே தவிர, "எல்லாமே சிறப்பாக உள்ள நிகழ்ச்சியில் எதனையாவது குறை கண்டுபிடித்தே ஆக வேண்டுமே என்ற நோக்கில் சிறு சிறு குறைகளைப் பட்டியலிட்டு ஒருங்கிணைப்பாளர்கள் திறம் வாய்ந்தவர்கள் இல்லை, திட்டமிடல் இல்லை" என்று நிறுவ முனைவதின் உள்நோக்கம் என்ன? முதலில் திட்டமிடல் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா? ஒருங்கிணைப்பு என்றால் என்ன என்று சொல்ல முடியுமா? மே 9 தொடங்கிய திட்டமிடலில் ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கி இருந்தால் கூட நிகழ்வு குறித்த நாளில் குறித்த அரங்கில் நடைபெற்றிருக்க முடியாது. நிகழ்ச்சியை முடித்து அனைவரும் ஊர் போய் சேர்ந்திருக்க முடியாது. நிகழ்ச்சியின் பல்வேறு பணிகளைப் பல்வேறு குழுக்கள் செய்ய அவற்றை இணைப்பது தான் ஒருங்கிணைப்பாளரின் பணி. சுமார், 600 பேர் வரை பங்கு கொண்ட விக்கிமீடியா இந்திய மாநாட்டிற்கு எத்தனை ஒருங்கிணைப்புக் குழுக்கள் உள்ளன என்று இங்கு பார்க்கலாம். ஆனால், நமது நிகழ்வில் நடந்தது என்ன? நல்கை வேண்டல், நிகழ்ச்சி நிரல் திட்டமிடல், அரங்க ஏற்பாடு, தங்குமிட ஏற்பாடு, வெளியூரில் இருந்து வந்தவர்களை வரவேற்கும் குழு, சட்டை-சான்றிதழ்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து வாங்கி வரும் குழு, பண்பாட்டுச் சுற்றுலா குழு, கணக்கு வழக்குகள், நிகழ்வு அரங்கில் தண்ணீர் - உணவு ஏற்பாடு செய்தல் என்று அனைத்துப் பணிகளையும் ஓரிருவரே பொறுப்பேற்றுச் செய்தனர். சென்னையில் இந்நிகழ்வை நடத்துவதற்கு முக்கிய காரணமே அங்கு மற்ற ஊர்களைக் காட்டிலும் கூடிய பங்களிப்பாளர்கள் உள்ளார்கள், நிகழ்வுக்கு உதவுவார்கள் என்பதற்காகவே. ஆனால், எதிர்பாராத விதமாக, பலரும் ஏற்பாடுகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று திறந்த அழைப்பு விடப்பட்ட ஊடகச் சந்திப்புக்குக் கூட பெங்களூரில் இருந்து சுந்தரும், கோவையில் இருந்து நானும், கனடாவில் இருந்து செல்வாவும், கட்டற்ற மென்பொருள் இயக்கத்தில் இருந்து சீனிவாசனும் கலந்து கொண்டார்கள். வந்துள்ள ஊடகக் காரர்களுக்கு உணவு வழங்கி கவனிக்கக் கூட ஆள் இல்லை என்று எனது மாமாவின் அறைத்தோழரை அழைத்துக் கொண்டு சென்றேன். செப்டம்பர் 10 அன்று அரங்க ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக சென்னை வந்த நான் செப்டம்பர் 30 வரை நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியதாயிற்று. ஒரு நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் விடுப்பு எடுத்தால் சம்பளப் பணம் மட்டும் தான் போகும். ஆனால், என்னைப் போல் தொழில் செய்பவர்கள் இவ்வாறு தொழிலை அந்தரத்தில் விட்டுத் திரிந்தால் தொழிலையே பணயம் வைத்தது போலத் தான். மீண்டு வர பல மாதங்கள் ஆகும். சனிக்கிழமை காலையில் 4 மணிக்கு எழுந்து தகவலுழவனை வரவேற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். எழுந்தேன் என்பது தவறு. தூங்கவேயில்லை என்பது சரி. வியாழன் காலை 9 மணிக்கு எழுந்தது முதல் சனிக்கிழமை இரவு 12 மணி வரையிலான 63 மூன்று மணி நேரத்தில் இடையில் தூங்கியது 3 மணி நேரம் மட்டுமே. ஏதாவது ஒரு திருமண மண்டபத்தில் அரங்கை ஏற்பாடு செய்து விட்டு அருகில் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதிகளில் அறை போட ஒரு மணி நேரம் கூட போதும். ஆனால், அண்ணை பல்கலையில் நிகழ்வை நடத்துவது நமது இயக்கத்துக்கு ஒரு பெரும் அடையாள முக்கியத்துவத்தைத் தரும், வந்திருக்கும் பங்கேற்பாளர்களுக்கு உரையாட ஒரு நல்ல சூழலைத் தரும் என்ற காரணத்துக்காக அங்கு நிகழ்வு நடத்த முனைந்தோம். பலரும் சுட்டியபடி குளிரூட்டப்பட்ட அரங்கு என்பது ஒரு சிறப்பாக என் கண்ணுக்குப் படவில்லை. அண்ணா பல்கலையின் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசியிருந்தாலும் அதே அடையாள முக்கியத்துவம் இருக்கும். அரங்கைப் பெறுவதற்காக பட்ட பாடுகளை சூரியா ஏற்கனவே விளக்கியுள்ளார். இதற்காக அவர் வகுப்புகளை எல்லாம் விட்டு விட்டுச் சென்றார் எனக்குக் கூட இப்பொழுது தான் தெரியும். இது போன்ற உழைப்பு ஆவணப்படுத்தப்பட்டால் தான் ஒருங்கிணைப்பாளர்களின் மீது நியாயமான எதிர்பார்ப்புகளைக் கொள்வதற்கான சூழல் வாய்க்கும். ஒரு வேளை அண்ணா பல்கலை அரங்கு கிடைக்காதிருந்தால் கட்டற்ற மென்பொருள் நண்பர்கள் மூலம் சென்னை IIT அரங்கைப் பேசி வைத்திருந்தோம். அதுவும் இல்லையென்றால் SRM பல்கலையிடம் செல்வா மூலம் பேசி வைத்திருந்தோம். இது போல் ஒவ்வொருவருக்குப் பின்னும் கடும் உழைப்பு உள்ளது. ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று, அதுவும் இல்லாவிட்டால் இன்னொன்று என்று திட்டமிடல் உள்ளது. ஒரு விசயத்தில் குறை என்றால் ஏன் அவ்வாறு ஆனது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. இது எதையுமே புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முனையாமல் கல்லெறிவதில் மட்டும் குறியாக இருக்க வேண்டாம். சனியன்று விடிகாலை வந்திறங்கிய அனைவரையும் நேரில் சென்று வரவேற்று விடுதியில் அறை எடுத்துக் கொடுத்து வந்தேன். ஒரு தானியைப் பிடித்து நீங்களே போய் விடுங்கள் என்று சொல்ல அதிக நேரம் ஆகாது. ஆனால், சென்னை பழகியவர்களுக்கே மிரட்சியளிக்கும் ஊர். வெளியூரில் வந்தவர்களை நம் வீட்டுக்கு வந்தவர்களைப் போல் வரவேற்க வேண்டும் என்று இறங்கிச் செய்தேன். இப்படி ஒவ்வொரு விசயத்திலும் எப்படி சிறப்பாகச் செய்ய முடியும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது. நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரல் பல நாட்கள் முன்பே திட்டப்பக்கத்தில் இடப்பட்டது. திட்டமிட்ட நிகழ்ச்சியைத் திட்டமிட்டாவறு குறித்த நேரத்தில் நடத்தி முடிப்பதே ஒருங்கிணைப்பாளரின் திறன். ஒவ்வொருவரின் மன ஆசைக்கும், மேடை விளம்பரப் பித்துக்கும் இடம் கொடுத்து நிகழ்ச்சி நிரலில் இல்லாத விசயங்களைச் செய்து கொண்டிருப்பது அன்று. மேடையில் அனைத்துப் பங்களிப்பாளர்களையும் அறிமுகப்படுத்துவோம் என்று நிகழ்ச்சி நிரலில் இருந்ததா? இப்படி செய்யலாம் என்று உரையாடல் பக்கத்திலாவது கூறி இருந்தீர்களா? இல்லாத நிகழ்ச்சியை நடத்தாமல் விட்டதை எப்படித் தன்னிச்சையான செயல்பாடு என்கிறீர்கள்? மேடையில் ஒரு சிலரை மட்டும் முன்னிறுத்தினோம என்கிறீர்கள். 9:00 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுக்கு எத்தனை பேர் முன்கூட்டிய வந்தார்களா என்று சொல்ல முடியுமா? பொடி நடை தொலைவில் உள்ள உணவகத்துக்குச் சென்று விட்டு 3.00 மணிக்கு முன்பு அரங்கத்துக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்களைக் கணக்கில் கொண்டு எப்படி அன்றைய நாளில் திட்டமிட வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? சனியன்று பேருந்திலோ கடற்கரையிலோ திட்டமிடலுக்கான சூழலோ பயனர்களிடம் தெம்போ இருக்கவில்லை. நிகழ்ச்சிக்கான திட்டமிடல், கருத்து கோரல் என்பது விக்கியிலேயே முன்பே முடிந்து விட்டது. அதற்குப் பின் தேவைப்பட்ட இடங்களில் இருக்கிற வளங்களைக் கொண்டு முடிவெடுத்து இயன்ற அளவு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். இன்னும் திட்டமிட வேண்டும், வேலைப் பங்கீடு வேண்டும் என்று நினைப்பவர்கள் அடுத்த முறை முதலில் இருந்தே விக்கியிலேயே திட்டமிடலில் கலந்து கொள்ளுங்கள். தமிழ் விக்கிப்பீடியா இணையத்தளத்தில் நாம் செய்யும் பங்களிப்புகள் யாவும் முறையாக ஆவணப்படுத்தப்படுவதால் யாரும் தங்களுக்கான அங்கீகாரம் விட்டுப் போனதாக எண்ணும் நிலை இல்லை. ஆனால், நிகழ்ச்சி ஏற்பாடு போன்ற இணையத்துக்கு வெளியேயான செயற்பாடுகளில் இவ்வாறு பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் கட்டமைப்பை நாம் இன்னும் உருவாக்கிக் கொள்ளாததால், ஒரு நிகழ்ச்சிக்குப் பின் உழைப்பு என்ன, என்ன சூழ்நிலையில் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது என்று அறிய இயல்வதில்லை. ஓர் இணைய ஊடகமான நாம் இயன்ற அளவு இணையத்தைப் பயன்படுத்திப் பரப்புரைகளை மேற்கொள்வதே திறம் வாய்ந்ததும் செலவுகள் ஏதுமின்றி வருங்காலத்திலும் பலரைச் சென்றடையக்கூடிய வழிமுறைகளை உருவாக்குவதும் ஆகும். அழைப்பிதழ்களை அச்சிட்டு அஞ்சலில் அனுப்புவது நடைமுறைக்கு ஒத்து வராது. அவர்களுக்கு ஏன் அழைப்பதிழ் அனுப்பவில்லை இவர்களுக்கு ஏன் அனுப்பவில்லை என்று கேட்பவர்களை யாராவது அவர்களை அழைக்க விடாமல் தடுத்தார்களா? முகநூலிலும் துவிட்டரிலும் ஆர்வமுடைய விக்கிப்பீடியர்கள் தொடர்ந்து தாமாகவே பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தார்கள். அண்ணா பல்கலை இயந்திரப் பொறியியல் துறை அருகே அரங்க இடம் உள்ளது என்ற குறிப்பு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உதவிக்கு தொலைப்பேசி எண்கள் தரப்பட்டிருந்தன. இதையும் தாண்டி அரங்கைக் கண்டடைவதில் சிக்கல் என்றால், நிகழ்வுக்கு வந்திருந்த ஒரு சில விக்கிப்பீடியர்களே பொறுப்பெடுத்து இச்சிக்கலை சில மணித்துளிகளில் தீர்த்திருக்க முடியும். அரங்கில் நாற்காலிகள் வெற்றாக இருக்கின்றன என்பது ஒரு குறையாக தோன்றியோர் மேடையேறி நாற்காலியை நீக்கி இருக்க முடியும். எல்லாவற்றையும் ஒருங்கிணைப்புக் குழுவே சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையற்றது. ஞாயிறு நிகழ்வு என்பதால் பட்டறை நடத்த வகுப்பறைகள் கிடைக்கவில்லை. ஏன் மேசைகள் கூட கிடைக்கவில்லை. மாணவர் விடுதிகளில் அழைப்பிதழ் ஒட்ட வேண்டும் என்றால் கல்லூரித் தலைவரிடம் கையெழுத்து வாங்கி வரக் காத்திருக்க வேண்டும். இது போல் ஆயிரம் பற்றாக்குறைகளுக்கு இடையே தான் நிகழ்வு நடந்தது. நிகழ்வுக்கு வந்திருந்த பல அறிஞர்கள், பெரியவர்கள் நிறைகுடமாக, அமைதியாக நிகழ்வைக் கண்டு களித்துப் பாராட்டிச் சென்றார்கள். பல தமிழ் விக்கிப்பீடியர்கள் மற்ற நண்பர்களுடன் நிகழ்வு அரங்குக்கு வெளியே உரையாடிக் களித்ததைக் காண முடிந்தது. இப்படிப் பலரும் நிறைவாக இருக்க, மேடையையும் நாற்காலியையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மற்றவர்களுக்காக பேசுகிறேன் என்ற போர்வையில் சிண்டு முடியும் வேலையை நிறுத்திக் கொள்வது நல்லது. தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்புக்கான அங்கீகாரம் என்பது விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு வரலாற்றுப் பக்கத்திலும் பதிவாகியுள்ளது. அதற்கு மேல் எதையும் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். விக்கிப்பீடியாவுக்கு வெளியே உள்ள கட்டற்ற இயக்க நிகழ்வுகளுக்கு ஒரு முறை போய் பார்த்து வாருங்கள். எவ்வளவு பெரிய பங்களிப்பாளர்கள் என்றாலும் பேசுவதற்குரிய தலைப்பில் அழைக்கப்பட்டிருந்தால் மேடையேறுவார்களே தவிர, அனைத்துப் பங்களிப்பாளர்களையும் மேடையில் அறிமுகப்படுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. சில மாதங்களுக்கு முன்பு மலேசியா வானொலியில் விக்கிப்பீடியா அறிமுகம் வெளியான போது, அதைக் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டிய வேளையில் ஏன் தனது பெயரைக் குறிப்பிடவில்லை என்பதை ஒரு பிரச்சினையாக்கி ஏனடா பேட்டி கொடுத்தோம் என்ற நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டது. இதன் பிறகு தமிழ் விக்கிப்பீடியா சார்பாக பேசுகிறவர்கள் சரியாகத் தான் பேசுகிறோமா யார் பெயரையாவது விட்டு விட்டோமா என்று தயங்கித் தயங்கித் தான் பேசுவதைக் காண முடிகிறது. இங்கும் இவ்வளவு பெரிய கொண்டாட்ட நிகழ்வு முடிந்த மறு நாளே குறைகளை அடுக்கி கொண்டாட்ட மனநிலையைக் குலைப்பது அவசியம் தானா? இதன் மூலம் புதிதாகப் பொறுப்புகளை ஏற்கத் துணிவோருக்கு இந்த விக்கிச் சமூகம் தரும் செய்தி என்ன? குறைந்தபட்சம், நிகழ்வுக்குப் பணியாற்றிக் களைத்துப் போன பங்களிப்பாளர்கள் ஓய்வெடுக்க ஒரு வார காலமாவது தாருங்கள். அதன் பிறகு உங்கள் விமரிசனங்களை அடுக்குங்கள். பேருந்தில் இனிப்புகள் வழங்கியதையும் சாவிக் கொத்து வழங்கியதையும் எல்லாம் ஒரு சிறப்பாக நான் எண்ணவில்லை. இவை மயூரநாதன் கொண்டு வந்து மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொண்டவை. ஒருவருக்கு ஒருவர் பகிர்வது இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. இதற்காக ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதல் ஏதும் தேவை இல்லை. இது போல் ஒவ்வொரு பயனரும் தான் எப்படி இந்நிகழ்வைச் சிறப்பாகலாம் என்று எண்ணியிருந்தால் கூட இந்நிகழ்வு இன்னும் பத்து மடங்கு சிறப்பாக நடந்திருக்க முடியும். எல்லாவற்றுக்கும் ஒருங்கிணைப்புக் குழு தான் பொறுப்பு என்ற கீழிருந்து மேலை எதிர்நோக்கும் மனப்பான்மை தேவையில்லை. இது நமது கொண்டாட்டம். தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலத்தில் கட்டுரைகள் எழுதுவது பற்றி கவலைப்பட்டோம். அடுத்து பங்களிப்பாளர்களைப் பெறுவது பற்றி கவலைப்பட்டோம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த பாய்ச்சலுக்கு, இணையத்துக்கு வெளியேயான கூட்டு முயற்சிகளிலும் எவ்வாறு விக்கி மரபுகளைப் பேணுவது, பங்களிப்பாளர்களிடையே விக்கிப் பண்புகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்துச் சிந்திப்பது நல்லது. நாற்காலிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட்டு பெரு நோக்குகளுக்கும் தொலை நோக்குகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு திருமணத்தின் வெற்றி என்பது மணமகனும் மணமகளும் இறுதி வரை மனமொத்து வாழ்வது தான். பந்தியில் பாயாசம் கிடைக்கவில்லை, பாயாசத்துக்கு அப்பளம் கிடைக்கவில்லை, மாமன் மச்சானுக்கு மாலை போடவில்லை என்பது எல்லாம் ஒரு குறை இல்லை. நடந்து முடிந்த கொண்டாட்டங்கள் நல்ல விளைவைத் தரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருக்கிற வளங்களைக் கொண்டு எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறோம் என்று நம்புகிறேன். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்புகளை முதலில் இருந்தே விக்கியில் வெளிப்படையாகத் தாருங்கள். இந்நிகழ்வுக்கான பல்வேறு பங்களிப்புகளை அளித்த அன்டன், தாரிக், செகதீசுவரன், சூரியா, சுந்தர், மயூரநாதன், சீனிவாசன், நற்கீரன், செல்வா, பெயர் குறிப்பிட விரும்பாத விக்கிப்பீடியர், மணியன், சிவகுரு சார்பாகவும் தவறுதலாக பெயர் விட்டுப் போயிருக்கக்கூடிய அனைவர் சார்பாகவும், இந்நிகழ்ச்சியைச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறோம் என்பதற்குப் பெருமைப்படுகிறேன். இறுதிவரை நின்று போராடி நிகழ்வைச் சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறோம் என்பது உடனிருந்த பார்த்த அனைவருக்கும் தெரியும். நிகழ்வு குறித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. நேர்மறையான, வளர்முகமான ஆலோசனைகள் யாவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்வோம். எனது இந்த மறுமொழியையே அனைவரின் கருத்துகளுக்குமான பொதுவான மறுமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி.
பி.கு. 2. தமிழ் விக்கிப்பீடியாவுக்கான உள்ளாற்றலின் மேல் நின்று கொஞ்சம் கொஞ்சமாகவேனும் நமக்குரிய இடத்தைப் பெற்றுக் கொள்வது நல்லது. அரசு, கல்வி, அதிகார மட்டங்களின் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவைப் பரப்பிக் காட்டலாமே என்று துடியாய் துடிப்பவர்கள் தமிழ் விக்கிப்பீடியர் என்ற போர்வையின் மூலம் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியைத் தான் நாடுகிறார்கள் என்பதும் தமிழ் விக்கிப்பீடியாவின் நலனை அடகு வைக்கத் தயங்க மாட்டார்கள் என்பதும் என் கணிப்பு. இத்தகையோரின் நோக்கம் அறிந்து தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தைக் காத்துக் கொள்வது நல்லது. அல்லது, வழக்கமான அரசியல் கலந்த தமிழ்நாட்டுச் சங்கங்களில் ஒன்று போல் தமிழ் விக்கிப்பீடியாவும் சிக்கிச் சீரழிந்து போவது உறுதி. மயூரநாதன்-2எந்தவொரு விடயத்தை முன்னெடுக்கும்போதும் அது குறித்த புகழ் மாலைகள் மட்டும் அது சிறப்பாக அமைவதற்குக் காரணமாவது இல்லை. முன்னெடுப்புக்களின் குறைகள் குறித்த விமர்சனங்களும் மிகமிக அவசியமானவை. இந்த அடிப்படையில், பல பயனர்களும் தமிழ் விக்கியின் பத்தாண்டு நிறைவுக் கூடல் குறித்த குறை நிறைகளை இங்கு முன்வைக்கக் காரணமாக அமைந்த பயனர் சேகரனுக்கு எனது நன்றிகள். இங்கு கூறப்பட்ட குறைகளும் விமர்சனங்களும் இக்கூடலை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டிருந்த சில பயனர்கள் மீது வைக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இக்கூடலை ஒழுங்கு செய்வதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட பயனர்கள் மற்றவர்களுடன் போட்டிபோட்டு இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் அல்ல. பிற பயனர்கள் ஈடுபடமுடியாத நிலை இருந்ததால் அவர்களுக்காகத் தமது நேரத்தையும் சில சமயங்களில் தமது பல்வேறு தனிப்பட்ட கடமைகளையும் ஒத்தி வைத்து மேற்படி செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள். எனவே இங்கு முன்வைக்கப்பட்ட குறைகள் விமர்சனங்கள் அனைத்தும் முழுத் தமிழ் விக்கிச் சமூகத்தையுமே சாரும் என்பதை நாம் உணர்ந்து கொண்டு அடுத்த கட்டச் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். இக்கூடலினால், தமிழ் விக்கியை மேலும் மேம்படுத்திச் செல்வதற்கான பலவகையான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பயனர்கள் மத்தியில் புதிய ஊக்கம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதில் பெருமளவு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ் விக்கிச் சமூகத்துக்கு வெளியில் இருந்தும் நமது முன்னெடுப்புக்களுக்கு அங்கீகாரமும் உதவிகளும் கிடைத்துள்ளன. எனவே இவ்வாய்ப்புக்களையும், ஆற்றல்களையும் சரியான முறையில் புரிந்து கொண்டு ஒற்றுமையாக அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டியது அவசியம். எங்களோடு பேசிய பல ஊடகத்தினர் தமது தேவைகளுக்காகத் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். பள்ளிகளில் விக்கிப்பீடியாவைப் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதிலும் பல பயனர்கள் ஈடுபட்டுக் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளனர். தமிழ்ச் சமூகத்தின் அறிஞர்கள் பலரும் கூட நமது செயற்பாடுகளை ஆர்வத்துடன் கவனித்து வருவது தெரியவந்துள்ளது. இவை எல்லாம் நாம் தமிழ் விக்கியின் தரத்தையும் அதன் நம்பகத் தன்மையையும் மேம்படுத்துவதற்கான தேவையை உணர்த்தி நிற்கின்றன. நமது அடுத்த கட்ட முயற்சிகள் இவற்றை முன்னிலைப்படுத்தி அமையவேண்டியது அவசியம். இதற்காக நமக்குக் கிடைக்கக்கூடிய எல்லா வளங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பயனரும் மற்ற எல்லாப் பயனர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். கூடலின் போது வெளிப்பட்ட, நாம் அறிந்து கொண்ட பல விடயங்கள், நாமெல்லாம் வெட்டியாகக் கணினிக்கு முன்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் அல்ல என்பதை மிகத் தெளிவாகவே உணர்த்தியுள்ளன. சமுதாயத்துக்கான சேவை என்பதற்கும் அப்பால் தனிப்பட்ட முறையிலும் கூடப் பல பயனர்களது உலகியல் சார்ந்தனவும், உளவியல் சார்ந்தனவுமான பல்வேறு தேவைகளைத் தமிழ் விக்கிப்பீடியா மூலம் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் பற்றியும் நாம் அறிந்து கொண்டோம். பிற மொழி விக்கிச் சமூகங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையக்கூடிய பல இயல்புகள் தமிழ் விக்கிச் சமூகத்தில் இருப்பதையும் தனிப்பட்ட முறையில் என்னால் உணர முடிந்தது. செங்கைப் பொதுவன் போன்றோரின் இளைய தலைமுறையினரை அரவணைத்துச் செல்லும் பண்பு, இளைய தலைமுறையை வழிகாட்டுவதிலும் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்காகத் தனது தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்வதிலும் செல்வா போன்றோருடைய ஆளுமை, தங்கள் சூழலில் என்னென்ன விடயங்களைச் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் தாமாகவே சிந்தித்துச் செயலாற்றும் பல பயனர்களின் தொலை நோக்கு, எதையும் துணிவுடனும் வேகத்துடனும் செய்யும் இளைய தலைமுறையினரின் ஊக்கம் என்பன பல விக்கிச் சமூகங்களுக்குக் கிடைக்காத வளங்கள். இவற்றையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் தமிழ் விக்கிப்பீடியாவைத் உலகத் தமிழரின் மிகப் பெரிய சொத்தாக மாற்றிக் காட்ட முடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்தாமல் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டியது அவசியம். இங்கே எழுதும் அனைத்தையும் நாம் மட்டுமன்றி எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் உட்பட உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் பார்க்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ---மயூரநாதன் (பேச்சு) 10:58, 5 அக்டோபர் 2013 (UTC) அனைவருக்கும் வணக்கம்! விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு குறித்த எனது கருத்துக்கள் (கீழே உள்ளவை) மிகவும் கடுமையாக இருந்தது என்று பலரும் சொல்லியிருந்தீர்கள். என்ன செய்வது பாகற்காய் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அது தானே உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. எனது கல்லூரி நாட்களில் இரு ஆண்டுகள் அண்ணாமலை பல்கலையில் மாணவர் தலைவனாக இருந்து பல்வேறு நிகழ்வுகளை எனது தலைமையின் கீழ் வெற்றிகரமாக நடத்தியவன் நான். அதுவும் எந்த விதமான நிதியுதவியும் இல்லாமலேயே. அந்த வகையில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு சில அடிப்படை செயல்பாடுகள் காட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய அடிப்படை தேவைகளைக் கூட புரிந்து கொள்ளாமல் ஏதோ விழா நடத்துகிறோம் என்று நடத்துவது போல் இவ்வரிய வரலாற்று சிறப்புமிக்க விழா அமைந்தது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. என்னுடைய கருத்துக்கள் கடுமை என்று சொன்னவர்களுக்காக சிலவற்றை எளிய நடையிலேயே இப்பொழுது கேட்கிறேன். இதற்கு பதில் சொல்வீர்கள் அல்லவா?... 1. விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டதா? அரசுத்துறைகளுக்கு அனுப்பப்பட்டதா? பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டதா? கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டதா?... இதற்கு அதிகம் செலவாகாதே? 2. விக்கிப்பிடியா விழா குறித்து சிறு சிறு பேனர்கள் (3x2 அடி) செய்து ஒவ்வொரு கல்லூரியிலும் இடம்பெறச் செய்திருக்கலாமே? 3. விழாவின் போது விக்கிப்பீடியா குறித்த நூல் அச்சடித்து கொடுப்பதாக முன்னர் பேச்சு இருந்தது என நினைக்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு பக்க அளவில் கூட எதுவும் அச்சடித்து கொடுக்காதது ஏன். 4. ஏற்கனவே திரு.தேனி மு.சுப்பிரமணி அவர்கள் எழுதிய விக்கிப்பீடியா நூலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. (அதுவும் அவர் அவ்விருதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கரங்களிலிருந்தே பெற்றார் அவர்.) இருப்பினும் அது குறித்த செய்தியையோ, அந்த படத்தையோ இருட்டடிப்பு செய்யும் வகையில், எதையுமே யாருமே குறிப்பிடவில்லையே அது ஏன்? அவர் விக்கிப்பீடியா குறித்து தானே எழுதியிருந்தார் அப்புறம் ஏன் இந்தப் பாகுபாடு... 5. உண்மையில் சொல்லப்போனால் திரு.தேனி மு.சுப்பிரமணியத்தை அந்த நூலுக்காக மட்டுமின்றி செல்லும் இடம் தோறும் விக்கிப்பீடியா குறித்து பேசி வரும் அவரின் அயராத முயற்சிக்காகவும், அவரை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, அவரின் செயலைக் குறித்து தெரிவித்திருந்தால் கூட, அனைவரும் இது போன்று பணியாற்ற தூண்டுகோலாக இருந்திருக்குமே. ஏன் செய்யவில்லை. (இதை நான் பொறாமை என்று சொன்னால் நீங்கள் அனைவரும் என் மீது கோபப்படுவீர்கள் கடுமையான வார்த்தை சொல்கிறேன் என்று எழுதுவீர்கள். நீங்களே சொல்லுங்கள் இந்த இருட்டடிப்புக்கு பெயர் என்ன?) 6. விழாவில் தலைமையேற்க எந்த சிறப்பு அழைப்பாளரும் தேவையில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டு விழா நடத்தினீர்கள். (பீடங்களை அலங்கரிக்க யாரும் தேவையில்லை- என்று கூறியிருந்தீர்கள் என நினைக்கிறேன்). இது உண்மையிலேயே சரி தானா என்று நீங்களே யோசியுங்கள். எத்தனையோ நல்லவர்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள், தமிழார்வம் கொண்டவர்கள், அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் இருக்கும் இந்த தமிழ்கூறும் நல்லுலகில், அப்படி யாருமே தேவையில்லை என்று விழா நடத்தியது ஏன்? நீங்கள் அழைத்திருந்தால் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களே வந்து விழாவை சிறப்பித்திருப்பாரே. அப்படிச் செய்திருந்தால் அது எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும். 7. அரசு துறை சார்ந்தவர்களுக்கு அழைப்பு அனுப்புவது என்பது ஒரு மரபு. அப்படி அனுப்பும் போது அவர்கள் மூலம் நமக்கு விழா நடத்த உதவிகள் கிடைக்கவோ, விக்கிப்பீடியாவுக்கு மேலும் அந்தந்த துறை சார்ந்த உதவிகள் கிடைக்கவோ ஏதுவாக இருந்திருக்குமே. இவ்விழா குறித்து நான் எனக்குத் தெரிந்த அரசுத் துறை சார்ந்தவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் விழாவிற்கு தாங்கள் அழைக்கப்படாதது குறித்து மிகவும் மனம் வருந்தினர். விருந்தினர்களாக அழைக்காவிட்டாலும், இப்படி ஒரு விழா நடைபெறுகிறது என்று அறிவிக்கும் வகையிலாவது அழைப்பிதழ் அனுப்பியிருக்கலாமே. இதற்கெல்லாம் நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்வது மிகவும் தவறு. ஏனெனில் அழைப்பிதழ் அச்சிட ஒரு நாள் போதும். அனைவரும் அஞ்சலிலேயே அனுப்ப ஒரு நாள் போதாதா? 8. நான் குறைகளை மட்டுமே கூறினேன் என்று எண்ணும் அனைவரும் நான் பாராட்டிய நிகவுகளை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் விழா அரங்கம் அருமையாக இருந்தது. அதே போல் விழாவில் வழங்கிய சிற்றுண்டி மிகவும் அருமை. விழாவில் பேசியவர்கள் கனகச்சிதமாக பேசினார்கள். பெரும்பாலான விழாக்களில் இந்த மூன்றும் ஒருசேர அமையாது. இப்படி நல்ல நிகழ்வுகளை பாராட்ட நான் தயார். 9. மற்றொன்றை அவசியம் சொல்லியாக வேண்டும். விழாவில் ஒரு சிலர் தங்களை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். பெயர் சொல்லி அவர்களின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. அவர்கள் மனசாட்சியே அதை சுட்டிக் காட்டும். இது ஒரு பொது விழா. இருந்தும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கும் போது கூட தனித்தனியாக அழைத்து சென்று பேட்டி அளித்துள்ளீர்கள். இதற்கு என்று ஒரு குழு அமைத்திருக்கலாம். அல்லது விழா குறித்த ஒரு செய்தியறிக்கை தயாரித்து அதனை எல்லா ஊடகங்களுக்கு அளித்திருக்கலாம். இம்மாதிரியான விழாக்களில் இது தானே நடைமுறை. 10. விழாவில் மாணவர்களும் பங்கேற்றார்கள் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். எத்தனை பேர் என்பது தான் என் கேள்வி. ஆயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணா பல்கலையிலேயே தங்கி பயிலும் சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழும் இந்நிகழ்விற்கு எத்தனை பேர் வந்தார்கள். எத்தனை பேருக்கு இப்படியொரு நிகழ்வு அங்கு நடப்பது தெரியும் என்பதுதான். மாணவர்கள் தானே அடுத்த தலைமுறைக்கு விக்கிப்பீடியாவை எடுத்துச் செல்பவர்கள். 11. இந்த விழாவுக்கு எவ்வளவு செலவாயிற்று, எவ்வளவு நிதி கிடைத்தது எதுவும் எனக்குத் தெரியாது. அது குறித்து நான் பேசிவது முற்றிலும் தவறு. ஆனால் உண்மையில் இருபதாயிரமோ முப்பதாயிரமோ இருந்திருந்தால் கூட என்னால் இதைவிட அழகாகவும் அருமையாகவும் தனியொருவனாகவே இவ்விழாவை நடத்தியிருக்க முடியும் என்று மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். இதன்மூலம் நான் சொல்ல வருவது பண பற்றாக்குறையையோ நேரமின்மையையோ சாக்காக கூறாதீர்கள் என்பதுதான். மனமிருந்தால் எதனையும் சாதிக்கலாம். அதுவும் இந்த பரந்து விரிந்த சென்னை மாநகரில் விக்கிப்பீடியா விழாவுக்கு உதவி கிடைக்காமலா போய்விடும் (பண உதவியை நான் கூறவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவும்.) கடைசியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் சொன்னது எதையும் குறையாக நினைப்பதை விட சொன்னதில் உள்ள உண்மைகளைப் பாருங்கள். விழாவில் என்னை ஒருசிலர் தவிர யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட முகம் தெரியாத ஒரு பாமரனின் விமரசனமாக மட்டுமே இதனைப் பாருங்கள். எந்த ஒரு குறையுமே அதைத் திருத்துவதில் நிறைவடைந்துவிடுகிறது. ஆகவே குறைகளை திருத்தி நிறைவைக் காண முயலுங்கள். முயலுவோம். எனது கருத்துக்கு எதிர் கருத்து கூறியவர்களுக்கும், வாழ்த்திய ஒருசிலருக்கும், இப்படி கடுமையாக எழுதியுள்ளானே என்று திட்டியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கோ.சந்திரசேகரன் 05-10-2013 நால்வகை விழாக்கள்இந்த பத்தாண்டு நிறைவு பயன கூடல் என்பது
என்பது குறித்து முதலில் தெளிவு வேண்டும் கல்லூரிகாலம் முதல் பல வகைப்பட்ட நிகழ்வுகளில் பங்கு கொண்டவன் என்ற முறையில் என் கருத்துக்களையும் அளிக்கிறேன்
உதாரணமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஒரு பொதுக்கூட்டமோ, மாநாடோ, பேரணியோ அல்லது நடத்துகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த நிகழ்வின் நோக்கம் அதிகம் நபர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து தகவல் சென்றடைவேண்டும் . எனவே அந்த நிகழ்ச்சிக்கு விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட வேண்டும், அரசுத்துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும், பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும், கல்லூரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும், அரிசா சங்கம் போன்றவர்களை தொடர்பு கொள்ள வேண்டும், சிறு சிறு பேனர்கள் (3x2 அடி) செய்து ஒவ்வொரு கல்லூரியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும், சாலை விபத்து குறித்து சிறு நூல் அச்சிட்டு அளிக்கலாம், விழாவில் தலைமையேற்க எந்த சிறப்பு அழைப்பாளர் அழைக்கப்படவேண்டும், அரசு துறை சார்ந்தவர்களுக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் , ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைக்க வேண்டும். அதே போல் சாலை பாதுகாப்பு வாரம் குறித்து பள்ளிகளுக்கு இடையில் ஒரு கட்டுரை போட்டி நடத்துகிறோம் என்றால், அந்த நிகழ்வின் நோக்கம் அதிகம் நபர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து தகவல் சென்றடைவேண்டும் . எனவே அந்த நிகழ்ச்சிக்கு விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட வேண்டும், அரசுத்துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும், பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும், கல்லூரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும், அரிசா சங்கம் போன்றவர்களை தொடர்பு கொள்ள வேண்டும், சிறு சிறு பேனர்கள் (3x2 அடி) செய்து ஒவ்வொரு கல்லூரியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும், சாலை விபத்து குறித்து சிறு நூல் அச்சிட்டு அளிக்கலாம், விழாவில் தலைமையேற்க எந்த சிறப்பு அழைப்பாளர் அழைக்கப்படவேண்டும், அரசு துறை சார்ந்தவர்களுக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் , ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் சாலை வடிவமைப்பு, விபத்து சிகிச்சை குறித்து ஒரு விஞ்ஞான கருத்தரங்கம் நடத்துகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது அந்த நிகழ்வின் நோக்கம் அந்த நிகழ்ச்சி குறித்த செய்தி பொது மக்களை சென்றடைய வேண்டும் என்பதை விட, அந்த துறை சார் வல்லுனர்களை சென்று அடைய வேண்டும் என்பதே. எனவே அந்த நிகழ்வை பொருத்தவரை அழைப்பிதழ்களை அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பதேவையில்லை. உதாரணத்தில் குறிப்பிட்ட கருத்தரங்கிற்று மருத்துவத்துறை, போக்குவரத்து துறை, காவல் துறை அழைக்கப்பட வேண்டும், தமிழ் வளர்ச்சி துறை, விவசாய துறைக்கு அழைப்பு தேவையில்லை. அதே போல் தமிழ் கணினி குறித்த விஞ்ஞான கருத்தரங்கிற்கு தமிழ் துறையும், தகவல் தொழினுட்பம் (விக்கி மரபுபடி இந்த வார்த்தை தானே !) துறையை அழைக்க வேண்டும். அனைத்து பல்கலை கழகங்களை தொடர்பு கொள்ள தேவையில்லை. மருத்துவ பல்கலைகழங்களில் கூட இந்த துறையை மட்டும் தொடர்பு கொண்டால் போதும். இந்த நிகழ்வின் நோக்கம், சிறந்த கட்டுரைகள், ஆராய்ச்சி குறிப்புகள், வகுப்புகள், விவாதகங்கள் ஆகியவை இருக்க வேண்டும் என்பது தானே தவிர இந்த நிகழ்வின் நோக்கமும் சென்ற இரு நிகழ்வுகளின் நோக்கமும் வேறு. ஒரு விஞ்ஞான கருத்தரங்கை பேரணி நடைமுறைகளை வைத்தோ, கலை நிகழ்வு நடைமுறைகளை வைத்தோ, பொதுகூட்ட நடைமுறைகளை வைத்தோ எடை போடுவது மிகவும் பிழையான செயல் ஆகும் இது தவிர மற்றொரு நிகழ்வும் உண்டு. அது இந்த நிகழ்ச்சியை போல் குறிப்பிட்ட ஆண்டுகள் நிறைவை ஒட்டிய மீள்கூடல் நிகழ்வு. இந்த வகை நிகழ்ச்சிகளின் நோக்கம் அனைவரும் நேரில் சந்தித்து பேசுவது தானே தவிர இங்கு அரசு துறைகளுக்கு அழைப்பு, சிறப்பு விருந்தினரை முன்னிலைப்படுத்துவது, மாணவர்களை அழைப்பது என்பது எல்லாம் இல்லை . விழா அழைப்பு கூட தேவையில்லை. காரணம் இங்கு வருபவர்கள் அனைவருமே விருந்து அளிப்பவர்களே. யாரும் விருந்தினர் இல்லை. All Hosts and No Guests. நான்குவகை நிகழ்வுகளும் வெவ்வேறானவை அவற்றின் நோக்கங்களும் வெவ்வேறானவை அவற்றை நடத்தும் முறைகளும் வெவ்வேறானவை ஒரு நிகழ்வின் நடைமுறையை வைத்து மற்றொரு வகை நிகழ்ச்சியை எடைபோடுவது, குறைகூறுவது மிகவும் பிழையான செயல் ஆகும் புனைவு : வீட்டிற்கு வந்த ஒருவர் மேசையில் இருந்த ஒரு பத்திரிகையை எடுத்து புரட்டி பார்த்து விட்டு கூறினார் "என்ன பத்திரிகைடா இது. ஒரு தொடர் இல்லை, நடுப்பக்க படம் இல்லை, கேள்விபதில் இல்லை, சினிமா கிசுகிசு இல்லை. இப்படி ஒரு பத்திரிகையை எவண்டா படிப்பான் " "அண்ணாச்சி, அது குமுதமோ, ஆனந்த விகடனோ அல்ல. அது New England Journal of Medicine. அது அப்படித்தான் இருக்கும்"
புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 04:58, 6 அக்டோபர் 2013 (UTC)
அன்பு நண்பர்களே, எந்த விஷயத்தைப் பற்றியும் விமர்சனம் செய்தாலே விமர்சிப்பவருக்கு கடைசியாக அவமதிப்பும், பழிச்சொல்லும் தான் கிடைக்கும் என்பதை ஒருவழியாக திரு.மயூரநாதன் தன் கருத்துக்களின் மூலம் தெரிவித்து விட்டார். மிக்க நன்றி ஐயா!... இது நான் எதிர்பார்த்தது தான். நீங்கள் சொன்னது போல் நான் சென்ற மாதங்களில் விழா ஏற்பாடுகளில் எதுவும் கலந்து கொள்ளவில்லை தான். ஆனால் அதற்காக அந்த ஏற்பாடுகள் குறித்த செய்திகளை நான் படிக்கவில்லை என்றோ அல்லது நண்பர்கள் மூலம் அறியவில்லை என்றே எப்படி உங்களுக்கு தெரியும்? என்னுடைய உண்மையான ஆதங்கத்தை வெட்டிப் பேச்சு என்று சொல்வதால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. நான் எதையும் புரியாமல் எழுதவில்லை. நீங்கள் எண்ணியது போல் விழா சிறப்பாக நடைபெற்றதாக எண்ணி நீங்கள் மகிழ்வடையும் பட்சத்தில் எனக்கும் மகிழ்ச்சியே. கடைசியாக எனக்கு ஒரு அறிவுரை வேறு வழங்கியுள்ளீர்கள். அதற்கு மிக மிக நன்றி. ”உங்கள் விழா” குறித்து எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டேன் தான். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. (ஆமாம் என்னுடைய எழுத்து எப்படி மற்ற பயனர்களின் வேலையைத் தடுக்கும் என்று புரியவில்லை...நான் யாரையும் தங்களின் வேலையை விட்டுவிட்டு என் கருத்துக்களை படிக்கச் சொல்லவில்லையே.ஆகவே வேலையுள்ளவர்களே, இப்போது நான் வெட்டியாய் (?) எழுதியதையும் படித்து விட்டு மீண்டும் என் மீது சேற்றி வாரி இறைக்காதீர்கள்.) சௌமியன்நண்பர்களே, என் எண்ணங்களை கால தாமதமாக பகிர்வதற்கு மன்னிக்கவும். நான் ஒரு மாணவனின் கண்நோட்டத்தில் நடப்பு நிகழ்வுகளிலிருந்து பாடம் பயில்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். ஒரு அரசு நிறுவனமாகவோ, தனியார் நிறுவனமாகவோ செயல்படுவதை விட ஒரு சமூக நிறுவனமாக செயல்படுவது சற்று கடினம் என்று எண்ணுகிறேன். எதிர்பார்ப்புகள் 'கட்டற்றதாக' இருக்கக்கூடும்! ஒரு பொதுநிகழ்ச்சி பற்றி வெளியுலகிடம் பகிர்ந்து கொண்டபிறகு, சில வேலைகள் தடைப்பட்டால் அவற்றை துவக்கியவர் எப்பாடுபட்டேனும் அவற்றை நடத்தியே ஆகவேண்டும். ஓரிரு முறை இவ்வாறு தடங்கல் ஏற்ப்பட்டால், நிகழ்ச்சி நடத்துபவர் மெல்ல மெல்ல சில நெருங்கிய அன்பர்களின் உதவியுடன் நிகழ்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் கவனம் செலுத்துவது இயற்க்கை. இந்நிலையில் உதவி செய்ய விழைந்த மற்ற ஆர்வலர்கள் தமக்கு பங்கு கிடைக்கவில்லை என வருத்தப்படுவதும் இயல்பே. இத்தகைய பொது நிகழ்ச்சியில் உதவி செய்யவும் பங்கேற்றுக்கொள்ளவும் ஆட்கள் கிடைக்காமல் நான் மிரண்டும் போயிருக்கிறேன். ஆக, இங்கு குறைகள் என்று நீங்கள் குறிப்பிடும் சில கருத்துக்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டியவை. இது நம் வீட்டு கல்யாணம். சில அனுபவங்களின் தாக்கம் அனுபவித்தபிறகு நன்கு புரியலாம். ஊடகங்களுக்கு முன்கூட்டியே செய்தி அனுப்புவது பற்றிய செயல்பாட்டில், என் பிழை ஒன்று உள்ளது. திரு இரவி ஊடகங்களுக்கு அழைப்பு அனுப்ப என்னிடம் சொல்லியிருந்தார். நானும் அழைப்பை பாக்ஸ் மூலமும் குரியர் மூலமும் அனுப்பிவைத்தேன். நன்கு நாட்கள் கழித்துதன இது சென்னை பிரஸ் கிளப்-க்கு சென்றடையவில்லை என்று உணர்ந்தேன். குரியர் கம்பெனிகாரர்கள் என் அழைப்பை ஹைதராபாத்-க்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். புகாருக்கு அவர்கள் இன்னமும் பதில் அளிக்கவில்லை. ஆனால் கால தாமதமான அழைப்பு பிரஸ் மீட்-ஐ பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இரவி அவர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் என் வருத்தத்தை தெரியப்படுத்துகிறேன். மன்னிக்கவும். இவ்விழாவில் நான் உங்கள் விருந்தினன் போல் பங்கேற்றேன். எதிர்காலத்தில் நானும் புரவலனாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன். Chapter அமைப்பு உங்களுக்கு உதவும் கரம். அதே சமயத்தில், தேவையற்று தலையீடு செய்வது உங்கள் ஊக்கத்தை பறிப்பதாகும். ஆகவே, நாங்கள் சற்றே விலகியிருந்து உங்கள் உதவி கோரலுக்கு காத்திருக்கிறோம். இன்றைய நிலையில், ஒரே நபராக இருக்கின்ற காரணத்தால் எல்லோருக்கும் அனைத்து செயல்களையும் செய்து தரும் நிலையில் நான் இல்லை. எதிர்காலத்தில் எந்த மாதிரியான செயல்களை எங்களிடமிருந்து எதிப்பார்க்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டால் எங்களை தயார் படுத்திக்கொள்ள இயலும். இந்தப்புரிதலுக்கான உரையாடலை எதிப்பார்க்கிறேன். தமிழ் சமுதாயத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக எண்ண வேண்டாம். பல மொழி இயக்கங்களும் இன்னமும் எங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். Un-conference என்ற முறையில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி விமரிசையாக நிகழ்ந்ததாகவே உணர்கிறேன். எங்கு வரவேண்டும், எப்படி வரலாம் என்ற குறிப்புக்கள் உதவியாக இருந்தன. தங்கும் இடம் மிக வசதியாக இருந்தது. மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் நாம் கேட்ட உரை உபயோகமானது. FOSS இயக்க நண்பர்களுடைய கருத்து பரிமாற்றமும் உபயோகமாக இருந்தது. முதல் பங்களிப்பாளரான மயூரநாதன்-அவர்களுடைய முன்னாள் அனுபவங்கள் சுவையாக இருந்தன. செல்வா அவர்களுடன் உணவருந்தும் வேளையில் பேச முடிந்தது. தேனி சுப்பிரமணி, துரை மணிகண்டன், VB மணிகண்டன் ஆகியோருடன் கன்னியாகுமரி நிகழ்ச்சி சம்பந்தமாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு இருந்தது. இவர்களை நேரில் காண முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தர் மற்றும் பாலா இருவரை மட்டுமே முன்கூட்டி சந்தித்திருந்தேன். இரவி பலகாலமாக அறிமுகமானவர் போன்றே தோன்றினார். ஒரு 77 வயது இளைஞர் என்னை ஊக்குவித்தார். அன்பர்கள் சிவகுமார், சிவகோசரன் ஆகியோரிடமும் வெளிப்படையாக பேச முடிந்தது. பெயர்களை குறிப்பிட்டு சொல்வது விட்டுப்போன பெயருடையவர்களை வருந்தச்செய்யலாம். நான் சந்தித்த எல்லா நண்பர்களும் மிக இயல்பாக நட்பு பாராட்டினார்கள். பலருடனும் கருத்து பரிமாறிக்கொள்ள தேவைப்பட்ட அவகாசம் கிடைத்தது. இந்த அவகாசம் மிக முக்கியமானது. TAG அரங்கத்தை தேட சற்று சிரமமாக இருந்தது உண்மை. நிகழ்ச்சிக்கு பிறகு, பங்கேற்றோர் பட்டியலை காண்கையில், கேள்விப்பட்டு சந்திக்க விரும்பிய சிலரை காணாமல் விட்டது சிறு குறை. மற்ற மொழி விழாக்களில் நடைபெற்ற சில வித்தியாசமான நிகழ்வுகள்: தெலுங்கு மாநாட்டில், அயல் நாட்டு பங்களிப்பாளர்கள் Google hangout மூலம் பங்கேற்றார்கள். பெங்களூர்-ல் நடைபெற்ற வடமொழி நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்களுக்கான கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. என் முக்கிய நோக்கம் அன்பர்களுடன் நட்பு பாராட்டி புரிந்துகொள்வதாகத்தான் இருந்தது. இது தான் இந்த நிகழ்ச்சியின் பெரும் சாதனை. பத்தாண்டு நிறைவை கொண்டாடும் இந்த சமுதாயத்தில் பலருக்கு இடையே நேருக்கு நேர் சந்திப்பு என்பது இப்போது தான் நடந்தது என்பது வியப்பாக இருந்தது. என்னதான் இணையத்தில் சேர்ந்து பணிபுரிந்தாலும், இதுபோன்ற நேருக்கு நேர் சந்திப்பு மிக முக்கியம் என்று நினைக்கிறேன். WMF-இடமிருந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவி பெற ஒரு சிறு ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன். இந்த ஆய்வில் உடனடியாக பகிரமுடிந்தவை பின் வருமாறு: பங்குகொண்டோர் - 13 இணையம் மூலமே முன் அறிந்தவர்கள் எண்ணிக்கை (சராசரி ) - 8.7 நேருக்கு நேர் முன் அறிந்தவர்கள் எண்ணிக்கை (சராசரி ) - 3.2 பத்தாண்டு விழாவின் வாயிலாக நேருக்கு நேர் அறிமுகமானோர் (சராசரி) - 14.7 வலைத்தளம் மூலம் அறிந்தவர்கள் எண்ணிக்கையைக்காணிலும் இப்போது நேருக்கு நேர் அறிமுகமானோர் கிட்டத்தட்ட இருமடங்கு. நேருக்கு நேர் அறிந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு. அதிக நெருக்கம் பெற கருவியாக அமைந்த இவ்விழா நிச்சயமாக பயனர்களிடையே ஒத்துழைப்பை பெருக்கும். உங்கள் முயற்சி மேன்மேலும் பெருக எங்கள் வாழ்த்துக்கள். சந்திப்பிழைகள் சொற்ப்பிழைகள் போன்றவைக்கு மன்னிக்கவேண்டுகிறேன்.
தேனி. மு. சுப்பிரமணி 2 - அனைவருக்கும் நன்றிதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுக் கூடல்/நிறைவுக் கொண்டாட்டங்கள் குறித்து இங்கு பதிவு செய்யபப்ட்ட எனது கருத்துகளின் உணமையை உணர்ந்து கொண்டவர்களுக்கும், சிலரைத் திருப்திபடுத்திடும் நோக்கத்துடன் மட்டும் இங்கு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தவர்களுக்கும், நடுநிலையோடு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்த சிலருக்கும் என்று அனைவருக்கும் என் இனிய நன்றிகள்.... நானும் சிலருக்குப் பதிலளிக்கிறேன் என்று பல பக்கங்களுக்குப் பதிலை இங்கு எழுத முடியும். அது தேவையற்ற கருத்து வேறுபாடுகளைத்தான் உருவாக்கும் என்பதால் எனது பதில்களை இங்கு தவிர்க்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா ஒன்றை மட்டுமே தங்களுடைய அறிமுகத்திற்காகக் கொண்டிருக்கிறவர்களுக்கு வேண்டுமானால், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்குத் தமிழ் விக்கிப்பீடியா உதவக்கூடும். பல்வேறு நிலைகளில் தனித்துவமான அடையாளம் கொண்டிருக்கும் என் வளர்ச்சிக்குத் தமிழ் விக்கிப்பீடியா உதவப் போவதில்லை. என் வழியாகத் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வேண்டுமானால், குறிப்பிடத்தக்கதான பரவலான அறிமுகம் கிடைத்திருக்கிறது. இதற்கு எனது பயனர் பக்கத்திலிருக்கும் விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்புகள் , விக்கிப்பீடியா குறித்த எனது ஊடகப் படைப்புகள் மற்றும் விக்கிப்பீடியா மாணவர் மன்றம் போன்ற பக்கங்களே சான்று. இன்று முதல் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான எனது அனைத்துப் பங்களிப்புகளும் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. (தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியாகும் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் எனது தொடர் முடிவடையாத நிலையிலுள்ளது. இந்தத் தொடரில் வெளியான பக்கங்கள் பட வருடி செய்யப்பட்டு இங்கு முன்பே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முழுமையடைவதற்காகவும், எனது தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்புகளில் ஒன்றிற்கான சான்றாகவும் இது இருப்பதால் இந்தப் பங்களிப்பு மட்டும் என்னால் மேற்கொள்ளப்படும்) தமிழ் விக்கிப்பீடியாவில், தங்களுடைய தனித்திறனால் வெளிப்படும் நிலையில், அவர்களை வெளியேற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் சிலரின் செயல்பாடுகளால் இலங்கையைச் சேர்ந்த பயனர் புன்னியாமீன் (தொடங்கிய கட்டுரைகள்: 8,558) என்பவர் வெளியேற நேர்ந்தது. இதைத் தொடர்ந்து நானும் தற்போது வெளியேறுகிறேன். எங்கள் இருவருக்கும் முன்பாக எத்தனை பேர் இப்படி வெளியேறினார்களோ தெரியவில்லை...! இங்கு யாருக்கும் பயந்து போய் நான் வெளியேறுவதாகக் கொள்ள வேண்டாம். பின்னால், என்னுடைய தனித் திறனுக்குக் கிடைக்கக் கூடியவை எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவினால்தான் கிடைத்தது என்கிற தவறான கருத்து ஏற்பட்டு விடக் கூடாதே... என்பதால்தான் இந்த முடிவு. என்னுடைய தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகளுக்கு தொடக்கத்திலிருந்து உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இனிய நன்றிகள் என்றென்றும் உண்டு...!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:40, 7 அக்டோபர் 2013 (UTC)
அன்புள்ள தேனியாரே தாங்கள் எடுத்த முடிவை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வரவேண்டும். உங்களைப் பற்றி எமக்கு நன்றாகத் தெரியும். உங்களின் சொந்த உழைப்பால் முன்னேறியவர். அவசியம் மீண்டும் தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்பைக் காணவேண்டும். நன்றி. --முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 15:44, 10 அக்டோபர் 2013 (UTC) தேனியேரே, வருத்தமாக இருக்கிறது. தமிழ்மொழி விக்கிப்பீடியாவில் மட்டும் எழுதுவதில்லை என்று பிற மொழிகளில் எழுதிக் கொண்டிருந்தவன் தான் நான். மாற்றம் வேண்டும் போது வெளியிலிருப்பதை விட உள்ளேயிருப்பதே சிறந்தது என நினைத்து மீண்டும் எழுதுகிறேன். அதுபோல மீண்டும் வந்து உங்கள் ஆலோசனைகளைத் தகுந்த விவாதயிடத்தில் வையுங்கள். விக்கிப்பீடியா யாருடைய சொத்தும் அல்ல நாம் குறையாகக் கருதும் பல விசயங்கள் பின்னாளில் மாறலாம். ஊர் கூடி இழுக்கும் தேரில் உங்கள் பங்களிப்பும் அவசியம். (உங்களளவிற்கு சாதிக்காத என்னை உங்களுடன் ஒப்பிட்டதற்கு மன்னிக்க, இருந்தும் சக்கையைவிட்டுவிட்டு சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்)--நீச்சல்காரன் (பேச்சு) 16:28, 10 அக்டோபர் 2013 (UTC)
தனிமனிதத் தாக்குதல்தனிமனிதத் தாக்குதல் (Personal Attack) என்பது ஒரு மனிதரை உடல்ரீதீயாக தாக்குவதல்லாமல்; உளரீதியாக தாக்குவதை குறிக்கும். ஒருவரை குறிப்பிட்டு பயன்படுத்தப்படும் வசைச் சொற்கள், இழிச்சொற்கள் மட்டுமே ஒருவரை உளரீதியாக தாக்கத்தை உண்டுப்பன்னுகின்றது என்பது உளவியல் பார்வையில் தவறான கருத்தாகும். அதனை விடவும் ஒருவரை உளரீதியாக பாதிக்கக் கூடிய அல்லது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து சொற்பயன்பாடுகளும் கூட தனிமனிதத் தாக்குதலாகக் கொள்ளப்படும். இங்கே விக்கிப்பீடியாவில் //"இன்று முதல் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான எனது அனைத்துப் பங்களிப்புகளும் நிறுத்திக் கொள்ளப்படுகிறது."// என்று நீண்டக்காலமாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உழைத்த ஒரு பங்களிப்பாளர் கூறுகிறார் என்றால் அவர் எந்தளவுக்கு உளத்தாக்கத்திற்கு உட்பட்டிருப்பார் எனபதை உளவியல் ரீதியாக உணர்ந்துக்கொள்ளலாம். இவ்வாறான தனிமனிதத் தாக்குதல்கள் வசைச்சொற்கள் இழிச்சொற்கள் போன்றவற்றையும் விட கொடியது. இவ்வாறு தாக்குதல்களுக்கு உற்படுவோர் மட்டுமன்றி; இத்தகைய தாக்குதல்கள் நமக்கும் நாளை வரலாம் என எண்ணும் நிலையில் ஏனையப் பயனர்களும், விக்கியின் அன்மைய மாற்றங்களை அடிக்கடிப் பார்ப்போரும், தேடு பொறிகள் ஊடாக குறிப்பிட்ட பக்கங்களைக் காண்போரும் விக்கியில் பங்களிக்க வேண்டும் எனும் எண்ணத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். இது தமிழ் விக்கிப்பீடியாவுக்கான பேரிழப்பாகும். இங்கே தேனியார் விக்கியில் இருந்து விழகுவதற்கு அவரை உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய தனிமனிதத் தாக்குதல் சொற்களாக //பிரியாணி போட்டு கடற்கரையில் கூட்டம் கூட்டி வெற்றி முரசு கொட்ட இது கட்சி மாநாடு அன்று.// போன்ற இன்னும் பல நா தடித்தச் சொற்கள்' நேரடியாக தேனியாரை தாக்கும் நோக்கிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கே இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டும். தேனியார் "தனது பங்களிப்புகள் நிறுத்திக்கொள்ளப்படுகிறது" என்றவுடன் இங்கே இன்னுமொருவர் (ஆண்டுக்கணக்கில் விக்கியில் எந்த கட்டுரையையும் ஆரம்பிக்காதவர்) "மனிதர்கள் வருவார்கள். மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் நடந்துக்கொண்டே இருப்பேன்." என ஒரு குத்தல் சொல்லாடலை கொடுத்திருந்தார். இது எல்லோருக்கும் புரிந்ததோ இல்லையோ நடப்பு உரையாடல்களை நன்கு கவனித்து வருவோருக்கு நிச்சயம் புரிந்திருக்கும். அதனையும் ஒரு புதிய கட்டுரை தொடங்குவதுப் போல் தொடங்கி மேலுள்ள சொற்றொடரை பயன்படுத்தியிருந்தார். (கவனிக்க: குறிப்பிட்ட நபரின் நோக்கம் கட்டுரையை தொடங்குவதல்ல; மாறாக தேனியார் மீது மேற்கொள்வதற்கான தனிமனிதத் தாக்குலுக்காகவே அக்கட்டுரையும் அக்கட்டுரையின் சொல்லாடலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயல்பாடுகளும் தனிமனிதத் தாக்குதல்கள் தான். அங்கே இத்தனிமனிதத் தாக்குதலை உணர்ந்து கேள்வி எழுப்பியமையை கண்டித்து "தனிமனிதத் தாக்குதல்கள் தொடர்ந்தால் உங்கள் கணக்கு முடக்கப்படும்." எனும் எச்சரிக்கையும் விடப்படுகிறது. பின்னையது தனிமனிதத் தாக்குதல் என்றால் முன்னையது என்னவாம்? இவ்வாறு விக்கியில் நீண்டக் காலமும், சிறந்தப் பங்களிப்புகளையும் வழங்கிய தேனியார் போன்றோரை தாக்கும் உத்திகளையும் உருவாக்கும் புறநிலையை செயல்பாடுகளும், விக்கிக்கு வெளியேயும் உள்ளேயும் இருக்கும் தனது நட்புவட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும், தானாகவே தாக்கும் செயல்பாடுகளும் என எந்த வகையான தாக்குதல்களும் கண்டனத்துக்கு உரியவைகள். விக்கிப்பீடியாவில் விமரசனங்களை உள்வாங்கும் கட்டமைப்பு இல்லாமைவிக்கிப்பீடியா எந்த ஒரு ஆக்கத்தையும் நடுநிலையோடு எழுதவேண்டும் எனும் சிறந்தக் கொள்கையுடையது. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா அதன் விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பவதில்லை. இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களை பயன்படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் அதனை அப்புறப்படுத்த முனையும் போதோ அல்லது அப்புறபடுத்தியப் பின்போ அதன் நிறை குறைகளை (குறிப்பாக குறைகளை) தானியங்கியாக கேட்கும் நடைமுறைகளை சிறுச் சிறு நிறுவனங்கள் கூட கொண்டுள்ளன. காரணம் அம்மென்பொருளின் பயன்பாடு குறித்த பயனர் கருத்தறிந்து மேலும் மேம்படுத்திக்கொள்வதற்காகும். ஆனால் தமிழ் மொழியில் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கக் கிடைக்கப்பெற்ற "விக்கி மென்பொருள்" அல்லது ஏனைய மொழிகள் எனும் அடிப்படையில் "தமிழுக்கு கிடைத்த விக்கி இடைமுகம்" இதுவரை தமிழர் வரலாற்றில் கிடைக்காத ஒரு அரும்பெரும் சொத்து என்றே கூறவேண்டும்; அதுவே "தமிழ் விக்கிப்பீடியா" என்று எல்லோரும் அழைக்கின்றோம். இந்த தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வயது வேறுபாடின்றி, தொழில்நிலை பாகுபாடின்றி அநேகமாக மொழி ஆர்வளர்கள், எழுத்து ஆர்வளர்கள், எமது தாய் மொழிக்காக எதனையாவது செய்ய வேண்டும் எனும் நோக்கில் முன்வருகின்றனர். இவர்கள் பல்வேறு நாடுகளில், பல்வேறு தொழில்நிலை, வருமானஎல்லை என எல்லாவற்றிற்கும் அப்பால் ஏதோ ஒரு வகையில் ஒத்த நோக்குடன் தமிழ் மொழியில் தமிழருக்கு ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் பலரும் இங்கு இணைந்துள்ளனர். (இதில் தாய்மொழி பற்றினால் மட்டுமன்றி, மொழித்திறன் அடிப்படையில் பங்களிப்போரும் உள்ளனர் என்பதை கருத்தில்கொள்க.) இவ்வாறு "கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஒத்த நோக்கம்" கொண்டவர்களானாலும் அரசியல் பின்புலம், வாழ்நிலை சூழல், அறிவின் எல்லை, மொழியாளுமை என பல்வேறு பின்னனியில் இருந்து ஒரு குமுக நிலையில் பங்களிக்கும் போது பல்வேறு விதமான கருத்துக்கள் விமர்சனங்கள் எழுவது இயல்பானது. இந்த இயல்பு நிலையை உணர்ந்து, எழும் கருத்தையும் விமர்சனத்தையும் உள்வாங்கிக்கொண்டு அல்லது அவற்றை தமது வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பயணிக்கும் கட்டமைப்பு "இங்கே உள்ள ஒரு சிலரின் நடைமுறைப் பிறழ்வுகளால்" பின்னடைவை நோக்கிச்செல்லும் அபாயத்தைக் காணக்கூடியதாகவே உள்ளது. குறிப்பாக தமிழ் விக்கிப்பீடியா விமர்சனங்களை உள்வாங்கும் கட்டமைப்பு இல்லை எனும் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. எதுவும் அல்லது எந்த ஒரு நபரும் விமர்சனத்து அப்பால் பட்டவர்கள்/வைகள் அல்ல எனும் கோட்பாடுள்ளோரும், விமர்சனத்தையும் விமர்சிக்கலாம் எனும் நக்கீரன் போன்றோரும் தமிழ் விக்கிப்பீடியாவின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதம் ஆச்சரியத்தை தருகின்றது. விமர்சனம் என்றவுடனேயே அதன் சரி பிழை பாறாது, விமர்சனங்களையும் உள்வாங்கி அதனையும் தமது வளர்ச்சிக்கு சாதகமான நிலையில் மாற்றக்கூடிய தன்மையும் இங்கு இல்லை. மாறாக தமிழ் நாட்டு அரசியல் போன்று, விமர்சனங்கள் எழும் போதெல்லாம், சக தமிழ் விக்கிப்பீடியர்களும் ஒன்று திரண்டு விமர்சனத்தை எதிர்கொள்ளாமல், விமர்சித்தவரை தாக்கும் தளமாகவும், தனிமனிதத் தாக்குதலுக்கான களமாகவும் தமிழ் விக்கிப்பீடியா மாறி வருவது பின்னடைவுகளுக்கே வழிவகுக்கும்.--786haja (பேச்சு) 10:15, 11 அக்டோபர் 2013 (UTC) பி.கு 1: ஒவ்வொருவரது அறிவும், கிரக்கிக்கும் ஆற்றலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை எனும் அடிப்படையில் யாரையும் அறிவாளி என்றோ மடையர் என்றோ என்னால் கூறமுடியாது. ஆனால் ஒரு கருத்து எழும் போது கருத்துக்கு பதிலளிக்காமல், அல்லது கருத்தை கருத்தால் தெளிவுப்படுத்தும் திறன் இல்லாமையால், தனது அணுக்கத்தைப் பயன்படுத்தி கணக்கை முடக்குவே என அச்சுறுத்தல் போன்ற செயல்பாடுகள் அறிவுடையதன்று. பி.கு 2: sysop, bureaucrat போன்ற அணுக்கங்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது எனும் அகந்தையில் எவறும் தொடர்ந்தும் தான்தோறித்தனமாக செயல்பட முனைந்தால், ஒவ்வொரு செயல்பாடுகளையும் முறையாக கண்காணித்து உரிய இடத்தில் முறையாக முறையிடுவதன் ஊடாக அணுக்கங்கள் மீள்பெறுவதற்கும் இடமுண்டு என்பதையும் புரிந்துக்கொள்ளவும். (தமிழ் விக்கிப்பீடியா என்பது விக்கிமானியாவினால் தமிழ் மொழிக்கு கிடைக்கப்பட்ட இட வழங்கள் என்பதனையும் கருத்தில் கொள்ளவும்.)--786haja (பேச்சு) 10:34, 11 அக்டோபர் 2013 (UTC)
திரும்பப் பெறுகிறேன்தமிழ் விக்கிப்பீடியாவில் என் பங்களிப்புகள் தொடர வேண்டுமென்று கருத்து தெரிவித்தும், அதற்கு விருப்பம் தெரிவித்தும் பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்... பல... இங்கு கருத்துகளைப் பதிவு செய்யத் தயங்கி என்னுடைய மின்னஞ்சலுக்கு வேண்டுகோள் விடுத்த அனைத்து நண்பர்களுக்கும், செல்பேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய முடிவைத் திரும்பப் பெற வேண்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்... பல... குறிப்பாக, நேற்று (12-10-2013) காலையில் கனடாவிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு என்னுடைய முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக என்னுடன் பேசிய செல்வா அவர்களுக்கும், நேற்று மதியம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக என்னுடைய முடிவைத் திரும்பப் பெற்றிட வேண்டுமென்று வேண்டிய தகவலுழவன் அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். அனைவருடைய விருப்பத்திற்கேற்ப தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து வெளியேறும் எனது முடிவைத் திரும்பப் பெறுகிறேன். இருப்பினும், தற்போதுள்ள மனநிலையில் என்னால் பங்களிக்க இயலவில்லை. இன்னும் சில நாட்களில் என் பங்களிப்புகள் தொடரும்... குறிப்பு:
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:58, 13 அக்டோபர் 2013 (UTC)
![]() அன்பிற்கினிய அனைவருக்கும் கபிலனின் வணக்கம். சென்னையிலிருந்து திரும்பிய நாளிலிருந்து ஓய்வு ஒழிவில்லாத பணிச்சுமையால் திரிந்த எனக்கு அந்தப் பசுமையான இருநாட்களின் வளத்தை எழுத்தில் கொணர்வதற்கு நேரம் போதவில்லை. ஏதோ எழுதிவிடக் கூடாது என்று மிகவும் சிரமப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த அருமையான நிகழ்வை எனது மனதுக்குள் சுமந்து கொண்டிருந்தேன். பல்வேறு பிரிவுகளாலும் சிதறுண்டு கிடக்கும் தமிழ்த் தேசத்தில் தமிழின் பெயரால் ஒன்று கூடிய அந்த இனிய உள்ளங்களில் பொங்கிய பேரன்பை என்னவென்று சொல்ல? இதுவரை விக்கியர் யாரையும் நான் நேரில் பார்த்தது இல்லை. குரல் கேட்டதுமில்லை. ஆனால் அதுமாதிரி எந்தவிதமான சங்கோஜமும் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் பழகுவதற்கு இந்தப் பத்தாம் ஆண்டு விழா சரியான பாலமாக அமைந்தது. முதல்முதலில் நான் கேட்ட விக்கியரின் குரல் திரு.இரவி அவர்களுடையது. இந்தக் கொண்டாட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டவர். சனிக்கிழமை மதியத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்லவர்களின் கலைநகரமான மாமல்லையில் அந்த விக்கிபீடியர்களின் கூட்டத்தில் நானும் இணைந்தபோது எனக்கு என்னென்னவோ காலப்பதிவுகள் தோன்றி மறைந்தன. அதுவரையில் இணையத்தில் புகைப்படங்களில் பார்த்த முகங்கள் தங்களுடைய இனிய குரலோடும், இனித்த உள்ளத்தோடும் எனக்கு வாழ்த்தொலிகள் வழங்கியபோது உண்மையில் தாய்வழி உறவுகளைக் கண்ட குழந்தையாய் நான் துள்ளினேன். ஒரு பீஷ்மரைப் போலப் புல்தரையில் மல்லாந்து படுத்திருந்தார் நான் வெகுநாட்களாகக் காணவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த செங்கைப் பொதுவன் ஐயா. அடடா என்ன தமிழுள்ளம்? பொங்கிப் பெருகும் அவர்தம் அறிவாற்றலை விக்கிப்பீடியா இன்னும் ஆழமாய்ப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பேச்சில், கருத்தில் என்ன இனிமையும் வளமையும்? இணையாய் வந்த துணையும் உடனிருக்க என்னை அவர் வாழ்த்தியது விக்கி தந்த பெரும்பேறு. எல்லார் கரங்களிலும் காமிராக்கள். அளவளாவிக் கொள்வதும் அன்பு பரிமாறிக் கொள்வதும் ஏதோ திருமண விருந்துக் கொண்டாட்டமாய் இருந்தது. பெயரை விடவும் தன்னுடைய அன்பினால் என்னைக் கவர்ந்தவர்கள் நிறையவே உளர். மறக்க முடியாத அந்த மணல்வெளிக் கடற்கரையில் ஒளிவெள்ளம் பாய்ச்சி ஒவ்வொருவரும் மற்றொருவரின் உளம் ஆய்ந்த உரையாடல் தந்த சுகத்தை என்னென்பது? விக்கிபீடியாவுக்குத் தாங்கள் அறிமுகம் ஆனவிதம், விக்கிபீடியாவில் தங்களுடைய பணிகள், தங்களுடைய எதிர்கால நோக்கங்கள் என்று வரிசையாகத் தங்களின் அனுபவங்களைக் கூறவைத்துப் படமெடுத்துக் கொண்டார்கள். எல்லோருக்குள்ளும்தான் எத்தனை வண்ண வண்ணக் கனவுகள்? எழுப்பித் தந்தது யார்? விக்கிதானே... பெண்களுக்கும் குறைவில்லை. குழந்தையான என்னோடு இன்னொரு குழந்தையாய் ஒட்டிக் கொண்டவர் திருபுவனத்திலிருந்து வந்திருந்த ஹிபாயத்துல்லாவின் புதல்வர். அவரோடு சேர்ந்து கைப்பந்து விளையாடவும் வாய்ப்புக் கிடைத்ததே. இரவுப் பேருந்தில் திரும்பும்போது பெரும்பாலும் எனக்கு நல்ல நண்பர்கள் பலர் கிடைத்து விட்டார்கள். பார்வதிஸ்ரீ ஏதோ கூடப்பிறந்த சகோதரி வாஞ்சையோடு என்னோடு பேசினார். பாராட்டினார். தமிழ்ப்பரிதியை நான் கூகுள்+ மூலமாக ஏற்கனவே அறிவேன் என்றாலும் நேரில் சந்தித்தது அன்றுதான். அவர் எத்தனை அருமையான புகைப்படக் கலைஞர்? ஒரு கிராமத்து நெசவாளியைப் போலவே பட்டுக் குறித்த தகவல்களை மிக அழகாக எடுத்து வைத்து பட்டென எல்லார் நெஞ்சையும் கொள்ளை கொண்ட ஸ்ரீதர், கரகரத்த குரலில் கற்கண்டுச் சொற்களால் கௌவிக்கொண்ட சுந்தர் அடேயப்பா எனக்கு எத்தனை பெரிய விக்கிப்பீடியச் சொந்தங்கள். நான் பதிப்பாளன் என்று தெரிந்தவுடன் எனது அனுபவங்களைக் கேட்டு எனக்கு அறிவுரைகள் பல வழங்கிய மயூரநாதன், எப்போதும் தகவல்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞர் செல்வா இன்னும் எத்தனை எத்தனையோ ஞானவான்கள். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வுமையத்தில் தங்கியிருந்த அந்தப் பனி இரவு இனிய நண்பர்களோடு கழிந்தது. மறுநாள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைந்தோம். விக்கியின் 10ஆண்டுக் கொண்டாட்டக் காலைப் பொழுது. இனிப்பிருக்கும் இடந்தேடிச் செல்லும் எறும்புகள் போல் விக்கியர்கள் வந்து கொண்டிருந்தனர். மெல்லக் களை கட்டியது. ஒவ்வொரு நொடிப்பொழுதையும் வீணாக்கி விடாமல் எனது கேமிராவினால் படமெடுத்துக் கொண்டேன். நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. கருத்துகளும் விவாதங்களும் நிறைந்தன. மூச்சுத் திணறும் அளவுக்கு விக்கிபீடியாவின் பயன்பாடுகள் முன்மொழியப்பட்டன. வியந்தேன். தமிழிலேயே பொறியியல் பயின்று தற்போது பணிவாய்ப்பும் பெற்றிருக்கிற அண்ணா பல்கலைக்கழகத் தோழர் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது என்னுடைய மாணவர்களுக்குத் தமிழைத் தோள்தட்டிப் பயிற்றுவிக்க நல்லதோர் சாட்சி கிடைத்தாய் மகிழ்ந்து போனேன். பிரிவைத் தரும் அந்தக் கொடிய மாலைப் பொழுதும் வந்தது. சான்றிதழும் சட்டையும் மட்டுமல்லாது நெஞ்சம் முழுக்க பொங்கிப் பெருகும் எண்ண அலைகளோடு நான் புதுவைக்குத் திரும்ப நேர்ந்தது. இதோ இப்போது தட்டச்சுச் செய்து கொண்டு இருக்கும்வரை மட்டுமல்ல என்னுடைய உயிரின் கடைசி இயக்கம் வரைக்கும் அந்தப் பசுமையின் வண்ணம் தேய்ந்து போய்விடாது என்னும் அளவுக்கு அந்தப் பதிவுள் என்னுள் பதியமிட்டிருக்கிறது. இதுவரையில் சொன்னதெல்லாம் வெறும் வருணனை என்று கொண்டால், எல்லாருக்கும் ஒன்றை உரக்கச் சொல்கிறேன் விக்கித் தோழர்களே.
இன்று மடிக்கணினியிலும், தொடுதிரைக் கணியேட்டிலும், அணுகியிலும் துள்ளி விளையாடுகின்றாளே இந்தக் காலம் தமிழின் பொற்காலம் ஆகாதா?
செல்வா
சிவகோசரன்கருத்துக்களைப் பதிவிட காலதாமதமானதையிட்டு வருந்துகின்றேன். கூடல் மிக அருமை! குறையொன்றுமில்லை! விக்கிப்பீடியர்கள் இவ்வளவு பேரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வந்திருந்த எல்லா விக்கிப்பயனர்களுடனும் குறைந்தபட்சம் அறிமுகம் என்றளவிலாவது உரையாடியதாகவே எண்ணுகின்றேன். யாரைச் சொல்ல? யாரை விட? உரையாடிய அனைத்து விக்கிப் பயனர்களும் மிகுந்த நட்புடன் இருந்தனர். கூடலுக்காகக் கடின உழைப்பாற்றிய இரவிக்கும் ஏனைய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும். மேலும் சிறப்பாகச் செய்திருக்கக் கூடியவை என சில பொறுப்பான விக்கியர்கள் தெரிவித்த கருத்துக்களை இனிவரும் நிகழ்வுகளில் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னைப்பொறுத்தவரை இது முதலாவது நிகழ்வு என்ற வகையிலும் அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள் என்ற வகையிலும் விக்கி நடைமுறைகள்/பண்புகளை வைத்து நோக்கும் வகையிலும் குறையேதும் இருப்பதாகவே தோன்றவில்லை. தேனியாரின் முடிவு வருத்தமளிக்கின்றது. தயவுசெய்து முடிவை மாற்றி தமிழ் விக்கிப்பீடியாவுடன் தொடர வேண்டுகிறேன். சேகரனின் கருத்துக்களை உள்வாங்கி பதிலளிக்கும் பயனர்களின் முதிர்ச்சியை எண்ணி மகிழும் அதேவேளை, விக்கியில் பெரிதாக எதுவுமே செய்யாமல் (என் அறிவுக்கெட்டியபடி), விக்கிப்பீடியா பற்றியோ நிகழ்வு பற்றியோ தெளிவில்லாமல் அபத்தமாகப் பேசும் இவருக்குப் பதிலளிப்பதில் விக்கிப்பீடியர்களின் நேரம் வீணாவதையொட்டி வருத்தம். இலங்கைப் பயனர்களுக்குத் தமிழ்நாட்டு விக்கியர்களின் சிறப்புப் பரிசிற்கு மிக்க நன்றி! இன்னும் பல கூடல்கள், இன்னும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்! --சிவகோசரன் (பேச்சு) 08:41, 13 அக்டோபர் 2013 (UTC)
குறை கூறுபவர்களுக்கு பேராசிரியர் பயனர்:செல்வா அவர்களின் கருத்துவிக்கிக்கு வெளியில் முகநூல் உரையாடல் ஒன்றில் பேராசிரியர் பயனர்:செல்வா அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் என் குழப்பங்களை எல்லாம் தீர்த்து என் அகக்கண்களை திறந்தன. அந்த உரையாடலில் சில வரிகள் இங்கு பொருத்தமாக இருப்பதால், அவற்றை (மட்டும்) பகிர்கிறேன் . . . . Emphasis Mine
பழிப்பதும் தூற்றுவதும் எளிது, உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் அற ,அறிவு நாணயத்துடன் ஆங்கில, தமிழ் விக்கிப்பீடியாக்களை அறவே பயன்படுத்தாதீர்கள். (வார்த்தைகள் என்னுடையவை அல்ல. உங்கள் பாராட்டுக்களை பயனர்:செல்வா அவர்களிடம் தெரிவிக்கவும்) புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நலம். புரிந்து கொண்டு, நடையை கட்டினால் மிக்க நலம் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:10, 25 அக்டோபர் 2013 (UTC)
//வியப்பைத் தரவில்லை.// ஹி.ஹி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:39, 25 அக்டோபர் 2013 (UTC)
Mariano Anto Bruno Mascarenhas: I agree with what you say sir 23 அக்டோபர் இல் 12:52 AM via கைத்தொலைபேசி · Mariano Anto Bruno Mascarenhas: We should not blame Wikipedia or the contributors for small issues We should understand the effort Thanks for opening my mind sir 23 அக்டோபர் இல் 12:53 AM via கைத்தொலைபேசி Mariano Anto Bruno Mascarenhas: Your words are very powerful and have clarified a lot 23 அக்டோபர் இல் 12:53 AM via கைத்தொலைபேசி செ. இரா. செல்வக்குமார்: Thanks Bruno. அதே இழையிலும், தொடர்பான பல இழைகளிலும் உரையாடல்களைப் பார்த்த பின்னர் முடிவுக்கு வாருங்கள். நான் சொன்னது விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தவேண்டாம் என்னும் நோக்கத்தில் அன்று..... --செல்வா (பேச்சு) 02:55, 26 அக்டோபர் 2013 (UTC) செல்வா-2நிறைகுறைகள் மிகவும் விரிவாகப் பேசப்பட்டுவிட்டன. நான் இங்கே கூறியது போல பிணக்குகளைப் பெரிதாக்க வேண்டாமே என்றுதான் அதிகம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மேலும் ஏற்கனவே அக்டோபர் 5 அன்று இரவி 1,40,109 பைட்டு அளவு நெடிய விளக்கவுரையை மிகவும் பொறுப்பாக இட்டிருந்தார். விக்கியின் குறிக்கோள் நன்னோக்கம் கொண்டு இணக்க முடிவுகளை நோக்கி நகர்வதாகும். பிணக்குகளைப் பெரிதுபடுத்திக்கொண்டு நல்லுணர்வைக் கெடுப்பது அன்று. ஏற்கனவே குறிப்பிட்டது போல மே 9 முதல் திறந்த முறையிலேயே கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய திட்டங்கள் வகுக்கப்பட்டன, ஆகவே குறைகள் சொல்லும் முன் நாம் செய்திருக்க வேண்டியதை, செய்யத் தவறியதையும் நினைவில் கொள்ள வேண்டியது பொறுப்பு. கடுமையாக உழைத்து வெற்றியுடனும் இனிமையுடனும் விழா நடந்த பின் நம்மில் சிலர் குறைகளாகக் காண்பதை நாம் இன்னும் பக்குவமாக வைத்திருக்க வேண்டும். சில எடுத்துக்காட்டுகளை உரைக்கின்றேன். சேகரன் சொன்னவற்றை விட்டுவிடுகின்றேன், ஆனால் விக்கியில் பட்டறிவு பெற்றுள்ள தேனி சுப்பிரமணியின் கூற்றுகளை எடுத்துக்காட்டுகின்றேன்.குறைகள் என்னும் பகுதியில் கீழ்க்காணுமாறு தேனி சுப்பிரமணி குறிக்கின்றார்: "1)" நிகழ்ச்சி நிரல்படி நிகழ்ச்சிகளை நடத்திட எந்தவிதமான திட்டமிடலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. (தன்னிச்சையாகச் செயல்பட விரும்பியது போன்று இருந்தது. முதல் நாளே கலந்துரையாடி, ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணிகளைப் பகிர்ந்தளித்திருக்கலாம்)
"3)" அரங்கில் நடத்தப் பெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் பணி சிறப்பாகச் செய்யப்படவில்லை. (நிகழ்ச்சித் தொகுப்பாளராக யாரையாவது முன் கூட்டியே நியமித்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் தங்களைத் தவிர வேறு யாரும் மேடை ஏறிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் செயல்பட்டதாகவே தோன்றுகிறது)
--செல்வா (பேச்சு) 04:11, 30 அக்டோபர் 2013 (UTC)
செல்வா, கூடல் பற்றிய முதல் கருத்து வந்தது 30 செப்டம்பர். அதில் இருந்து ஆறு நாட்கள் பொறுத்திருந்து அக்டோபர் 5 அன்றே என் கருத்தை இட்டேன். 1,40,109 பைட்டு அளவு கொண்ட இந்த என் நோக்கு அறிக்கையை முன்வைக்க இரண்டு, மூன்று நாட்கள் உழைத்து, என் கணினியிலேயே எழுதி, படித்துப் பார்த்து, பல முறை திருத்தி அதன் பிறகே வெளியிட்டேன். எனவே, எதுவும் அவசரத்திலோ பொறுமையிழந்தோ எழுதியது அன்று. ஆனாலும், உங்கள் வேண்டுகோளை மதித்து, நீங்கள் கூறிப்பிட்ட முதல் இரண்டு கூற்றுகளைத் திருத்தி இன்னும் பண்பான முறையில் முன்வைத்து உள்ளேன். மூன்றாவது கூற்று தனிமனிதத் தாக்குதல் கிடையாது. விக்கிச் சமூகம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதைச் சுட்டிக் காட்டும் என் கடமையைத் தான் செய்தேன். யாரிடம் எதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரத்தை உங்களுக்கும் இன்னும் 20+ விக்கிப்பீடியர்களுக்கும் ஏற்கனவே மின்மடல் மூலம் தெரியப்படுத்தி உள்ளேன். எனவே, என்னுடைய இந்த விளக்கத்தை ஏற்று என்னுடைய மூன்றாவது கூற்றை அப்படியே விடுவதே என் கருத்துரிமையை மதிப்பதாக இருக்கும். இந்தக் கூற்றுகளைக் கூறாமல் விட்டு இருந்திருந்தால் என்ன பெரிய இழப்பு இருந்திருக்கும்? கூறியதால் நன்மை விளையுமா? என்று கேட்டிருந்தீர்கள். இது குறித்தும் மின்மடலில் நான் தெரிவித்ததைப் பற்றிய விவரங்களையும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் வெளிப்படையாக பதிவு செய்வேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:59, 11 நவம்பர் 2013 (UTC)
நற்கீரன், பி. கு. 1ஐ நான் ஏற்கனவே அடித்துத் திருத்தித் திரும்ப பெற்றுக் கொண்டு விட்டேன். பி. கு. 2 குறித்து நாம் இது வரை எங்கும் வெளிப்படையாக உரையாடவில்லையே? நானும் தான் களைத்திருக்கிறேன், நற்கீரன் :) ஆனால், இவ்விசயம் நியாயமாகவும் நடுநிலையாகவும் அணுகப்படவில்லை. ஒன்று ஆதாரத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவியுங்கள். இல்லை, எனது கருத்துரிமையை நிலைநாட்ட பொதுவில் ஆதாரத்தை வைத்து உரையாடத் தயார். --இரவி (பேச்சு) 05:19, 12 நவம்பர் 2013 (UTC)
இரகீம்(மின்மடல் மூலம் இரவியிடம் தெரிவித்தது) I was invited for Tamil Wikipedia's decennial celebrations recently by Ravishankar. My association with Ravishankar was from the days I initially started working more focussed towards Telugu wikipedia while at Hyderabad. He startd with monthly meetups and encouraged other wikipedians to join. After almost two years, I was meeting him back. And the occasion was Tamil Wikipedia's ten years celebrations. The event was spread across two days, the first one was a field trip to Mamallapuram and second day was a formal event at Anna university amidst Tamil wikipedians and stalwarts from various fields. I reached the venue a day before and had this opportunity meet wikipedians coming from Srilanka. It was a very nice opportunity sharing thoughts on developing wikipedia and sister projects. In the evening, I and Sancheevini visited a nearby temple and had lot of exchange of thoughts during our journey. We exchanged our ideas and opinions. Next, reaching venue for dinner, i met this super human Sundar Lakshmanan, I was amazed by his knowledge on a diaspora of topics. Indeed every wikipedian is such a beautiful person with enormous knowledge. Mayuranathan, another such person and also the first Tamil wikipedian was there to welcome us both. After dinner, a small talk was initiated and went on till late night. Next day morning, we got ready and went out for breakfast; after returning from breakfast Vishnu and Sowmyan reached. We had a lot of talks and conversations. Then, we set out for Mamallapuram. First we reached Anna Centenary library, met few other wikipedians, and got into the bus. Throughout journey, there were different persons coming from different backgrounds meeting each other for the first time face to face, surprisingly it was least suggested. Everyone knew each other already through their edits over wikipedia. This shows how wikipedia strengthens society towards knowing each other more better than any other social networking site. We reached Mahabalipuram around noon and headed for lunch first. Then we visited various monuments. In the mean time I got a chance to talk to many more people, more versatile and varying fields of interest each. We played around, singing, photo sessions, it was all fun. By evening we headed to seashore temple and beach. At beach, we had this game where every one sat around in a circular formation and suggested his own idea of wiki and probable way of implementing it. I suppose this was documented and is available for others to work upon. Returning back, I had busy talk with newly met friends. Next day morning, was the big day. Delegates from Government, FSMTN, TVU, and other organisations along with press media had arrived well in time. There were panel discussions and some book releases happened on stage. It was good if all the points discussed could have been documented as well and few of those points marked as goals for the coming years. Post event, I had a big talk with Selvakumar which might have disturbed others in the group. But it gave me some clarification about Tamil alphabet and spoken form of Tamil. This event proved a great opportunity for me to take back some points and implement them in Te wikipedia from ta wikipedia. Hope Tamil wikipedia shines to greater heights and Tamil wikipedians work more towards the ultimate goal of contributing to sum of human knowledge. |
Portal di Ensiklopedia Dunia