விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/புதிய கட்புலத் தொகுப்பான்பெரும்பான்மையான விக்கிப்பீடியா பக்கங்களைத் தொகுப்பது எளிதான செயலே. இங்கு விக்கிமீடியா நிறுவனத்தால் புதியதாக உருவாக்கப்பட்டு பீட்டா நிலையில் செயல்படுத்தப்பட்டுள்ள கட்புலத் தொகுப்பானைக் (VisualEditor)கொண்டு பக்கங்களைத் தொகுப்பதெப்படி எனக் கூறப்பட்டுள்ளது. பழைய உரைத் தொகுப்பானைப் பயன்படுத்த விரும்புவோர் விக்கிப்பீடியா:தொகுத்தல் பக்கம் காணவும். விக்கிமீடியா நிறுவனத்தின் (WMF) உருவாக்குநர்கள் விக்கி குறியீடுகளைக் கற்கும் தேவையின்றி, பக்கங்களைத் தொகுக்கும் வண்ணம் கட்புலத் தொகுப்பான் (VisualEditor) (VE) ஒன்றை பீட்டா பதிப்பாக செயல்படுத்தியுள்ளார்கள். இதுவும் விக்கிக் குறியீடுகளைக் கொண்டியங்கும் பழைய உரைத் தொகுப்பானும் அனைத்து தொகுப்பாளர்களுக்கும் அனைத்து கட்டுரைப் பக்கங்களுக்கும் பேச்சுப் பக்கங்களுக்கும் தானியக்கமாக கிடைக்கும். "மூலத்தை தொகு" கீற்றின் மூலமாக பழைய உரைத் தொகுப்பானையும் "தொகு" கீற்றின் மூலமாக கட்புலத் தொகுப்பானையும் பயன்படுத்தலாம். சோதனையோட்டத்தில் இருக்கும் கட்புலத் தொகுப்பானைக் குறித்த வழு அறிக்கைகளையும் கருத்துக்களையும் en:Wikipedia:VisualEditor/Feedback இங்கு அளிக்கலாம். விக்கியுரைத் தொகுப்பான் குறித்தே இக்கட்டுரை அமைந்துள்ளது. விக்கியுரைத் தொகுப்பானில் செய்யும் அனைத்து திருத்தங்களையும் கட்புலத் தொகுப்பானிலும் செய்ய இயலும் என்றாலும் கட்புலத் தொகுப்பான் சோதனையோட்டத்தில் இருப்பதால், சில பிழைகள் ஏற்படலாம். பல பயனர்கள் இது மிகவும் மெதுவாக இயங்குவதாகவும் வழு பதிந்துள்ளனர். பட்டறிவு மிக்கப் பயனர்கள் விக்கியுரைத் தொகுப்பானில் திறன்பட செயல்பட முடியுமென்றாலும் புதிய பயனர்களுக்காகவே இந்த கட்புலத் தொகுப்பான் வடிவமைக்கப்படுகிறது. உங்கள் விருப்பத் தேர்வுகளில் கட்புலத் தொகுப்பானை செயலறச் செய்யவியலும். குறிப்பாக இண்டர்நெட் எக்சுபுளோரர் (IE) பயனர்களுக்கு: தற்சமயம் கட்புலத் தொகுப்பான் அனைத்து இண்டர்நெட் எக்சுபுளோரர் பதிப்புகளிலும் செயலறச் செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில் வழுக்கள் களையப்பட்டு ஐ.ஈ 9 , ஐ.ஈ 10 உலாவிகளுக்கு செயல்படுத்தப்பட்டாலும் ஐ.ஈ 8 அல்லது முந்திய பதிப்புகளில் இது வேலை செய்யாது. கட்புலத் தொகுப்பானைப் பயன்படுத்த துவக்குவது எப்படி
துவக்கம்: கட்புலத் தொகுப்பான் கருவிப்பட்டை
![]()
விசைப்பலகை சுருக்குவழிகள்விசைப்பலகை சுருக்குவழிகள் வடிவமைப்பை தொகுக்கும்போது கருவிப்பட்டையின் படவுருக்களை சொடுக்கிக் கொண்டிருப்பதை விட விரைவாக செயல்பட வழிசெய்கின்றன. பொதுவான சுருக்குவழிகள், மற்ற தொகுத்தல் மென்பொருட்களில் பயன்படுத்தப்படும் சுருக்குவழிகள் கட்புலத் தொகுப்பானிலும் இயங்குகின்றன. முழுமையான பட்டியலை இங்கு காணலாம். சில வழைமையான சுருக்குவழிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன: |
Portal di Ensiklopedia Dunia