விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/கருத்து வேண்டல்தமிழ் விக்கி ஊடகப் போட்டிஇவ்வருடம் தமிழ் விக்கித் திட்டங்களுக்காக ஊடகம் உருவாக்கும் போட்டி ஒன்றை நடத்துவது குறித்து இந்த முன்மொழிவை இடுகிறேன். 2010 இல் செம்மொழி மாநாடு கட்டுரைப் போட்டி நடத்திய பிறகு இவ்வருடம் அடுத்த நிகழ்வாக தமிழ்-தமிழர் ஊடகப் போட்டி (படம், அசைப்படம், ஒலிப்பு கோப்புகள்) ஒன்று நடத்தப் பரிந்துரைக்கிறேன். இதற்கான நிதி உதவியை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் நல்கை விண்ணப்பம் செய்து பெற முடியும். இத்தகைய போட்டிகள் பல மொழி விக்கிப்பீடியாக்களில் விக்கிமீடியா அறக்கட்டளை நிதி உதவியுடன் முன்னர் நடந்துள்ளன. தற்போது 14 ஐரொப்பிய நாடுகளில் நடந்து வரும் wiki loves monuments போட்டியும் இவ்வகை போட்டிகளில் உன்று. கிடைக்கக் கூடிய சாதகங்கள் / நல்விளைவுகள்1) குறைவான மனித உழைப்பு - கட்டுரைப் போட்டி போன்று அதிக பயனர் உழைப்பு தேவையில்லை. விக்கிமீடியா காமன்சில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரவேற்ற வழிகாட்டி முறை கோப்புகள் பதிவேற்றத்தை எளிதாக்கி உள்ளது. (மின்னஞ்சல், சமூக வலைத்தளங்களில் கோப்பு பதிவேற்றம் போலவே எளிதாக உள்ளது) நேரடியாகப் போட்டியாளர்களை காமன்சில் கோப்புகளைப் பதிவேற்றச் செய்வது நமது வேலைப்பளுவை வெகுவாகக் குறைத்து விடும். கட்டுரைப் போட்டி நடத்தத் தேவைப்படும் உழைப்பில் இருபதில் ஒரு பங்கு கூட இதற்குத் தேவைப் படாது என்பது என் கருத்து. தேவைப்படும் உழைப்பும் தொடர்ச்சியாக இருக்காது. பெரிய திட்டத்தை செயல்படுத்த முயன்று தடுமாறுவதைக் காட்டிலும் சிறிய அளவில் எளிதில் செய்து முடிக்கலாம். மூன்று-நான்கு ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் இதனை நடத்தி முடிக்க இயலும். போட்டிக் கோப்புகளை மதிப்பீடு செய்வதும் மிக எளிது. 2) தமிழ்-தமிழர் தொடர்பான ஊடகக் கோப்புகள் (மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில்) குறைந்த அளவில் விக்கிப்பீடியாவில் உள்ளன. இக்குறையைப் போக்க இப்போட்டி பயன்படும். 3) முன் நடத்தப் பட்ட போட்டிகளின் நற்கூறுகளும் படிப்பினைகளும் நமக்கு பொதுவான தவறுகளைத் தவிர்க்கவும் எளிதாக செயல்படுத்தவும் வழிகாட்டியாக உள்ளன. 4) விளைவுகளைப் பயன்படுத்துவது/அளப்பது எளிது - எத்தனை பேர் பங்கேற்றனர், எவ்வளவு படிமங்கள் பதிவேறின என்பதை அளப்பதும், போட்டியின் விளைவாக பதிவேற்றப்பட்ட கோப்புகளைத் தமிழ் விக்கித் திட்டங்களில் பயன்படுத்துவது மிக எளிது. 5) போட்டியாளர்களது வேலையும் குறைவு. கட்டுரை எழுதுவது அனைவராலும் இயலாத விசயம். ஆனால் படம் எடுப்பது எளிய விசயம். தரவேற்ற முறையும் எளிதாகி விட்டதால் நிறைய பேரை தமிழ் விக்கித் திட்டங்களில் பங்கேற்க வைக்க இயலும். கட்டுரையாக்கம் / விக்கியாக்கம் ஆகிய தயக்கத்தால் பலர் விக்கித்திட்டங்களில் பங்களிக்காமல் உள்ளனர். அத்தகையோரை தமிழ் விக்கி பக்கம் இழுக்க இது பயன்படும். 6) விக்கிமீடியா அறக்கட்டளையிடமிருந்து நல்கை வளங்களைப் பெற தமிழ் விக்கிக்கு இது ஒரு நல்ல அறிமுக வாய்ப்பு. விக்கிமீடியா அறக்கட்டளை குறிப்பிட்ட சமூகங்களுக்கும் அமைப்புகளுக்கும் நல்கை வழங்குவதில் எதிர்பார்க்கும் முக்கிய கூறுகள் அ) சொன்னதை செய்து முடித்தார்களா? ஆ) செயல்களின் விளைவுகளையும் விக்கிக்கு விளையும் நன்மையினையும் திட்டவட்டமாக வரையறுக்க/அளக்க முடியுமா? இ) முன்மொழியும் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மனித வளம் உடையவர்களா? இப்போட்டிக்கு விக்கிப் பயனர் உழைப்பு தேவை குறைவாகவே உள்ளதாலும், போட்டி விளைவுகளை எளிதில் எண் வடிவில் வரையறுக்க முடியுமென்பதாலும், இப்போட்டியினை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழ் விக்கி சமூகத்தை பொறுப்புள்ள ஒரு விக்கிக் குழுவாக அறக்கட்டளையிடம் அறிமுகம் செய்ய இயலும். இதுவே பின்னாளில் நாம் பெரிய திட்டங்களுக்கு வள உதவி வேண்டி அறக்கட்டளையை அணுகும் போது, நமக்கு நற்பெயரும் திட்டச் செயலாக்கத்தில் தேர்ந்தவர்கள் என்ற பிம்பமும் இருக்கும். 7)பதிப்புரிமை விதிகள் பற்றிய விழிப்புணர்வும், நடைமுறை அறிவும் இப்போதுள்ள தமிழ் விக்கி பயனர்களிடையே அதிகரிக்கும். கவனத்தில் கொள்ள வேண்டியவை1) பெரிய அளவில் திட்டமிட்டு, திட்டச் செயலாக்கம் தாமதமாவது / செய்து முடிக்க இயலாமல் போவது / வகுத்த குறிக்கோள்களை அடைய இயலாமல் போவது ஆகியவை நிகழக்கூடாது. முதல் முயற்சி அளவான முயற்சியாக கண்டிப்பாக செய்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதை வெற்றிகரமாக முடித்த பின்னால் இதைவிடப் பெரிய முயற்சிகளில் இறங்கலாம். 2) விக்கிமீடியா அறக்கட்டளையிடம் வைக்கும் நல்கை விண்ணப்பம் தெளிவாகவும் நம்மைப் போன்று ஒரு சிறிய விக்கியால் செயல்படுத்தத் தக்கதாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். இப்போட்டி நடத்துவது குறித்தான உங்கள் கருத்துகளை இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:21, 29 செப்டெம்பர் 2011 (UTC) செய்ய வேண்டியனகருத்துக்கள்தகவலுழவன்
கலை
--கலை 07:56, 30 செப்டெம்பர் 2011 (UTC) சூர்யா
நற்கீரன்இத் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முதலாக சில பணிகள் செய்ய வேண்டி உள்ளது.
திட்டம் பற்றி
ஸ்ரீகாந்த்
குறும்பன்இந்த முயற்சிக்கு என் ஆதரவு. நான் பல கட்டுரைகளில் படங்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். பாலாறில் நிறைய தண்ணீர் போன போது அதை கடந்தேன் அதை அப்போது படம் பிடிக்காததை எண்ணி இப்போதும் வருந்துவதுண்டு. நற்கீரனின் கருத்துக்களை ஆதரிக்கிறேன், ஆனால் இதற்கும் போட்டிக்கும் என்ன தொடர்பு? என்று விளக்கினால் நன்று.போட்டி தொடர்பாக இன்னும் தெளிவாக விளக்கினால் நன்று. போட்டியாளர்களை த.விக்கிக்கு கொண்டுவர என்ன மாதிரியான திட்டம் உள்ளது? ஒலிப்பு கோப்புகளை விண்டோசில் அதன் செயலியை கொண்டு பதிவேற்றலாமா? இதுவரை நான் ஒலி கோப்புகளை பதிவேற்றியதில்லை. --குறும்பன் 00:44, 3 அக்டோபர் 2011 (UTC) தேனி.எம்.சுப்பிரமணிஇம்முயற்சிக்கு என் ஆதரவு உண்டு.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:21, 3 அக்டோபர் 2011 (UTC) இரவிமுயற்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன் :) நற்கீரனின் கருத்துகளை கவனத்தில் எடுக்க வேண்டும். முன்பு ஒரு முறை தெரன்சு ஆயிரக்கணக்கான படிமங்களுக்கான உரிமங்களைச் சரி பார்த்தார். அப்பணியைத் தொடர்ந்தால், போட்டி நடத்துவதற்கு முன் எந்த மாதிரியான சிக்கல்கள் வரலாம் என்று ஒரு புரிதல் கிடைக்கும். அச்சு ஊடகங்கள் நடத்தும் போட்டிகளில் கூட பரிசுப்பணம் பத்தாயிரம் ரூபாயைத் தாண்டுவதில்லை. வலைப்பதிவு ஊடகத்திலும் அவ்வாறே. மிகப்பெரிய பரிசுத் தொகைகளை அறிவிப்பதன் மூலம் பெரிய அளவிலான மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும். ஒரே இடத்தின் ஒரே மாதிரியான புகைப்படங்களை ஒரே ஆளே போட்டிக்காக பதிவேற்றுவதைத் தவிர்க்கலாம். அதே வேளை, பல வகையான படங்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றுவோருக்குச் சிறப்புப் பரிசு அறிவித்தால், கூடுதல் எண்ணிக்கையில் படங்கள் கிடைக்கும். படங்கள் என்பதுடன் ஒலிப்பதிவு, ஒளிப்பதிவுக் கோப்புகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அறிவிக்கலாம். இந்தச் சமயத்தில் குறும்படம் எடுக்கும் போக்கு கூடி வருவதும் நல்ல அறிகுறியே. --இரவி 19:45, 3 அக்டோபர் 2011 (UTC) சஞ்சீவி சிவகுமார்திட்டத்திற்கு ஆதாரவு. நல்ல முயற்சி. நக்கீரனின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளவெண்டியவை.--சஞ்சீவி சிவகுமார் 16:07, 4 அக்டோபர் 2011 (UTC) கிருஷ்ணபிரசாத்நல்ல முயற்சி. இந்த திட்டத்திற்க்கு என் ஆதரவு உண்டு. --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக. 16:39, 4 அக்டோபர் 2011 (UTC) செந்திதாமதமாக வந்துள்ளேனோ..? எனது ஆதரவும் உண்டு..--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 17:26, 14 அக்டோபர் 2011 (UTC) |
Portal di Ensiklopedia Dunia