விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள் முன்மொழிவுகள்/வழிமுறைகள்நல்ல கட்டுரைக்கான அளவுகோல்களின்படி ஒரு நல்ல கட்டுரை நியமனத்தை எவ்வாறு முன்மொழிவது மற்றும் மதிப்பாய்வு செய்வது என்பதை விளக்கும் வழிமுறைகள் கிழே உள்ளன. கட்டுரையின் பரிந்துரைப்பாளர் மற்றும் மதிப்பீடு செய்பவர் ஆகிய இருவருக்கும் அறிவுறுத்தல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முன்மொழிபவர்கள் கட்டுரைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டும் மற்றும் அதன் பொருள் மற்றும் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். கட்டுரைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்காத எந்தவொரு பதிவு செய்யப்பட்ட பயனரும் முன்மொழிவினை மதிப்பாய்வு செய்யலாம். முன்மொழிவு![]() படி 1: கட்டுரையைத் தயாரிக்கவும்நடுநிலைக் கண்ணோட்டம், விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை, விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது மற்றும் குறிப்பிடத்தக்க தன்மை உள்ளிட்ட விக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்வதை உறுதிசெய்க. பின்னர் நல்ல கட்டுரையின் அளவுகோல்களைப் பூர்த்தி செய்கிறதா எனப் பார்க்கவும் , கட்டுரைகளில் தேவையான முன்னேற்றங்களைச் செய்யவும். மேலதிகத் தகவல்களை Wikipedia:Nominating good articles என்பதில் காணலாம். நீங்கள் கட்டுரைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இல்லாவிட்டால், முன்மொழிவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களின் ஒப்புதலைப் பெறுங்கள். நீங்கள் முன்மொழிவு செய்யும் கட்டுரைகளை மதிப்பாய்வு செய்பவர்கள் தேவையான மாற்றங்களைச் செய்யக் கோரினால் அதற்கு பதிலளிக்கவும், தேவையான மாற்றங்களைச் செய்யவும் தயாராக இருத்தல் வேண்டும். படி 2: கட்டுரையை பரிந்துரைக்கவும்
படி 3: காத்திருங்கள்முன்மொழிவின் தேக்க அளவைப் பொறுத்து, பயனர்கள் மதிப்பாய்வை எடுப்பதற்கு பல மாதங்கள் தாமதமாகலாம். மாறாக, அதற்கு சில நாட்கள் மட்டும் ஆகலாம். மதிப்பாய்வு பக்கத்தை நீங்களே தொடங்க வேண்டாம், ஏனெனில் அது ஏற்கனவே மதிப்பாய்வில் உள்ளது என்று மற்ற பயனர்கள் நம்புவதற்கு வழிவகுக்கும். மதிப்பாய்வாளருக்கு ஒரு குறிப்பை இடுதல் : மதிப்பாய்வு தொடர்பான குறிப்பை வெளியிட, {{GA nominee}} முன்மொழிவினைத் திரும்பப் பெறுதல் : பரிசீலனை தொடங்கும் முன் பரிந்துரையை திரும்பப் பெற, கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலிருந்து {{GA nominee}} வார்ப்புருவை அகற்றவும். பரிசீலனை தொடங்கிய பிறகு, முன்மொழிவைத் திரும்பப் பெற, மதிப்பாய்வாளருக்குத் தெரியப்படுத்தவும்; மதிப்பாய்வாளர் அதனை தகுதிநீக்கம் செய்வார். படி 4: மதிப்பாய்வின் போது என்ன செய்ய வேண்டும்முன்மொழியப்பட்ட கட்டுரையினை மேம்படுத்தக்கோரும் மதிப்பாய்வாளரின் கேள்விகளுக்கு உரிய நேரத்தில் முன்மொழிபவர் பதிலளிக்க வேண்டும். உங்களால் இயலவில்லை எனில் மற்ற பயனர் ஒருவர் பதிலளிக்க வேண்டும். மற்ற பயனர்களும் இதில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம், தேவையான திருத்தங்களைச் செய்யலாம். ஆனால், முதல் மதிப்பாய்வாளர் எடுக்கும் முடிவே இறுதியானது. மதிப்பாய்வு செய்யப்படுவதற்கான காலம் கட்டுரையினைப் பொறுத்து மாறுபடும். சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளைக் களைவதற்காக 7 நாட்கள் இந்தப் பரிந்துரையினை நிறுத்தி வைக்கலாம் (மதிப்பாய்வு செய்பவர்கள் விரும்பினால், நேர வரம்பை குறைக்கலாம்/நீட்டிக்கலாம்). ஒரு மதிப்பாய்வு நிறுத்தப்பட்டால் அல்லது நல்ல கட்டுரையின் அளவுகோல்களை விளக்குவதில் கருத்து வேறுபாடு இருந்தால், அந்தப் பரிந்துரையினை தகுதிநீக்கம் செய்யது மீண்டும் குறைகளைக் களைந்த பிறகு முன்மொழியச் செய்யலாம். அல்லது, உரையாடல் பக்கத்தில் உதவி கேட்கலாம். படி 5: மதிப்பாய்விற்குப் பிறகுமதிப்பாய்வின் முடிவில் கட்டுரையானது நல்ல கட்டுரையாக அறிவிக்கப்படலாம் அல்லது தகுதி நீக்கம் செய்யப்படலாம். தகுதி நீக்கம் செய்யப்படும் கட்டுரைகளில் மதிப்பாய்வு செய்யும் பயனரின் கருத்துக்களுக்கேற்ப சரிசெய்த பின்னர் மீண்டும் அந்தக் கட்டுரையினை முன்மொழியலாம் அல்லது அந்த முடிவு குறித்து விக்கிப்பீடியா பேச்சு:நல்ல கட்டுரைகள் முன்மொழிவுகள் பக்கத்தில் முறையிடலாம். கட்டுரை நல்ல கட்டுரை நிலைக்கு உயர்த்தப்பட்டிருந்தால், கட்டுரையிலிருந்து ஓர் ஆர்வமூட்டும் உண்மையை ஏழு நாட்களுக்குள் உங்களுக்குத் தெரியுமா...? பகுதியில் இடம்பெறச் செய்யலாம். மதிப்பாய்வுபடி 1: அளவுகோல்களைப் புரிந்துகொள்ளுங்கள்ஒரு கட்டுரையை மதிப்பாய்வு செய்ய முடிவு செய்ததற்கு நன்றி. மதிப்பாய்வைத் தொடங்குவதற்கு முன், நல்ல கட்டுரை அளவுகோல்களை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு கட்டுரை நல்ல கட்டுரை நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு இந்த தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும். நல்ல கட்டுரைகளை மதிப்பாய்வு செய்வதற்கான வழிகாட்டி மற்றும் நல்ல கட்டுரையின் அளவுகோல் எது இல்லை என்பது பற்றிய கட்டுரையைப் படிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. நடுநிலைக் கண்ணோட்டம், விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை, விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது மற்றும் குறிப்பிடத்தக்க தன்மை உள்ளிட்ட விக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்வதை உறுதிசெய்க. பின்னர் நல்ல கட்டுரையின் அளவுகோல்களைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிசெய்யவும் ,உங்கள் மதிப்பாய்வின் போது உங்களுக்கு உதவ அறிவுரையாளர்கள் உள்ளனர். உங்களுக்கு மேலும் தெளிவு தேவைப்பட்டால், விக்கிப்பீடியா பேச்சு:நல்ல கட்டுரைகள் முன்மொழிவுகள் பக்கத்தில் ஒரு கோரிக்கை வைக்கவும். படி 2: மதிப்பாய்வைத் தொடங்குதல்மதிப்பாய்வு செய்யும் பயனர் கண்டிப்பாக ,
|
Portal di Ensiklopedia Dunia