விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/தொகுப்பு1தமிழ் விக்கிப்பீடியாவில் எனது தொடர் பங்களிப்புகளை கருத்தில் கொண்டும் விக்கிக்கொள்கைகளுக்கு உட்பட்டு நடப்பேன் என்ற நம்பிக்கையிலும் தான் நிர்வாக அணுக்கம் தரப்பட்டது. விக்கிப்பீடியாவில் முன்போல் ஏதும் தொடர் பங்களிப்புகள் தருவதில்லை. மேலும் நடைமுறை கொள்கைகளுடன் முரண்பட்டு உள்ளதால் விக்கியில் இருந்து ஓய்வு என அறிவிதுள்ளேன். இது நிர்வாகி தரத்துக்கு பொருத்தமன்று. மேற்கூறிய காரணங்களினால் இனி நிர்வாக அணுக்கத்தை நான் தக்கவைத்துக்கொள்வதற்குரிய அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்து விட்டேன் என கருதுகிறேன். ஆகவே, எனது நிர்வாக அணுக்கத்தை திரும்பப்பெறும்படி கோருகிறேன் வினோத்☯ラージャン 16:46, 22 ஜூன் 2008 (UTC)
எனினும், உங்களைப் போன்ற திறம், ஆர்வம், விக்கி நுட்ப அறிவு, விக்கி அனுபவம், செயல் வேகம் உள்ளோர் முற்றாகவோ நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தோ விலகி இருந்தால் அது தமிழ் விக்கிக்கே இழப்பு. தமிழ் விக்கிப்பீடியா உலகளாவிய ஒரு திட்டத்தின் ஒரு கிளை. உங்களை ஒத்த கொள்கை உடையோர் தமிழ் விக்கியில் பங்களிக்காது இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தமிழ் விக்கியை அணுக வேண்டி வரலாம். அவர்களுக்கும் உதவியாகவாவது, தமிழ் விக்கிப்பீடியாவைச் செம்மையாக வைத்திருப்பது முக்கியம். கட்டுரைப் பங்களிப்புகள் செய்யாவிட்டாலும், உங்கள் நிர்வாக அணுக்கத்தைக் கொண்டு பல விக்கி நுட்ப வேலைகளைச் செய்து தர உங்களால் இயலும். ஏற்கனவே செய்தும் இருக்கிறீர்கள். உலக விக்கிப்பீடியாக்களின் கொள்கைகளில் இருந்து எந்த வகையிலும் பிறழாமல், நற்றமிழ் நடை என்ற உள்ளூர்க் காரணங்களை முன்னிட்டு ஏற்பட்ட ஒரு கூடுதல் கொள்கை, தங்களைப் பங்களிப்புகளில் இருந்து விலகி இருக்கச் செய்வது கவலை அளிக்கிறது. மொழி நடை குறித்த இந்தக் கொள்கையும் இறுதியானதல்ல. நாளை உங்களைப் போன்ற பலரும் வருகையில் ஒரு இணக்க மித நடை உருவாகலாம். ஒவ்வொரு தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஒட்டு மொத்தக் கொள்கையோடு முரண்பாடு இருக்கலாம். அதற்காக விலகி இருக்கத் தேவையில்லை. அதே போல் எல்லா கொள்கைகளுடன் முற்று முழுதாக உடன்படுபவர்கள் தான் நிர்வாகி இருக்கலாம் என்றும் இல்லை. நிர்வாக அணுக்கம் என்பது தங்கள் பணியைத் திறம்படச் செய்ய கிடைக்கும் கூடுதல் வசதி. நம்பகமுடைய பயனர்களுக்கு நாம் தரும் கூடுதல் பொறுப்பு. அவர்கள் அதை முறைகேடாகப் பயன்படுத்தாத வரையில் நிச்சயம் ஒவ்வொருவருக்கும் அணுக்கத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கான தார்மீக உரிமை உண்டு. இது நிகழ் உலகில் உள்ள சங்கங்கள் போன்றவற்றின் பொறுப்பு அல்லவே? நீங்கள் நிர்வாகி அணுக்கத்தைச் சில காலம் பயன்படுத்தாது வைத்திருப்பதில் ஒரு பிழையுமில்லை. சில நாட்கள், மாதங்கள் கழித்தும் உங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாவிட்டால், நிர்வாக அணுக்கத்தை மீளப் பெறலாம். வினோத்துக்கு நிர்வாக அணுக்கத்தைக் கால தாமதமாகத் தரலாம் என்று சொன்னது போலவே, மீளப் பெறுவதையும் சற்று கால தாமதமாகச் செய்யலாம் என்று கேட்டுக் கொள்கிறேன் :) இது வினோத்துக்கும் மற்ற பயனர்களுக்குமான என் தனிபட்ட வேண்டுகோள் :)--ரவி 17:04, 26 ஜூன் 2008 (UTC)
கருத்துகள்இந்த தனிமுடிவு ஒருபுறமிருக்க இதுபோன்ற சூழலில் நாம் கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்த அறிவுரை வேண்டுகிறேன். இவர்களின் அணுக்கத்தை இடைநிறுத்தம் செய்வதா, மீண்டும் பங்களிக்கத் துவங்குபவர்கள் அணுக்கத்தை வேண்டினால் மறுபடியும் புதிதாக வேண்டுகோள் விடுக்க வேண்டுமா? (வேண்டும்தானே?) தாமாக அல்லாமல் வெகுநாட்களாக பங்களிக்காத நிருவாகிகளுக்கு தகுந்த விளக்கத்துடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அணுக்கத்தை இடைநிறுத்தி விடலாமா? -- சுந்தர் \பேச்சு 05:57, 24 ஜூன் 2008 (UTC)
முன்பே ஒரு முறை, முடங்கி இருக்கும் நிர்வாகிப் பயனர் கணக்குகளின் நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுவது என்று உரையாடல் செய்தோம். பிறகு. அதை மீடியாவிக்கி stewardகள் தான் செய்ய இயலும், கொஞ்சம் நீண்ட செயல்முறை என்பதால் அப்படியே விட்டு விட்டோம். நீண்ட நாள் பங்களிக்காமல் இருக்கும் நிர்வாகிப் பயனர்களின் கணக்குகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்ற பாதுகாப்புக் காரணங்களுக்காக வேண்டுமானால் முடக்கலாம். (முன்பு இதில் என்ன நிலைப்பாடு கொண்டிருந்தேன் என்று மறந்து விட்டது :) ) ஆங்கில விக்கியில் 1000க்கு மேற்பட்ட நிர்வாகிகள், நிர்வாகியாக விரும்புவோர்களின் காத்திருப்பு வரிசை இருப்பதால், அங்கே அணுக்கத்தை முடக்கி வைப்பது ஒரு உந்துதலாக இருக்கும். இங்கு இருப்பதே சிலர் என்கையில் முடக்குவது, திரும்ப வாக்கெடுப்பு நடத்துவது என்பது நம் வேலையைக் கூட்டலாம். அப்படியே முடக்கி வைத்தாலும் திரும்ப வேண்டுகையில் வாக்கெடுப்பு தேவையில்லை என்று நினைக்கிறேன். நிர்வாக அணுக்கம் என்பது நம்பகமும் தேவையும் உள்ள பயனர்களுக்குத் தரப்படும் ஒரு கூடுதல் பொறுப்பு. ஒரு முறை தன் நம்பகத்தை நிறுவியர் மீண்டும் தேவை ஏற்படும் போது சுலபமாக அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ள இயல்வது சரியாக இருக்கும். --ரவி 16:53, 26 ஜூன் 2008 (UTC)
மயூரனாதன், தமிழ் விக்கிப்பீடியா குறித்து எந்த நிர்வாகி / பயனர், எங்கு என்ன கூறினார் என்று அறியாமல் கருத்து சொல்ல இயலாது. எனினும், தமிழ் விக்கிப்பீடியா குறித்த எதிர்மறையான கருத்துகளை ஒருவர் வெளிப்படுத்தினாலும் அது அவரது நிர்வாகியாக இருக்கும் தகைமைக்கு தடையாக இருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் திசை குறித்து மிகத் தீவிரமான எதிர்க்கருத்துகளைக் கொண்டிருப்போரையும் நாம் அரவணைத்தே செல்ல வேண்டி இருக்கும். இல்லாவிட்டால், ஏதாவது ஒரு கட்டத்தில் குழு சேர்ப்பு, திட்டத்தைக் கைப்பற்றல் போன்றவை நிகழவே வாய்ப்பு உண்டு. ஒருவர் தன்னுடைய நிர்வாக அணுக்கத்தைக் கொண்டு தான்தோன்றித்தனமாக நேரடியாக கட்டுரைகளில் முறைகேடான மாற்றங்களைச் செய்யாத வரையில் அவரிடம் நிர்வாக அணுக்கம் இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஒருவரின் நம்பகத்தன்மையை அவர் விக்கிப்பீடியாவில் நேரடியாகச் செய்பவனவற்றைக் கொண்டு அளப்பது தான் பொருத்தமாக இருக்கும். இது வரை விக்கிப்பீடியர் சமூகத்தின் கருத்துக்கு ஒப்ப தொகுப்புகளைச் செய்பவர்களாகத் தான் நிர்வாகிகள் உள்ளனர். அந்தப் போக்கு தொடர்வதை உறுதிப்படுத்தினாலே போதுமே? --ரவி 22:29, 26 ஜூன் 2008 (UTC)
வினோத், நன்னோக்கில் செயல்படுவார் என்ற நம்பிக்கையிலேயே அவரது அணுக்கத்தை மீளப் பெற வேண்டாம் என்று முன்னர் கருத்து கூறியிருந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவை விமர்சிப்பது தவறில்லை. ஆனால், தமிழ் விக்கிப்பீடியா ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் மொழித் தீவிரவாதிகளின் கூடாரமாக இயங்குகிறது என்று உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருகிறார். ஒரு நிர்வாகப் பங்களிப்பாளரிடம் இருந்து இத்தகைய கருத்துகள் வருவது த.வியின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். (பார்க்க 1, 2) இத்தகைய பங்களிப்பாளரிடம் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கென வளர்முகமான பங்களிப்புகள் ஏதும் கிட்டும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டேன். வினோத்தின் நிர்வாக அணுக்கத்தை மீளப் பெறும் கோரிக்கையை ஆதரிக்கிறேன். மற்ற நிர்வாகிகள் இது குறித்து உடனடியாக தக்க முடிவெடுத்துச் செயற்படுத்த வேண்டுகிறேன். நன்றி வினோத், உங்களுக்கு ஒரே ஒரு சொல். தமிழ் இணையத்தில் இன்னும் நிறைய களங்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்ட பின் த.வியை விட நடுநிலையாக, வெளிப்படையாக, பண்பாக, மக்களாட்சி முறையில் செயல்படும் களங்கள் இல்லை என்று கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறேன். --ரவி 23:18, 17 ஆகஸ்ட் 2008 (UTC)
நானும் சுந்தரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். வினோத்தின் நிர்வாக அணுக்கத்தை மீளப்பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பது தான் எனது கருத்தும். இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம். இந்த மாதிரியான வீண்வாதம் புரிபவர்கள் காலம் காலமாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு எடுத்துச் சொல்லி எதையும் புரியவைக்க முடியாது, ரவி போன்றவர்கள் இவர்களுடன் வாதம் புரிவதை விட்டு அந்தநேரத்தை வேறு பயனுள்ள விதமாகச் செலவு செய்யவேண்டும். மயூரநாதன் 17:30, 18 ஆகஸ்ட் 2008 (UTC) மயூரநாதன், நீங்கள் அறிவுறுத்துவது போலவே இயன்ற வரை பயனுள்ள முறையில் உழைக்க முயல்வேன். எனினும் தமிழ் நலத்துக்கு எதிர்மறையான கருத்துகளே ஊடகங்களில் பல இடங்களில் முன்வைக்கப்படும் போது, இன்னொரு பக்கத்தையும் பதிவு செய்தால் நடுநிலையாகச் சிந்திக்கக்கூடியவர்கள், அறியாமல் செயல்படுபவர்களுக்கு உதவுமே என்ற எண்ணமே இவ்வாறான உரையாடல்களுக்கு காரணம். நன்றி--ரவி 17:58, 18 ஆகஸ்ட் 2008 (UTC) விக்கிப்பீடியாவைப் பற்றியும், இங்கு பங்களிப்பவர்களைப் பற்றியும், அத்து மீறியும் உண்மைக்கு புறம்பாகவும் பேசுவோர்கள் நிர்வாகிகள் போன்ற பொறுப்புகளில் இருப்பது தவறு என்பது என் கருத்து. விக்கிப்பீடியாவில் மாற்று கருத்துகள் எழுந்தபொழுதெல்லாம் அவற்றை இங்கு முறைப்படி முன்வைத்து கலந்துரையாடி, பொதுநலம் பேணித்தான் இதுகாறும் செயல்பட்டு வந்துள்ளோம் (நான் இங்கு பணியாற்றிய ஏறத்தாழ 2 ஆண்டுகள் 3 மாதகாலத்தில் பார்த்த அளவிலே). விக்கிப்பீடியாவுக்கு வெளியே கூறியிருந்தாலும், விக்கிப்பீடியா தொடர்பாகவும் Nazism, Psychopath என்றும் அத்துமீறிப்பேசுவோர்கள் எத்தனையும் காழ்ப்புணர்வோடும் உண்மைக்குப் புறம்பாகவும் பேசுகிறார்கள் என்பதை காலம் சொல்லும். மயூரநாதனைப் போலவே, நானும் கூறுவதென்னவென்றால், அவர்களுக்கு மறுமொழி தருவதைவிட 4-5 வரிகள் கொசுவை பற்றியோ எறும்பைப் பற்றியோ மேலும் எழுதினால் பயனுடையதாக இருக்கும். இணையத்தில் மாற்றுக் கருத்துகளைப் பதிவதும், மாற்றுக்கருத்துகளுக்கான அறிவடிப்படையான கூறுகளையும் முன்வைக்க வேண்டுவதும் முக்கியம் என்னும் ரவியின் கருத்துடன் முழுக்கவும் ஒப்புகிறேன். தவறான கருத்துகளையே மீண்டும் மீண்டும் ஒருசிலர் கூறுவதால் சரியான கருத்துகள் அறியப்படாமலும் எடுபடாமலும் போவதைப் பலமுறை கண்டிருக்கின்றேன். ஆகவே தேவை கட்டாயம் உள்ளதுதான், மறுக்கவில்லை,ஆனால், தமிழின் நேர்மையான முன்னுரிமைகளை (மற்ற மொழிகளுக்கு உள்ளது போன்றவைதாம், ஏதும் தனிச்சிறப்பான தனியுரிமை அல்ல) மதிக்காமல் மறுப்பவர்களுடன் அளவிறந்து உரையாடுவதால் பயனில்லை. --செல்வா 20:35, 18 ஆகஸ்ட் 2008 (UTC) //உண்மையாகவே அது அவர்தானா இல்லை வேறு யாராவது அவரது பெயரால் பதிந்திருந்தனரா என்ற ஐயமே ஏற்படும் அளவுக்கு இருக்கிறது.// சுந்தர், அக்கருத்தைகளை தானே இட்டேன் என்பதை வினோத் எனக்கு இட்ட மின்மடல் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.--ரவி 10:27, 19 ஆகஸ்ட் 2008 (UTC) |
Portal di Ensiklopedia Dunia