விக்கிப்பீடியா:மருத்துவ பொறுப்பு துறப்பு பக்கம்விக்கிபீடியா மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதில்லை
விக்கிபீடியாவில் மருத்துவம் தொடர்பான பல கட்டுரைகள் இருப்பினும், அவை மிகவும் திருத்தமான தகவல்கள்தான் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மருத்துவ சம்பந்தமான எந்தவொரு கட்டுரையிலும் கூறப்பட்டிருக்கும் அல்லது மேற்கோளாக காட்டப்பட்டிருக்கும் எந்தவொரு கூற்றும் உண்மையானது, சரியானது, திருத்தமானது, அல்லது தற்கால நடைமுறையிலுள்ளது என்பதற்கு எந்தவொரு உறுதி மொழியும் வழங்க முடியாது. இப்படியான அனேக கட்டுரைகள் பகுதியாகவோ அன்றேல் முழுமையாகவோ உத்தியோக பூர்வமற்றவர்களால் எழுதப்படுகிறது. மருத்துவ சம்பந்தமான ஒரு கூற்று மிகச் சரியானதாக இருந்தாலும் கூட, அந்தக் கூற்றானது, தங்களது நோய்க்கோ அல்லது அறிகுறிகளுக்கோ உபயோகிக்க முடியாததாக இருக்கலாம்.
விக்கிபீடியாவில் காணப்படும் மருத்துவ ரீதியான குறிப்புகள் பொதுவான தகவல்களாக இருக்க முடியுமேயன்றி, ஓர் உத்தியோக பூர்வமான மருத்துவருடைய ஆலோசனையை எந்த விதத்திலும் பிரதியீடு செய்ய முடியாதது ஆகும். விக்கிபீடியா மருத்துவர் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.
|
Portal di Ensiklopedia Dunia