விக்கிப்பீடியா:மொழிபெயர்ப்பாளர்/அணுக்கம் வேண்டுகோள்கள்
இந்தப் பக்கம் மொழிபெயர்ப்பாளர் அணுக்கம் பெறுவதற்கானதாகும். முந்தைய வேண்டுகோள்களைத் தொகுப்புப் பக்கத்தில் காணலாம். கீழ்க்கானும் அடிப்படையில் வேண்டுகோள் வைக்கவும். == பயனர் பெயர் == * பயனர் பெயர் * நீங்கள் உருவாக்கிய மூன்று மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கான இணைப்புகள். இவை வெவ்வேறு துறைகள் சார் கட்டுரைகளாக இருப்பது நன்று. ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்தது மூன்று துணைத் தலைப்புகள் இருத்தல் நலம். (புதுப் பயனர் எனில் வரைவுப் பக்கத்தில் உருவாக்கிய மூன்று கட்டுரைகள். ஏனையவர்கள் மொழிபெயர்ப்புக் கருவியினைப் பயன்படுத்தி உருவாக்கிய முந்தைய மூன்று கட்டுரைகள்) * நீங்கள் இக்கருவி கொண்டு இது வரை உருவாக்கிய அனைத்துக் கட்டுரைகளுக்கான இணைப்பு === பயனர் கருத்துகள் === === முடிவு === ராம்குமார் கல்யாணிஇது வரை Ramkumar Kalyani உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு உருவாக்கிய கட்டுரைகளுக்கான இணைப்பு. விண்ணப்பித்த நாள் - மே 16, 2025 பயனர் கருத்துகள்
முடிவுமே 23 அன்று அல்லது அதற்குப் பிறகு அறிவிக்கப்படும். பயனர்:வசந்தலட்சுமிவிண்ணப்பித்த நாள் - மே 17, 2025 இது வரை Vasantha Lakshmi V உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு உருவாக்கிய கட்டுரைகளுக்கான இணைப்பு. பயனர் கருத்துகள்பயனர் மொழிபெயர்த்த கட்டுரைகளில் பெரிய சிக்கல்கள் காணப்படவில்லையெனினும் மொழிநடை, நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் முன்னேற்றம் தேவை. எடுத்துக்காட்டுக்கு, இங்குள்ள மாற்றத்தைக் காணுங்கள். இதற்கு ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்க்காமல் அதன் கருத்தை உள்வாங்கி தமிழில் சொந்த நடையில் எழுதினாலே போதும். சில கட்டுரைகளில் தானியங்கித் தமிழாக்கம் திருத்தப்படாமல் அப்படியே கையாளப்பட்டுள்ளது கவலைக்குரியதாக உள்ளது. எடுத்துக்காட்டுக்கு, பேரளம்–காரைக்கால் இருப்புப்பாதை கட்டுரையில், இந்திய சுதந்திரம் மற்றும் ரயில்வே மறு-அமைப்புக்கு பின்னர், திருச்சிராப்பள்ளி ரயில்வே பிரிவின் அதிகார எல்லைக்குள் இது விழுந்தது. 1967 ஆம் ஆண்டில், அதன் போக்குவரத்து கணக்கெடுப்பில் பயணிகள் போக்குவரத்திற்கான வரியின் பயன்பாட்டை மேற்கோள் காட்டி, அப்ளைடு அண்ட் எகனாமிக் ரிசர்ச் தேசிய கவுன்சில் இந்த வழித்தடத்தை மூடுவதற்கு பரிந்துரைத்தது. இங்கே ஆங்கிலத்தில் fell என்பது தமிழில் அப்படியே விழுந்தது என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அடுத்த சொற்றொடரில் வரி என்பது taxஆ இல்லை lineஆ என்று குழம்பினேன். ஆங்கிலக் கட்டுரையைப் பார்த்தால் அது transport line என்கிற வழித்தடத்தைக் குறித்தது என்பது புரிந்தது. தமிழில் அதற்கு அடுத்த வரியிலேயே வழித்தடம் என்கிற சொல்லும் சரியாக வருகிறது எனும் போது பயனர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி தானியங்கித் தமிழாக்கத்தைத் திருத்த வேண்டும் என்று தோன்றுகிறது. இதே போல, இலங்கை காவல்துறை கட்டுரையில், இக்காவல் படை சுமார் 77,000 மனித சக்தியைக் கொண்டுள்ளது என்கிற சொற்றொடரைக் கொண்டுள்ளது. இது The police force has a manpower of approximately 77,000 என்பதன் அப்பட்டமான தமிழாக்கம். இங்கு manpower என்பதனை மனித சக்தி என்று மொழிபெயர்க்காமல் காவல்படையில் 77,000 பேர் உள்ளார்கள் என்று குறிப்பிட்டாலே போதுமானது. இரியா மசூம்தார் சிங்கால் கட்டுரையில் முதல்வரியிலேயே ரியா மஜும்தார் சிங்கால் (பிறப்பு 1982) ஒரு இந்திய தொழிலதிபர், மக்கும் செலவழிப்பு பொருட்களை உருவாக்குகிறார் என்கிற வரி வருகிறது. ஒரு முறை படித்துப் பார்த்தாலே மக்கும் செலவழிப்புப் பொருட்கள் என்கிற சொல்லாடல் உறுத்துவதைக் காணலாம். ஒரு முறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியக்கூடிய disposable பொருட்கள் என்பதே இவ்வாறு தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி பயன்படுத்துவதால் வரும் பிழைகள் அல்ல. நேரடியாக Google Translate பயன்படுத்தினாலும் கூட இதே பிழைகள் வரலாம். தவிர, இவை அனைத்தையும் ஒரு பயனரின் மீது மட்டும் நான் பொறுப்பு சுமத்த விரும்பவில்லை. ஒவ்வொருவர் எழுதும் கட்டுரைகளையும் மற்றவர்களும் உரைதிருத்தி கூட்டுமுயற்சியாக மேம்படுத்தும்போது தான் ஒருவர் மற்றவரிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும். ஒருவர் எவ்வளவு தான் சிறந்த பங்களிப்பாளர் என்றாலும் மளமளவென புதிய கட்டுரைகளை உருவாக்கும்போது, தான் விடும் பிழைகளை தானே கண்டடையவும் முடியாது. எனவே, இப்பயனருக்கு உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவிக்கான அணுக்கத்தை வழங்க ஆதரவு தெரிவிக்கும் அதே வேளை, பயனர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி மொழிபெயர்க்க வேண்டும் என்றும் மற்ற பங்களிப்பாளர்களும் உரைதிருத்தி உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:19, 24 மே 2025 (UTC) முடிவுமே 24 அன்று அல்லது அதற்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும். TNSE Mahalingam VNRவிண்ணப்பித்த நாள்:20.05.2025 பயனர் கருத்துகள்முடிவுமே 27 அல்லது அதற்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும். பயனர்:Jayarathina
விண்ணப்பித்த நாள் - மே 20, 2025 பயனர் கருத்துகள்பயனர் இக்கருவி கொண்டு இதுவரை உருவாக்கியுள்ள கட்டுரைகளில் பெரிய சிக்கல்கள் ஏதும் இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பங்களிக்க வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கருவிக்கான அணுக்கத்தினை வழங்க என் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 14:52, 24 மே 2025 (UTC) முடிவுமே 27 அல்லது அதற்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும். |
Portal di Ensiklopedia Dunia