விக்கிப்பீடியா:மொழிபெயர்ப்புக் கையேடு

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழு டையபுது நூல்கள்
தமிழ் மொழியில் லியற்றல் வேண்டும்" - பாரதி


"நாம் நம் இனத்தை நேசிப்பது உண்மையானால் உலகில் சிந்திக்கப்பட்டவற்றிலும் சொல்லப்பட்டவற்றிலும் மிகச் சிறந்தவற்றை அளித்து அதனை வளப்படுத்த மிகவும் ஆர்வம் உடையவர்களாயிருக்க வேண்டும். அதற்கு நிகராக நம்முடைய கருத்துகளை மனித இனத்திற்குப் பொதுவான சேமிப்புக் கருவூலத்தில் சேர்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்." (அல்பர்ட் ஜெரார்டு அவர்களின் கூற்று, சுட்டப்பட்டது "மொழிபெயர்ப்புக் கலை" நூல்)


இக்கையேட்டின் நோக்கம் யாதெனில் மொழிபெயர்ப்பு முறைகள், உத்திகள், வழமைகள், கவனிக்கப்பட வேண்டிய சில தவறுகள், மற்றும் உதவக் கூடிய உசாத்துணைகள் ஆகியவற்றை கோத்து தருவதே.


"மொழிபெயர்ப்புக் கலை" என்ற நூலின் ஆசிரியர் வளர்மதி, மூல மொழியில் இருந்து பெயர்பு மொழிக்கு மாற்றும் பொழுது பின்வரும் மூன்று இயல்புகளைப் பெறுவது முக்கியம் என்கின்றார்.

  1. "மூலநூலின் கருத்துகளை முழுமையாகக் கொண்டதாக மொழிபெயர்பு அமைய வேண்டும்."
  2. "நடையும், கருத்துகளை உணர்த்தும் போக்கும், மூலநூலில் எம்முறையில் அமைந்துள்ளனவோ, அம்முறையிலேயே மொழிபெயர்ப்பிலும் அமையவேண்டும்."
  3. "மூல நூலில் உள்ள எளிமையும், தெளிவையும், அதன் மொழிபெயர்ப்பும் பெற்றிருக்க வேண்டும்."

வளர்மதியின் கருத்துகள் ஒரு முழு நூலை அல்லது இலக்கிய படைப்பை பொறுத்தவரை முற்றிலும் சரியே. இவ்வியல்புகளில் விக்கிபீடியாவை பொறுத்தவரை தகவலுக்கே முக்கியதுவம் தரப்படுகின்றது. பொதுவாக தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் பிற கட்டற்ற படைப்புகளில் இருந்தே மொழிபெயர்ப்பு செய்யபடுகின்றன, அந்நிலையில் தகவல் பரிமாற்றமே முக்கியதுவம் பெறுகின்றது.

தொல்காப்பியர் மரபு

"பிறமொழிச் சொற்களையும் வடசொற்களையும் மொழிபெயர்த்துக் கையாளலாம். இதற்கு முடியாதபொழுது மட்டுமே அவற்றைத் தமிழ் ஒலி மரபுக்கு மாறுபடாதனவாய்த் தமிழுக்குக் கொண்டுவரலாம்". [1]

மொழிபெயர்ப்பில் பொதுத் தன்மைகள்

  • -ism -> இஸம் -> இயம்
  • -logy -> இயல்

கலைச்சொல்லாக்கம்

  • கலப்புச் சொல்லாக்கம்
  • புதியசொல்லாக்கம் - ஒரு சொல்லுக்கு இரு சொற்களைச் சேர்த்து உருவாக்கல்
  • பழைய சொல்லை புதிய கருத்தில் பயன்படுத்தல்

துணை நூல்கள்

  • மு. வளர்மதி. (1987). மொழிபெயர்ப்புக் கலை. சென்னை: திருமகள் நிலையம்.

வலைப்பதியும் மொழிபெயர்ப்பாளர்கள்

  • இராம.கி
  • வெங்கட்
  • டோண்டு
  • சீனிவார்ஸ்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya