விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்புள்ளிவிபரம்
2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விக்கிக்கோபைப் போட்டிக்கான பூரணப்படுத்தபடாத புள்ளிவிபரம் இப்பக்கத்தில் இடப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தயவு கூர்ந்து ஒருங்கிணைபாளர்கள் மட்டும் இப்பக்கத்தைத் தொகுக்கவும். புள்ளிகளினை படிப்படியாகக் கணக்கிடும் வேலை இங்கு இடம்பெறுகின்றன. புள்ளிகள் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் அதிக இறுக்கம் அன்றியுமே கணிக்கப்படுகின்றன. 2016 போட்டி முடிவுகள்தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
பாராட்டுக்கள்சிறப்பான ஒருங்கிணைப்பின் மூலம் இந்தக் கன்னி முயற்சியை திருவினையாக்கிய AntanO, ஸ்ரீஹீரன், மாதவன், ஆதவன் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன். கட்டுரைகளை வடிகட்டி, புள்ளிகளைக் கணக்கிட்டு, முடிவுகளை அறிவித்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு நன்றிகள் !! பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுதல்களும் !! இந்த வெற்றி முயற்சி தொடர விழைகின்றேன். --மணியன் (பேச்சு) 14:27, 21 சூலை 2016 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia