தொடர்பங்களிப்பாளர் போட்டி என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவையொட்டி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி நடத்தப்படும் போட்டி ஆகும். இப்போட்டி பங்குபெறுவதற்கு மிகவும் இலகுவானதாகும்
இப்போட்டியில் பங்குபபெற்று 30000 இந்திய ரூபாய் பெறுமதிமிக்க பரிசுகளை வெல்லலாம்.
இப்போட்டி மே 1 ஆம் தேதி 00:00 (UTC) மணியளவில் ஆரம்பமாகி அக்டோபர் 31 ஆம் திகதி 23:59 (UTC) மணியளவில் நிறைவடையும். உங்கள் பெயரைப் பதிவு செய்ய "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்துங்கள்.
இப்போட்டியில் முறையான திட்டமிடலுடன் பங்குபற்றி சிறந்த விக்கிப்பீடியராவதுடன், பரிசுகளையும் வென்று விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் நீங்களும் கைகோருங்கள்!...
இப்போட்டியில் விக்கிப்பீடியாவில் 50 தொகுப்புகளுக்கு அதிகமாகப் பங்களித்த எவரும் பங்குபெறலாம்.
இப்போட்டியில் பங்குபெற இங்குள்ள பட்டியலில் உள்ள கட்டுரைகளை விரிவாக்க வேண்டும்.
நீங்கள் கட்டுரைகளை 26,000 பைட்டு அளவைத் தாண்டும் வரையிலும் விரிவாக்க வேண்டும். மேலும், நீங்கள் விரிவாக்கும் கட்டுரையில் உங்களால் மட்டும் குறைந்தபட்சமாக 6000 பைட்டுக்கள் சேர்த்திருக்கப்பட வேண்டும்.
கட்டுரையில் 26,000 ஆவது பைட்டை சேர்ப்பவர் கணக்கில் கட்டுரையும் சேர்த்துக்கொள்ளப்படும்.
முதல் மூன்று பரிசுகளில் ஒரு பரிசை வெல்வதற்கு உங்களால் குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
நான்காம் பரிசு முதல் பதொனொராம் பரிசு வரை வெல்ல உங்களால் குறைந்தபட்சமாக 15 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும். (பரிசு விபரத்தை பார்க்க)
போட்டிக்காலத்தில் விரிவாக்கப்படும் கட்டுரைகள் மட்டுமே போட்டிக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
நீங்கள் கட்டுரைகளை விரிவாக்கும் போதும் வெளி இணைப்புகள், மேலதிக வாசிப்பிற்கு, உசாத்துணைகள், நூற்பட்டியல் ஆகிய பகுதிகளை தவிர்த்து உரைகளின் பைட்டு அளவு மட்டுமே கணக்கிடப்படும்.
விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்.
நீங்கள் விரிவாக்க விரும்பும் தலைப்புகளை முன்கூட்டியே பதிவு செய்ய இங்கு செல்லுங்கள். பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரை குறித்து இரட்டிப்பு வேலை செய்ய வேண்டாம் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. எந்த விக்கிப்பீடியரும் எந்தக் கட்டுரையையும் தொகுக்கலாம் என்ற வழமையான நடைமுறையை இது தடுக்காது.
குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
2
7000 இந்திய ரூபாய்
குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
3
5000 இந்திய ரூபாய்
குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
4 - 11
8 நபர்களுக்கு தலா 1000 இந்திய ரூபாய்
குறைந்தபட்சமாக 15 கட்டுரைகளாவது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும், பங்குபற்றும் போட்டியாளர்களுக்கு ஏற்ப பரிசு சமனாகப் பகிரப்படும்
மொத்தம்
30000 இந்திய ரூபாய்
துணுக்குகள்
நீங்கள் விரிவாக்கவுள்ள இங்குள்ள கட்டுரைகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
ஆங்கிலக் கட்டுரைகளுக்கு சென்று அதனை தமிழ் மொழிபெயர்த்து விரிவாக்கலாம்!
ஒவ்வொரு மாதமும்/வாரமும் எத்தனை கட்டுரைகளை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானியுங்கள்.
மாதம் 5 கட்டுரைகள் எனும் அடிப்படையில் மொத்தம் :30+
விரிவாக்கிய கட்டுரைகளை உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்.
ஏனையோர் எவற்றை விரிவாக்கியுள்ளனர் என்பதை அவதானியுங்கள்.
விரும்பின் இங்கு முற்கூட்டியே நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகளை முற்பதிவு செய்யலாம்!
வெற்றி நிச்சயம்!
பங்குபற்றுவோர்
நீங்கள் போட்டியில் பங்குபற்ற விரும்பின் இங்கு உங்கள் கையொப்பத்தை இட்டு பெயரைப் பதிவு செய்யவும். போட்டிக்காலத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து பங்குபற்ற ஆரம்பிக்கலாம். விரும்பின் பங்குபற்றிய பின்னும் பதிவு செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்வது தகாது என்பது ஒருங்கிணைப்பாளர்களது கருத்து!
இங்கு உங்கள் பெயரைப் பதிவு செய்த பின்னர் போட்டி தொடர்பான மேலதிக விடயங்கள், துணுக்குகள், வழிகாட்டுதல்கள் போன்ற அறிவிப்புகளை உடனுக்குடன் உங்கள் பேச்சுப்பக்கத்தில் ஒருங்கிணைப்புக் குழுவினர் இடுவர்.
இருநூறு கட்டுரைகளை விரிவாக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி 550 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவுற்றது. 27 பேர் பங்கேற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றுப் பரிசு பெறுவோர் விபரம் வருமாறு: