விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா மன்றம், எக்செல் பள்ளிகள், திருவட்டாறுகன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறுவிலுள்ள எக்செல் பன்னாட்டுப் பள்ளி (Excel Global School), எக்செல் மத்தியப் பள்ளி (Excel Central School), எக்செல் மேல்நிலைப் பள்ளி (Excel Higher Secondary School) எனும் மூன்று பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கும் சேர்த்து விக்கிப்பீடியா மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழாதிருவட்டாறு எக்செல் பள்ளிகளின் கலையரங்கத்தில் ஆகஸ்ட் 10, 2013, சனிக்கிழமையன்று நடைபெற்ற மாணவர் மன்றங்களின் தொடக்க விழாவில் விக்கிப்பீடியா மன்றத்தினை தமிழ் விக்கிப்பீடியரும், எழுத்தாளருமான தேனி மு.சுப்பிரமணி தொடங்கி வைத்தார். விக்கிப்பீடியா மன்றத்தின் நோக்கம்விக்கிப்பீடியா மாணவர் மன்ற மாணவர்களுக்கு அனைத்து விக்கியூடகத் திட்டங்களிலுமிருந்து மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை எடுத்துப் பயனடைந்திடவும், அவர்களது தாய்மொழிக்கேற்றபடி தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலான விக்கிப்பீடியாக்களில் ஏதாவது ஒன்றிலும், கூடுதலாக ஆங்கில மொழியிலான விக்கிப்பீடியாவிலும், பிற விக்கிப்பீடியா திட்டங்களிலும் பங்களிப்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். விக்கிப்பீடியா மன்ற அமைப்புஎக்செல் பள்ளிகளின் விக்கிப்பீடியா மன்றத்திற்கு மூன்று பள்ளிகளிலுமிருந்து 7 முதல் 12-ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் 70 பேர் பேராளர்கள் (Delegates) ஆகவும், 5 மற்றும் 6-ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் 35 பேர் தன்னார்வலர்கள் (Volunteers) ஆகவும் தேர்வு செய்யப் பெற்று மொத்தம் 105 மாணவர்கள் விக்கிப்பீடியா மாணவர் மன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். நிர்வாக அமைப்புஇந்த விக்கிப்பீடியா மாணவர் மன்றத்தின் செயல்பாடுகளுக்காக அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பு
மாணவர் மன்ற நிர்வாகிகள்விக்கிப்பீடியா மாணவர் மன்றத்தின் நிர்வாகிகளாக வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்:[1] விக்கிப்பீடியா மன்றச் செயலாளர்: ஜோஸ்னிபால் (எக்செல் மத்தியப் பள்ளி)
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia