விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017வியூக உரையாடலுக்கு நல்வரவு. பதினாறு ஆண்டுகளாக நாம் கூட்டாக உழைத்து மனித வரலாற்றின் மிகப் பெரிய அறிவு வளத்தை உருவாக்கி உள்ளோம். இன்று நாம் வலைத்தளங்களுக்கு மேலான ஒன்று. நாம் ஒர் இயக்கம். "உலக அறிவு முழுமையையும் ஒவ்வொரு மனிதப் பிறவியும் கட்டற்ற முறையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உலகைக் காண்பது" என்ற உயர்ந்த வலுவான தொலைநோக்குக் கொண்ட இயக்கம். விக்கிமீடியா இயக்கமாக நாம் ஒரு வியூக உரையாடலை தொடங்கி உள்ளோம்: discussion . இந்த உரையாடலின் ஊடாக விக்கிமீடியா எவ்வாறு இந்த உலகுக்குபங்களிக்க உள்ளது என்பதை நாம் வரையறை செய்ய உதவலாம். உங்களையும் இந்த உரையாடலில் பங்கெடுக்க அழைக்கிறோம். உங்கள் கருத்துக்களை இந்தப் பேச்சுப் பக்கத்தில் முன் வையுங்கள். தமிழ் விக்கிச் சமூகமாக நாம் எமது கருத்துக்களை இதர சமூகங்களோடு சேர்ந்து முன்வைத்து, இந்த கட்டற்ற அறிவு இயக்கத்தை முன்நகர்த்திச் செல்வோம். தொடர்புடைய முந்திய உரையாடல்கள்
Summary/சுருக்கம்மேலதிக விபரங்கள் |
Portal di Ensiklopedia Dunia