விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2025

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2025 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுவதும், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும்.

தமிழ் விக்கிப்பீடியா மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. அனைத்துப் பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பயனர்கள், அந்த நேர அளவு முழுவதும் பங்களிக்க வேண்டும் என்பது இல்லை; அவரவருக்கு உகந்த நேரத்தில் விருப்பமான அளவிற்கு பங்களிக்கலாம்.

நாள், கால அளவு

  • நாள்: 28-செப்டம்பர்-2025 (ஞாயிற்றுக்கிழமை)
  • கால அளவு: 24 மணி நேரம், காலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை (இந்திய, இலங்கை நேரம்)

திட்டம் / கவனக்குவியம்

விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும்.

பரிந்துரைக்கப்படும் வழமையான தொகுப்புகள்

எண் செயல் உதவி
1 கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை, இலக்கணப் பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்தல் விக்கிப்பீடியா:உரை திருத்தும் திட்டம்
2 பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துதல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
3 தேவைப்படும் உகந்த புதிய பகுப்புகளை உருவாக்குதல் உதவி:பகுப்பு
4 கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
5 கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைத்தல் விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்
6 புதிய கட்டுரையைத் துவக்குதல்

பேருதவி: விக்கிப்பீடியா:உதவி

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:22, 6 சூலை 2025 (UTC)[பதிலளி]

துணைப் பக்கங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya