விக்கிப்பீடியா:2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கைஅறிமுகம்தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் கீழ் தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிநூல்கள், தமிழ் விக்கி மேற்கோள்கள், தமிழ் விக்கி செய்திகள் ஆகிய தளங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ் விக்கி மூலத்தை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவற்றுள் முதலில் தொடங்கப்பட்ட தமிழ் விக்கிபீடியாவும் தமிழ் விக்சனரியும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதுடன் தமிழ் இணையப் பயனர்களால் பெரிதும் அறியப்பட்டதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. பிற தளங்களிலும் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறோம். இந்திய மொழி விக்கிமீடியா திட்டங்களில் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் தரம் மிகுந்ததாகவும் சீரிய வளர்ச்சி மிக்கதாகவும் உள்ளன. இத்தளங்கள் தமிழ் இணையத்தில் முதன்மையான தகவல் களங்களாக உள்ளன. தமிழ் பேசப்படும் நிலப்பகுதிகளில் வரும் ஆண்டுகளில் தோன்றக்கூடிய இணைய அணுக்கப் பரவல், இத்திட்டங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உரமாக அமையும் என்பதால் இத்திட்டங்களின் வருங்கால முக்கியத்துவம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆங்கில இணையத்தளங்களை போலன்றி, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் உசாத்துணைக்கான முதன்மை களமாக இருப்பது குறிப்பிட்டதக்கது.
தமிழ் விக்கிபீடியாதமிழ் விக்கிபீடியா 2003ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. தற்போது 1,74,229 கட்டுரைகள் உள்ளன; 1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. சராசரியாக, நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்து புதிய கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. பயனர் விவரங்கள்1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. இவற்றில் 13 கணக்குகளை நிர்வாகப் பொறுப்புள்ளவர்கள் கொண்டு உள்ளனர். நிரவலாக, நாளொன்றுக்கு 4 பயனர் கணக்குகள் உருவாக்கப்படுகின்றன. பயனர்கள் பெரும்பாலும் இந்திய, இலங்கை வேர்களை கொண்டவர்களாகவும் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற உலகின் பல பகுதிகளிலும் இருந்தும் பங்களித்து வருகின்றனர். பங்களிக்கும் பயனர் அகவை பெரும்பாலும் 20-25 என்ற எல்லையில் அமைந்து இருக்கிறது. எனினும், முனைப்புடன் பங்காற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பயனர்களும் உள்ளனர். மாணவர்கள், மென்பொருள் வல்லுனர்கள் ஆகியோர் பங்களிக்கும் பயனர்களில் பெரும்பான்மையோர். எனினும், முனைப்போடு பங்காற்றுபவர்களில் சிறந்த தொழிற்பின்புலமும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர், கட்டிடக் கலை வல்லுனர் ஆகியோரும் உண்டு. கட்டுரை எண்ணிக்கையும் தரமும்
என்ற வளர்ச்சியை பார்க்கையில் கட்டுரைகள் எண்ணிக்கை கூடும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு மிகுந்து வருவதை காணலாம். அதே வேளை, கட்டுரை எண்ணிக்கையை கூட்டுவதை மட்டும் இலக்காக வைத்து உருவாக்கப்படும் பயனற்ற பக்கங்களை அனுமதிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இதனால், பிற இந்திய மொழி விக்கிபீடியாக்களை காட்டிலும் தமிழ் விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கையில் பின்தங்கியிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் தமிழ் விக்கிபீடியாவே தரம் மிகுந்து எண்ணிக்கையிலும் கூடுதலாக உள்ள இந்திய மொழி விக்கிபீடியாவாகும். விரிவான ஒப்பீடுகளை பார்க்க - Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006) ஜனவரி 2007 புள்ளிவிவரம்கட்டுரை எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ் 5 ஆவது இடத்தில் இருந்தாலும், எல்லாத் தர அளவீட்டு நிலைகளிலும் முதலிடம் வகிக்கின்றது. தர அளவீட்டின் படி தமிழ் முதல் இடம், கன்னடம் இரண்டாவது இடம். மற்ற இந்திய மொழிகள் எல்லாம் மூன்றாவது நான்காவது, ஐதாவது நிலைகள் தாம். பிற இந்திய மொழிகளைக் காட்டிலும், 2 kb அளவான கட்டுரைகளில் 2-3 மடங்காவது அதிகமான கட்டுரைகளுடன் முன் நிலையில் இருக்கின்றோம். இப்பொழுது தமிழ் விக்கிபீடியா கலைக் களஞ்சியம் ஒரு மில்லியன் சொற்கள் கொண்டுள்ளது. இன்னும் விரைவாகவும், சிறப்பாகவும் முன்னெடுத்துச் செல்ல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிற அளவுகோல்கள்
தடைக்கற்கள்
மறைமுகப் பங்களிப்புகள்நேரடியாக தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதாதோரும் பிற வழிகளில் மறைமுகமாக தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு உதவுகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகளில் தமிழ் விக்கிபீடியாவுக்கான இணைப்பை காணலாம். தமிழ் விக்கிபீடியாவை அடிப்படையாக வைத்த இணையக் கருவிகளின் உருவாக்கமும் தமிழ் விக்கிபீடியாவுக்கான மறைமுகப் பங்களிப்புகளே. தற்போது, தமிழ் விக்கிபீடியா குறித்த தொடர்பாடலுக்காக தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய முனைப்புகள்
பலங்கள்
வருங்கால எதிர்ப்பார்ப்புகள், திட்டங்கள்
தமிழ் விக்சனரிதமிழ் விக்சனரியில் தற்போது 5500+ சொற்களுக்கான பொருள் விளக்கங்கள் தமிழில் உள்ளன. இவை பெரும்பாலும் ஆங்கிலம் - தமிழ் விளக்கச் சொற்கள். பயனர் கணக்குகள் எண்ணிக்கை 150+ ஆக உள்ளது. இவற்றில் 6 கணக்குகளை நிர்வாகிகள் கொண்டுள்ளனர். பெரும்பாலும் தமிழ் விக்கிபீடியா பயனர்களே அங்கும் பங்களித்தாலும் விக்சனரியில் மட்டும் பங்களிக்கும் பயனர்களும் உள்ளனர். இணையத்தில் இருக்கும் ஒரே தற்காலத் தமிழ் அகரமுதலியாக இருப்பது தமிழ் விக்சனரியின் சிறப்பு. பயனர் விவரங்கள், பக்க எண்ணிக்கை, தரக்கட்டுப்பாடு, தடைக்கற்கள், வருங்காலப் போக்குகள் ஆகியவை தமிழ் விக்கிபீடியாவை ஒத்தே இருக்கின்றன. பிற திட்டங்கள்தமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி மேற்கோள், தமிழ் விக்கி செய்திகள் ஆகியவற்றின் இருப்பும் முக்கியத்துவமும் தற்போது குறிப்பிடத்தக்கனவாக இல்லை. தற்போது விக்கிபீடியாவில் முனைப்புடன் இருக்கும் பயனர்களே அங்கும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இத்திட்டங்கள் வளரவில்லை. இத்திட்டங்களில் தனி ஆர்வம் உடைய பயனர்கள் வருகையில் நிலைமை மாறும். எனினும், இத்திட்டங்களின் தேக்கம் ஆங்கில விக்கித் திட்டங்களின் வளர்ச்சிப் போக்குகளுடன் ஒப்பிடத் தக்கதே. இத்தளங்களை காட்டிலும் தமிழ் விக்கிமூலம் திட்டத்துக்கான தேவை மிகையாக உணரப்படுவதால் அதை அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் முக்கியத்துவம் வருங்காலத்தில் தமிழ் விக்கிபீடியாவுக்கு இணையாக அமையும் என்று சொல்ல இயலும். |
Portal di Ensiklopedia Dunia