விக்கிப்பீடியா:2010 விக்கிமேனியாவில் தமிழ் விக்கியூடகங்கள்விக்கிமேனியா மாநாட்டுக் கட்டுரைவிக்கிமேனியா மாநாட்டில் நான் வழங்குவதற்கு எண்ணியுள்ள தலைப்புக் குறிப்புக்களை இங்கே இட்டுள்ளேன். பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறவும். கட்டுரை எழுதியதும் இப்பக்கத்தில் இடுகிறேன். மயூரநாதன் 08:00, 12 ஜூன் 2010 (UTC)
1) தமிழ் விக்கியின் நம்பகத்தன்மை: தமிழ் விக்கியில் எழுதப்படும் கட்டுரைகள் உண்மையான தகவல்களைத் தர வேண்டும். கட்டுரையாசிரியரின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் சென்று, நம்பகமான தரவுகளை அளிக்க வேண்டும். ஆதாரங்கள் காட்ட வேண்டும். ஒரு பொருள் பற்றி ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்கள் இருந்தால் இரண்டையுமே நடுநிலை நின்று வழங்கவேண்டும். ஆக, தமிழ் விக்கியின் நம்பகத்தன்மையை உயர்த்துவது எப்படி? அண்மையில் நிகழ்ந்த "தமிழ்ச் செம்மொழி - தமிழ் விக்கி கட்டுரைப் போட்டி" பற்றி வெளியிடப்பட்ட ஒரு கருத்து இதோ: "ஆயுர்வேதம்" பற்றிய கட்டுரை அறிவியல்-திறனாய்வு அடிப்படையில் அமையவில்லை எனவும், வடமொழிக் கலப்பு அளவுக்கு மிஞ்சி இருந்தது எனவும், கட்டுரையை வாசிக்கும் பயனர் தவறான விதத்தில் மருந்து உண்ணும் ஆபத்து எழுகிறது எனவும் கட்டுரை நடுவர் ஒருவர் கூறினார். எனவே, அறிவியல் முறைப்படி அமைந்த கட்டுரைகள் தமிழ் விக்கியில் வெளிவர என்ன செயலாம்? 2) அடுத்த கேள்வி கூகுள் மொழிபெயர்ப்புப் பற்றியது. அதன் தரம் பற்றி இங்கே விவாதம் நிகழ்ந்தது அறிவீர்கள். நான் எழுப்பும் கேள்விகள் இரண்டு: முதலில், ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் பெறும் கட்டுரைகள் மூல மொழியில் நிகழும் இற்றைப்படுத்தல்களை எவ்வாறு உள்வாங்கப் போகின்றன? ஆங்கிலம் தவிர, பிற மொழி விக்கிகளில் உள்ள கட்டுரைகளைத் தமிழில் கொணர முயற்சிகள் உளவா? நன்றி!--George46 00:18, 15 ஜூன் 2010 (UTC) முக்கியமான கேள்விகள் பவுல். கட்டுரைகளின் நம்பகத்தன்மை குறித்து இது வரை நாம் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. 2011 ஆண்டு தமிழ் விக்கி செயல்திட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் தந்து முழு ஆண்டும் இப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறேன். (ஆதாரங்கள் சேர்த்தல், தகவல் பிழை திருத்தம் முதலியவை). கட்டுரைகளின் உரையைச் செப்பனிட்டு எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளையும் களைய வேண்டும். ஏனெனில் உளவியல் அடிப்படையிலும் சீரான நடையில் இல்லாத கட்டுரையின் நம்பகத்தன்மை குன்றும். கூகுள் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆங்கில விக்கியின் இற்றைப்படுத்தல்கள் தமிழ் விக்கிக்கும் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே. வழமையான பயனர் மொழிபெயர்த்து எழுதும் கட்டுரையிலும் இப்பிரச்சினை உண்டு. ஆனால், அங்கு அவர் ஆர்வத்தின் பெயரில் ஒரு கட்டுரையை எழுதுவார் என்ற நோக்கில் ஓரளவாவது தகவல்களை இற்றைப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். கூகுள் திட்டத்தைத் திறனாய்கையில் இப்பிரச்சினையையும் கணக்கில் கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் கூகுளின் முக்கிய நோக்கங்களில் ஒன்று கூகுளின் ஆங்கிலம் - தமிழ் மொழிமாற்றியை வளர்ப்பது. வேறு மொழி - தமிழ் மொழி மாற்றித் திட்டங்கள் ஏதும் அதனிடம் இருப்பதாகத் தற்போது தெரியவில்லை. எனவே, பிற மொழி மூலங்களில் இருந்து தமிழாக்கங்கள் வர வாய்ப்பு குறைவே--ரவி 06:46, 15 ஜூன் 2010 (UTC)
விக்கிமீடியா நிர்வாகிகள் பேச்சில் இரண்டு தமிழ் விக்கிப்பீடியர்கள்விக்கிமேனியா 2010 மாநாட்டின் முதல் நாள் தொடக்கத்தில் விக்கிமீடியாவின் சூ கார்டினர் விக்கிமீடியா திட்டங்களை முன்வைத்துப் பேசினார். அப்போது, தனது பயணங்களின்போது சந்தித்த சிலரது படங்களையும் திரையில் காட்டினார் அதில் ஒருவர் நமது சுந்தர். இறுதி நாளில் சிறிய விக்கிப்பீடியாக்கள் தொடர்பாக விக்கிமீடியா நிறுவனர் சிம்மி வேல்சு பேசினார். அப்போது ஆறு விக்கிப்பீடியா ஆர்வலர்களுடன் இசுக்கைப்பு வழியாக அவர் நடத்திய பேட்டிகளின் நிகழ் படங்களின் பகுதிகளையும் போட்டுக் காட்டினார். அதில் நமது நற்கீரன் இரண்டு முறை வந்தார். நற்கீரன் இடம்பெற்ற படத்தை அருகில் பாருங்கள் படம் தெளிவாக வரவில்லை. சுந்தருடைய படம் எதிர்பாராமல் வந்ததால் எடுக்கமுடியவில்லை. இ. மயூரநாதன்.
மகிழ்ச்சியான செய்தி. தலைமறைவாக இருந்த நற்கீரன் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் ;)நம்மில் பலரும் பல்வேறு களங்களில் தமிழ் விக்கியின் சார்பாளர்களாகச் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது நமது திட்டத்துக்கு கிடைத்த நற்பேறு. --ரவி 11:32, 13 ஜூலை 2010 (UTC) செருமனியின் முன்னணி இதழான Spiegel லும் http://www.spiegel.de/netzwelt/web/0,1518,706001,00.html தமிழ் விக்கி பற்றிய சிறிய குறிப்பு வருகிறது. tamil wikipedia என்று கூகுள் செய்திகளில் தேடிக் கொண்டிருக்கிறேன் :) சிறிய விக்கிகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக நமது விக்கி மனதில் பதிந்து வருகிறது என்பது மட்டும் புலப்படுகிறது! --ரவி 11:44, 13 ஜூலை 2010 (UTC)
மிக இனிப்பான செய்திகள் :) முன்பினும் ஊக்கத்துடன் உழைப்போம். அண்மையில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பல கட்டுரைகளில் தமிழ் விக்கிப்பீடியாவைப்ப் பற்றி உயர்வாகப் பேசினர். இது தவிர பல மிகச் சிறந்த எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் தமிழ் விக்கியில் பங்களிப்பதாக வாக்களைத்துள்ளனர். பேரா. தெய்வசுந்தரம், முனைவர் உலோ செந்தமிழ்க்கோதை, முனைவர் இராசுகுமார், பல கல்வெட்டாய்வாளர்கள், பற்பல அறிஞர்கள் உதவ முன்வருவதாகக் கூறினர். இந்த எழுச்சியுந்தத்தை தக்க முறையில் வளர்த்தெடுப்போம். தமிழ் விக்சனரிக்கு தமிழக அரசின் தொழில்நுட்பச் செயலர் திரு டேவிதாரும் முனைவர் நக்கீரனும் (தமிழ் இணைய பல்கலைக்கழக இயக்குனர்)ஆறு தொகுதிகளில் உள்ள அத்தனை சொற்களையும் கொடையாக தந்துள்ளார்கள் (மென்படிவத்திலும் தந்துள்ளார்கள்). இன்னும் பல நன்மைகள் வர உள்ளன. தரத்தைத் தளர்த்தாது, சீரான முறையில் வளர்ந்த்தெடுத்தால் பெரும் பயன் விளையும். --செல்வா 22:54, 13 ஜூலை 2010 (UTC) பல வழிகளிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியும், அதில் தமிழ் விக்கிப்பீடியர்களின் பங்களிப்பையும் கண்டு மகிழ்ச்சி. முன்னேற்றத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.--கலை 06:01, 16 ஜூலை 2010 (UTC) கட்டுரைகள் ஏற்புவிக்கிமேனியா மாநாட்டில் வழங்குவதற்காக முன்வைத்திருந்த, என்ற தலைப்பிலான ரவியின் முன்மொழிவும், என்ற தலைப்பிலான எனது முன்மொழிவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மயூரநாதன் 17:30, 8 ஜூன் 2010 (UTC) மகிழ்வளிக்கும் செய்திக்கு நன்றி, மயூரநாதன். விசா உறுதியான பிறகு அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்று இருந்தேன்--ரவி 06:32, 9 ஜூன் 2010 (UTC)
நன்றி செல்வா, நற்கீரன். உரையாடலுக்கான தொடுப்பை மேலே கொடுத்துள்ளேன். இது குறித்து முழுமையான கட்டுரை உருவாக்கும் எண்ணமில்லை. Powerpoint உரையாடலாக நிகழ்த்தவே விருப்பம். நன்றி--ரவி 10:59, 10 ஜூன் 2010 (UTC)
நற்கீரன், செல்வா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நானும் முழுமையான ஒரு கட்டுரை எழுதுவதா வேண்டாமா என்று முடிவு செய்யவில்லை. என்றாலும் நான் தலைப்பில் உள்ளடக்கவிருக்கும் விடயங்களை இன்னும் ஓரிரு நாட்களில் சுருக்க வடிவில் உங்கள் ஆலோசனைக்காக முன்வைப்பேன். மயூரநாதன் 16:10, 10 ஜூன் 2010 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia