விக்கிப்பீடியா பேச்சு:கூகுள்25/Tamil Wikipedia: Community expansion plan 2025

Regarding correction

Please correct the dates mentioned on 'Timelines' subheading பொதுஉதவி (பேச்சு) 17:59, 8 சனவரி 2025 (UTC)Reply

Status Update

@Selvasivagurunathan m Community Expansion Plan முழுமை பெற்றுவிட்டதா? கூகுளுக்கு அனுப்பிவைத்து அவர்களிடமிருந்து ஏதேனும் பதில் வந்ததா? இல்லை, விரிவாக்கத் திட்டத்தை இறுதி செய்வதில் இன்னும் பங்களிப்புகள் தேவையெனில் கூறுங்கள். என்னால் இயன்ற பங்களிப்புகளை நல்குகிறேன். திட்டத்தை 2026 மார்ச்சு வரை இழுக்கத் தேவையில்லை. இந்த டிசம்பரோடே முடிக்கலாம். முதல் மூன்று மாதங்கள் திட்டமிடல், logistics க்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தையும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதலாம். நன்றி - இரவி (பேச்சு) 16:21, 13 சனவரி 2025 (UTC)Reply

@Ravidreams அலுவலகப் பணிகளின் காரணமாக, இந்த வேலையில் கவனம் செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. தைப்பொங்கல் நாளில் கவனம் செலுத்த இயன்றது. விக்கிப்பீடியா பேச்சு:கூகுள்25 பக்கத்தில் தாங்கள் முன்னெடுத்து உரையாடிய துணைத் தலைப்புகளின் கீழ் இடப்பட்டிருந்த கருத்துகள் அடிப்படையில், விரிவாக்கத் திட்டத்தை தயாரித்து முடித்தேன். நடப்பு ஆண்டிற்குரிய திட்டத்தை டிசம்பரில் முடிப்பதாகவே திட்டமிடுமாறு நீங்கள் இங்கு மேலே இட்டிருந்த கருத்து மிகவும் உதவிகரமாக இருந்தது. அவ்வாறே விரிவாக்கத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். இதற்காக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிமீடியா அறக்கட்டளையின் பிரவீண் அவர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மடலை நீங்களும் பெற்றிருப்பீர்கள். பகிரப்பட்ட விரிவாக்கத் திட்ட ஆவணத்திலுள்ள உள்ளடக்கத்தை இந்தத் திட்டப் பக்கத்திலும் அதே வடிவமைப்புடன் இட்டுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:59, 14 சனவரி 2025 (UTC)Reply
இற்றைக்கு நன்றி. WMF தொடர்பாளர் கேட்டுள்ள கூடுதல் கேள்விகளுக்கான பதில்களையும் உள்ளடக்கி அடுத்த மடலை அனுப்புவோம். நன்றி - இரவி (பேச்சு) 15:08, 15 சனவரி 2025 (UTC)Reply

திட்ட அறிக்கை எழுதுதல்

தற்போது bullet point குறிப்புகள் போல் உள்ளதை ChatGPTயில் கொடுத்தாலே விரிவாகவும் தொழில்முறையாகவும் எழுதித் தரும். அதற்காக நீங்கள் நேரம், உழைப்பைச் செலவிடத் தேவையில்லை. அடுத்து நீங்கள் WMFக்குக் கூடுதல் events விவரங்களோடு இற்றை செய்யும்போது முயன்று பார்க்கலாம். இது தொடர்பாக உதவி தேவையெனில் சொல்லுங்கள். நன்றி. - இரவி (பேச்சு) 16:27, 18 சனவரி 2025 (UTC)Reply

மேலே உள்ள கருத்து User:Selvasivagurunathan m பார்வைக்கு --இரவி (பேச்சு) 16:28, 18 சனவரி 2025 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya