விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2024/விரிவான திட்டமிடல்திட்டமிடலுக்கான கூட்டம் 1முதல் கூட்டம் 06-ஏப்ரல்-2024 (சனிக்கிழமை) அன்று, இந்திய நேரம் இரவு 7 முதல் 8 மணி வரை நடைபெறும். கலந்துகொண்டு உங்களின் பரிந்துரைகளை வழங்கி, நிதி நல்கைக்கான முன்மொழிவை உருவாக்க உதவுங்கள். கூட்டத்தில் இணைவதற்கான இணைப்பு: https://meet.google.com/yox-pnih-mdt - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:04, 3 ஏப்பிரல் 2024 (UTC) உரையாடல் 128-ஏப்பிரல்-2024 அன்று நடந்த மாதாந்திர இணையவழி கலந்துரையாடல்களின் போது இந்த நிகழ்வு குறித்தும் பேசப்பட்டது. தொடர்பங்களிப்பாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. நிதி நல்கைக்கான விண்ணப்பத்தில் இந்த இலக்குகள் குறிப்பிடப்படும். இந்த நிகழ்வில் பங்குபெறுபவர்களுக்கும் இந்த இலக்குகள் தெரிவிக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:09, 28 ஏப்பிரல் 2024 (UTC) சி.ஐ.எஸ் அமைப்பினருடன் இணையவழிக் கலந்துரையாடல் 1
@Balu1967 and TNSE Mahalingam VNR: ஆகியோரின் கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:57, 10 மே 2024 (UTC)
சி.ஐ.எஸ் அமைப்பினருடன் மின்னஞ்சல் வழியான உரையாடல்கள்09-மே-2024 அன்று நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில், 24-மே-2024 அன்று சி.ஐ.எஸ் அமைப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில், Rapid Fund-க்கு விண்ணப்பிக்குமாறு Pavan Santhosh.S பதில் மின்னஞ்சல் அனுப்பினார். விண்ணப்பத்தைத் தயாரிப்பதற்கு Nitesh Gill, நிவாஸ் ஆகியோர் உதவி செய்வார்கள் என்று பவன் சந்தோசு அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வை தமிழ் விக்கிப்பீடியர்களுடன் ஒன்றிணைந்து நடத்த சி.ஐ.எஸ் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:39, 24 மே 2024 (UTC)
நிதி உதவி கோரிக்கை குறித்தான இற்றைகள்01-சூன்-2024: நிதிக்கான விண்ணப்பத்தை சி.ஐ.எஸ் அமைப்பின் திட்ட அலுவலர் Nitesh Gill திறனாய்வு செய்தார். அவரின் பரிந்துரைகள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மேம்படுத்தப்பட்ட விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
04-சூன்-2024: தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. தகவல் பகிர்வு: @Balu1967, கி.மூர்த்தி, சத்திரத்தான், Sridhar G, TNSE Mahalingam VNR, Arularasan. G, Balajijagadesh, and Neechalkaran: - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:02, 4 சூன் 2024 (UTC) 04-சூலை-2024: விண்ணப்பத்தைக் கையாளும் விக்கிமீடியா அறக்கட்டளைச் சேர்ந்த Jacqueline (Senior Program Officer, Wikimedia Foundation) கேட்டிருந்த கேள்விக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:17, 4 சூலை 2024 (UTC) 05-சூலை-2024: நிதிக்கான கோரிக்கை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தொகையிலுள்ள சிறு வேறுபாட்டைக் களைவதற்கு (இந்தியப் பணம் 7,242 குறைவு) முயற்சி செய்யப்படும். தகவல் பகிர்வு: @Balu1967, கி.மூர்த்தி, சத்திரத்தான், Sridhar G, TNSE Mahalingam VNR, Arularasan. G, Balajijagadesh, and Neechalkaran: - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:53, 5 சூலை 2024 (UTC)
நிதியைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம்விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அறக்கட்டளையிடமிருந்து சிஐஎஸ் அமைப்பிற்கு நிதி இன்னமும் வந்துசேரவில்லை. அவர்களிடையே கலந்துரையாடல்கள் தொடர்கின்றன. இந்தத் தாமதத்தின் காரணமாக, கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை நம்மால் வெளியிட இயலவில்லை. அனைத்துத் திட்டமிடலும் நகராமல் நின்றுவிட்டன. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:15, 15 ஆகத்து 2024 (UTC) |
Portal di Ensiklopedia Dunia