விக்கிப்பீடியா பேச்சு:நுட்பத் தேவைகள்கணித நீட்சியில் ஒருங்குறி ஆதரவுத் தேவை
வார்ப்புருக்களில் இருந்து தரவு பிரித்தல்
விக்கித் தொகுப்பியில் தமிழ் சொல்திருத்தி, இலக்கணத் திருத்திவிக்கியில் தொகுக்கும் போது தமிழ்ச் சொற்களை பிழையாக எழுதினால் சொற் பரிந்துரைகள் தந்தால் உதவியாக இருக்கும். கூட்டுப் பகுப்புத் தேடல்விக்கிப்பீடியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுப்புகளில் உள்ள கட்டுரைகளை தேடுமாறு வசதி வேண்டும். உதாரணத்துக்கு வரலாற்று ஆசிரியர்கள் என்னும் பகுப்பில் 1000 நபர்களும் தொல்லியல் ஆசிரியர்கள் என்ற பகுப்பில் 1000 நபர்களும் இருக்கின்றனர். 500 பேர் 2 பட்டியலிலும் உள்ளனர். எனக்கு இரண்டுப் பகுப்பில் உள்ள 500 நபர்களை தனிப்பட்டியலாக காட்டவேண்டும் என்றால் என்ன செய்வது? அப்போது இதைப் போன்றவை பயன்படும். இந்த வேண்டுகோளை எவராவது ஆங்கில விக்கிப்பீடியாவில் வைத்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:38, 17 நவம்பர் 2013 (UTC)
நான் கேட்டது கீழுள்ளதைப் போல். நீங்கள் கூறும் முறை எனக்கு புரியவில்லை. விளக்க முடியுமா? File:CatScan 02.png--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:10, 17 நவம்பர் 2013 (UTC)
மேற்கோள்களுக்கான விக்கித் தரவுபல இடங்களில் நாம் மேற்கோள்கள் பற்றிய தகவல்களை திரும்ப திரும்ப தட்டச்சுச் செய்ய வேண்டி உள்ளது. இவற்றை ஒரு இடத்தில் தொகுத்துப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தால் உதவியாக இருக்கும். பல பதிப்புக்கள், பல்வேறு வெளியீடுகளை வேறுபடுத்திக் காட்டும் வசதி வேண்டும். --Natkeeran (பேச்சு) 20:06, 22 செப்டம்பர் 2015 (UTC) ஆய்வுப் பரிந்துரை - தமிழில் எப்படித் தேடுகிறார்கள், என்னதைத் தேடுகிறார்கள்தமிழ் விக்கி தேடல் உள்ளீடுகள், அதிகம் படிக்கப்படும் கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டு தமிழில் எப்படித் தேடுகிறார்கள், என்னதைத் தேடுகிறார்கள் என்பது தொடர்பான ஒரு ஆய்வுனை செய்தால், இவை பற்றிய தரவுகளைத் தொகுத்தால் தமிழ் தேடல், உள்ளடக்க ஆக்கம், பரவலாக்கம் ஆகிய செயற்பாடுகளுக்கு உதவும். --Natkeeran (பேச்சு) 20:06, 22 செப்டம்பர் 2015 (UTC) வார்ப்புருக்களில் ஈடானவை கிடைக்காமல் உள்ள நிலைமொழியாக்கம் செய்யும் போது வார்ப்புருக்கள் பயன்படுத்தப்படும் நிலையில் அவற்றுக்கீடாக தமிழில் வார்ப்புருக்கள் இல்லாத நிலையில் அவற்றை மீண்டும் தமிழ்ப்படுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக சில அலகுகள் மாற்றத்தின் போது (மைல்கள் - கிலோமீட்டர்கள்) இவ்வாறான தேவைகள் எழுகின்றன. --மகாலிங்கம் இரெத்தினவேலு 00:48, 29 சனவரி 2025 (UTC)
பயனர் பங்களிப்பின் தாக்கம் குறித்த புள்ளிவிவரங்கள்விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்#பயனர்_பங்களிப்பின்_தாக்கம்_குறித்த_புள்ளிவிவரங்கள் @Ravidreams "Top 100 பயனர்கள் பெறும் பக்கப் பார்வைகளை ஒவ்வொரு மாதமும் அவர்கள் பேச்சுப் பக்கங்களில் தானியக்கமாகக் குறிப்பிட வழியுண்டா? எடுத்துக்காட்டுக்கு, ஒரு தானியக்கச் செய்தி இப்படியிருக்கலாம். "வணக்கம், @Balajijagadesh, தாங்கள் விக்கிப்பீடியாவில் தொடங்கிய கட்டுரைகள் சென்ற மாதம் மட்டும் XXX முறை பார்க்கப்பட்டுள்ளன. இது தமிழில் தகவலைத் தேடுகிறவர்களுக்குப் பேருதவியாக இருந்திருக்கும். தொடர்ந்து இது போல் உங்கள் பங்களிப்புகளை நல்க வேண்டுகிறோம். நன்றி. தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக, xyz." -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:51, 1 பெப்பிரவரி 2025 (UTC) |
Portal di Ensiklopedia Dunia