விக்கிப்பீடியா பேச்சு:பயனர் பெயர்பயனர்கள் தங்கள் பயனர் பெயர்களில் சாதிப் பெயரைச் சேர்க்கும் போக்கு தென்படத் தொடங்கியிருக்கிறது. சிலர் தங்கள் பயனர் பக்கங்களிலும் பேச்சுப் பக்கங்களிலும் குறிப்பிடுகிறார்கள். அனைவரும் சாதிப்பற்றால் சேர்க்கிறார்கள் என்று சொல்ல முடியாது. முதற்பெயர் கடைசிப் பெயர் என்ற முறைமையைப் பின்பற்றிச் செய்வதாக இருக்கலாம். தமிழ்நாட்டுக்கு வெளியே பிறந்து வளர்ந்த தமிழர்கள் அந்தந்த ஊர்களில் உள்ளது போல் பெயரின் இறுதியில் சாதியையும் சேர்த்துக் கொள்கிறார்கள். மராத்தி விக்கிப்பீடியாவில் சாதியை முன்வைத்துப் பயனர்களிடேயே சிறு குழுக்கள் உருவாவதாக ஒரு செவி வழிச் செய்தி எல்லாம் வருவதால், தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தப் போக்கை முறையான கொள்கை மூலம் தவிர்க்க வேண்டும். ஒரே ஒரு குழப்பம்: அகமது பட்டேல், மாதவன் நாயர் போன்று தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள சாதிப் பெயர் கணக்குகளைக் கொண்டு பங்களிப்போரிடம் என்ன அணுகுமுறை மேற்கொள்வது என்பதே.
ஆகிய இரண்டு பரிந்துரைகளை முறையான கொள்கையாக அறிவிக்கப் பரிந்துரைக்கிறேன்.--இரவி (பேச்சு) 06:29, 14 சூன் 2013 (UTC)
சுந்தர் சுட்டியது போல் நாம் செய்யும் பணிக்குச் சாதி அடையாளம் தேவையில்லை. திராவிட இயக்கத் தாக்கத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் தனது சாதி அடையாளத்தைப் பணியிடங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிப்படுத்துவது ஒரு வகையான நாகரிகம் குறைவான செயலாகவும் கூட பார்க்கப்படுகிறது. சுவரொட்டிகளில் திருமண அழைப்பிதழ்களில் சாதிப் பெயர்களையும் பட்டப் பெயர்களையும் இடும் வழக்கம் இருப்பதை அறிவேன். ஒடுக்கப்பட்ட சாதிகளும் ஒரு எதிர்வினையாக இவ்வாறு செய்வதையும் அறிவேன். சமூகம் நிறைய விதங்களில் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், எது நல்ல மாற்றம் எது தீவிளைவுகளைத் தரக்கூடிய மாற்றம் என்று சீர்தூக்கிப் பார்த்து நாம் செயல்படலாம் அல்லவா? எடுத்துக்காட்டுக்கு, தமிங்கிலம் கூட தற்போதுள்ள சமூக வழக்கம் தான். ஆனால், நாம் அதனைப் பின்பற்றுவதில்லை. ஒருவரின் அலுவல் முறைப்பெயரில் கூட சாதிப் பெயர் பின்னொட்டாக இருந்தாலும், விக்கிப்பீடியாவில் அந்த அடையாளத்தைக் காட்ட வேண்டாம் என்று கோருவதில் தவறில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் பெயர்கள் பல தலைவர்களின் பெயர்களைக் கொண்டிருந்தன. இவை சாதி அடையாளங்களாக முன்வைக்கப்பட்டு பெரும் வன்முறை நிகழ்ந்த பிறகு, ஒட்டு மொத்தமாக அனைத்து தலைவர்கள் பெயர்களையும் நீக்கினார்கள். இது பிற்போக்கான நடவடிக்கையா முற்போக்கான நடவடிக்கையா என்பதைக் காலம் சொல்லும். அனைத்துச் சாதி அடையாளங்களையும் வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது எப்படி ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கும் என்று புரியவில்லை. ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு உரிமை என்ற போர்வையில் ஒடுக்கி வரும் சாதிகள் தங்கள் பெருமையைப் பறைசாற்றவே இந்தச் சாதிப் பெயர் சேர்த்தல் பயன்படுகிறது. தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகளில் யாரையும் பெயர் சொல்லித் தோழமையுடன் பணியாற்ற முடிகிறது. தமிழிணையத்தில் வேறு எங்கும் காணாத அளவுக்கு அனைத்து நாட்டுத் தமிழரும் ஒற்றுமையாகப் பணி புரிகிறோம். சாதி அடையாளங்களை வெளிப்படுத்த அனுமதித்தால் இந்த நல்லுறவுச் சூழல் குலைய வாய்ப்புண்டு, உரையாடல்களில் சாய்வு வர வாய்ப்புண்டு என்றே அஞ்சுகிறேன். தனிப்பட்ட முறையில், எந்தச் சாதிப்பெயர் ஒட்டிய பயனரின் பெயரையும் பார்க்க எனக்கு உகப்பாக இல்லை. இது எனது பக்குவமின்மையாகக் கூட இருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் நல்லுறவுச் சூழல் குலையக்கூடாது. அதே வேளை, இது ஒரு தணிக்கை முறையாகவும் காணப்படக்கூடாது. நன்றி.--இரவி (பேச்சு) 07:43, 1 சூலை 2013 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia