விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2023முன்னெடுப்புஇவ்வாண்டின் செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. அந்நாளிலோ (சனிக்கிழமை) அல்லது அதற்கடுத்த நாளிலோ (அக்டோபர் 1, ஞாயிற்றுக்கிழமை) விக்கி மாரத்தானை நடத்தலாம் என்பது எனது பரிந்துரை. அக்டோபர் 2, திங்கட்கிழமையன்று இந்தியாவில் விடுமுறை என்பதால், ஞாயிறன்று நேரடி நிகழ்வொன்றை தமிழகத்தில் நடத்தவும் வாய்ப்புள்ளது. பயனர்கள் தமது கருத்துகளை இந்தப் பேச்சுப் பக்கத்தில் இடலாம். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
வணக்கம் தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் சமயத்தில் விக்கி மாரத்தான் நடத்துவது பொருத்தமாக இருக்கும். அந்த நாளில் வழக்கமான துப்புரவு பணிகளுடன், தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டுரைகளில் புதிய மாவட்டங்கள் குறித்த இற்றைப் பணிகளில் ஊராட்சி ஒன்றிய அடிப்படையில் சரிபார்த்து (சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி, வேலூர், நாகபட்டணம், விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதிலிருந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கபட்டன) மேற்கொள்ள பரிந்துரைக்கிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 15:17, 15 சூலை 2023 (UTC)
வணக்கம். நல்ல முயற்சி. விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள எனது விருப்பத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. -- வசந்தலட்சுமி
1. செப்டம்பர் 30 - ஒரு நாள் நேரடி சந்திப்பு: நம் இருபது ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பாதையை உருவாக்கவும் தமிழகத்திலுள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் நண்பர் சத்திரத்தான் பரிந்துரைக்கும் கல்லூரியில் சந்திக்கலாம். அக்கல்லூரியின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சில தலைப்புகளில் கட்டுரையை உருவாக்கவும் மொழிபெயர்க்கவும் பயிற்சியளிக்கலாம். இயலுமெனில் மாரத்தான் நிகழ்வில் மொழிபெயர்க்க சில நூறு தலைப்புகளையும் பரிந்துரைக்கலாம். 2. அக்டோபர் 1 - மாரத்தான். முதல் நாள் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் உருவாக்கும் கட்டுரைகள் அனைத்தையும் பிழை திருத்தி தக்க வைத்தல் மற்றும் புதிய கட்டுரைகளை உருவாக்குதல் செயல்களில் நாம் ஈடுபடலாம். நண்பர்கள் கனக்சு, ஆண்டன், போன்றவர்கள் வழக்கம் போல இணைவார்கள் என்பதால் நமக்கு கூடுதல் பலம் கிடைக்கும். மாரத்தான் நடத்திய அனுபவம் மிக்க நண்பர் செல்வசிவகுருநாதன் ஒருங்கிணைப்பில் மாரத்தான் நிகழ்வு அர்த்தமுடன் முடியும் என எதிர்பார்க்கலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 09:44, 22 சூலை 2023 (UTC)
அடுத்தக் கட்டம்இதுவரை நடந்த உரையாடல்களின் அடிப்படையில், அடுத்தக் கட்டம் நோக்கி நகரலாம் எனக் கருதுகிறேன். அதன்பேரில், நிகழ்வுகளுக்கான நாட்கள் குறித்தான தற்போதைய முடிவு:
வேறு கருத்துகள் இருப்பின் தெரிவிக்கலாம். அவற்றையும் உரையாடலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:51, 30 சூலை 2023 (UTC)
பரிந்துரைகளின் பட்டியல்நேரடி சந்திப்பு குறித்தான எனது பரிந்துரைகளை இங்கு பட்டியலிட்டுள்ளேன். கூடுதல் பரிந்துரைகளை வரவேற்கிறோம். தொடர்ந்து பயனர்கள் இடும் கருத்துகள், நிதி, வாய்ப்பு, வசதிகள் இவற்றின் அடிப்படையில் இறுதி முடிவினை அடையலாம்.
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:01, 31 சூலை 2023 (UTC) நேரடி நிகழ்வு குறித்தான உரையாடல்களின் தொடர்ச்சிமேற்கொண்டு, இங்கு உரையாடுவோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:34, 5 ஆகத்து 2023 (UTC) நிகழ்விற்கான நாளினை முடிவு செய்தல்செப்டம்பர் 23 அன்று கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை, செப்டம்பர் 24 அன்று தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு ஆகியவற்றை நடத்துவதாக முடிவாகியுள்ளது. எனவே மாரத்தான் நிகழ்வை அக்டோபர் 1 அல்லது அக்டோபர் 8 அன்று நடத்தலாம் என்பது எனது பரிந்துரையாகும். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:41, 13 ஆகத்து 2023 (UTC) செப்டம்பர் 23 அன்று கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை, செப்டம்பர் 24 அன்று தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு ஆகியன உறுதியாகியுள்ளன; அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்த நாள் அன்று 'இணையவழி விக்கி மாரத்தான்' நிகழ்வினை நடத்துதல், இந்த இயக்கத்திற்குப் பெருமை சேர்க்கும் எனக் கருதுகிறேன். எனவே செப்டம்பர் 30 (சனிக்கிழமை) அன்று விக்கி மாரத்தான் 2023 நடத்திடப் பரிந்துரைக்கிறேன். பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில் நிகழ்விற்கான நாளினை முடிவு செய்வோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:13, 8 செப்டம்பர் 2023 (UTC)
நிகழ்வு நாளை இறுதிசெய்ய உதவியவர்களுக்கு நன்றி! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:17, 17 செப்டம்பர் 2023 (UTC) பேச்சுக் கட்டுரைகள் உருவாக்க பரிந்துரைகநான் தமிழ் விக்கி மாரத்தானில் பேச்சுக் கட்டுரைகளை (Spoken Wikipedia) உருவாக்க திட்டமிட்டு உள்ளேன். ஆதலால் நீங்கள் எனக்கு பேச்சு கட்டுரைகளாக உருவாக்க விக்கிப்பீடிய ட்டுரைகளை இங்கே அல்லது எனது பயனர் பேச்சு பக்கத்தில் பரிந்துரைக்கலாம். நன்றி மாரத்தான் துவங்குவதற்கு முன்பே பேச்சுக் கட்டுரைகளை உருவாக்க ஏழு நாட்கள் முன்பே தொடங்கி விடுவேன் :) மீண்டும் நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 16:34, 20 செப்டம்பர் 2023 (UTC)
பயனர்களின் விருப்பம்/ இலக்கு/ திட்டம்
கட்டுரைகள் உருவாக்க பரிந்துரைகவிக்கிமாராத்தான் 2023 நிகழ்வில் கலந்துகொண்டு குறைந்தது பத்து கட்டுரைகள் எழுத திட்டமிட்டுள்ளேன். உருவாக்க வேண்டிய கட்டுரைகள் மற்றும் பிறமொழியில் உள்ள தமிழுக்கு தேவையான கட்டுரைகளை பட்டியலிட்டால், உருவாக்க வசதியாக இருக்கும். அதைப்போல துப்புரவு செய்யவேண்டிய கட்டுரைகள் தனியாக பட்டியலிட்டாலும் நலம். நன்றி பிரயாணி (பேச்சு) 08:49, 27 செப்டம்பர் 2023 (UTC)
மன்னிக்கவும், கையெழுத்திட்டுவிட்டேன் --பிரயாணி (பேச்சு) 08:49, 27 செப்டம்பர் 2023 (UTC)
நன்றி --பிரயாணி (பேச்சு) 08:49, 27 செப்டம்பர் 2023 (UTC)
செயல்பாடுகள் அளவீடுஇன்று செய்யப்படும் (எத்தனை புதிய கட்டுரைகள், மேற்கோள்கள், பகுப்புகள், மாற்றப்பட்ட கட்டுரைகள்) போன்ற விக்கி செயல்பாடுகளை அறிந்து கொள்ள கருவிகள் ஏதேனும் உள்ளதா??
|
Portal di Ensiklopedia Dunia