விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/கூகுள் மொழியாக்கக் கருவியின் பயன்பாடுகீழ்கண்ட உரையாடல்களின் தொடக்கம் இங்குள்ளது. அதனின் படியும், தொடர்ச்சியையும் இங்கு காணலாம்.பல பக்கங்களில் இந்த நோக்கம் குறித்து, உரையாட வாய்ப்பு இருப்பதால் அவையனைத்தும் இங்கு தொடர்ந்து குவியப்படுத்தப்படும்.
@Mayooranathan, Sundar, Kanags, Ravidreams, Gowtham Sampath, and Arularasan. G: பொதுவாக ஒரு கட்டுரை போட்டி நிகழும் பொழுது, பிறரை விட அதிக கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். தற்போது இப்போட்டியில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் பல, கூகுள் மொழியாக்கக் கருவியின் தரவை, அப்படியே உள்ளிடாக உள்ளதைக் காண முடிகிறது. குறிப்பாக ஆங்கில சொல்லான and என்பது, தவறாகவே இக்கருவி மொழிபெயர்ப்பாதாகத் தெரிகறிது. 'உம்' விகுதியின்மையால், அவ்வாக்கியத்தின் பொருண்மையே தவறாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, "mother,he and me went the tour" என்பதை கூகுள் எந்திரம், "அம்மா, அவரும் நானும் சுற்றுப்பயணத்திற்கு சென்றோம்" என்று மொழியாக்கம் செய்கிறது. இது பார்ப்பதற்கு சரி போல தெரிந்தாலும், தவறான பொருண்மையி்ல் அமைந்துள்ளது. ஏனெனில் அம்மாவிடம் கூறுவது போல இருக்கிறது. அம்மா என்பவள் அச்சுற்றுலாவுக்கு வராத பொருண்மை, இங்கு அமைந்து விடுகிறது. "அம்மாவும், அவரும், நானும் சுற்றுலாவிற்குச் சென்றோம்" என்றே அமைய வேண்டும் அல்லவா? ஆனால் பலர் இடப்பட்ட வாக்கியங்களின் பொருண்மையைக் கணக்கில் கொள்ளாமல், தரவுகளை மாற்றம் செய்யாமல், அப்படியே படி எடுத்து ஒட்டி விடுகின்றனர். தமிழ் எழுத்துநடையையும், பேண வேண்டியது நமது கடமை அன்றோ. மேலும் போட்டி விதிப்படி, கூகுளின் மொழிபெயர்ப்புத் தரவுகளால் கட்டுரைகளில் நிரப்பக்கூடாது என்பதை மீறும் கட்டுரைகளை என்ன செய்வது? மொழியாக்கம் சரியில்லை என்று பகுப்பிடலாமா? அவரவரே திருத்தினால், இத்தகைய அடையாளமிடல் தேவையில்லை தானே? என்ன செய்யலாம்? தரமே, நிரந்தரம் என்பதால், இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இத்திட்டக் கட்டுரைகள் இருக்கும் பகுப்பின் உரையாடற்பக்கத்தில் குறிப்பிடல் சிறப்பு என எண்ணுகிறேன்.அப்பகுப்பில் கட்டுரை சொற்களின் எண்ணிக்கை குறைபாடு உள்ளதையும், பகுப்புப் பிழை உள்ளதையும், மேற்கோள் இல்லாதவைகளையும், விக்கித்தரவு இணைப்பு இல்லாதவைகளையும் குறிப்பிட முன்மொழிகிறேன். --த♥உழவன் (உரை) 02:11, 9 நவம்பர் 2019 (UTC)
மேற்கூறிய ஆலோசனைகளை நமது சமூகத்திற்கு வழங்கியமைக்கு மிகவும் மகிழ்கிறேன். இருப்பினும் தொடர்ந்து எந்திர மொழிபெயர்ப்புகளை மேம்படுத்தாமல் கட்டுரைகளை, சிலர் எழுதி வருகின்றனர். நான் அக்கட்டுரைகளை பவுன்டன் கருவியல் காணும் போது, அதுகுறித்து குறிப்புகளை அங்கு இடுகிறேன். எனினும் ஒருவரே இத்தகையப் போக்கினை மாற்ற இயலாது. போட்டி என்பதால் எண்ணிக்கையை மட்டும் இலக்காகக் கொண்டு செயல் படுவதால், இதற்குரியவைகளைத் தொடர்ந்து கவனிக்க தனிப்பக்கத்திற்கு இதனை மாற்றுகிறேன். அங்கு தொடர்வோம். தரமே நிரந்தரம் எனவே, அனைவரது ஒத்துழைப்பை நல்க, இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். மேற்கண்ட உரையாடற்களின் தொடர்ச்சிகளையும், அதனால் விளைந்த முழுமையான மாற்றங்களையும் கீழுள்ள துணைப்பக்கத்தில் அறியலாம். இதன் உட்பிரிவு அனைத்தும் அங்கும் படியிடப்பட்டுள்ளது. --த♥உழவன் (உரை) 01:28, 21 நவம்பர் 2019 (UTC) |
Portal di Ensiklopedia Dunia