விக்கிமேப்பியா
வரலாறுவிக்கிமேப்பியா உருசியாவின் அலெக்ஸாண்ட்ரே கோரியாகின், எவ்ஜெனி சாவ்லீவ் ஆகியோரால் மே 2006 இல் உருவாக்கப்பட்டது.[1] கூட்டு சேகர முறையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் உள்நுழையாத பயனர்களால் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. நவம்பர் 2017 நிலவரப்படி 28,000,000 பொருட்கள்/ உருப்படிகள் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் பண்புக்கூறு-பகிர்வு (CC BY-SAAlike) கீழ் வெளியிடப்பட்டது.[4] [5] இந்தத் திட்டத்தின் பெயரானது விக்கியினை நினைவூட்டுவதாக இருந்தாலும், படைப்பாளிகள் "விக்கி" தத்துவத்தின்[1]சில பகுதிகளைப் பகிர்ந்து கொண்டாலும், இது இலாப நோக்கற்ற விக்கிமீடியா அறக்கட்டளைக் குடும்பத்தின் ஒரு பகுதியாக இல்லை. 2018 முதல், தளம் சரிவினைச் சந்தித்தது, இந்தத் தளத்தின் உரிமையாளர்களால் கூகுள் மேப்சின் பயன்பாட்டிற்குப் பணம் செலுத்த முடியாமல், தளத்தின் சமூக ஊடக கணக்குகள் கைவிடப்பட்டது. இதனால் இந்தத் தளம் கிட்டத்தட்ட செயலற்றதாகிவிட்டது. 2017 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வு, இந்தத் தளத்தின் புகழானது 2012 முதல் நிலையான சரிவில் இருப்பதாகக் கூறியது.[6] 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதுப் உருசிய படையெடுப்புக்குப் பிறகு, மார்ச் 2, 2022 இல் இந்தப் பக்கம் மூடப்பட்டது. மார்ச் 13, 2022 நிலவரப்படி, தளத்திற்கான அணுகல் பின்வரும் செய்தியுடன் சந்தித்தது: "விக்கிமேப்பியா சில நாட்களுக்கு (நாட்கள் அல்லது வாரங்கள் கூட) முடக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் இந்த நாட்களில் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ந்து இணைந்திருக்கவும், விளக்கங்கள் பின்னர் கொடுக்கப்படும்". விக்கிமேபியாவின் பழைய பதிப்பு பக்கம் மூடப்பட்ட போதிலும் அணுகக்கூடியதாக இருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மார்ச் 25,2022 இல் மீண்டும் அணுகக் கூடியதாக இருந்தது. முக்கியக் கோட்பாடுவலைத்தளத்தின்படி, விக்கிமேப்பியா என்பது ஒரு திறந்த உள்ளடக்கக் கூட்டு வரைபடத் திட்டமாகும், இது உலகில் உள்ள அனைத்துப் புவியியல் பொருட்களையும் குறிக்கும் மற்றும் அவற்றைப் பற்றிய பயனுள்ள விளக்கத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[7] பன்னாட்டளவில் இலவச, முழுமையான, பன்மொழி, புதுப்பித்த வரைபடத்தை உருவாக்கிப் பராமரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. விக்கிமேபியா பூமியில் உள்ள ஒவ்வொரு இடத்தைப் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டிருக்க விரும்புகிறது.[7] அம்சங்கள்பார்த்தல்விக்கிமேப்பியா வலைத்தளமனது கூகுள் மேப்சு ஏபிஐ அடிப்படையிலான ஊடாடும் வலை வரைபடத்தை வழங்குகிறது. இது கூகுள் வரைபட செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பிற வளங்களின் பயனர் உருவாக்கிய தகவல்களைக் கொண்டுள்ளது. வழிசெலுத்தல் இடைமுகமானது கூகுள் மேப்சைப் போலவே பக்கமுருட்டுவதற்கும் பெரிதாக்குவதற்குமான செயல்பாட்டை வழங்குகிறது. விக்கிமேபியா அடுக்கு என்பது பலகோண வடிவத்துடன் (கட்டிடங்கள், காடுகள் அல்லது ஏரிகள் போன்றவை) "நேரியல் அம்சங்கள்" (தெருக்கள், இரயில் பாதைகள், ஆறுகள், படகு) கொண்ட "பொருட்களின்" தொகுப்பாகும். தெருக்கள் குறுக்குவெட்டுப் புள்ளிகளால் இணைக்கப்பட்டு ஒரு தெருவின் கட்டிடத்தை உருவாக்குகின்றன. இரண்டு வகையான பொருட்களிலும் உரை விளக்கங்களும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருக்கலாம். பார்வையாளர்கள் அதன் விளக்கத்தைக் காண குறிக்கப்பட்ட பொருள் அல்லது தெருப் பகுதியைச் சொடுக்க முடியும். உள்ளமைக்கப்பட்ட தேடல் கருவி மூலம் விளக்கங்களைத் தேடலாம். வகையின்படி இருக்கும் இடங்களைச் செம்மைப்படுத்துவதற்கும், பொருட்களுக்கு இடையிலான தூரத்தை அளவிடுவதற்கும் கருவிகள் கிடைக்கின்றன. கட்டிடங்கள் என குறிக்கப்பட்ட பொருள்கள் உள் இடங்களைக் கொண்டிருக்கலாம் (ஒரு பெரிய அலுவலக கட்டிடத்திற்குள் ஒரு வணிகம் போன்றவை). மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia