விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி (ஆங்கிலம்:Vikravandi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வட்டம் மற்றும் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சி ஆகும். விக்கிரவாண்டி நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு தெற்கே விழுப்புரம் 15 கி.மீ.; வடக்கே திண்டிவனம் 45 கி.மீ.; கிழக்கே பாண்டிச்சேரி 45 கி.மீ. தொலைவில் உள்ளன. விக்கிரவாண்டியில் தொடருந்து நிலையம் உள்ளது.[4] பேரூராட்சியின் அமைப்பு6.8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 75 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,735 வீடுகளும், 12,022 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 981 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,840 மற்றும் 145 ஆகவுள்ளனர்.[6] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 12°02′N 79°33′E / 12.03°N 79.55°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 44 மீட்டர் (144 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆதாரங்கள்
MOHAMED imran vikravandi
|
Portal di Ensiklopedia Dunia