விக்டோரியா தீவு (கனடா)
விக்டோரியா தீவு (Victoria Island) கனடாவின் ஆர்டிக் தீவுக் கூட்டத்தில் ஒரு பெரிய தீவாகும்[2][3]. இது நுனாவெட் பிரதேசத்திற்கும் கனடாவின் வடமேற்கு பிரதேசத்திற்கும் இடையில் எல்லையாக விளங்குகிறது. இது உலகின் எட்டாவது மிகப் பெரிய தீவாகும். இது கனடாவில் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 217.291 ச.கி.மீ. ஆகும். இது நியூபவுண்ட்லாந்தை விட இரண்டு மடங்கு பெரியது (111.390.ச.கி.மீ.). க்ரேட் பிரிட்டனை விட சற்று பெரியது (111,390கி.மீ). ஆனால் ஹோன்ஷு விட சிறியது (225.800 ச.கி.மீ.) ஆகும். இது ஒரு தீவுக்குள் மற்றொரு தீவு அதற்குள் மற்றொரு தீவு என்ற அமைப்பில் மிகப் பெரியதாகும். இத்தீவின் மேற்கு பகுதியின் மூன்று பங்கு வடமேற்கு பகுதியில் உள்ள இனுவிக் பிரதேசத்தைச் சார்ந்தது. மீதமுள்ள பகுதி நுனாவெட்டின் கிட்டிக்மியோட் பகுதியைச் சார்ந்தது. வரலாறு1826இல் ஜான் ரிச்சர்ட்சன் என்பவர் தென்மேற்கு கடலோரபகுதியில் இதை முதன் முதலில் பார்த்தார் அதற்கு “வாலஸ்டன் நிலம்” என்று அழைத்தார். 1839இல் பீட்டர் வாரன் டீயிஸ் மற்றும் தாமஸ் சாம்சன் என்பவர்கள் இதன் தென்மேற்கு கடலோர பகுதியில் சென்று இதை விக்டோரியா நிலம் என்று அழைத்தார்கள். 1846இல் ஜான் பர்ரோ என்பவர் வெளியிட்ட ஒரு வரைபடம் கரைத் தீவுகள் என்ற பகுதிக்கு வட பாகத்திலுள்ள கரை நிலம் மேற்கண்ட இரண்டு நிலங்களிலிருந்து வரையப் பட்ட வெற்று பகுதியை காண்பித்தது. 1850 மற்றும் 1851இல் இராபர்ட் மக்லூர் அவர்கள் கரைத் தீவின் அனைத்து பகுதியையும் சுற்றி வந்தார். இதன் மூலம் விக்டோரியா தீவை மற்ற நிலங்களிலிருந்து பிரித்து எடுத்தார். இவரின் உடன் பணியாளர்களும் வடமேற்கு மற்றும் மேற்கு கரையோர பகுதிகளுக்கு இடையே சென்று அதை ஆராய்ந்து வந்தனர். அமைப்பு மற்றும் விளக்கம்விஸ்காண்ட் மெல்வில் சௌண்ட் வடக்காக உள்ளது மற்றும் மெக்லிண்டாக் கால்வாய் , விக்டோரியா ஜலசந்தி ஆகிய இரண்டும் கிழக்காக அமைந்துள்ளது. மேற்காக அமண்ட்சென் வளைகுடா மற்றும் கரைத்தீவுகள் உள்ளன. இவை விக்டோரியா தீவுகளிலிருந்து வேல்ஸ் இளவரசரின் ஜலசந்தி என்ற ஒரு நீண்ட ஜலசந்தியால் பிரிக்கப் பட்டுள்ளது. தெற்கு பக்கத்தில் (மேற்கிலிருந்து கிழக்காக) டால்பின் மற்றும் யூனியன் ஜல சந்தி, ஆஸ்டின் விரிகுடா, கொரொனேஷன் வளைகுடா மற்றும் டீஸ் ஜலசந்தி உள்ளது. தெற்கு நீர்வழி மற்றும் வேல்ஸ் இளவரசரின் ஜலசந்தி இரண்டும் ஒரு சர்ச்சைக்குரிய வடமேற்கு வழிப்பாதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது. சர்ச்சைக்கு காரணம் கனடா அரசாங்கம் அது கனடா நாட்டிற்குரிய உள்நாட்டு நீர்வழி என்று கூறுகிறது ஆனால் பிற நாடுகள் அவை சர்வதேசத்திற்குரிய நீர்வழிப் பாதை என்று கூறுகின்றன. இத்தீவு தீபகற்பங்களின் தீவாகும். இத்தீவில் அதிக அளவு கரையோரக் கடல்வழி நுழைவாய்கள் காணப்படும். மேற்கில் வடக்கு நோக்கிய ஸ்டொர்கெர்ஸன் தீபகற்பம் உள்ளது. இது தங்க ஆச்சாரி கால்வாய் என்று சொல்லக்கூடிய கோல்ட்ஸ்மித் கால்வாயில் போய் முடியும். இங்குள்ள நீர் பரப்பு விக்டோரியா தீவை ஸ்டீஃபன்ஸன் தீவிலிருந்து பிரிக்கிறது. ஸ்டொர்கெர்ஸன் தீபகற்பமானது இத்தீவின் வடமத்திய பகுதியிலிருந்து ஹட்லே விரிகுடாவால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. இந்த விரிகுடா ஒரு பெரிய கடல் உள்வாயாகும். அடுத்த தீபகற்பம் இளவரசர் அல்பர்ட் தீபகற்பமானது வடக்கு பாகத்தில் காணப் படுகிறது. இது வேல்ஸ் இளவரசர் ஜலசந்தியில் முடிகிறது. மேற்குபுறமாக நோக்கி இருப்பது வாலஸ்டன் தீபகற்பம். இந்த தீவு முழுவதும் அதிசயத்தக்க விதமாக ஒரு மேப்புள் இலை போல தோற்றமளிக்கிறது. இது கனடாவின் ஒரு முக்கிய சின்னமாகும், இத்தீவின் உயரமான புள்ளி வடமேற்கு திசையில் உள்ள ஷேலார் மலையில் உள்ளது. இதன் உயரம் 655 மீட்டர் அல்லது 2,149 அடியாகும். தென்மேற்கு பகுதியில் காம்பிரிட்ஜ் விரிகுடாவிற்கு வடக்கில் ஃபெர்குஸான் ஏரி அமைந்துள்ளது. இதன் பரப்பு 562 ச.கி.மீ. ஆகும். இதுதான் இத்தீவின் மிகப் பெரிய ஏரி. இத்தீவானது கனடாவின் அரசியாக 1867 இலிருந்து 1901 வரை உள்ள இராணி விக்டோரியாவின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. இளவரசர் அல்பர்ட் என்பது இவரின் கணவரின் பெயராகும். நுனாவெட்டில் உள்ள அமட்ஜக் ஏரியில் மற்றுமொரு சிறிய விக்டோரியா தீவு உள்ளது. இங்கு காணப்படும் தீவு கரிபௌ எனும் மானினம் இந்த இடத்தைத் தாயகமாகக் கொண்டுள்ளது. இவைகள் தங்கள் கோடைகால மேய்ச்சலை விக்டோரியா தீவில் முடித்துக் கொண்டு நுனாவெட்டில் குளிர்கால மேய்ச்சலுக்கு செல்லுவதற்காக டால்பின் மற்றும் யூனியன் ஜலசந்தியைக் கடந்து வலசை செல்லும். ஆனால் வட அமெரிக்க கர்பௌ இவ்வாறு கடந்து செல்வதில்லை. ஆனால் பியரி கர்பௌ இதை விட அளவிலும் எண்ணிக்கையிலும் சிறியது வலசைப் போகும் மேற்கோள்கள்
நூல் பட்டியல்
|
Portal di Ensiklopedia Dunia