விசுவாம்பர் சரண் பதக்விசுவாம்பர் சரண் பதக்(Vishwambhar Sharan Pathak 1926–2003) வரலாற்றாளர், சமற்கிருத மொழி அறிஞர் மற்றும் இந்திய ஆய்வாளர் ஆவார். இவர் வரலாறு தொடர்பான நுல்களை எழுதியுள்ளார். பிறப்பு, படிப்பு, பணிகள்மத்தியப் பிரதேசத்தில் ஓசாங்காபாத் என்ற ஊரில் பிறந்த வி.எஸ்.பதக் 1950 களில் பனாரசு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார்.[1] அதே பல்கலைக் கழகம் வெளியிட்ட பாரதி என்ற ஓர் இதழின் இணைப் பதிப்பாளர் என்ற பதவியில் 1957-58 ஆண்டுகளில் பணி செய்தார். மத்தியப் பிரதேசத்தில் சாகர் பல்கலைக் கழகத்தில் 1950 களின் பிற்பகுதியில் பேராசிரியராகப் பணி செய்தார். பின்னர் 1960களில் ஏ. எல். பசாம் வழிகாட்டுதலில் இலண்டன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து இரண்டாவது ஆய்வுப் பட்டம் பெற்றார். வி.எஸ்.பதக் கோரக்பூர் பல்கலைக் கழகத்தில் வரலாறு, தொல்லியல் மற்றும் பண்பாடு துறையின் தலைவராகவும், அதே பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பதவி வகித்தார்.[2] பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சகன்னாத் அகர்வால் நினைவுச் சொற்பொழிவு ஆற்றினார். உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia