விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்புதமிழீழ விடுதலைப் புலிகள் பலாத்கார ஆள்சேர்ப்பில் ஈடுபட்டிருப்பதாக பிபிசி ஜூலை 30, 2007 இல் செய்தி வெளியிட்டது[1]. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நபர் கட்டாயமாகப் புலிகளுடன் இணைய வேண்டும் என்று புலிகள் கொள்கை (அல்லது சட்டம்) ஆக்கியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது. எவரும் புலிகளில் இல்லாத குடும்பங்களில் ஒருவரை பலாத்காரமாகப் புலிகள் தமது அமைப்பில் சேர்த்து வருவதற்கு தகுந்த புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேற்கண்ட செய்தி குறித்தது. இருப்பினும், புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் இதை மறுத்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 1980 இறுதியில் பிற இயக்கங்கள் கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்ட பொழுது, விடுதலைப் புலிகள் அதை அப்பொழுது எதிர்த்து பரப்புரை செய்ததும்[மேற்கோள் தேவை], இலங்கை இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia