விண்டோசு என்டி
வின்டோசு புதிய தொழில் நுட்பம் (Windows New Technology) எனப்பொருள்படும் வின்டோஸ் என்டி மைக்ரோசாப்டினால் 1993 ஜூலையில் ஆரம்பிக்கப்பட்டு உருவாக்க விண்டோஸ் எண்டி ஓர் விண்டோஸ் இயங்குதளக் குடும்பமாகும். விண்டோஸ் எண்டியே மைக்ரோசாப்டின் முதலாவதும் முழுமையானதும் ஆன 32 பிட் இயங்குதளமாகும். விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சேவர் 2003, விண்டோஸ் சேவர் 2008 மற்றும் விண்டோஸ் ஹோம் சேவர் ஆகியவை விண்டோஸ் எண்டி குடும்பத்தைச் சார்ந்ததெனினும் அவை விண்டோஸ் எண்டி என சந்தைப்படுத்தப்படுவதில்லை. முக்கிய வசதிகள்இவ்வியங்குதள உருவாக்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக பல்வேறுபட்ட வன்பொருட்கள் (ஹாட்வெயார்) மற்றும் மென்பொருட்களை ஆதரிப்பதாகும். விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் இன்டெல், i386, ஆல்பா, பவர்பீசி போன்ற புரோசர்களை ஆதரிக்கின்றது. விண்டோஸ் எண்டி 3.1 ஏ முதலாவது 32பிட் புரோசர்களை ஆதரிக்கும் ஓர் இயங்குதளமாகும். இதனுடன் இயங்கிய விண்டோஸ் 3.1 துண்டாமாக்கப்பட்ட முறையில் நினைவகங்கள் அணுகியது. என்டிஎப்எஸ் (NTFS) என்றழைக்கப்படும் பாதுகாப்பான கோப்புமுறையானது விண்டோஸ் எண்டிக்காக உருவாக்கப்பட்டது. விண்டோஸ் எண்டியானது டாஸ் இயங்குதளத்திலான 16 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் விண்டோஸ் 2000 இலிருந்தான பதிப்புக்கள் 32 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் சேமித்துக் கொள்ளும். குறிப்பு விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் FAT 16 இல் 4ஜிகாபைட் வரையிலான அளவை ஆதரிக்கும் எனினும் விண்டோஸ் 98 இதனை ஆதரிக்காது இவ்வாறான கட்டத்தில் விண்டோஸ் எண்டி ஐ எடுத்துவிட்டு விண்டோஸ் 98 போடுவதானாலால் முதலில் ஏதாவது ஒரு விண்டோஸ் எண்டி இயங்குதளமூடாக நிறுவலை ஆரம்பிப்பது போல் வந்துவிட்டு ஹாட்டிஸ்கில் உள்ள பாட்டிசனை அழித்தல் வேண்டும் இல்லாவிடின் விண்டோஸ் 98 நிறுவவியலாது. விண்டோஸ் எண்டி, 2000, எக்ஸ்பி ஆகியன பாட் கோப்புமுறையை ஆதரித்து முற்காப்பின்றி வேகமாக இயங்கினாலும் இவ்வசதியானது விண்டோஸ் விஸ்டாவில் இல்லை. வெளியீடுகள்
|
Portal di Ensiklopedia Dunia