விண்டோசு செர்வர்விண்டோசு செர்வர் ( Windows Server ) என்பது மைக்ரோசாப்டின் (Microsoft) வழங்கி இயங்குதளம் ஆகும்[1]. இது பெரும்பாலும் வழங்கி கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய நோக்கம் ஒரு நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை நிர்வகிப்பதாகும். வழங்கி கணினிகள் என்பது பெரிய நிறுவனங்களில் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் தகவல்களை பாதுகாப்பாக சேமித்து பராமரிக்கவும், வேகமாக பகிரவும் பயன்படும் கணினிகள். ![]() விண்டோசு செர்வர் பயன்படுத்தி நிறுவனங்கள் பல பயனர்களுக்கான கோப்புகளை ஒரே இடத்தில் பாதுகாப்பாகச் சேமிக்கலாம், அவற்றை வேகமாக பகிரலாம், இணையதளங்களையும் வலைப்பயன்பாடுகளையும் நடத்தலாம், மின்னஞ்சல் மற்றும் பிற முக்கிய சேவைகளை நிர்வகிக்கலாம், பயனர் கணக்குகளை நிர்வகிக்கவும் பயன்படுகிறது. இது பயனர்பெயர், கடவுச்சொல், அணுகல் உரிமைகள் போன்றவற்றை எளிதாக மேலாண்மை செய்ய உதவுகிறது. இது நிறுவனம் முழுவதும் ஒரே விதமான பாதுகாப்பு விதிமுறைகளைப் பயன்படுத்துவதற்கும், தேவையில்லாத அணுகலைத் தடுப்பதற்கும் உதவுகிறது. விண்டோசு செர்வர் 2025 என்பது தற்போதைய பதிப்பு, 2024 நவம்பர் இல் வெளியிடப்பட்டது. 2034 ஆண்டு வரை ஆதரவு உண்டு, அதாவது 2034 ஆண்டுக்கு பிறகு பாதுகாப்பு புதுப்பிப்புகள் அல்லது தொழில்நுட்ப ஆதரவு கிடைக்காது. பதிப்புகள்இதுவரை வெளிவந்த விண்டோசு செர்வர் பதிப்புகள்:
("NT" என்பது "New Technology" என்பதின் சுருக்கம். இதனை தமிழில் "புதிய தொழில்நுட்பம்" என்று கூறலாம்). இவற்றையும் பார்க்கவும்உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia