விண்மீன் தடங்காணி![]() விண்மீன் தடங்காணி (star tracker) என்பது ஒளிமின்கலங்களையோ படப்பிடிப்புக் கருவியையோ பயன்படுத்தி விண்மீன்களின் இருப்பை அளக்கும் ஒர் ஒளியியல் கருவியாகும்.[1] வானியலாளர்கள் பல விண்மீன்களின் இருப்புகளை மிகவும் துல்லியமாக அளந்துள்ளதால், ஒரு விண்கத்தில் உள்ள விண்மீன் தடங்காணியைப் பயன்படுத்தி, விண்மீன்கள் சார்ந்த விண்கலத்தின் திசைவைப்பைத் தீர்மானிக்கலாம். இதை நிறைவேற்ற, விண்மீன் தடங்காணி விண்மீன்க ளின் படிமத்தைப் பெற்று, அவற்றின் தோற்ற இருப்பை விண்கலம் சார்ந்த சட்டகத்தில் கண்டு, விண்மீன்களை இனங்காணலாம். பிறகு அவற்றின் இருப்புகளை விண்மீன் அட்டவணையில் உள்ள தனிமுதல் இருப்புகளோடு ஒப்பிடலாம். இத்ற்காக விண்மீன் தடங்காணி ஒரு செயலாக்கியைப் ப்யன்படுத்துகிறது. இச்செயலாக்கி நோக்கிய விண்மீன்களின் பாணியை அறிந்து வானப் பரப்பில் உள்ள விண்மீன்களின் பாணியோடு ஒப்பிட்டு இனங்காண்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia