வினாவெழுத்துதமிழ் எழுத்துகளை ஒலி நோக்கில் முதலெழுத்து என்றும், சார்பெழுத்து என்றும் பாகுபாடு செய்தனர். சுட்டாகவும் வினாவாகவும் பொருள் உணர்த்தும் எழுத்துகளைச் சுட்டெழுத்து வினா எழுத்து எனப் பகுத்துத் தனியே குறிப்பிடலாயினர்.[1][2] வினாப் பொருளைக் குறிக்கும் எழுத்து வினாவெழுத்து எனப்படும். இவ்வெழுத்துகள் ஒரு சொல்லில் வினாவை உண்டாக்குகின்றன.'ஆ','எ','ஏ','ஓ','யா', என்பவை வினா எழுத்துகளாகும். சான்று 1:
இவை பழந்தமிழ் வழக்கு. சான்று 2:
இத்தொடர்களுள் முதலிலுள்ள தொடர் ஒரு செய்தியைக் குறிக்கிறது. இரண்டாவது தொடர் ஒரு வினாவை எழுப்புகிறது. ஒரு செய்தியை வினாவாக்கிய எழுத்து 'ஆ' எனவே இது வினா எழுத்தாகும். வினா எழுத்துகள் இவை எனக் கூறும் நூற்பா
வினாவெழுத்து வரும் இடங்களைக் கூறும் நூற்பா
வினா எழுத்துகளில் 'எ', 'யா' இரண்டும் சொல்லின் முதலில் வரும்.
ஆ,ஓ இரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.
ஏ எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்
வினா வகைகள்வினா,
என இருவகைப்படும். அகவினாஒரு சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும் வினா "அக வினா" எனப்படும். இவ்வெழுத்துகளைச் சொல்லிலிருந்து பிரித்தால், அச்சொல் தனியே பொருள் தராது. அகவினாவிற்குரிய எழுத்துகள்
சான்று:
இவை சொல்லாம் நிலையில் இருந்து வினாப்பொருளை உணர்த்தும். புறவினாசொல்லின் புறத்தே நின்று வினாப்பொருளை உணர்த்தும் வினா "புற வினா" எனப்படும்.
இச்சொற்களில் வினாப் பொருளைத் தரும் எழுத்தை நீக்கினாலும் அச்சொற்கள் தனியே நின்று பொருள்தரும். புறவினாவிற்குரிய எழுத்துகள்
இவை எழுத்தாம் நிலையில் நின்று வினாப்பொருளை உணர்த்தும்.
அடிக்குறிப்புகள்மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia